ஒரு வழியாக அம்பேத்கர் திரைப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டுவிட்டது. ஆங்கிலத் திலும், இந்தியிலும் 2003ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு தேசிய விருதுகளை பெற்றும் நீதிமன்றம் தலை யிட்ட பின்னர்தான் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட இத்திரைப்படம் வெளிவந்துள்ளது. அதிலும் தமுஎகச மற்றும் தலித் அமைப்புக்கள் சில முக்கிய நகரங்களில் ஏற்பாடு செய்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு தன் பங்கிற்கு ரூ.10 லட்சம் வழங்கிவிட்டு தன் கடமையை முடித்துக் கொண்டது. பெரியார் திரைப்படத்திற்கு செய்ததுபோல் கட்சி அமைப்புகள், பள்ளி மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்திருந் தால் சிறப்பாக இருந்திருக்கும். தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பணி உள்ளது.

பொதுவாக நமது நாட்டின் விடுதலைப் போராட்டமும், அதில் ஈடுபட்ட தலைவர்களின் வரலாறும் போதிய அளவு கலை இலக்கிய வடிவங்களில் பதிவாகவில்லை - மகாத்மா காந்திக்கே ஒரு வெளிநாட்டு ஆட்டன்பரோ வரவேண்டியதாயிற்று - பிறரை பற்றிச் சொல்வானேன்.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிதிஉதவி பெற்று மதன் ரத்னுபார்க்கி இதனை தயாரித்துள்ளார். சிறந்த இயக்குனரான ஷியாம் பெனகல் உள்ளிட்ட பலரின் ஆலோசனையுடன் ஜாபர் பட்டேல் இப்படத்தை சிறப்பாக இயக்கி உள்ளார். படத்தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் அவர்களின் நேர்த்தியான செயல்பாட்டிற்காக நமது பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும்.

இதுபோன்ற வரலாற்றுப் படங்களை எடுப்பதில் உள்ள சிரமம் எல்லோரும் அறிந்ததே. எனினும் சுமார் மூன்றரை மணி நேரம் எடுத்துக் கொள்ளும் இத்திரைப்படத்தை தொய்வில்லாமல் அதே நேரத்தில் முக்கிய சம்பவங்கள் அனைத்தையும் விட்டுவிடாமல் சிறப்பாக உருவாக்கியுள்ளனர்.

நான்கு வர்ண சாதிய அமைப்பு பற்றிய படக்காட்சிகளுடன் படம் துவங்குகிறது. கோவிலுக்குள் நுழையும் தலித் இளைஞனை காவல்துறை தாக்குவதும் அடுத்து பள்ளி மாணவர்கள் தேசிய கொடி யுடன் ‘சாரே ஜகான்சே அச்சா’ பாடலைப் பாடிச் செல்வதும் துவக்கத்திலேயே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிவிடுகிறது. அம்பேத்கரின் வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பாக மட்டும் அல்லாமல் அரசியல் சர்ச்சை கள், கொள்கை விளக்கங்கள் என வீரியத்துடன் படம் விரிந்து செல்கிறது.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்திலும், பின்னர் லண்டனில் பொருளாதாரம், சட்டம் பயின்று பட்டங்கள் பெறுவதும் அதற்காக அவர் படும் துன்பங்களும் மனதைத் தொடும் விதத் தில் பதிவாகி உள்ளது. மனைவி ரமாபாயிடம் செலுத்தும் அன்பு, குடும்பத்தைப் பராமரிக்க இயலாத வறுமை, நோய்வாய்ப்பட்டு மனைவி இறப்பது போன்ற வாழ்க்கை நிகழ்வுகளும் உரிய விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

பரோடா மன்னர் சாயாஜி கெய்க்வாட், கோலப்பூர் மன்னர் சாகு மகராஜ் மற்றும் லண்டன் பேராசிரியர்களின் உதவியுடன்தான் படிப்பை முடித்து, வேலையும் பெற முடிந்தது.

