ஒரு முறைக்கு இரண்டு முறை, ஒரு பக்கத்திற்கு இரண்டு பக்கம் விசாரித்து மரண தண்டனை கூடாது என்று சொன்னது ‘விருமாண்டி’. விசாரணை, நீதிமன்றம், மனித உரிமைகள் எல்லாவற்றையும் தூக்கித் தூர எறிந்து விட்டு, தனக்குத் தீவிரவாதி என்று படுகின்றவர்களைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்று சொல்கிறது ‘உன்னைப் போல் ஒருவன்’. இரண்டும் கமல்ஹாசனின் படங்கள்.
இரண்டு மணிநேரத்திற்கும் சற்றுக் குறைவாக எடுக்கப்பட்டுள்ள படம் உன்னைப் போல் ஒருவன்.தொடக்கம் முதல் இறுதிவரை, ஒரு குதிரைப் பந்தயத்திற்குள்ள விறுவிறுப்பு. மிக உயர்ந்த தொழில் நுட்ப நேர்த்தி.வழக்கமான காதல் பாடல்கள், ஆபாசக்காட்சிகள், இரட்டைப் பொருள் உரையாடல்கள் எதுவும் படத்தில் இல்லை. தசாவதாரத்தில் காட்சிக்குக் காட்சி வெவ்வேறு தோற்றங்களிலும் ஒப்பனைகளிலும் வெளிப்பட்ட கமல்ஹாசன், இந்தப் படத்தில், முதல் காட்சியில் இருந்து கடைசி வரையில் ஒரே உடை, ஒரே தோற்றம், எந்த மாற்றமும் இல்லை. மொட்டை மாடியில் அமர்ந்து தனியாகப் பேசிக் கொண்டிருக்கிற ஒரு பாத்திரம். தன்னைக் காட்டிலும், உடன் நடிக்கும் மோகன்லாலுக்கு கூடுதல் முக்கியத்துவம். தேர்ந்த கலைஞர்களின் திறன்மிக்க நடிப்பு. இதமான இசை.
இத்தனை சிறப்புகளும் கொண்ட அப்படத்தைப் பார்த்த பிறகு, ஒரு நல்ல படம் பார்த்த மகிழ்ச்சிதான் நமக்கு மிஞ்சியிருக்க வேண்டும். ஆனால், ஒரு பெரிய மன உளைச்சலையே என் போன்றவர்களிடம் அந்தப் படம் ஏற்படுத்தி உள்ளது.
தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள்தான் என்று திரும்பத் திரும்ப ‘சங்பரிவாரங்கள்’ உருவாக்கியுள்ள கருத்து மாயையை இப்படம் மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்க முயற்சித்திருக்கிறது. படத்தில் காட்டப்படும் நான்கு தீவிரவாதிகளில் மூவர் இஸ்லாமியர்கள், ஒரே ஒருவர் இந்து. அவரும்கூட பணத்துக்காக வெடிமருந்து வாங்கி விற்கும் ஒரு தவறான வணிகர் அவ்வளவுதான். தீவிரவாதிகள் எல்லோரும் கொல்லப்பட்டு படம் முடியும் வேளையில், திரையில் ‘சம்பவாமி யுகே யுகே’ பாடப்படுகிறது. கொல்லப்பட்டது இஸ்லாமியர்கள், கொன்றவர் இந்துக் கடவுள் போல இருக்கிறது. (சுட்டுக் கொல்லும் இன்பெக்டர் பெயர் ஒர் இஸ்லாமியப் பெயராக இருப்பது, மிகப் புத்திசாலித்தனமான தற்காப்பு)
கணிப்பொறித் துறையில் வல்லுனர் ஒருவர் வேண்டும் என்று கேட்கும் காவல்துறை ஆணையர் எப்படிக் கேட்கிறார் தெரியுமா? ‘Call one expert from IIT’ ( ஐஐடியில் இருந்து ஒரு வல்லுனரைக் கூப்பிடுங்கள்). ஐஐடி-யைத் தவிர வேறு எங்கும் வல்லுனர்களே கிடையாதா? அதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதன் அவசியம் என்ன ? அங்கிருந்து வரும் ஒரு மகா மேதை படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். ஆனாலும் அவர்தான் மகா மேதை. அசல் அம்மாஞ்சியாக அப்படி ஒரு ஒப்பனை. பார்த்த உடனேயே ‘அவாள்’ என்று தெரியும் தோற்றம்.
காவல் துறை ஆணையர், உண்மையில் மட்டுமல்லாமல், படத்திலும் ஒரு மலையாளி. மகா கெட்டிக்காரர். தமிழக அரசின் தலைமைச் செயலாளரையே எள்ளி நகையாடும் அளவுக்கு கம்பீரமானவர்.
முதலமைச்சரின் கோபாலபுரம் வீடு காட்டப்படுகிறது. அவர் குரலைப் போலவே தொலைபேசியில் குரல் ஒலிக்கிறது. படத்தில் வரும் முதலமைச்சர் கலைஞர்தான் என்பது மறைமுகமாக நிறுவப்படுகிறது. முதலமைச்சரோ மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், எதிர்க் கட்சிகளுக்கு இந்தச் செய்தி தெரிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அதிகாரிகளைக் கவனமாக வலியுறுத்துகிறார். அப்போது அந்தக் காவல் துறை அதிகாரியான மலையாளியின் முகத்தில் ஒளிவிடும் ஓர் அலட்சியப் புன்னகை தமிழகத்தையே கேலி செய்கிறது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கு, அல்காய்தா போன்ற இயக்கங்களின் பெயர்கள் வெளிப்படையாகவே பேசப்படுகின்றன.
இப்போது கமலிடம் நமக்கு மூன்று கேள்விகள்.
1.பஜ்ரங்தள் போன்ற, வன்முறையை வழியாகக் கொண்ட, இந்து பயங்கரவாத இயக்கங்களை மையமாக வைத்துப் படம் எடுக்கும் எண்ணம், விருப்பம், துணிச்சல் உங்களுக்கு உண்டா?
