புலன்களை வருடும்
உன் ரகசிய சொற்கள்
இதயம் திருகி பறிக்கிறது
உனை உணரும் பொழுதுகள்...

கனவுகள் நிறைந்த இரவுகள்
பிண்ணிக்கிடந்த நாட்களை
நினைவுறுத்தி தொலைக்கின்றன
நேரம் காலம் உணராமல்......

புதைத்து வைத்த நினைவுகள்
எளிதாய் எட்டிப்பார்க்கின்றன
நாம் ரசித்த பாடல்களில்
ஒன்று ஒலிக்கும் நொடியில்...

காற்றாய் கரைந்த உனை
பிடித்து வைக்க முடியாத
இதயம் திருகி பறிக்கிறது
உனை உணரும் பொழுதுகள்...

- அருணா சுப்ரமணியன்

Pin It