14-04-1891 : அன்னை பீமாபாய் - தந்தை சுபேதார் மேஜர் இராம்ஜீ அம்பேத்கர் தம்பதியின் 14 ஆம் குழந்தையாக, அன்றைய மத்திய பிரதேச மாநில Military Headquarters of War - MHOW, மாவ் என்ற இடத்தில் பிறந்தார் பி.ஆர்.அம்பேத்கர்.

20-07-1924: “கற்பி - கிளர்ச்சி செய் - ஒன்றுசேர்” என்ற முழக்கத்தை முதன் முதலாக முன்வைத்து ‘ஒடுக்கப்பட்டோர் மேம்பாட்டுப் பேரவை’ யைத் தொடக்கி வைத்தார்.ambedkar 243ஜுன் 1927: அனைத்து இந்துக்களுக்கும் திறந்துவிடப்பட்ட ‘தாருர்த்வார்’ கோயிலுக்குச் செல்ல முன் அனுமதி வாங்கியிருந்தும், சிவதர்கருடன் கோயிலுக்குச் சென்ற அம்பேத்கர் கடுமையாகத் தாக்கப்பட்டு, வெளியே தள்ளப்பட்டார்.

13-10-1935 : பம்பாயில் இயோலா மாநாட்டில், இந்து மதத்தில் உள்ள சமத்துவமின்மைதான். நான் இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று எண்ணுவதற்குக் காரணமாகும். தீண்டாமை எனும் கறையுடன் நான் இந்துவாகப் பிறந்து விட்டேன். ஆனால் இந்துவாகச் சாக மாட்டேன் என்று அறிவித்தார்

08-01-1940 : பம்பாயில் தந்தை பெரியார் தன் தோழர்களுடன் அம்பேத்கரைச் சந்தித்தார்கள். அந்த சந்திப்பில் முகமத் அலி ஜின்னாவும் இருந்தார்.

14-10-1956 : நாகபுரியில் அம்பேத்கரும் அவரின் துணைவர் சவிதாவும் வெள்ளை உடையணிந்து, குசிநாராவைச் சேர்ந்த பிக்கு மகாஸ் தவீர் முன்னிலையில் காலை 9.30 மணிக்கு பெளத்தம் தழுவினார்கள். அவர்களுடன் 5 இலட்சம் பேர்கள் பௌத்தம் தழுவினர்.

06-12-1956: அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் டில்லி, அலிப்பூர் சாலையிலுள்ள அவரின் இல்லத்தில், இரவு 9 மணிக்குத் தூக்கம் கலையாமல் மரணமடைந்தார்.

- எழில்.இளங்கோவன்

Pin It