2.தனிமனிதர்கள்/குழுக்கள் கைகளில் ஆயுதங்களை எடுப்பது மட்டும்தான் தீவிரவாதமா?பயங்கரவாதிகளை உருவாக்குகிற அரச பயங்கரவாதம் பற்றியும் பேச உங்கள் பேனாவும் கேமராவும் முன்வருமா?
3.படத்தில் வரும் மோகன்லால் இரண்டு மூன்று முறை தொலைபேசி மூலம் உங்களிடம் கேட்கிறாரே, அந்தக் கேள்வியை மீணடும் ஒருமுறை உங்களைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது. யார் நீங்கள்? பெரியாரின் பிள்ளையா? பெரியவாளின் சிஷ்யரா?
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தற்சார்பு மிக்க கல்விக் கொள்கையே தமிழ்நாட்டிற்குத் தேவை
- புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் - தமிழ்த் தேச விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகள்
- சீரிய கொள்கைச் சிதம்பரப் பதிகம்
- திராவிடம்... திராவிடர்… - 3
- கொசுக்களைக் கவரும் சோப்புகள்
- உதிரும் இலை
- குடி அரசு “குபேர” பட்டணத்தின் சிறப்பா? சிரிப்பா?
- தமிழ்நாடு ஜூன் 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- திமுக அரசு செய்தாக வேண்டிய மூன்று பெரும் பணிகள்
- இராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவி இழப்பு எழுப்பும் கேள்விகள்
- விவரங்கள்
- சுப.வீரபாண்டியன்
- பிரிவு: திரை விமர்சனம்
Ans: Film Hey Ram! did exactly that. looks like Suba Ve ignored the film only bcos it had the word 'Ram'.
Also the contempt against the Brahmin community is evident. just shows education alone doesn't reform a person. Also evident is his inferiority complex. I'm a converted Christian catholic and i can say that several Brahmin students in my class helped me all out to succeed in studies. so why generalize the whole community? It is a fact that the best brains of India are in IIT. Nobody said call a Brahmin from IIT. they said an expert and experts are in IIT & IISc. Looks like Subave even hates the notion that intelligent ppl can come from this community. will be interesting to see IF he refuses to be treated by a Brahmin Doctor or a Malayalee heart specialist. The deep rooted prejudicies of the society were condemned by Periyar and that's exactly what Mr.Subave is propagating in the garb of being 'Periyar's protege'. Its true that several communities have been wrongly abused and wrongly rewarded owing to historical anamolies. Afterall no monarchy is perfect.! that's why we chose to live in a democracy. Indian society unlike many other developing societies is doing its best to overcome this anamolies. I agree a lot more needs to be done.
But ppl like Subavee are making a living out of focussing only on the Negatives..! that too historical negatives and why not keep repeating a lie and pose as if you are the well-wisher for a community and then in time ppl will start to beleive you..!!
I ask Suba Ve the following questions:
1.Converted Christians still face casteist oppression in our own state TN. Does Suba Ve has ever though of opposing these and writing against this openly??
2. Is it that only Brahmin society who are less than 3% of the population responsible for all atrocities and oppressions?? How abt more powerful castes like Devars, Gounders and Nadars? who control the economy and politics of TN why do you never speak openly abt this?
3. Last but not least...with so much of prejudicies are you Periyars Protege? or a fascist ideaologue?
சீசரின் வேடத்தில் வந்த புரூட்டஸாகத்தான ் இவர் இருக்க வாய்ப்புள்ளது.
ஒரே பார்ப்பன வாடை!
சொல்லுங்கள் சீசர், யார் நீங்கள்?
"epporul yaar yaar vaai ketpinum apporul meiporul Kaanbadharivu"
valluvan jaathi enna endru aarayatheergal. ..!! solla pattathai aarayungal...??
நீங்கள் சொன்ன குறள்படித்தான் நான் நடக்கிறேன்.
"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்" என்பதன் படி நீங்கள் யார் என்பதை முதல் படியாக, தற்போது, கண்டு கொண்டேன். அடுத்த படியாக,
"அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்பதால், உங்கள் மடலின் மெய்ப்பொருளை இப்போது காண்போமா?
உங்கள் வாதப்படி, IIT ஆளைத்தான் கூப்பிட்டான், IIT பிராமனனைக் கூப்பிடவில்லை என்பது தானே? ஆனால், தோழரே! எந்த பின்புலத்திலிரு ந்து வந்திருந்தாலும் , வந்தவர் கேரக்ட்டர் ஒரு பார்ப்பனர் தானே! மறந்து விட்டீர்களா? திரும்ப ஒரு முறை அப்படத்தைப் பாருங்கள் தோழரே!
அது மட்டுமல்ல, அந்தப் படத்தில் பெரும்பாண்மையான பாத்திரங்கள், பெயரிலும் உருவத்திலும் பார்ப்பனர்களே! தீவிரவாதியிடம் உண்மையைக் கக்க அழைக்கப்படுபவர் கூட ஹரீஷ் என்ற பார்ப்பனர் தானே! இதற்கெல்லாம் பின்னால் ஏதோ ஒரு "மெய்ப்பொருள்" இருக்க வேண்டுமே! ஈழச் சூறாவளியின் பின்னனியில், மற்ற சமூகத்தினருக்கு பொதுவாக விடப்படும் எச்சரிக்கையாக இருக்குமோ? உயர்நீதிமன்றத் தடியடியே ஏனோ எனக்குத் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகிறது.
வெறும் 3% சமூகத்தைச் சேர்ந்தவரால், பொதுமையாக எடுக்கப்பட்ட படத்தில், ஒரு 25% பாத்திரங்கள் அச்சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பது இயல்பு. முக்கியமான பாத்திரங்களில் எல்லாம் அவர்களாயிருப்பத ு?
தோழரே! ஏதோ தவறான கண்ணோட்டத்தோடு பார்ப்பனர்கள் தூற்றப் படுவதாகச் சொல்லியுள்ளீர்க ள். என்ன ஞாணம் உங்களுக்கு! நான் ஒரு குறள் சொல்லட்டுமா?
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
அடுத்து, இந்திய சமுதாயம், மற்றபிற வளரும் சமுதாயங்கள் போல தனது சீர்கேடுகளைக் களைய நல்ல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று சொல்லி யுள்ளீர்கள், தோழரே!
