கீற்றில் தேட...

84. மாடர்ன் தியேட்டர் தயாரித்த மாயாவதி திரைப்படம் தோல்வியை தழுவியது, அதை சரி செய்ய கலைஞரின் மந்திரி குமாரி நாடகத்தை திரைப்படமாக்கி கலைஞர் வசனம் எழுத மாடர்ன் தியேட்டர் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம் முடிவு செய்தார். பல தொடக்க விழாவுக்கு நல்ல நாள் தேதி குறிக்க ஒரு சோதிடரை கூட்டி வந்தார்கள். அவரிடம் கலைஞர் தோல்வி அடைந்த மாயாவதி படத்திற்கும் நீங்கள் தானே தொடக்க விழாவுக்கு நல்ல நாள் பார்த்தீர்கள் என்று கேட்க சோதிடர் தலை குனிந்து நின்றார்.

 85. பராசக்தி படம் குறித்து பேராசிரியர் அன்பழகன் இவ்வாறு கூறினார்,  ‘இந்த படம் பார்த்ததும் நின்று விடும் அளவில் ஒரு கலைக்காட்சி அல்ல, பார்ப்போர் உள்ளத்தைத் தடவி அதில் படிந்துள்ள வஞ்சக சூழ்ச்சி கருத்துக்களைத் துடைத்து வெளியேற்றி அங்கு குடிகொள்ளும் அறசக்தி என்று குறிப்பிட்டார் ’

86. பராசக்தி படத்துக்கு போட்டியாக பக்தியை வளர்க்க எஸ்.எஸ்.வாசன் தயாரித்த படம் தான் அவ்வையார். அதில் பெரும் சம்பளம் கொடுத்து கே பி சுந்தராம்பாள் என்ற பிரபல பெண் பாடகரை நடிக்க வைத்தார்.karunanidhi 483 87. பராசக்தி வெற்றிப்படமாக ஓடிய போது அதை பொறுக்க முடியாது, தமிழன் என்ற புனைவுப் பெயரில் ஒருவர் ராஜகோபாலாச்சாரிக்கு 16 பக்க கடிதம் ஒன்றை எழுதினார்

88. 1975-இல் கலைஞர் ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்தார். அதன்படி பரம்பரையாக இருந்து வந்த கர்ணம் மற்றும் கிராமத் தலைவர் பதவிகள் ஒழிக்கப்பட்டன. அதற்கு பதிலாக தமிழ்நாடு மாநில தேர்வாணையத்தால் கிராம அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

89. இது குறித்து கலைஞர் கூறுகையில் பரம்பரை பதவிகளை ஒழித்தது தமிழ்நாட்டில் சாதியின் இயங்கியலை மாற்றியதோடு நிலப் பிரபத்துவம் என்ற சமூக விலங்கை கட்டுப்படுத்தியது என்றார்.

 90. 1971-இல் கலைஞர் சிப்காட் என்ற என்று அழைக்கப்படும் அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். தொழிற்பேட்டைகள் பரவுவதற்கும் நிலவள வங்கிகள் உருவாவதற்கும் சிப்காட் துணை நின்றது.

 91. 1968-இல் திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே சோ துக்ளக் என்ற நையாண்டி நாடகத்தை எழுதி திமுகவை கடுமையாக விமர்சித்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில்  ‘நானே அறிவாளி’ எந்த நாடகத்தை கலைஞர் எழுதினார். இந்த நாடகம் பற்றி கல்கி,ஆனந்த விகடன் கள்ள மவுனம் சாதித்து ஏதும் எழுதாமலேயே கடந்து சென்றன.

92. அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் இந்திராவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஜெயபிரகாஷ் நாராயணனை அழைத்து அவரோடு மேடைகளை பகிர்ந்து கொண்டார் கலைஞர். ஒரு கூட்டத்தில் தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகளை ஒழிக்க வேண்டும் என்று ஜெயபிரகாஷ் நாராயணன் வேண்டுகோள் விடுக்க, அதே மேடையில் லாட்டரி சீட் ஒழிக்கப்படும் என்று அறிவித்தார் கலைஞர்.