ஆனால், ஆரம்ப கால பள்ளிப் படிப்பில் அம்பேத்கர் என்ற பார்ப்பன ஆசிரியர் செய்த உதவிகள், ஆசிரியரின் அந்த அன்பின் காரணமாக பீமாராவ் என்ற தன் பெயருடன் அம்பேத்கர் என்ற பெயரை யும் இணைத்துக் கொண்டதால் இறுதியில் அம்பேத்கர் என்ற பெயரே பெரிதும் அறியப்பட்டது என்ற தகவல் பதிவாகாமல் போய்விட்டது.

“மனிதன் தன் வாழ்நாளில் எந்த அளவு பணியாற்ற முடியும் என்பதை உணர்ந்து தாழ்த்தப் பட்ட மக்களின் பிரச்சனையை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன்” என தன் பணி பற்றி அம்பேத்கர் சொன்னதை நினைவில் கொள்வது அவசியம் - லண்டனில் படிக்கும்போது திலகர், கோகலே, காந்தி பற்றியும், விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் பற்றியும் பேச்சுவரும் போது அம்பேத்கர் அதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை நாசூக்காக படத்தில் காட்சிப்படுத்தி யுள்ளனர். தன் வாழ்நாள் முழுவதையும் சமுதாயப் போராட்டத்திற்கு அவர் அர்ப்பணித்தார். தாழ்த்தப் பட்ட மக்களின் விடுதலையை முக்கிய குறிக் கோளாக எடுத்துக் கொண்டார்.

பொருளாதாரத்திலும், சட்டத்திலும் மிகப் பெரிய மேதையாக அவர் விளங்கினாலும் அவர் மகர் இனத்தில் (தலித்) பிறந்ததால் சாதி இந்துக்கள் உரிய அங்கீகாரம் தர மறுக்கின்றனர். அவமரி யாதை செய்கின்றனர். பரோடா மன்னர் தன் சமஸ் தானத்தில் வேலை கொடுக்கிறார். ஆனால் குதிரை வண்டிக்காரன் ஏற்றிச் செல்ல மறுக்கிறான். தங்கு வதற்கு இடம்கொடுக்க மறுக்கின்றனர் பார்சி என நினைத்து இடம் கொடுத்தவர்கள் சாதியை அறிந்த வுடன் வெளியேற்றுகின்றனர். இவருக்கு கீழ் பணி யாற்றும் சாதாரண ஊழியர்கள்கூட இவரை அவமானம் செய்கின்றனர். பம்பாய் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்த போது ஒரு ‘மகர்’ என்ன கற்றுத்தரப்போகிறார் என அலட்சியப்படுத்துகின் றனர். தண்ணீர் தர மறுக்கின்றனர். இந்தக் காட்சிகள் எல்லாம் அழுத்தமாக பதிவாகியுள்ளன.

1928ல் சைமன் கமிஷன் இந்தியாவிற்கு வருகிறது. காங்கிரஸ் பகிஷ்காரம் செய்கிறது. அம்பேத்கர் கமிசனை சந்தித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதி வேண்டும் என மனு கொடுக்கிறார். இதனைத் தொடர்ந்து 1930ல் லண்டனில் வட்டமேசை மாநாடு நடைபெறு கிறது. காந்தியும் காங்கிரசும் புறக்கணிப்பு செய் கின்றனர். ஆனால் முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தாழ்த்தப் பட்ட மக்கள் சார்பில் அம்பேத்கார், இரட்டை மலை சீனிவாசன் கலந்து கொண்டு மீண்டும் தனித்தொகுதி கோரிக்கையை வலியுறுத்துகின்றனர். காந்தி கலந்து கொள்ளாததால் இறுதி முடிவு எட்ட முடியவில்லை.

மீண்டும் 1931ல் இரண்டாம் வட்டமேஜை மாநாடு நடைபெறுகிறது. காந்தி கலந்து கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்தொகுதி கோரிக் கையை எதிர்க்கிறார். தற்கொலைக்கு சமம் என்கிறார். மாநாடு முடிவில்லாமல் கலைகிறது. 17.8.32 அன்று வைஸ்ராய் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமை வழங்கி அறிவிப்பு செய்கிறார்.