அது உண்மையல்ல. பார்ப்பனர்கள் தான் தம்மால் முடிந்தவரை விட்டுக் கொடுக்காமல் இருந்து, இந்திய சமூகத்தின் மீட்சியைத் தடுத்தோ அல்லது தாமதமாகவோ இயக்குகின்றனர்.
ஒரே ஒரு சான்று சொல்லி முடிக்கிறேன். சமஸ்கிருதம் எங்கள் மொழியல்ல. தமிழர் கோயிலில் தமிழில் வழிபட விடாமல், தமிழருக்குப் புரியாத சமஸ்கிருதத்த்தை திணிக்கின்றீரே! தெரியாத காலத்தில் சரி. இப்போது நாங்கள் மறுத்தும் நீங்கள் அம்மொழியைத் திணிப்பது எதற்கு? தமிழில் அர்ச்சனை செய்ய மறுப்பதேன்! கோயில்களில் பார்க்கிறீர்கள் தானே!
இது ஒரு Sample தான் தோழரே!
சுப. வீக்களைக் கடியும் முன்பு, உங்களின் முதுகையும் சற்று நோக்கவும்!
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு?
வள்ளுவனின் சாதியும் எனக்குத் தெரியும். அவர் சாதி "சான்றோர் சாதி". அதனால், அவரை நான் சந்தேகிப்பதில்ல ை!
கொண்டேன். அடுத்த படியாக Contradicts the very meaning of the Kural...which says think of what is being said NOT who is saying it. May be Pandian left thirukural as a choice qn.
எந்த பின்புலத்திலிரு ந்து வந்திருந்தாலும் , வந்தவர் கேரக்ட்டர் ஒரு பார்ப்பனர் தானே! So what?? the msg of the movie is quite simple...that is, we have NO time to waste arguing about who is from which Religion or Caste. Terrorism kills everyone...and its victims are innocent..be a Muslim, Christian or Hindu...so again missing both the msg of the movie as well as the Kural you claim to have
understood..!! Pandian shld see the climax again which talks about the barbaric riots against Muslims in Gujarath...now Pandian's qn will be "could this be a Muslim's conspiracy in the garb of a Brahmin?"
don't insult your own intelligence if you think you have any..!!
அது மட்டுமல்ல, அந்தப் படத்தில் பெரும்பாண்மையான பாத்திரங்கள், பெயரிலும் உருவத்திலும் பார்ப்பனர்களே!
தீவிரவாதியிடம் உண்மையைக் கக்க அழைக்கப்படுபவர் கூட ஹரீஷ் என்ற பார்ப்பனர் தானே! Again so what?? you haven't answered my basic qn...will you NOT get treatment from a competent Brahmin Doctor or Malayalee heart specialist? apparently ppl who are holding the seat of power like Kalaignar in TN don't mind it...!!! and these are ppl who fooled the sc/st's to get into power by using the same lies Pandian is now repeating...Pan dian has to just go till Ramachandra Medical institute in
porur to find this out....do you have the honesty to find out and report it in Keetru??
ஈழச் சூறாவளியின் பின்னனியில், மற்ற சமூகத்தினருக்கு பொதுவாக விடப்படும் எச்சரிக்கையாக இருக்குமோ? can't help laughing at this suggestion....w hen the great hero of Tamilian cause was tortured and killed by barbaric sinhalese Army...(NOT shot dead trying to flee as reported!!) the espouser of tamilian cause-Kalaignar , was begging for ministerial berth for his son in Delhi with the very same ppl responsible for the war..! Pandian conveniently forgets this recent piece of history...now anyone with a limited IQ will know this is the biggest threat to Tamilians...not some minority community which will NOT pick up arms...
வெறும் 3% சமூகத்தைச் சேர்ந்தவரால், பொதுமையாக எடுக்கப்பட்ட படத்தில், ஒரு 25% பாத்திரங்கள் அச்சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பது இயல்பு. முக்கியமான பாத்திரங்களில் எல்லாம் அவர்களாயிருப்பது?
again so what?? nobody sang a song in the movie..."pottri paddadi ponne Brahmin kaaladi Mannea!!"
Pandian can accept any movie where Devars are glorified openly...or other powerful castes like
Gounders and Nadars are glorified...he will NOT have the guts to ask why the movie depicts only
devars as great? what abt other communities? again very convenient to attack a soft target..
ஏதோ தவறான கண்ணோட்டத்தோடு பார்ப்பனர்கள் தூற்றப் படுவதாகச் சொல்லியுள்ளீர்க ள். என்ன ஞாணம்
உங்களுக்கு! நான் ஒரு குறள் சொல்லட்டுமா?
my argument is NOT Brahmins are noble or innocent. what i'm saying is "ALL communities which had access to both power and money have oppressed and marginalised the remaining communities in TN.
This is a historical fact and an anamoly which is acknowledged by anyone with minimal awareness.
Now qn is whether we talk about 3% of the problem or the whole problem openly. Pandian tries to create a illusion like Suba Ve and his masters in Govt that the whole problem is ONLY this 3%. This is a blatant lie and something close to betrayal of the marginalised communities. Also laughable is the implication that casteist oppressions exists only in HINDU community. looks like Pandian doesn't keep friends with any converted Dalits who face oppression in the very churches that promised them equality. NOT to mention the plight of those who convert to Islam with the Afzal and Ashraf divide.
Popular press and media will NOT even report this. why? its very inconveninent for ppl who want to
come back to power.
அது உண்மையல்ல. பார்ப்பனர்கள் தான் தம்மால் முடிந்தவரை விட்டுக் கொடுக்காமல் இருந்து, இந்திய
சமூகத்தின் மீட்சியைத் தடுத்தோ அல்லது தாமதமாகவோ இயக்குகின்றனர்
Mr Pandian should come up with something more than a sweeping statement...wha t is your evidence?
which field are we talking about where Brahmins are dominating? where is the hard data to substantiate that? I will give you a hard data instead....incr easing number of Muslims in India are either fast moving are already below the povert line. Out of the 13.4% muslims in India nearly 42.5% earn less than 80rs per day. This is NOT my sweeping statement. hard data provided by National Statistical institute. Now nobody wants to talk abt this...why? again very incovenient for those in power...but what is convenient? keep attacking one soft target that is responsible for 1% problem..!!
