drunken manகட்டிங் குவாட்டர்
ஆஃப் ஃபுல்
அளவு தெரியுமா
குடிகாரன் கேட்குறான்?

உன்னால அரசுக்கு
எவ்வளவு
காசுபோகும்டா
நாம கேட்டா
பதிலளிக்காம
மட்டையாகிறான்!

முதியோர் முதல்
இளையோர் வரை
முழுசா குடிக்கிறான்
குடிக்கு
அடிமையாகுறான்!

அவனை
அப்படியாக்குவது
அரசின் கடமை!
வருட இறுதியில்
டாஸ்மாக்
வருமானம் பலகோடி
அரசுக்கு இதான்
பெருமை!

குடித்தவன் விழித்தால்
இளைஞன் கேள்வி
கேட்டால்
பதிலளிக்க முடியுமோ?
அதான் அரசே
குடிக்க வைக்குது!

ஒரு காலத்துல அரசு
சூதாட்டவிடுதி நடத்துச்சு
விபச்சாரவிடுதி
நடத்துச்சு
வேடிக்கை பார்த்துச்சு
கோயில் வரிமூலமா
வரிய அள்ளுச்சு!

மக்கள் விழிச்சாங்க
கொஞ்சம் கொஞ்சம்
வரி குறைச்சாங்க!

இறக்குங்கடா சரக்க
போடுங்கடா வரிய
தனியாரிடமிருந்து
அரசு
எடுத்துக்கொண்டது
எதற்காக?
உந்தன் உழைப்பை
சுரண்டி காசாக்கி
அந்த காசோட
நீ வீட்டுக்கு போகாம
டாஸ்மாக்கு போகனும்
அதுக்காக!

புருசன் குடிச்சா
தட்டிகேட்கும்
பொண்டாட்டி
அடிச்சு உடைக்க
போனா
டாஸ்மாக்குகளை!
அய்யய்யோ ஆபத்து
ஆரம்பிங்கடா
மகளிர் சுய
உதவிகுழுக்களை!

கொந்தளிச்ச மகளிரை
கோபத்தை குறைச்சது!
லோன் குடுத்து
கடனாளியாக்கியது!

குடிச்சா குடிச்சுட்டு
போறாரு
பாவம் உடம்புவலி
மருத்துவச்சி ஆனாங்க
மாமியாரும்
மருமகளும்!

டாஸ்மாக்
எப்போதும்
பாஸ்மார்க்???
இல்லவேயில்லை
ஆகும் ஒரு நாள்
பெயில்மார்க்!!!!

குடிக்காதே
அரசுக்கு வருவாய்
ஈட்டி தராதே!!!

More articles by தாஸ் அருள்சாமி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.