தமிழகத்தில் 1980 ஆம் ஆண்டு ஆரிய பார்ப்பனான ராமகோபாலன் என்ற ஆர்எஸ்எஸ் குடுமியின் தலைமையில், இந்து முன்னணி என்ற பயங்கரவாத அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட பின்னர், 1982 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அது நடத்திய மண்டைக்காடு கலவரம், 1998 ஆம் ஆண்டு கோவையில் நடத்திய கலவரம் ஆகிவற்றைத் தொடர்ந்து இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்த இந்தக் கும்பலுக்கு பொருளாதார உதவிகளை வாரிக் கொடுக்கும் கூட்டமாக வணிகம் செய்யும் நாடார் சாதியையும், குஜராத்தி மார்வாடி சேட்டுகளும் மாறிப் போயினர்.
தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான சாதி மக்களில் இந்த இரண்டு சாதிக்கு மட்டும் தான் இந்து என்ற உணர்வு பீறிக்கொண்டு வருகிறதா?? இவர்கள்தான் இந்து மதத்தை தூக்கி நிறுத்த வந்த கூட்டமா? அதிலும் தாழ்த்தப்பட்ட மக்களை விடவும் கீழான மக்களாய் ஒரு காலத்தில் தாங்கள் வைக்கப்பட்டதை மறந்து நாடார் சாதியினருக்கு அப்படி என்ன பிடிப்பு இந்துமதத்தின் மீது?
இதை எல்லாம் ஆராய்ந்தால்,வெறும் குழப்பமும், எண்ணிலடங்கா புதிர்கள் மட்டுமே மிஞ்சும். உண்மையான காரணத்தை கள நிலவரத்தோடு ஆராய்ந்தால், உண்மையான காரணி விளங்கும். நாடார், மார்வாடி, இஸ்லாமியர் ஆகியோரை ஒரே நேர் கோட்டில் நிறுத்தினால், இவர்களுக்குள் உள்ள வேற்றுமைகள் ஏராளம். ஆனால் இந்த மூவரையும் இணைக்கும் இணைப்புப் புள்ளி அல்லது ஒற்றுமை என்பது "தொழில்" என்ற மூலமே ஆகும்.
இந்த "தொழில்" என்ற மந்திரச் சொல் தான் நாடார்களையும், மார்வாடிகளையும் இஸ்லாமியர்களுக்கு எதிராக காவிகள் பக்கம் இழுத்துச் செல்லும் மூல காரணம் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த நாடார் சமூகம், கடைகள் மற்றும் சிறு வணிகத்தில் கால் பதித்த போது, அவர்கள் சந்தித்த போட்டியாளர்கள் இஸ்லாமியர்கள். அதே போல 80களின் இறுதியிலும், 90களின் தொடக்கத்திலும் மார்வாடிகள் கோவையில் இறக்குமதியாகி, தங்களின் தொழிலை வேர் பரப்ப முயற்சி செய்த போது, அவர்களும் சந்தித்த போட்டியாளர்கள் இஸ்லாமியர்கள்.
இதற்கு காரணம் இஸ்லாமியர்கள் ஒன்று, இரண்டு நூற்றாண்டுகளாக வணிகம் செய்பவர்கள் அல்ல, நூற்றாண்டுகளாக கடல்வணிகத்தையும், இன்னும் பிற வணிகத்துறைகளிலும் கை தேர்ந்த நிபுணர்களாக விளங்கினர். ஆக இப்படி இருக்கும் சூழலில் 40, 50 ஆண்டுகளாக வணிகத்தில் இறங்கிய நாடார்களுக்கும், தமிழ்நாட்டில் வியாபாரத்திற்காக படை எடுத்த குஜராத் மார்வாடிகளுக்கும் இயற்கையாகவோ, எதேச்சையாகவோ பூர்வாகமாக வணிகத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்கள் தொழில்போட்டியாளர்களாக ஆகிப் போயினர்.