சமஸ்கிருதம் எங்கள் மொழியல்ல. தமிழர் கோயிலில் தமிழில் வழிபட விடாமல், தமிழருக்குப் புரியாத
சமஸ்கிருதத்த்தை திணிக்கின்றீரே!
Again typical lie propoagted by the rulers....proba bly Pandian never lived in a Muslim neighborhood or never ever met a Moulvi or had muslim friends. 'sallallahu alayhi wasallam' is Tamil for Pandian...he will NOT ask why Arabic hymns are thrust on Tamil Muslims....Pand ian will walk past every church in the remotest corners of the country which says ""Come to me, all you who are weary and burdened, and I will give you rest." Matthew 11:28 and wonder how Christians respect Tamil..!!!
We can even forgive SubaVes of TN who openly blow the Govt's trumpet...but ppl like pandian who imagine they can think independently but know only to repeat the lies provided by the election
campaigns and drummed by popular media in ruling party's control are the real threat to an eqitable
society that we wish to create. Mr Pandian, pls don't use a secular, just media like 'Keetru.com' to propagate your fascist ideals.
நீங்கள் தான் குறளைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. "கண்டவனும் கண்டதெல்லாம் சொல்லுவான். சொன்னதெல்லாம் நம்பாமல், அதன் உட்பொருளைக் காண்" என்பது தான் ஏளிய நடையில் இந்தக் குறளின் பொருள். ஆகவே, யாரிடமிருந்து வருகிறது என்பதைக் காண வேண்டும் என்பது வள்ளுவனின் வழிகாட்டல். ஏராளமான சான்றுகள் வள்ளுவத்தில் உண்டு. ஒன்றிரண்டு கொடுக்கிறேன்.
மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒலைல உணரப் படும்.
ஆக, எனது வழி வள்ளுவனின் வழி தான்.
எனக்கு ஒரு பிராமனர் மருத்துவம் செய்வதை விரும்பாதவன் அல்ல நான். ஆனால், இனிமேல் நான் அவர்களிடம் மருத்துவம் பார்க்க அஞ்சுவேன். இவ்வளவு வசை பாடிவிட்டு அவர்களிடம் மருத்துவம் பாரக்க நான் எனன் கேணயனா? எனக்கு வரலாறு தெரியும். அதோடு, எனது சொந்த வரலாறே அப்படித்தானே! ஏகலைவன் பட்டபாடு எனக்கும் ஏற்பட்டது. பாவம், அது உங்களுக்குத் தெரியாது.
அடுத்து, "போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மன்னே" பற்றிய விமர்சனம் கீற்றில் படித்த நினைவு தான். ஒரு தாழ்த்தப்பட்ட சமூகக் கலைஞனை விட்டு இப்படிப் டாட வைத்திருக்கிறார ். அது முறையா? அசட்டுத் தனமாகப் பேசி வாங்கிக் கட்டிக் கொள்ளக்கூடாது!
நான் சமஸ்கிருதத்தைப் பற்றிக் கேட்டால், வாத்தியாரே, ஏன் இஸ்லாத்தை இழுக்கிறீர்? நான் பாசாங்குக்காரன் இல்லை. உமக்குத் தெரியவில்லை. நான் "தமிழ்" இஸ்லாமியரையும் இந்தக் கேள்வியைக் கேட்டு வைத்திருக்கிறேன ். அது மட்டுமல்ல, அவர்களது பெயர்களைக்கூட தமிழில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று எழுதியிருக்கிறே ன். கீற்றில் தான். உங்கள் கவனத்திற்கு வராதது வியப்பாக இருக்கிறது. அவர்கள் சிந்திக்க, மாற வாய்ப்புள்ளது. ஆனால், சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்தல் தவறு என்று சொல்ல மனமில்லையே! உமது யோக்கியதை இதுதான்.
அது போல, உங்களையும் உங்களது சமஸ்கிருத பெயர்களை மாற்றிக்கொண்டால ், அதாவது, தமிழில் வைத்துக் கொண்டால், நாங்கள் உங்களைத் தமிழராக ஏற்றுக்கொள்வோம் என்று எழுத இருக்கிறேன். அதற்கு முன்பு பார்ப்பனர்களைத் தாயர் செய்ய வேண்டும். எழுத நிறைய இருக்கிறது. வருங்காலங்களில் தெரிந்து கொள்வீர்கள்.
ஆனால் புரூட்டஸ், பல இடங்களில் நீங்கள் தேவையில்லாமல் சிண்டுமுடிக்கும ் வேலை செய்கிறீர். பார்ப்பனீயம் அது தான். வேண்டாமே!
சம உரிமை சமூகத்திற்கு நான் ஒரு அச்சுறுத்தல் என்று தானே சொன்னீர்! ஆனால், பார்ப்பனர்கள் தாம். எப்படி என்கிறீர்களா? கொலைகாரன், காமுகன் ஜெயேந்திரன் தண்டிக்கப்படுவா னா, மாட்டானா?
மாட்டான்!!!!!!! !!!!!!!!
எப்படி?
மனு தர்மப்படி! பார்ப்பானுக்கு ஒரு நீதி, மற்றவற்கொரு நீதி!
காலம் அதை நிரூபிக்கும்! காணத்தான் போகிறோம்!!!!!!
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.
ippodhu sollungal Mr.Pandian...un gal vazhiya valluvan vazhi..???
இனிமேல் நான் அவர்களிடம் மருத்துவம் பார்க்க அஞ்சுவேன். இவ்வளவு வசை பாடிவிட்டு அவர்களிடம் மருத்துவம் பாரக்க நான் எனன் கேணயனா?
Ofcourse after pouring so much of vitriol and hate on that community, you should naturally be cautious. No doubt.!!! But this only proves my
point on focusssing only on the Negatives. This can ONLY create a divided society, where each community looks for Doctor, Engineer and
political leader from their own community and fears others!!. IF you want to show-case your life as an example of this division by all means go-ahead.
We will teach the children the evils of divisive mentality with your life as an example. Atleast the next generation will learn to live for better ideals and aspire for better things.
