தமிழக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி முதுகுளத்தூர் கலவரம். அதன் சுருக்கமான வரலாற்றுப் பின்னணி இதுதான்.

•       1945 இல் எஸ்.எஸ்.எல்.சி.யை முடித்த ‘தேவேந்திரர்’ சமூகத்தைச் சார்ந்த இமானுவேல் ராணுவத்தில் சேர்ந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம் தனது சமூக மக்கள் இந்துக் கலாச்சாரத்தில் மூழ்கிக் கிடப்பதையும் சாதி இழிவுக்கு உள்ளாக்கப்படுவதையும் கண்டு வேதனை அடைந்தார். 1952 இல் தனது அவில்தார் பதவியை ராஜினாமா செய்து விட்டு சமூகக் களத்தில் இறங்குகிறார்.

•       தேவேந்திரர்கள் செருப்பு அணியக் கூடாது; குடை பிடிக்கக் கூடாது; முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டக் கூடாது; பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது போன்ற எட்டு தடைகளை மறவர்கள் தேவேந்திரர்கள் மீது சுமத்தி இருந்தனர்.

•       1957 இல் நடந்த பொதுத் தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதிக்கும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் பார்வர்டு பிளாக் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்டார். இவைகள் இரட்டை உறுப்பினர் தொகுதி. தனித்தொகுதிக்கு ஒரு வேட்பாளரையும் பொதுத் தொகுதிக்கு ஒரு வேட்பாளரையும் தேர்வு செய்ய வேண்டும். எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை இமானுவேல் தீவிரமாக ஆதரித்தார்.

•       போட்டியிட்ட இரண்டு பொதுத் தொகுதிகளிலும் முத்துராமலிங்கத் தேவர் வெற்றிப் பெற்றுவிட்டார். ஆனால், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத்துக்கான தனித் தொகுதியில் - பார்வர்டு பிளாக் சார்பாக முத்து ராமலிங்க தேவர் நிறுத்திய வேட்பாளர் தோல்வி அடைந்துவிட்டார். முத்துராமலிங்க தேவருக்கு அப்பகுதியில் கிடைத்த முதல் தோல்வி இதுதான். அதோடு இத் தொகுதியில் வெவ்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ‘தேவேந்திர’ வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்கு, தேவர் பெற்ற வாக்குகளைவிட 1.5 லட்சம் கூடுதலாக இருந்தது. தேவரின் சாதி ஆதிக்கத்துக்கு சவால் வந்துவிட்டது என்பதை உணர ஆரம்பித்தனர். தேவர் - தேவேந்திரர் பகைமை முற்றியது.

•       தொடர்ந்து காடமங்கலம், சாக்குளம், கொண்டுலாவி, பூக்குளம், கமுதி ஆகிய ஊர்களில் தேவேந்திரர்களை வம்புச் சண்டைக்கு இழுத்து, தேவர்கள் தாக்க, தேவேந்திரர்களும் திருப்பித் தாக்க கலவரங்கள் நடந்தன.

•       இரண்டு தொகுதிகளில் வெற்றிப் பெற்ற முத்துராமலிங்க தேவர் - முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவே அங்கு இடைத் தேர்தல் வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் - மோதல் வலுக்கிறது.

•       இரு பிரிவினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட போலீஸ் அதிகாரி ஆகி யோர் 1957 செப்டம்பர் 10 ஆம் தேதி அமைதிக் கூட்டத்தைக் கூட்டினர். தேவேந்திரர்கள் சார்பில் இமானுவேலும் கலந்து கொண்டார். 9 மணிக்கு நடக்க இருந்த கூட்டத்துக்கு தேவர் 10 மணிக்கு வந்தார். அனைத்து அதிகாரிகளும், பிரமுகர்களும் ஒரு மணி நேரம் தேவருக்காக காத்திருந்தனர்.

•       தேவரைப் பார்த்தவுடன் எழுந்து நின்று ‘எஜமான் வணக்கம்’ என்று எல்லோரும் சொல்ல வேண்டும் என்ற வழக்கம் - அப்போது கட்டாயத்திலிருந்தது. அமைதிக் கூட்டத்துக்கு வந்தவர்கள் அப்படியே கூறினர். ஆனால் இமானுவேல் அப்படிக் கூறாமல் இருந்தார்.