காந்தி இதைக்கடுமையாக எதிர்த்து புனே நகரின் எரவாடா சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்குகிறார். காந்தியின் உயிரைக் காக்க தேசம் முழுவதும் பதட்டம் ஏற்படுகிறது. தன் மக்களின் உரிமையை நிலைநாட்ட அம்பேத்கர் உறுதியாகப் போராடுகிறார். ‘காந்தியை கதா நாயகனாகவும் என்னை வில்லனாகவும் சித்தரிக்கி றார்கள்’ என அம்பேத்கர் குறிப்பிடுகின்றார். இந்த காட்சிகள் முழுவதும் உணர்ச்சிகரமாக படமாக்கப் பட்டுள்ளன.

இறுதியில் மனிதாபிமான அடிப்படையில் இரட்டை வாக்குரிமையை விட்டுக் கொடுத்து, தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் முறையை ஏற்று அம்பேத்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். புனே ஒப்பந்தம் என்ற அந்த புகழ்பெற்ற ஒப்பந்தத் தில் எத்தகைய சூழ்நிலையில் மனப்போராட் டங்களுக்கு மத்தியில் கையெழுத்திடுகிறார் என்ப தும், காந்தியின் உயிரைப் பணயமாக வைத்து அம்பேத்கரை சம்மதிக்க வைப்பதும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1927ல் பம்பாய் சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராக அம்பேத்கர் நியமனம் செய்யப்படுகி றார். அதை பயன்படுத்தி தீண்டாமைக்கு எதிராக பல சட்டங்களை நிறைவேற்றவும் நடவடிக்கை களை மேற்கொள்ளவும் முயற்சிகளை மேற்கொள் கிறார். மகத் என்ற நகரில் உள்ள சவுதாகர் குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுக்க முடியாது என்பதை அறிந்து அங்கு மாநாடு நடத்தி 5000 பேரைத் திரட்டி தானே தலைமை தாங்கி குளத்தில் இறங்குகிறார். உத்வேகம் அளிக்கும் காட்சி இது.

அம்பேத்கரின் மிகப் பெரிய பங்களிப்பு அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் அவர் வகித்த பங்கு. ஒரு குழு அமைக்கப்பட்டாலும் அம்பேத்கர் தான் வரைவுச் சட்டத்தை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரவு பகலாக உழைத்து அவர் உடல் நலம் பாதிக்கப்படுகிறார். அந்த நிலையில் தான் தன்னைக் கவனித்துவந்த டாக்டர் சாரதா கபீரை 1948 ல் திருமணம் செய்து கொள்கிறார்.

அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல நல்ல அம்சங் களை இணைக்க முடிந்தாலும் இந்திய மக்கள் அனைவரும் சமம் என்பதை உத்தரவாதம் செய்யும் பல அம்சங் களை அவரால் இணைக்க இயல வில்லை.

விடுதலைக்கு முந்தைய இடைக்கால அரசியல் சட்ட அமைச் சராக அம்பேத்கர் பதவி ஏற்றார். இந்து சட்டத்தை திருத்த ஒரு குழு அமைக்கப்பட்டு அதன் இயல்பு அடிப்படையில் சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஒரு மசோதா தாக்கல் செய்தார். பெண்களுக்குச் சொத் துரிமை, திருமணம், விவாகரத்து, பெண்களுக்கான உரிமைகள் என பல நல்ல அம்சங்கள் அடங்கிய அந்த மசோதாவை நேரு ஆதரித்தாலும் காங்கிரசில் பலரும் எதிர்த்தனர்.

பிறகு சரமசம் செய்து சொத் துரிமை பற்றிய அம்சங்களை நீக்கி விட்டு மசோதாவை கொண்டு வந்த போதும் எதிர்ப்பு வந்தது. இதை எதிர்த்து 1951 செப்டம்பரில் அம்பேத்கர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

1952 முதல் மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி பல பங்களிப்புகளைச் செய்தார். கடுமை யாக போராடியும் இந்து மதவாதி களின் பிடிவாதத்தால் நொந்து போன அம்பேத்கர் 1956 அக்டோபர் 14 அன்று தன் குடும்பம் மற்றும் இரண்டு லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். அந்தக் காட்சியும் அவரது உணர்ச்சி மயமான பேச்சும் நன்கு படமாக்கப்பட்டுள்ளன.

