dalit cleaningஅதிசயமாய்
சூரியனும் சந்திரனும்
எதிர் எதிராய்
ஒரே நேரத்தில்

வலிய
ஒளிக்குமுன்
குளிரிழந்து
வெளிறிப் போன
நிலவு

முட்செடியிலிருந்து
தலை நீட்டும்
பச்சைப் பாம்பு

வெள்ளையும்
சிவப்புமாளிணி
பசிய
இலைகளினுடே
குப்பென மலர்ந்து
கிடக்கும்
காகிதப் பூக்கள்

தூரத்துப் பெருமாள்
கோவிலிலிருந்து
கசிந்து
வழிகிறது சுப்ரபாதம்

வியாதிக்கோ
உடல் பேதற்கோ
டிசர்ட்டும்
மெலிதான
ஷூவுமாய்
வாக்கிங் போகும்
ஐந்தாறு தொப்பைகள்

எவன் வீட்டு
அடைப்பிற்கோ
சுத்தம் செய்ய
இரும்புக் கம்பியோடு
நான்

புலர் காலையோ
பொன் மாலையோ
நாற்றத்தோடுதான்
நாற்றத்தோடுதான்
வாழ்க்கை.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.