எனக்கு வரலாறு தெரியும். அதோடு, எனது சொந்த வரலாறே அப்படித்தானே! ஏகலைவன் பட்டபாடு எனக்கும் ஏற்பட்டது. பாவம், அது உங்களுக்குத் தெரியாது.
Why are you suddenly taking to self-pity trip?? Everybody's life has events where they meet both good and bad ppl. To stereo-type one bad persons behavior/action on the entire community
is a distortion of thought and a prejudice. Any good psychatrist (even from your community,caste ,religion) will tell you that..!!! you don't have to take my word Mr.Pandian.
அடுத்து, "போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மன்னே" பற்றிய விமர்சனம் கீற்றில் படித்த நினைவு தான்.
my response for this is "(சுட்டுக் கொல்லும் இன்பெக்டர் பெயர் ஒர் இஸ்லாமியப் பெயராக இருப்பது, மிகப் புத்திசாலித்தனம ான தற்காப்பு)" Yes this is...புத்திசாலித்தனம ான தற்காப்பு.!!!
அசட்டுத் தனமாகப் பேசி வாங்கிக் கட்டிக் கொள்ளக்கூடாது!
1.பஜ்ரங்தள் போன்ற, வன்முறையை வழியாகக் கொண்ட, இந்து பயங்கரவாத இயக்கங்களை மையமாக வைத்துப் படம் எடுக்கும் எண்ணம், விருப்பம், துணிச்சல் உங்களுக்கு உண்டா?
Ans: Film Hey Ram! did exactly that. looks like Suba Ve ignored the film only bcos it had the word 'Ram'.
நான் சமஸ்கிருதத்தைப் பற்றிக் கேட்டால், வாத்தியாரே, ஏன் இஸ்லாத்தை இழுக்கிறீர்?
Thanks for pointing out. True. I should have answered the point more directly instead of going round-about on this. IF i hate Sanskrit(or other languages) and only want to use Tamil, i will simply ignore the Brahmin or priest or moulvi or father who doesn't want to do the prayer in Tamil. Its my choice as to which language i worship my God in. Its no business of any Religious head to impose a language on me. that is wrong..! By the same count I have NO Business to force anyone to pray ONLY in tamil. that is also wrong..!! Also IF i want to hear Tamil hymns, i will ask for it NOT ask for other hymns Arabic, Sanskrit or Hebrew to be eliminated. we live in a pluralistic society and we HAVE TO respect different views. So we have to create space for ALL views NOT eliminate all views that don't match ours.
நான் பாசாங்குக்காரன் இல்லை. உமக்குத் தெரியவில்லை. நான் "தமிழ்" இஸ்லாமியரையும் இந்தக் கேள்வியைக் கேட்டு வைத்திருக்கிறேன ். அது மட்டுமல்ல, அவர்களது பெயர்களைக்கூட தமிழில் வைத்துக் கொள்ளவேண்டும் என்று எழுதியிருக்கிறேன்.
Why Mr.Pandian why..?? nowhere else in India we have this demand. A Muslim in Andhra doesn't keep a telugu name or a Kerala Muslim a Malayalam name or a Maharashtra muslim a Marathi name...but the moment they step into TN...they have to have a Tamil name..?? who gives anyone the authority to make such demands on individuals. This is a violation of personal freedom guarenteed by the constitution..! ! Lets first try to change the names of Sun TV, KTV, Jaya TV and Vijay TV which seem to be spreading english world-wide. Not names of some defense-less individuals. And may i ask why no question has been posed to Christians? since when is Peter or John or Abraham a tamil name? Again i feel it is individual's personal choice. No Business of anyone else.
சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்தல் தவறு என்று சொல்ல மனமில்லையே! உமது யோக்கியதை இதுதான்.
Because i don't think it is wrong....Sanskr it or Arabic or Hebrew or English or Tamil, its a personal choice. No coercion of forcing is allowed here in favour of any language..!!!
அது போல, உங்களையும் உங்களது சமஸ்கிருத பெயர்களை மாற்றிக்கொண்டால ், அதாவது, தமிழில் வைத்துக் கொண்டால், நாங்கள் உங்களைத் தமிழராக ஏற்றுக்கொள்வோம் என்று எழுத இருக்கிறேன்.
hmmmm....i feel bad that i don't have a tamil editor to respond to this one. But i can say this...We drank the wisdom of Avvayaar, Bharathiar, Bharathidasan, Tiruvalluvar along with our Mother's milk. We need NO OTHER RECOGNITION of our roots...not certainly from Pandians of this world..!!
எழுத நிறைய இருக்கிறது. வருங்காலங்களில் தெரிந்து கொள்வீர்கள்.
we are waiting...hopef ully we will get something positive and unifying. NOT something divisive and despondent.
ஆனால் புரூட்டஸ், பல இடங்களில் நீங்கள் தேவையில்லாமல் சிண்டுமுடிக்கும ் வேலை செய்கிறீர். பார்ப்பனீயம் அது தான். வேண்டாமே!
Ok...this is a interesting sweep under the carpet of many important points i have raised for which you have no proper rebuttals. IF divisiveness is Brahminical. Then Mr.Pandian you must be a Brahmin also.
சம உரிமை சமூகத்திற்கு நான் ஒரு அச்சுறுத்தல் என்று தானே சொன்னீர்! ஆனால், பார்ப்பனர்கள் தாம். எப்படி என்கிறீர்களா? கொலைகாரன், காமுகன் ஜெயேந்திரன் தண்டிக்கப்படுவா னா, மாட்டானா? மாட்டான்!!!!!!! !!!!!!!!
Again imposing the view on one person on the whole community. Every criminal be he a Religious head or a political leader deserves the severest punishment IF he breaches the law. Let's NOT joke here abt our own frustrations and some archaic laws. We must feel equally frustrated when justice fails and Quottrocchi goes scott free or names are dropped from Jain Commission report..!!
நீங்கள் இகல் என்ற அதிகாரத்தில் எடுத்தாண்டுள்ளீ ர்கள். அவையும் சிங்களனுக்குத் தான் தற்போதய காலகட்டத்தில் பொருந்தும். எனக்கல்ல. ஆனால், அந்த அதிகாரத்தில் முதல் குறளை ஏன் மறந்தீர்கள்?
