தினசரி நம்முடைய தலையிலிருந்து கொட்டுகிற முடியின் எண்ணிக்கை 50 லிருந்து நூறு வரை. ஒரு தலைமுடியின் ஆயுள் சராசரியாக 36 மாதங்கள். ஒரு வருடத்திற்கு ஆறு அங்குலம் என்ற கணக்கில் தலைமுடி வளர்கிறது.
தலைமுடி உதிர்வதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் ஊட்டச்சத்து குறைவு தான் முக்கியக்காரணம். இதற்கு வைட்டமின் மாத்திரைகளை விழுங்குவதற்கு பதிலாக உணவில் தினமும் கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டாலே சரியாகி விடும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
ஆம்! உண்மைதான். கறிவேப்பிலையால் கிடைக்கும் பலன்கள் அல்லது பயன்கள்: முடி வளரும். கருமை வண்ணம் மாறாது. நரை விரைவில் வாராது. கண்ணுக்குக் குளுமை. பல் சொத்தை வாராது. கறிவேப்பிலையைக் கழுவிய பின் கடைவாய்ப்பல்லால் அரைத்து மென்று முழுங்கினால் தொண்டைக்கும் இதம். சொத்தையும் வாராது. வயிற்றில் புண் வர வாய்ப்பில்லை.வாயில் துற்நாற்றம் இருக்காது. உடல் சூட்டைத் தணிக்கும்