இறுதிநட்சத்திரத்தின்அதிர்வுக்குள்ளும் 
காலத்தின்தூசியேறியவரலாற்றுக்குள்ளும் 
பிராணனேஇல்லை

தொடுவானம் திறப்பதைப்போலும்
மிகுசுதந்திரத்தோடுகடைசிப்பறவையின்
கடைசிப்பாடலைக்கேட்கிறேன்

அகங்காரித்துக்கரையேறிய 
அலைகளுக்குமூச்சிருக்கவில்லை 
தன்னைவிடுவிக்கமுன் 
ஆழ்மூச்செடுத்துமோதுகின்றன

அகழ்ந்தசுரங்கங்களை
செங்கல்சூளைகளை 
கட்டியிருக்கும்அவர்கள்அகவிம்பங்கள்
அறைகுறைவெளிச்சத்தில் 
தெரிந்தபாடில்லை

பிரமிட்டுகளில்
எதிரொலிக்கும்நாவும் 
வெகுதூரத்திற்குஅப்பாலுள்ள 
இரத்தஆற்றில்மிதக்கின்ற
முனகலோசைகளும் 
என்பூமிக்குள்கேட்கின்றன

இறுகப்பற்றியஎன்மரம் 
பூமிதுளைக்க
நுனிவளர
கிளைக்க
பூக்க
கனிந்துகிடக்கிறது

கொன்றுபுதைத்துவிட்டுப் 
போநண்பா
விதையூன்றல்என்றும் 
அதற்குமறுபெயருண்டுதானே

 

 00

நாடுகடத்தப்பட்டவனுக்கு 
எல்லாகாடுகளும் 
வீடுகளே

நாடுகடத்தப்பட்டவன்
எப்போதும்சிறைச்சாலைஅற்ற
சிறைக்கைதி

நாடுகடத்தப்பட்டஉயிர்
உயிர்ப்பற்றஉயிர்ப்பறவை

நாடுகடத்தப்பட்டவனின்
பைத்தியஉறுதிகளால்
உலகத்தைகாப்பாற்றமுடியும்

நாடுகடத்தப்பட்டவன்
நகங்களால்அவனது 
தசைகள்பிய்த்தெடுக்கப்படும்

நாடுகடத்தப்பட்டவனின்
மார்பைஅவனதுஉறவினர்களின் 
குண்டுகளால்துளைக்கமுடியும்

நாடுகடத்தப்பட்டஅவனை 
புறக்கணிக்கஅவனது 
துயரம்திறந்திருக்கிறது

நாடுகடத்தப்பட்டவன் 
சாவதற்காக 
பேரம்பேசப்பட்டவன் 
பிறிதொன்றாக. ....!

 

00

கிள்ளிஎறியாதீர்கள்
ஆயுள்முழுவதும் 
சிரித்திருக்கத்தானே
மொட்டவிழ்க்கின்றன 
பூக்கள்.

அவற்றின்
மென்னிதயங்களின்
நரம்புகளைநீவிநீவி 
தவமிருந்துதான்வாசிக்கின்றன 
வண்டுகள்.

கிள்ளிஎறியப்பட்டவை
எதுவும்உடனடியாக 
நிரந்தரமாக 
வாடுதல்நிஜமில்லையா.

வேறுஒன்றும்வேண்டாம் 
மலர்த்தும்மரத்துடன் 
பிணைந்திருங்கள்.

அதன்வேர்களில்
எழுதப்பட்டதுயரற்ற
ஒருபூங்கொத்து
உங்கள்நிழலிலும்இளைப்பாற 
வேண்டும்அல்லவா?

- தமிழ் உதயா, லண்டன்

Pin It