இகல்என்ப எல்லா உயர்க்கும் பகல்என்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.
இதன் பொருள்: எல்லா உயிர்களுக்கும் மற்ற உயர்களோடு "பொருந்தாமல் வேறுபடுதலாகிய" தீய பண்பை வளர்க்கும் நோய் இகல் (மாறுபாடு) என்று சொல்லுவர் அறிஞர்.
(மறைந்த முனைவர் மு. வரதராசனார் அவர்களின் உரை)
இது அப்படியே, தன்னை உயர்ந்தவராகவும் , மற்றவரைக் கீழானவராகவும், காலம் காலமாக வேறுபடுத்தி, இந்தச் சமூகத்தைச் சீரழித்த பிராமனர்களுக்கே பொருத்தமானக் குறள். மனுதர்மம், பகவத் கீதை, வேதங்கள் போன்றவற்றைப் படியுங்கள், விளங்கும்.
நான் உங்களை இகலவில்லை. நான் செய்வதற்குப் பெயர் குற்றங்கடிதல்! நீங்கள் திருத்திக் கொண்டால் நான் ஏன் தொடர்ந்து கடியவேண்டும்? ஆனால், உணர்ந்து திருந்தாத "மாமனிதர்கள்" நீங்கள் என்பது உங்களின் பதில்படியே விளங்குகிறது. நீங்கள் உங்களது வாதங்களை வைத்துள்ளீர்கள் . நான் எனது வாதங்களை வைத்துள்ளேன். இவற்றைச் சீர்தூக்கும் நீதிபதிகள், இந்த மடல்களைப் படிக்கும் தனி மனிதர்கள் தாம்.
விவாதங்கள் நியாயமானவையாக இருக்க வேண்டும். உம்மைப் போன்றோரிடம் விவாதித்து, கீற்றுவிற்கு வீணான மட்டுறுத்தும் இடர் கொடுக்க விரும்பவில்லை. உங்களோடு இதுவரை செய்த விவாதங்கள் கூட, நவீன பார்ப்பனனின் சிந்தனைகளை அம்பலப் படுத்தப் பயன்படும்.
இருப்பினும் சிலவற்றை தீர்க்கமாகச் சொல்ல வேண்டும். நான் இனவாதியோ மனித நேயமற்றவனோ அல்ல. தமிழன் என்ற பெருமை பேசுவது கூட, குனிந்திருக்கும ் தமிழனின் முதுகை நிமிர்த்தத்தான் . நான் பொருள் சேர்ப்பதில்லை. எனது பணிகளுக்குத் தேவையான வசதிகள் போக, நிறையவே நன்கொடை செய்கிறேன். முடிந்தவரை எளிமையாக வாழ்கிறேன். பொருளாதார வாய்ப்புகள் இருந்தும், நான்கு சக்கர ஊர்தி இல்லை. குளிரூட்டப்பட்ட அரை இல்லை! ஒரு படித்தவரின் சமூகக் கடமை எதுவோ, அதைக் குறைவில்லாமல் செய்கிறேன்.
ஆனால், பௌத்தத்திற்கும் , தமிழனுக்கும் நிகழ்ந்தவைகளைச் சீர் தூக்கிப் பார்க்கும் நான் உணரும் ஒரு விடயம் என்னவென்றால், ஒருவன் நல்லவனாக மட்டுமே இருந்தால் அவன் அழிவான்; நல்லவன், வல்லவனாகவும் வாழவேண்டும் என்பது தான். இல்லையென்றால் வள்ளுவன் படைமாட்சி போன்ற அதிகாரங்களை எழுதிஇருக்க மாட்டான். அன்பை "மட்டுமே" பேசிய இந்திய பௌத்தம் அழிந்தது!!!!! அழித்தவர் ஆரியர்! அன்பே இல்லாத "சிங்கள பௌத்தம்" வாழ்கிறது!!!!! இந்தப் பதிய "மஹாயான" பௌத்தரும் சிங்கள ஆரியரே!
"யாழ்ப்பானத்தில்" புத்த சிலையை பிரதிஷ்டை செய்யும் சிங்களக் கம்மனாட்டி, "திருப்பதியில்" வந்து "வேண்டிநிற்கும் " அவலத்தை என்னவென்று சொல்ல? ரணில் விக்ரம சிங்கேயும், கும்பகோனத்தில் சனீஸ்வரனிடம் வேண்டி நிற்கிறான்! பச்சைப் போலிகள்!!!! இவர்களா பௌத்தர்கள்?
80 களில் நான் ஏகலைவனான பிறகும், நான் தொடர்ந்து சோ. ராமசாமியின் துக்ளக்கின் தீவிர வாசகனாக இருந்தேன். ஆனால், அவர் ஜெயலலிதாவை அரியணை ஏற்றிய ஆழந்த சூழ்ச்சியைக் கண்டு அதிரந்தேன். அப்பப்பா! அது ஒரு அபார சூழ்ச்சி! அதன்பிறகு, இன்றுவரை அந்த இதழைத் தொட்டதும் இல்லை. பிறகு, சேஷன் கொண்டு வந்த Model Code of Conduct (MCC) எனக்குப் பிடித்திருந்தது . பல வருடங்கள் சேஷன் பின் சுற்றினேன். ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு ம், அவரைத் தேர்தலில் நிக்கமுடியாமல் MCC செய்த பிறகும், சோவின் சூழ்ச்சியால் அ. தி. மு. க. வெற்றி பெறுகிறது. அப்போது "ஜெயா" டிவியில் நேர்காணல் அளித்த சேஷன், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தாலே, தேர்தலில் கூட நிற்கமுடியாது என்று, MCC கொண்டுவந்த அதே சேஷன் சொன்னார் "ஜெயலலிதா முதல்வராவதைத் தடுக்க இந்திய சட்டத்தில் இடமில்லை" என்று.
அப்போது புரிந்துகொண்டேன ் பார்ப்பனீயத்தை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பார்ப்பான் உள்ளவரை மனுநீதி வாழும்!!!!
சுப.வீ அவர்கள் கேட்டது சரி தான் ,திருவாளர் கமல் அவர்களே நீங்கள் யார்?.. என இந்த common man கள் கேட்பதில் என்ன தவறு இருகின்றது?