சில மாதங்களில் டிசம்பர் 6 அன்று மறைந்தார் என திரையில் எழுத்துக்கள் தோன்றி பிறகு படம் முடிகிறது. திரைப் படத்தில் மறைவுக்காட்சிகள் இடம்பெறவில்லை. ஆவணக் காப்பகத்தில் இல்லையா அல்லது இயக்குநர் தவிர்த்து விட்டாரா எனத் தெரிய வில்லை.

அம்பேத்கராக நடித்த, இல்லை வாழ்ந்த மம்முட்டி பற்றி குறிப்பிட்டாக வேண்டும். சிறந்த நடிகருக்கான தேசிய விருது அவருக்கு இப்படம் மூலம் கிடைத்தது சரியான தேர்வு.

மற்றொரு அம்சம் கூர்மையான வசனங்கள். சாதி இந்துக்கள் பயன்படுத்தும் தண்ணீரை பயன்படுத்தக் கூடாது வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும் என அவர்கள் கூறும் போது கம்பீரமாக நடந்து வந்து தண்ணீரை குடித்து விட்டு, “வேண்டுமானால் நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து குடியுங்கள்” என பதிலடி கொடுக்கிறார்.

மிகுந்த மன உளைச்சலுக்கு பிறகு புனே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு காந்தியிடம் “மகாத்மா அவர்களே உண்ணாவிரதம் என்ற ஆயுதத்தை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள். எல்லா நேரத்திலும் அது பயன் படாது” என கூறுவது தியேட்ட ரில் கைதட்டல் பெறுகிறது.

தாழ்த்தப்பட்டவர்களும் இந்து மதத்தின் ஒரு அங்கம் தான் என காந்தி வாதிடும்போது, கைவிரல்களை காட்டி “மேலே இருப்பவன் பார்ப்பனன், அடுத்து சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமர் - இதைத் தலைகீழாக மாற்ற முடியுமா?” என கைவிரல்களை மாற்றிக் காட்டுவதும், “தாழ்த்தப்பட்ட ஒருவரை சங்கராச்சாரியராக நியமிக்கத் தயாரா?” என கேட்பதும் அருமை.

“தாழ்த்தப்பட்டவர்கள் வந்ததால் தீட்டுப் பட்டு விட்டதா? மந்திரம் கூறி புனிதப்படுத்தி கொள்ளுங்கள்!” எனக் கூறி விட்டு நடந்து சென்று திரும்பி பார்த்து என்ன மந்திரம் மறந்து விட்டதா? என கேட்டு வேதத்திலிருந்து சமஸ்கிருத ஸ்லோகத்தை அவர் கூறும்போது பொருளாதாரம், சட்டம் மட்டும் அல்ல வேதங்களையும் கற்றுத் தேர்ந்தவர் என்பது தெளி வாகிறது.

சிறப்பான பின்னணி இசை அமைத்துள்ள அமர் ஹால்டிபூர் பொருத்தமான இடங்களில் நாட்டுப்புற இசைக் கலைஞர்களின் பாடல்களை இணைத்து படத்திற்கு மேலும் மெருகூட்டியுள் ளனர்.

அம்பேத்கரை மையமாகக் கொண்டுள்ள படம் என்ப தால் அவருக்கு செய்யப்பட்ட ஒப்பனை, காந்தி, நேரு உள்ளிட்ட இதர கதா பாத்திரங்களுக்கு செய்யப்படவில்லை. காந்தியும் அம்பேத்கரும் முதலில் சந்திக்கும்போது காந்தி நடந்து கொள்ளும் விதமும், ‘அம்பேத்கர் தாழ்த்தப் பட்டவரா? புனேவை சேர்ந்த முற்போக்கு பிராம ணர் என்று நினைத்தேன்’ என காந்தி கூறுவதும் ஆய்வுக்குரியவை.

