வாழ்த்து அட்டைகளில்
நிறைந்துகொண்ட
அன்றைய தமிழ்ப்புத்தாண்டு
வண்ணங்களின் சுமையோடு
இன்றும் உலர்ந்துகொள்ளாத மீளிப்பருவமாய்
அகதாழில் கிறுக்கப்பட்ட நினைவுகள்
அலமாரி அடுக்குகளில் அடைந்துபோக
பலபேரால் கடத்தப்பட்ட
ஒரு குறுந்தகவலில்
தன்னை புதிப்பித்துக்கொண்டு
கைபேசியில் மீளுருகிறது
இன்றைய தமிழ் புத்தாண்டு

- சன்மது