மலர்மகள் 

விடாது கொட்டிக் கொண்டிருக்கும் 

மழை நாளில் 

 

போர்வைக்குள் மரவட்டையாய் 

சுருண்டு கிடக்க வேண்டிய 

அதிகாலைத் தருணங்களில் 

 

பிளாஸ்டிக் பையை 

கோவர்த்தன கிரியாய் 

தலை மறைத்து 

 

நாலுகால் பாய்ச்சலில் 

நாற்பது படிகள் தாண்டி 

நூறுக்கும் குறையாத 

வீடுகளுக்கு 

பேப்பர் போடும் 

சிறுவனைத் துரத்தும் 

வறுமையின் வேகத்தை விடவா 

 

சதமடித்த வீரர்களின் 

பந்தின் வேகம் பற்றிய 

கூடுதல் செய்தி 

இருந்துவிடப் போகிறது 

அந்தச் செய்தித் தாளில்! 

- மலர்மகள்