மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்
நமது நட்பு நாட்டுக் கடற்படையின்
நேசத் துப்பாக்கிகள் சுட்டுக் கொன்றுவிடக்கூடும்

விவசாயிகள் பயிரிட வேண்டாம் 
எண்ணெய் தூர்ப்பண தேசபக்தர்களுக்கு
அது தடையாகிவிடக் கூடும்

கீழடிகளை அகழ வேண்டாம்
ஆரிய வரலாற்றுப் பெருமிதங்கள் 
அங்கு புதைக்கப்பட்டுவிடக் கூடும்

சிதம்பர பெருங்கோவிலில் தமிழ்ப் பாட்டு வேண்டாம்
தேசபக்த நடராஜ பகவான் சீற்றமடைந்துவிடக் கூடும்

இளைஞர்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்
அது எச்சமயத்திலும் போராட்டக் களமாகிவிடக்கூடும்

முக்கியமாக...
எவரும் சிந்திக்க வேண்டாம்
நீங்கள் தேச விரோதிகளாகி விடக்கூடும்

- விவேக்

Pin It