1) ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் 'பிகாசு'(Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - “No sentence ends with because because ‘Because’ is a conjunction”

2) அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார்.  அச்செய்தியாளர் 'அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வல்லவர் இல்லை; பன்னாட்டு அவை(‘UNO’)  பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது' என்னும் எண்ணம் கொண்டிருந்தார்.  அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும் என எண்ணிப் "பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா?"  என்று கேட்டார்.  அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர் கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது.  என்ன சொன்னார் அண்ணா என்கிறீர்களா?

"ஐ நோ யுனோ.  ஐ நோ யு நோ யுனோ.  பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ."

(“I know UNO.  I know – you know UNO.  But you don’t know I know UNO” )

- முத்துக்குட்டி

Comments

2 comments

2
v.kannan
அண்ணாவிடம் "UNION" என்றால் என்ன? என்று ஒருவர் கேட்டார். அதற்கு அண்ணா அவர்கள் "UNION IS ONION"- என்று பதில் அளித்தார். வெங்காயத்தில் உள்ளது போன்று UNION -ல் உள்ள அனைத்து உறுப்பினர்களும்
இணைந்து ஒற்றுமையாகச் செயல்படுவதுதான் UNION என்று விளக்கிச்சொன்னார் அண்ணா.
saidai ma.anbarasan
அண்ணாவின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின் போது,பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாடிக்கொண்டிருந்தார். அக்கூட்டத்தில் ஒரு
மாணவர், அவரைப் பார்த்து,ஏ,பி,சி,டி எனும் நான்கு எழுத்துகளைத் தவிர்த்து நூறு ஆங்கில வார்த்தைகளைக் கூற முடியுமா ? எனக் கேட் டார்.

உடனே அண்ணா,ஓன், டூ,த்ரீ, ஃபோர்,ஃபைவ்,சிக்ஸ், ஸெவன்,...............நைண்டி ஹெய்ட், நைண்டி நைன் என்று சொல்லி,கடைசியில் ஸ்டாப் என்று நிறுத்தி விட்டார்.இதில் வியப்பான செய்தி என்னவென்றால், ஒன்று தொடங்கி தொண்ணூற்று ஒன்பது வரையிலான ஆங்கில எழுத்துகளில்
ஏ,பி,சி,டி எனும் நான்கு எழுத்துகளும் இடம் பெறாது. ஹன்ரட் என்னும் சொல்லில் டி வருவதால், ஸ்டாப் என்று கூறினார்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.