கொடியவர் மோடி ஆட்சியில் மக்கள்

                குறைகள் களையத் துப்பில்லை!

அடிமை எடப்பாடி ஆட்சிக் கெதையும்

                அதட்டிக் கேட்க வக்கில்லை!

தூய்மை இந்தியா பெயரில் எங்கும்

                துடைப்பக் கட்டை தேய்கிறது!

வாய்மைத் தோழர் வரவரராவ் முதல்

                வதைபடச் சட்டம் பாய்கிறது!

மாபெரும் திட்டம் பணமதிப் பிழப்பு

                மசிரைக் கூடப் பிடுங்கலையே!

கோபப் படுவதாய் மோடி நடித்தும்

                கோவணங் கூட அசையலையே!

கறுப்புப் பணத்தின் கதைஎன் னாச்சு

                மட்டையை ரெண்டா கிழிச்சாச்சா?

வெறுப்பைக் கக்கும் மதவெறிக் கும்பல்

                வேத இந்தியா படைச்சாச்சா?

எல்லா ஊரிலும் பிள்ளையார் ஊர்வலம்

                இந்து வெறியை ஊட்டிடுதே!

புல்லை மேயும் பசுமாட் அரசியல்

                வெட்டரி வாளைத் தீட்டிடுதே!

அமித்ஷா மோடி அணைப்பில் சேட்டு

                அம்பானிக் கூட்டம் கொழுக்கிறதே!

இமைக்கவும் நேரம் இல்லாக் கொடுமையில்

                ஏழையர் கூட்டம் தவிக்கிறதே!

வாய்க்கொழுப் பெடுத்த ராஜா சேகர்

                வலம்வர இங்கே தடையில்லை!

பேய்அர சொழிக என்ற சோபியா

                பேச்சுக் கிங்கே பல தொல்லை!

இந்துத் துவாவும் வல்லர சியமும்

                இணைந்த மோடி ஒழியட்டும்!

குந்தித் தோப்புக் கரணம் போடும்

                எடப்பாடி அரசோ அழியட்டும்!

Pin It