இந்தப் பனி யுத்தத்தை மோப்பம் பிடித்த பார்ப்பன ஆர்எஸ்எஸ் கும்பல், குஜராத் மார்வாடிகளையும், ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களையும் விட கீழான மக்களாக நடத்திய நாடார்களையும் ‘நாம் எல்லாம் இந்துக்கள்’ என்ற பெயரில் ஆரத் தழுவி, "துலுக்கர்கள் ஒழிக" என்ற கோசத்தை மெல்லிய குரலில் ஓதியது. ஏற்கனவே தொழில் போட்டியில் புகைந்து கொண்டிருந்த இஸ்லாமியர் எதிர்ப்பு மனநிலை, இந்த வன்ம கோசத்தை அலாதியாய் ரசித்தது.
இதன் தொடர்ச்சியாய் தான் வருடா வருடம் நடக்கும் விநாயகர் சதுர்த்தியை மார்வாடிகளும், நாடார்களும் இந்துவாய் தங்களை கற்பனை செய்துகொண்டு கொண்டாட ஆரம்பித்தனர். இந்து பக்தி வியாபாரிகளுக்கு விநாயகர் சதுர்த்தி தவிர வேறு எந்த இந்துப் பண்டிகைகளுக்கு இந்து என்ற உணர்வோ, பூரிப்போ வராது. கட்டாயம் அப்படி வர வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், "துலுக்கன் ஒழிக" என்ற கோசத்தை காது பிளக்க எழுப்ப வேண்டும். கூடவே நடக்கும் ஊர்வலத்தை வம்படியாக மசூதிகள் இருக்கும் தெருக்களில் எடுத்துச்சென்று கலவரம் செய்வோம் என்ற சத்தியப்பிரமாணம் எழுதித் தர வேண்டும். தந்தால் லட்ச லட்சமாய் பணம் கொட்டும். நவதுவாரத்தில் இந்து என்ற உணர்வு பீறிடும்.
விநாயகனைத் தவிர, இங்கே உள்ள முனியாண்டியை, கருப்பராயனைத் தூக்க எல்லாம் வடநாட்டுப் பார்ப்பனர்கள் உத்தரவு தர மாட்டார்களே!! இந்தத் தொழில் பக்தி தான் ஊர் கடை வைத்திருக்கும் அண்ணாச்சி முதல் சரவணா ஸ்டோர் வைத்திருக்கும் பெரு முதலாளி வரை ஆர்எஸ்எஸ் , இந்து முன்னணி கும்பலுக்கு பொருளாதாரத்தை அள்ளித்தர வைக்கும் சூட்சுமம். மாரியாத்தாளுக்கு நோம்பி சாட்டி, வசூலுக்குச் சென்றால் தமிழனை சாடி அனுப்பும் மார்வாடியை, கலவரம் செய்ய பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட விநாயகர் சதுர்த்திக்கு அள்ளி வீச வைக்கும் வியாபார பக்தி. இந்த வியாபார பக்தர்கள் மனதை குளிரவைக்கத் தான், "துலுக்கர்கள் கடையில் பொருட்களை வாங்காதீர்" என இந்து முன்னணி கும்பல் போடும் சந்தைப்படுத்தல் கோசம். எலி அம்மணமாக ஓடுவதற்கான ஒற்றைக் காரணம் இதுவே.
ஆக பார்ப்பனிய காவிக் கும்பலுக்கும் இந்த கூலிப்படை வியாபாரம் என்பது இரு பக்க லாபம். ஒரு பக்கம் இஸ்லாமியர்களை எதிரியாய் சித்தரித்து, உண்மை எதிரியான பார்ப்பனியத்தை காப்பாற்றி விடலாம். இன்னொரு பக்கம் இப்படி வரும் வருமானத்தில் உழைக்காமல் தங்களுக்குத் தேவையான சொத்துக்களை சேர்த்துக் கொள்ளலாம். ஆக ஒரு தேசியம் மட்டுமல்ல, எந்த ஒரு மதமும் கூட பெருமுதலாளிகளின் நலன்களுக்காக கட்டமைக்கப்படும் போலி பிம்பமே!!
- மனோஜ் குமார், தந்தை பெரியார் திராவிடர் கழகம்