 93. வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது தான் கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் காவிரி நீர் பங்கிடுவதிலுள்ள தகராறுகளைத் தீர்க்க காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் உருவாக ஓய்வின்றி உழைத்தவர் கலைஞர் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான குகன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

94. 1976-இல் சென்னை குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க வீராணம் நீர்த்திட்டத்தை செக்கோஸ்லேவேகியா நாட்டுடன் இணைந்து தொடங்கினார் கலைஞர். இத்திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறி  சர்க்காரியா ஆணையத்தின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த எம்ஜிஆர் ஆட்சியில் பத்தாண்டு காலம் கிடப்பில் போடப்பட்டது இந்த திட்டம். ஆணையத்தின் விசாரணைக்கு வரும்போது இத்திட்டத்தில் ஊழல் ஒன்றுமில்லை என்று சர்க்காரியா ஆணையம் கூறியது. பிறகு சர்க்காரியா ஆணையம் சாட்சிகளின் விசாரணைக்கு பிறகு பிறகு 2000-2001 –இல் இத்திட்டத்தை புதிய வீராணம் என்று கொண்டு வந்தார் ஜெயலலிதா.

95 1976இல் நாட்டையும் அரசியல் அமைப்புகளையும் பாதுகாக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மகா கூட்டணி உருவாக்க மூளையாக செயல்பட்டவர் கலைஞர். டெல்லியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியன் இல்லத்தில் அவர் வழியாக அனைத்துக்கட்சி தலைவர்களையும் கூட்டச் செய்து கலைஞரும் அந்த கூட்டத்தில் பங்கேற்றார்

96. 1983இல் காஞ்சி சங்கராச்சாரி ஜெயந்திரன் கலைஞரையும் அவரது மொழிக் கொள்கையையும் கடுமையாக சாடி இதயம் பேசுகிறது என்ற இதழில் எழுதினார். அதன் ஆசிரியராக இருந்தவர் பார்ப்பனர்களின் பிரதிநிதியாக செயல்பட்ட மணியன். இதற்கு கலைஞர் தமிழ் மொழியை ஆரிய மொழியான சமஸ்கிருதத்துடன் ஒப்பிடவே முடியாது என்று பதிலடி தந்தார்.

97. தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தின் முறையான ஆய்வுக்கு உட்பட்டவர்கள் என்ற சட்டம் முதன் முதலாக கலைஞர் ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் எம்ஜிஆர் ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் நீதிபதி நாராயணசாமியால் நீக்கப்பட்டது. திமுக சட்டசபையில் இதை கடுமையாக எதிர்த்தது.

98. தேர்தலில் தோல்வியடைந்த இந்திரா காந்தி, திமுகவுடன் கூட்டணி வைக்க முன்வந்தார். இந்தி திணிப்பில் தீவிரம் காட்டிய பிரதமர் மொரார்ஜி தேசாயை கடுமையாக எதிர்த்து திமுக மாநாடுகளை நடத்தியது. ஜனதா கட்சி தங்களுக்குள்ளே மோதிக்கொண்டு ஆட்சியை இழந்தது. பிளவுபட்ட ஜனதாக் கட்சியின் சார்பாக பிரதமராக மொரார்ஜி தேசாய் இருந்தபோது எம்ஜிஆர் மொரார்ஜிக்கு ஆதரவு தந்து தன் கட்சியைச் சார்ந்த இரண்டு பேரை மத்திய அமைச்சராக்கினார். சில நாட்களிலேயே மொரார்ஜி ஆட்சியும் கவிழ்ந்தது.

 99. பெரியார் நூற்றாண்டு விழாவுக்கு இந்திராவை அழைத்துவந்து  அவசர சட்டத்தை கொண்டு வந்ததற்காக பொதுக்கூட்ட மேடையிலேயே மன்னிப்பு கேட்க வைத்தவர் கலைஞர்.

100. அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அழுத்தத்தின் காரணமாகவே திமுகவுக்கு எதிராக சர்க்காரியா விசாரணையை ஆணையத்தை தாம் அமைக்க நேர்ந்தது என்று பகிரங்கமாக மேடையில் ஒப்புக்கொண்ட இந்திரா காந்தி, அந்த விசாரணை நாடகத்தை நகைச்சுவை படம் என்று கிண்டலடித்தார்.

- விடுதலை இராசேந்திரன்