எனினும், ஒரு சமூகப் போராளியின் - சட்ட மேதையின் வாழ்க்கை வரலாறு மிகச்சிறந்த முறை யில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாது பார்க்க வேண்டிய படம் மட்டுமல்ல - பாடமும்தான். 

ஒரு வழியாக அம்பேத்கர் திரைப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டுவிட்டது. ஆங்கிலத் திலும், இந்தியிலும் 2003ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு தேசிய விருதுகளை பெற்றும் நீதிமன்றம் தலை யிட்ட பின்னர்தான் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட இத்திரைப்படம் வெளிவந்துள்ளது. அதிலும் தமுஎகச மற்றும் தலித் அமைப்புக்கள் சில முக்கிய நகரங்களில் ஏற்பாடு செய்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு தன் பங்கிற்கு ரூ.10 லட்சம் வழங்கிவிட்டு தன் கடமையை முடித்துக் கொண்டது. பெரியார் திரைப்படத்திற்கு செய்ததுபோல் கட்சி அமைப்புகள், பள்ளி மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்திருந் தால் சிறப்பாக இருந்திருக்கும். தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பணி உள்ளது.

பொதுவாக நமது நாட்டின் விடுதலைப் போராட்டமும், அதில் ஈடுபட்ட தலைவர்களின் வரலாறும் போதிய அளவு கலை இலக்கிய வடிவங்களில் பதிவாகவில்லை - மகாத்மா காந்திக்கே ஒரு வெளிநாட்டு ஆட்டன்பரோ வரவேண்டியதாயிற்று - பிறரை பற்றிச் சொல்வானேன்.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிதிஉதவி பெற்று மதன் ரத்னுபார்க்கி இதனை தயாரித்துள்ளார். சிறந்த இயக்குனரான ஷியாம் பெனகல் உள்ளிட்ட பலரின் ஆலோசனையுடன் ஜாபர் பட்டேல் இப்படத்தை சிறப்பாக இயக்கி உள்ளார். படத்தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் அவர்களின் நேர்த்தியான செயல்பாட்டிற்காக நமது பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும்.

இதுபோன்ற வரலாற்றுப் படங்களை எடுப்பதில் உள்ள சிரமம் எல்லோரும் அறிந்ததே. எனினும் சுமார் மூன்றரை மணி நேரம் எடுத்துக் கொள்ளும் இத்திரைப்படத்தை தொய்வில்லாமல் அதே நேரத்தில் முக்கிய சம்பவங்கள் அனைத்தையும் விட்டுவிடாமல் சிறப்பாக உருவாக்கியுள்ளனர்.

நான்கு வர்ண சாதிய அமைப்பு பற்றிய படக்காட்சிகளுடன் படம் துவங்குகிறது. கோவிலுக்குள் நுழையும் தலித் இளைஞனை காவல்துறை தாக்குவதும் அடுத்து பள்ளி மாணவர்கள் தேசிய கொடி யுடன் சாரே ஜகான்சே அச்சாபாடலைப் பாடிச் செல்வதும் துவக்கத்திலேயே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிவிடுகிறது. அம்பேத்கரின் வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பாக மட்டும் அல்லாமல் அரசியல் சர்ச்சை கள், கொள்கை விளக்கங்கள் என வீரியத்துடன் படம் விரிந்து செல்கிறது.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்திலும், பின்னர் லண்டனில் பொருளாதாரம், சட்டம் பயின்று பட்டங்கள் பெறுவதும் அதற்காக அவர் படும் துன்பங்களும் மனதைத் தொடும் விதத் தில் பதிவாகி உள்ளது. மனைவி ரமாபாயிடம் செலுத்தும் அன்பு, குடும்பத்தைப் பராமரிக்க இயலாத வறுமை, நோய்வாய்ப்பட்டு மனைவி இறப்பது போன்ற வாழ்க்கை நிகழ்வுகளும் உரிய விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

பரோடா மன்னர் சாயாஜி கெய்க்வாட், கோலப்பூர் மன்னர் சாகு மகராஜ் மற்றும் லண்டன் பேராசிரியர்களின் உதவியுடன்தான் படிப்பை முடித்து, வேலையும் பெற முடிந்தது.

