ஒற்றைவீடென நின்று
நிசப்தத்தை அகோரமென
விழுங்கிக்கொண்டு
இருளை கக்கியத்தில்
அவ்விடத்தில்
இரைந்துகொண்ட சருகுகள்
உயரம் கொண்டு மோதிக்கொண்டதில்
வனத்தின் தவம் கலைந்து
அதிர்ந்ததில் ஒளிந்துகொண்டிருந்த
ஒற்றைவீட்டின் விளக்கு அணைந்துகொண்டது
அலறிக்கொண்டதில்
தொலைக்காட்சியின் ஒளியில் பேயென
தெரிந்துக்கொண்டாள் அருணா

- சன்மது

Pin It