periyarr 450ஏப்ரல் 13, 1924 : வைக்கத்திலிருந்தவர்களின் அழைப்பை ஏற்று, பெரியார் வைக்கம் வந்து சேர்ந்தார்.

“தமிழ்நாட்டுத் தலைவர்களும் தொண்டர்களும் வைக்கத்திற்கு வாருங்கள். இது ஒரு நல்ல வாய்ப்பு. உன்னத இலட்சியத்திற்கு உழைக்க வாருங்கள்” என்று தமிழ்நாட்டினருக்கும் பெரியார் அறிக்கை (சுதேசமித்திரன், 15.04.1924)

ஏப்ரல் 16, 1924 : வைக்கம் சத்தியாக்கிரகம் குறித்து காங்கிரஸ் தீண்டாமை விலக்குக் குழுவில் பெரியார் விளக்கவுரை.

மே 15, 1924 : இரண்டாவது முறையாக மனைவி நாகம்மையாருடன் வைக்கம் பயணம். தீவிரப் பிரச்சாரம்.

மே 22, 1924 : பெரியாருக்கு ஒரு மாத கால வெறுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

மே 23, 1924 : நாகம்மையார், எஸ். ஆர். கண்ணம்மாள் ஆகியோர் வைக்கம் சத்தியாக்கிரகத்தில் கிளர்ச்சி.

ஜூன் 10, 1924 : பார்ப்பனர்களும், நாயர்களும் கூடி சத்தியாக்கிரகிகள் நாசமாக வேண்டி சத்துரு சம்ஹார யாகம்.

ஜூன் 21, 1924 : பெரியார் சிறையிலிருந்து விடுதலை.

ஜூலை 16, 1924 : பெரியாருக்கு நான்கு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 30, 1924 : பெரியார் விடுதலை.

நவம்பர் 27, 1925 : சத்தியாக்கிரகப் போராட்டம் முழு வெற்றி பெற்றது. கோயிலைச் சுற்றியுள்ள எல்லாப் பாதைகளும் அனைத்து ஜாதியினருக்கும் திறந்து விடப்பட்டது.

நவம்பர் 29, 1925 : வைக்கம் வெற்றி விழாவில் நாகம்மையாருடன் கலந்து கொண்ட பெரியார், நமது நோக்கம் அனைத்து ஜாதியினரும் சாலைகளில் நடக்க உரிமை பெறுவது மட்டுமன்று, அனைவரும் கோயில்களில் நுழைய உரிமை பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

- வெற்றிச்செல்வன்

Pin It