ஆனால், ஆரம்ப கால பள்ளிப் படிப்பில் அம்பேத்கர் என்ற பார்ப்பன ஆசிரியர் செய்த உதவிகள், ஆசிரியரின் அந்த அன்பின் காரணமாக பீமாராவ் என்ற தன் பெயருடன் அம்பேத்கர் என்ற பெயரை யும் இணைத்துக் கொண்டதால் இறுதியில் அம்பேத்கர் என்ற பெயரே பெரிதும் அறியப்பட்டது என்ற தகவல் பதிவாகாமல் போய்விட்டது.

மனிதன் தன் வாழ்நாளில் எந்த அளவு பணியாற்ற முடியும் என்பதை உணர்ந்து தாழ்த்தப் பட்ட மக்களின் பிரச்சனையை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன்என தன் பணி பற்றி அம்பேத்கர் சொன்னதை நினைவில் கொள்வது அவசியம் - லண்டனில் படிக்கும்போது திலகர், கோகலே, காந்தி பற்றியும், விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் பற்றியும் பேச்சுவரும் போது அம்பேத்கர் அதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை நாசூக்காக படத்தில் காட்சிப்படுத்தி யுள்ளனர். தன் வாழ்நாள் முழுவதையும் சமுதாயப் போராட்டத்திற்கு அவர் அர்ப்பணித்தார். தாழ்த்தப் பட்ட மக்களின் விடுதலையை முக்கிய குறிக் கோளாக எடுத்துக் கொண்டார்.

பொருளாதாரத்திலும், சட்டத்திலும் மிகப் பெரிய மேதையாக அவர் விளங்கினாலும் அவர் மகர் இனத்தில் (தலித்) பிறந்ததால் சாதி இந்துக்கள் உரிய அங்கீகாரம் தர மறுக்கின்றனர். அவமரி யாதை செய்கின்றனர். பரோடா மன்னர் தன் சமஸ் தானத்தில் வேலை கொடுக்கிறார். ஆனால் குதிரை வண்டிக்காரன் ஏற்றிச் செல்ல மறுக்கிறான். தங்கு வதற்கு இடம்கொடுக்க மறுக்கின்றனர் பார்சி என நினைத்து இடம் கொடுத்தவர்கள் சாதியை அறிந்த வுடன் வெளியேற்றுகின்றனர். இவருக்கு கீழ் பணி யாற்றும் சாதாரண ஊழியர்கள்கூட இவரை அவமானம் செய்கின்றனர். பம்பாய் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்த போது ஒரு மகர்என்ன கற்றுத்தரப்போகிறார் என அலட்சியப்படுத்துகின் றனர். தண்ணீர் தர மறுக்கின்றனர். இந்தக் காட்சிகள் எல்லாம் அழுத்தமாக பதிவாகியுள்ளன.

1928ல் சைமன் கமிஷன் இந்தியாவிற்கு வருகிறது. காங்கிரஸ் பகிஷ்காரம் செய்கிறது. அம்பேத்கர் கமிசனை சந்தித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதி வேண்டும் என மனு கொடுக்கிறார். இதனைத் தொடர்ந்து 1930ல் லண்டனில் வட்டமேசை மாநாடு நடைபெறு கிறது. காந்தியும் காங்கிரசும் புறக்கணிப்பு செய் கின்றனர். ஆனால் முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தாழ்த்தப் பட்ட மக்கள் சார்பில் அம்பேத்கார், இரட்டை மலை சீனிவாசன் கலந்து கொண்டு மீண்டும் தனித்தொகுதி கோரிக்கையை வலியுறுத்துகின்றனர். காந்தி கலந்து கொள்ளாததால் இறுதி முடிவு எட்ட முடியவில்லை.

மீண்டும் 1931ல் இரண்டாம் வட்டமேஜை மாநாடு நடைபெறுகிறது. காந்தி கலந்து கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்தொகுதி கோரிக் கையை எதிர்க்கிறார். தற்கொலைக்கு சமம் என்கிறார். மாநாடு முடிவில்லாமல் கலைகிறது. 17.8.32 அன்று வைஸ்ராய் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமை வழங்கி அறிவிப்பு செய்கிறார்.

