பா.ஜ.க மிகவும் பலம் வாய்ந்த கட்சியென மோடி பிரச்சாரம் செய்து வந்தாலும் கூட்டணி கட்சிகளே பா.ஜ.க.வின் வெற்றிக்கு உண்மையில் பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த சூழலில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் போல் பலமிக்க கூட்டணியை தற்போது பா.ஜ.கவால் உருவாக்க முடியவில்லை. ஒடிசா, ஹரியானா போன்ற மாநிலங்களில் பா.ஜ.கவால் நினைத்தவாறு கூட்டணியை உருவாக்க முடியவில்லை. பீகார், மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அவர்கள் ஏற்படுத்தியுள்ள கூட்டணியால் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை என்பதே களநிலவரம்.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் பீகார், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் அனைத்து 116 இடங்களையும் பா.ஜ.க கைப்பற்றியது. எனினும், இந்த முறை அந்த மூன்று மாநிலங்களிலும் ஓரிரு இடங்களே பா.ஜ.க-விற்கு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.agitation against bjp candidateஇந்தியா கூட்டணியின் தேர்தல் வியூகங்களைச் சமாளித்து பா.ஜ.க கூட்டணியால் வேட்பாளர்களைக் கூட சரியாகத் தேர்ந்தெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த பா.ஜ.க ஒன்றிய அமைச்சர் புருசோத்தம் ரூபாலா "ராஜ்புத் ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுடன் இணைந்து செயல்பட்டார்கள். அவர்கள் தங்களது வீட்டு பெண்களை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்குத் திருமணம் செய்து கொடுத்தனர்" என்று ஒரு நிகழ்ச்சியில் பேசினார். பா.ஜ.க. அமைச்சரின் இந்த பேச்சுக்கு ராஜபுத் சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜ்கோட் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அமைச்சர் ரூபாலாவை மாற்ற வேண்டும் என்று ராஜபுத் சமுதாய தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பா.ஜ.க.வுக்கு எதிரான இந்தப் போராட்டம் குஜராத்தைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பரவியுள்ளது. பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் 'அக்னி' முன்பாக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

பஞ்சாப் மாநிலத்தின் பத்தின்டா தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பிரீத் கவுரை முற்றுகையிட்டு விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை வாக்குறுதி என்ன ஆனது? டெல்லி முற்றுகை போராட்டத்தின் போது விவசாயி சுபகரன்சிங் ஏன் கொல்லப்பட்டார்?, ஏன் போராட்டம் நடத்த பா.ஜ.க அனுமதி மறுக்கிறது என அடுக்கடுக்கான கேள்விளை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

இந்திய ஒன்றியம் முழுவதும் பா.ஜ.க கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. நாங்கள் நானூறு இடங்களைப் பெறுவோம் என்று தேர்தலுக்கு முன் மார் தட்டிய பா.ஜ.க தற்போது 150 இடங்களை மட்டுமே பெறும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

முதல்கட்டத் தேர்தலில் தமிழ்நாடு முன்மொழிந்த பா.ஜ.கவின் சூழ்ச்சியை, அடுத்தடுத்த கட்ட தேர்தல்களின் மூலம் வட இந்தியாவும் வழிமொழிகிறது.

பா.ஜ.க வீழும்! இந்தியா வெல்லும்!

- வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It