• வேத கால சனாதனம் வேத பாடசாலை மட்டுமே நடத்தியது மோடி கால சனாதனம் மக்கள் பேசாத சமஸ்கிருதத்திற்கு மட்டுமே கூடுதல் நிதியை ஒதுக்குகிறது.
• வேத கால சனாதனம் கல்வி உரிமையைத் தடுத்தது, மோடி கால சனாதனம் சூத்திரர் உயர்கல்வியைத் தடுக்க நீட், நெக்ஸ்ட் தேர்வுகளை நடத்துகிறது.
• வேத கால சனாதனம் பெண்களை விதவையாக்கி - மொட்டை அடித்து இழிவுபடுத்தியது, மோடி கால சனாதனம் பழங்குடிப் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் போகும் வன்முறையாளர்களுக்கு ஜே போடுகிறது.
• வேத கால சனாதனம் கோயில் பூஜைகளில் பெண்களை தடுத்தது, மோடி கால சனாதனம் ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழையவே தடுக்கிறது.
• வேத கால சனாதனம் கடல் பயணத்திற்கு தடைப் போட்டது, மோடி கால சனாதனம் கடல் தாண்டிப் போய் சனாதனத்தை பரப்புகிறது.
• வேத கால சனாதனம் அரசர்களை ராஜ குருவின் கட்டளைக்கு அடக்கி வைத்தது, மோடி கால சனாதனம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை ஆளுநரின் கட்டளைக்கு கீழ்படியச் சொல்கிறது.
• வேத கால சனாதனம் சூத்திர சம்பூகனின் தலையை வெட்டியது, மோடி கால சனாதனம் பசுமாட்டை காக்க மனிதர்களை கொலை செய்கிறது.
• வேத கால சனாதனம் ஜனநாயகத்தை மறுத்தது, மோடி கால சனாதனம் நாடாளுமன்றத்தின் முடக்குது.
- விடுதலை இராசேந்திரன்