காந்தி இதைக்கடுமையாக எதிர்த்து புனே நகரின் எரவாடா சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்குகிறார். காந்தியின் உயிரைக் காக்க தேசம் முழுவதும் பதட்டம் ஏற்படுகிறது. தன் மக்களின் உரிமையை நிலைநாட்ட அம்பேத்கர் உறுதியாகப் போராடுகிறார். காந்தியை கதா நாயகனாகவும் என்னை வில்லனாகவும் சித்தரிக்கி றார்கள்என அம்பேத்கர் குறிப்பிடுகின்றார். இந்த காட்சிகள் முழுவதும் உணர்ச்சிகரமாக படமாக்கப் பட்டுள்ளன.

இறுதியில் மனிதாபிமான அடிப்படையில் இரட்டை வாக்குரிமையை விட்டுக் கொடுத்து, தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் முறையை ஏற்று அம்பேத்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். புனே ஒப்பந்தம் என்ற அந்த புகழ்பெற்ற ஒப்பந்தத் தில் எத்தகைய சூழ்நிலையில் மனப்போராட் டங்களுக்கு மத்தியில் கையெழுத்திடுகிறார் என்ப தும், காந்தியின் உயிரைப் பணயமாக வைத்து அம்பேத்கரை சம்மதிக்க வைப்பதும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1927ல் பம்பாய் சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராக அம்பேத்கர் நியமனம் செய்யப்படுகி றார். அதை பயன்படுத்தி தீண்டாமைக்கு எதிராக பல சட்டங்களை நிறைவேற்றவும் நடவடிக்கை களை மேற்கொள்ளவும் முயற்சிகளை மேற்கொள் கிறார். மகத் என்ற நகரில் உள்ள சவுதாகர் குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுக்க முடியாது என்பதை அறிந்து அங்கு மாநாடு நடத்தி 5000 பேரைத் திரட்டி தானே தலைமை தாங்கி குளத்தில் இறங்குகிறார். உத்வேகம் அளிக்கும் காட்சி இது.

அம்பேத்கரின் மிகப் பெரிய பங்களிப்பு அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் அவர் வகித்த பங்கு. ஒரு குழு அமைக்கப்பட்டாலும் அம்பேத்கர் தான் வரைவுச் சட்டத்தை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரவு பகலாக உழைத்து அவர் உடல் நலம் பாதிக்கப்படுகிறார். அந்த நிலையில் தான் தன்னைக் கவனித்துவந்த டாக்டர் சாரதா கபீரை 1948 ல் திருமணம் செய்து கொள்கிறார்.

அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல நல்ல அம்சங் களை இணைக்க முடிந்தாலும் இந்திய மக்கள் அனைவரும் சமம் என்பதை உத்தரவாதம் செய்யும் பல அம்சங் களை அவரால் இணைக்க இயல வில்லை.

விடுதலைக்கு முந்தைய இடைக்கால அரசியல் சட்ட அமைச் சராக அம்பேத்கர் பதவி ஏற்றார். இந்து சட்டத்தை திருத்த ஒரு குழு அமைக்கப்பட்டு அதன் இயல்பு அடிப்படையில் சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஒரு மசோதா தாக்கல் செய்தார். பெண்களுக்குச் சொத் துரிமை, திருமணம், விவாகரத்து, பெண்களுக்கான உரிமைகள் என பல நல்ல அம்சங்கள் அடங்கிய அந்த மசோதாவை நேரு ஆதரித்தாலும் காங்கிரசில் பலரும் எதிர்த்தனர்.

பிறகு சரமசம் செய்து சொத் துரிமை பற்றிய அம்சங்களை நீக்கி விட்டு மசோதாவை கொண்டு வந்த போதும் எதிர்ப்பு வந்தது. இதை எதிர்த்து 1951 செப்டம்பரில் அம்பேத்கர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

1952 முதல் மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி பல பங்களிப்புகளைச் செய்தார். கடுமை யாக போராடியும் இந்து மதவாதி களின் பிடிவாதத்தால் நொந்து போன அம்பேத்கர் 1956 அக்டோபர் 14 அன்று தன் குடும்பம் மற்றும் இரண்டு லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். அந்தக் காட்சியும் அவரது உணர்ச்சி மயமான பேச்சும் நன்கு படமாக்கப்பட்டுள்ளன.

