செம்புலப் பெயல்
நீர் நிலமென
மனம் நெகிழ்ந்திருக்கிறது!

ப்ரியமான மனுஷருக்கு
கடிதம் எழுதிடப்
பிடித்திருக்கிறது!

மரங்களடர்ந்த சாலையில்
உள்ளங்கைப் பற்றி நடந்து போகவேண்டுமென
ஆசையாயிருக்கிறது!

இரு சக்கரவாகனத்தில்
இளையராஜா இசையோடு
நீண்ட பயணம் போக
ப்ரியமாயிருக்கிறது!

கையேந்தி பவனில் உண்டு,
காலாற சிறிது தூரம் நடந்து,
பாலம் அமர்ந்து,
காற்றுக்கு இடமளிக்காது
கவிதை பேசி..

மூச்சிரைக்கும் தருணத்தில்
நெற்றி முடியொதுக்கி..
முத்தமிட்டால்
வாழ்தல் இனிது!

- இசைமலர்

Pin It