”தசவதாரம்” உங்களின் 10 அவதாரங்களையும் பற்றி இயக்குனர் K.S. இரவிகுமாருக்கே தெரியவில்லை, கதையைப்பற்றி கமல் சாரிடம் தான் கேட்க்கவேண்டும் என்றார். படத்தில் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ஒலித்தது “பெருமாலே” ““பெருமாலே” கடைசியில் சொல்வார் ..கடவுல் இல்லைனு நான் சொல்லவில்லை ஆனால் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்பார். இந்த ஒற்றைவரி வசனத்தை கொண்டு உங்களை பெரியாரின் பேரன் என்பதா? ..இல்லை படம் முழுவதும் கூறப்படும் “பெருமாலே” கொண்டு நீங்கள் பெரியவாளின் பிள்ளை என்பதா?.. சுனாமிவந்தற்கு பின்னால் கரையில் வந்து ஒதுங்கும் பெருமாளின் சிலையின் மகத்துவத்தை பார்க்கும் எங்கள் வெகுஜனங்கள் கடவுளே என கண்ணத்தில் ஒற்றிக்கொள்வதா? ..
விருமாண்டியாய் ,தேவர் மகனாய் வந்து அருவா கலாச்சாரத்தையும ், ஐயா சாமியும் சொன்னீர்களே... ஒரு படத்திலாவது ஒரு தாழ்த்தப்பட்ட சமூக கதாநாயகனாய் வந்து அவன் படும் சமூக பிரச்சனைகளை சொன்னதுண்டா?..
”ஹேராம் ” உலக நாயகனின் உலகதரம் வாய்ந்த படம் .....ஒரு ஆர். எஸ். எஸ் காரணாகவே வந்து ..எப்படி எப்படியெல்லாம் இசுலாமிய ,காந்திய எதிரியானான், ஆர். எஸ். எஸ் காரர்கள் எல்லாம் சுதந்திர போராளிகள், இசுலாமியர்கள் எல்லாம் கொடுரமாணவர்கள், காந்தியை வில்லனாக்கிய படம் அது. ஆனால் சாருக்கானின் பாத்திரம் கொண்டு அழகிய முறையில் சமன் செய்யப்பட்ட படம். கமலின் திறமை என்பது ஒவ்வொரு படத்திலும் அவரின் கருத்தை பெரிய மேதாவிகளின் உதவியுடன் விவாதம் செய்து அவர் என்ன சொல்கிறார் என கண்டுபிடிக்க வேண்டும்... ஆனால் உங்களையே பூஜிக்கும் பல லட்ச்சம் ரசிகர்களுக்கு தெரிந்ததெல்லாம் ..கமல் ஒருவரே...அவரின் கருத்துக்கள் பல கோடி தமிழர்களின் மனதை திரைப்பட ஓட்டமாகவே சென்றடையும். திரைப்படங்கள் என்பது இன்றைய காலத்தின் பதிவுகள், வரும் கால தலைமுறையினர் திரைப்படங்களை கொண்டு நாம் வாழ்ந்த காலங்களை அளவிடுவர். அது அவர்களின் மனதினில் கமல் போன்றோர்களின் படங்களினால் நச்சுதன்மையை கலக்கும்.
சுப.வீ அவர்கள் கேட்டது சரி தான் ,திருவாளர் கமல் அவர்களே நீங்கள் யார்?..
a movie review means
பொதுவான திரைப்பட விமர்சனங்களுக்க ும், இடதுசாரித் தன்மை வாய்ந்த விமர்சனங்களுக்க ும் இடையில் ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது. பொதுவான விமர்சனங்களில் ஒவ்வொரு திரைப்படம் குறித்தும் சில நிறைகள்,சிலகுறை கள் முன்வைக்கப்பட்ட ு ஒட்டுமொத்தத்தில ் அத்திரைப்படத்தி ல் குறைகள் நிறைந்துள்ளனவா அல்லது நிறைகள் அதிகம் உள்ளனவா என்பவை பட்டியிலிடப்படு கின்றன. மேலும் அத்தகைய விமர்சனங்கள் ஒவ்வொரு திரைப்படத்தையும ் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, பாடல்கள், மேலும் பல தொழில்நுட்ப அம்சங்கள் எனக் கூறு போட்டுப் பார்க்கின்றன. ஒட்டுமொத்தத்தில ் இவ்வாறு பார்க்கும் முறையில் பல சமயங்களில் விமர்சிக்கப்படு ம் படத்தின் உள்ளார்ந்த உயிரோட்டமும் ஒருங்கிணைந்த தன்மையும் பறிபோய்விடுகின்றன.
வியாபார ரீதியான விமர்சனங்கள்
இத்தகைய விமர்சன முறை இதனைக் கடைப்பிடிப்பவர் களுக்கு ஒரு வசதியைச் செய்து தருகிறது. அதாவது இவ்வாறு அனைத்துத் திரைப்படங்களையு ம் விமர்சனம் செய்ய முடியும். அதாவது குப்பையான ஒரு திரைப்படத்தையும ் அதில் சில அம்சங்கள் கோபுரம் போல் உள்ளன எனப் பாராட்ட முடியும். அதைப் போல் கோபுரம் போன்ற ஒரு திரைப்படத்திலும ் குப்பையாக சில அம்சங்களைக் கண்டுபிடித்து அவற்றையும் கோடிட்டுக் காட்டமுடியும்.
இந்த வகையில் பணம் செலவு செய்து எடுக்கப்படும் அனைத்துத் திரைப்படங்களையு ம் ஒன்றில்லாவிட்டா ல் மற்றொரு அம்சத்திற்காக பார்க்கலாம் என்பது போன்றதொரு பரிந்துரையினை ரசிகர்களுக்குச் செய்ய முடியும். அதே சமயத்தில் இந்த விமர்சனங்கள் மூலம் தங்களின் பக்கங்களை நிரப்பி பத்திரிக்கை வியாபாரத்தையும் இலாபகரமாகப் பராமரிக்க முடியும்.