சில மாதங்களில் டிசம்பர் 6 அன்று மறைந்தார் என திரையில் எழுத்துக்கள் தோன்றி பிறகு படம் முடிகிறது. திரைப் படத்தில் மறைவுக்காட்சிகள் இடம்பெறவில்லை. ஆவணக் காப்பகத்தில் இல்லையா அல்லது இயக்குநர் தவிர்த்து விட்டாரா எனத் தெரிய வில்லை.

அம்பேத்கராக நடித்த, இல்லை வாழ்ந்த மம்முட்டி பற்றி குறிப்பிட்டாக வேண்டும். சிறந்த நடிகருக்கான தேசிய விருது அவருக்கு இப்படம் மூலம் கிடைத்தது சரியான தேர்வு.

மற்றொரு அம்சம் கூர்மையான வசனங்கள். சாதி இந்துக்கள் பயன்படுத்தும் தண்ணீரை பயன்படுத்தக் கூடாது வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும் என அவர்கள் கூறும் போது கம்பீரமாக நடந்து வந்து தண்ணீரை குடித்து விட்டு, “வேண்டுமானால் நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து குடியுங்கள்என பதிலடி கொடுக்கிறார்.

மிகுந்த மன உளைச்சலுக்கு பிறகு புனே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு காந்தியிடம் மகாத்மா அவர்களே உண்ணாவிரதம் என்ற ஆயுதத்தை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள். எல்லா நேரத்திலும் அது பயன் படாதுஎன கூறுவது தியேட்ட ரில் கைதட்டல் பெறுகிறது.

தாழ்த்தப்பட்டவர்களும் இந்து மதத்தின் ஒரு அங்கம் தான் என காந்தி வாதிடும்போது, கைவிரல்களை காட்டி மேலே இருப்பவன் பார்ப்பனன், அடுத்து சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமர் - இதைத் தலைகீழாக மாற்ற முடியுமா?” என கைவிரல்களை மாற்றிக் காட்டுவதும், “தாழ்த்தப்பட்ட ஒருவரை சங்கராச்சாரியராக நியமிக்கத் தயாரா?” என கேட்பதும் அருமை.

தாழ்த்தப்பட்டவர்கள் வந்ததால் தீட்டுப் பட்டு விட்டதா? மந்திரம் கூறி புனிதப்படுத்தி கொள்ளுங்கள்!எனக் கூறி விட்டு நடந்து சென்று திரும்பி பார்த்து என்ன மந்திரம் மறந்து விட்டதா? என கேட்டு வேதத்திலிருந்து சமஸ்கிருத ஸ்லோகத்தை அவர் கூறும்போது பொருளாதாரம், சட்டம் மட்டும் அல்ல வேதங்களையும் கற்றுத் தேர்ந்தவர் என்பது தெளி வாகிறது.

சிறப்பான பின்னணி இசை அமைத்துள்ள அமர் ஹால்டிபூர் பொருத்தமான இடங்களில் நாட்டுப்புற இசைக் கலைஞர்களின் பாடல்களை இணைத்து படத்திற்கு மேலும் மெருகூட்டியுள் ளனர்.

அம்பேத்கரை மையமாகக் கொண்டுள்ள படம் என்ப தால் அவருக்கு செய்யப்பட்ட ஒப்பனை, காந்தி, நேரு உள்ளிட்ட இதர கதா பாத்திரங்களுக்கு செய்யப்படவில்லை. காந்தியும் அம்பேத்கரும் முதலில் சந்திக்கும்போது காந்தி நடந்து கொள்ளும் விதமும், ‘அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவரா? புனேவை சேர்ந்த முற்போக்கு பிராமணர் என்று நினைத்தேன்என காந்தி கூறுவதும் ஆய்வுக்குரியவை.

Pin It