மதிப்பீட்டுத் தன்மை கொண்ட விமர்சனம்
ஆனால் நமது விமர்சனங்கள் இப்போக்கிலிருந் து வேறுபட்டவை. ஒரு திரைப்படம் அது முன்வைக்கும் ஒருங்கிணைந்த உள்ளார்ந்த வாழ்க்கையின் மூலம் சமூகத்தில் பராமரிக்கப்பட வேண்டிய நல்ல மதிப்புகளை கலைநயத்துடன் உயர்த்திப் பிடிக்கிறதா, சமூகத்தின் மையமான பிரச்னையைப் பிரதிபலிக்கிறதா என்பவையே நாம் அவற்றை விமர்சிக்கக் கையாளும் வழிமுறைகள்.
அடிப்படையில் மிகப் பெரும்பான்மையான அம்சங்களில் மேலே குறிப்பிடப்பட்ட அம்சங்களைக் கொண்டதாக ஒரு படம் இருந்தால் அப்படத்தின் தொழில் நுட்ப அம்சங்களில் இருக்கும் சிற்சில குறைகளைப் பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்து அவற்றைக் கோடிட்டுக் காட்டுவதையோ அதன்மூலம் நமது பாண்டித்யத்தைப் பறை சாற்றுவதையோ நாம் செய்வதில்லை.
நமது விமர்சனத்தின் நோக்கம் சமூகத்தாக்கமுள் ள நல்ல திரைப்படங்களின் உயர்ந்த அம்சங்களை உயர்த்திக்காட்ட ி அதனை இன்னும் தெளிவாக ரசிகர்கள் முன் கொண்டு செல்ல வேண்டும் என்பதே. அவ்வகையில் நாம் செய்வதை விமர்சனம் என்று கூறுவதைக் காட்டிலும் மதிப்பீடு என்று கூறுவது பொருத்தமுடையதாக இருக்கும்.
புறநிலை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் எந்தத் திரைப்படமும் அவை உண்மை நிலையைப் பாரபட்சமின்றி வெளிக் கொணரும் விதத்தில் எடுக்கப்பட்டால் நிச்சயமாக தன்னையறியாமலேயே கூட சமூகத்தின் ஏதாவது ஒரு அடிப்படையான பிரச்னையையும் அது சார்ந்த வேதனையையும் பிரதிபலிக்கவே செய்யும்.
திரைப்பட ரசிகர்களின் மேலோட்டமான பார்வைக்குத் தப்பிவிடும் அந்த விசயத்தைப் பார்ப்பவர் முன் நிறுத்த வேண்டும் என்பதே நமது மதிப்பீட்டின் நோக்கம். அந்த அடிப்படையில் நமது மதிப்பீடுகள் அத்தகைய நல்ல திரைப்படங்களின் பங்கும் பகுதியுமானவை. சுருக்கமாகச் சொன்னால் இந்தவகை விமர்சனத்தின் வரையறைக்குள் அனைத்து திரைப்படங்களும் வருவது சாத்தியமல்ல. மேலும் இது முதலாளித்துவ வியாபார யுக்திகளுக்குத் துணை போவதுமல்ல; இதைத் தாங்கி வரும் நமது இதழ் வியாபார யுக்தியுடன் நடத்தப்படுவதுமல்ல.
ஒரு இடதுசாரி அரசியல் ஊழியன் என்பவன் அடிப்படையான சமூகமாற்றத்தை வலியுறுத்தப் போராடுபவன். அவன் வலியுறுத்தும் சமூக மாற்றம் இந்த அல்லது அந்தவகைச் சீர்திருத்தங்கள ் மூலம் சாதிக்கப்பட முடியாதது. அத்தகைய சமூக மாற்றம் ஒரு மகத்தான மக்கள் எழுச்சியின் மூலமே சாதிக்கப்பட முடிந்தது. அந்த எழுச்சிக்கான தேவையினை உணர்ந்து, இன்றுள்ள சமூக நிலையை அப்படியே தக்கவைக்கப் பாடுபடும் அரசியல்வாதிகளின ் ஏமாற்று முழக்கங்கள், தந்திரங்கள், சூழ்ச்சிகள், சூதுகள் ஆகியவற்றை புரிந்து சாதாரண மக்களும் கூட அத்தகைய மகத்தான மக்கள் எழுச்சியில் பங்கேற்க இன்றில்லாவிட்டா ல் நாளை முன்வருவர். முன்வந்தே ஆக வேண்டும். அதைத் தவிர வேறு வழியேயில்லை.
ஆனால் அத்தகைய எழுச்சியை வழிநடத்த வல்ல கருத்துக்களை முன்கூட்டியே அறிந்து அதன் அடிப்படையில் வாழ்ந்து வழிகாட்ட முயலும் ஊழியர்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் உடனடியாக சமூகத்தில் உருவாகிவிட மாட்டார்கள். அவ்வாறு உருவாகும் உணர்வுபெற்ற மிகச் சிறு பகுதியினர் அவர்களைப் போன்றவர்கள் மென்மேலும் உருவாகத் தேவைப்படும் சமூக மதிப்புகளை உருவாக்கவல்ல இலக்கியங்களையும ், திரைப்படங்களையு ம் தேடிக் கொண்டிருப்பர். ஏனெனில் நல்ல இலக்கியங்களும் திரைப்படங்களும் சமூக மாற்றக் கருத்துக்களை விதைக்கத் தேவைப்படும் வகையில் சமூகத்தைப் பரந்த அடிப்படையில் பண்படுத்த வல்லவை. அத்தகையவையாகத் தென்படும் திரைப்படங்களை அவற்றில் உள்பொதிந்துள்ள சமூக மாற்றத்திற்குத் தேவைப்படும் கருத்துக்களை வெளிக்கொணர்ந்து ரசிகர்கள் முன் வைப்பது அவர்கள் சிரமேற்கொண்டுள் ள சமுதாயக் கடமைக்கு உகந்ததும் உதவக்கூடியதும் ஆகும்.
Hats off.. Great Work !
Pathi Pesamataru.(Ina Pasamachey..)
cinemava cinemavaa paarunga.
indha inaiyathula ezhuthura alavukku namukku gnanam
irukkumpodhu
edhallam vettipechu
Click this Link: Find, Who is Kamal?
RSS feed for comments to this post