•       பல பிரச்சினைகளில் இமானுவேலுக்கும் தேவருக்கும் கூட்டத்தில் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. இறுதியாக சமசர ஒப்பந்தம் தயாரானது. ஒப்பந்தத்தில், தேவேந்திரர்களின் பிரதிநிதியாக தனக்கு சமமாக இமானுவேலை ஏற்க முடியாது என்று கூறி, தேவர் கையெழுத்திட மறுத்தார். நீண்ட விவாதத்துக்குப் பிறகு - அதிகாரிகள் வற்புறுத்தலுக்குப் பிறகே தேவர் கையெழுத்திட்டார்.

•       அடுத்த நாள் - செப்டம்பர் 11 ஆம் தேதி பரமக்குடி அருகே எமனேசுவரர் எனும் ஊரில் பாரதி நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிவிட்டு பரமக்குடியிலுள்ள தமது இல்லம் திரும்பி, உணவு அருந்திவிட்டு, 50 அடி தூரத்தில் உள்ள பெட்டிக் கடைக்குப் பொருள் வாங்கப் போனார் இமானுவேல். அப்போது இரவு 8.30 மணி. பேருந்திலிருந்து இறங்கிய கும்பல் ஒன்று கடை வாசலில் இமானுவேலை வெட்டிச் சாய்த்தது. தனது 33வது வயதில் தான் ஏற்றுக் கொண்ட சாதி ஒழிப்பு லட்சியத்திற்காக இமானுவேல் மரணத்தைத் தழுவினார்.

Comments

14 comments

14
Thangaraj
இருட்டும் புரட்டும் வெளிச்சத்துக்கு வரும். என்ற நம்பிக்கை இதை படித்ததும் எனக்கு வ்ருகிறது.
Parthiban
First know "Who is Mr.MuthuRamalinga Thevar", before writing some articles.
If you have space in website, it doesn't mean that you can put what ever you think.
Give respect to others and you will get it back. Or else only your people will keep reading this articles.I hope you can understand
Guest
1945kalil raanuvappani. entha raanuvathil? appothu inthiyaavil irunthathu vellaiyar arasin raanuvam. Inthiyaavukku veliyae irunthathu inthiya desiya raanuvam. varallatrup pinnani patri pesuvathaanaal keezhathooval padukolai patri pesavendama.kalavaram thonriyathaa? vuruvaakkappattathaa? appothu aatchi athikarathil iruntha kamaraj congress & co patri pesavendama?Devarin tholvi patri pesum katturaiyaalar avar petra vetrikalaiyum athu thamilaka arasiyalilum inthiya arasiyalilum erpaduthiya thakkam patri pesavendamaa. varalatru pinnani enru thalaippu potuvitu immanuvel kolai patri mattum pesinaal eppadi? cheran.
kasini
தேவரைப் பார்த்தவுடன் எழுந்து நின்று ‘எஜமான் வணக்கம்’ என்று எல்லோரும் சொல்ல வேண்டும் என்ற வழக்கம் - அப்போது கட்டாயத்திலிருந்தது.--- இது நம்புற மாதிரி இல்லையே? பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல்னும். அப்ப மீட்டிங்ல இருந்த பெருமாள் பீட்ட்ர்
தேவரைப் பார்த்தவுடன் எழுந்து நின்று ‘எஜமான் வணக்கம்’ என்று சொன்னாரா? வரலாற்றை திரிக்காதிர்க்ள்.
marudhupandian
விடுதலையாரே வரலாற்றை திரிக்காதிர்க்ள். 1.எட்டு தடைகளை மறவர்கள் தேவேந்திரர்கள் மீது சுமத்தி இருந்தனர் என்று உன்மைக்கு மாறாக கூருவதன் ந்க்கம் என்ன. நாட்டர்கள் இட்ட தடை அது. மறவர்கள் அல்லர் . 2. 1945 இல் எஸ்.எஸ்.எல்.சி.யை முடித்த ‘தேவேந்திரர்’ சமூகத்தைச் சார்ந்த இமானுவேல் ராணுவத்தில் சேர்ந்தார். ஆதாரம் ஏதேனும் தர முடியுமா?
marudhupandian
விடுதலையாரே, பசும்பொன் வரலாற்று சுவடுகள் என்ற நூலை படியுங்கள். நக்கீரன் வெளீயீடு.
karikaalan
இம்மானுவேல் வெள்ளையர் ஆட்சியில் விடுதலைக்கு எதிராக ராணுவத்தில் வேலை பார்த்தார். போராளீயாக வரலாற்றை திரிக்காதிர்கள். அந்தக் காலத்தில் காங்கிரஸ் கட்சியின் சமூக, வர்க்க தன்மை கட்டுரையாளருக்கு தெரியாதா.1957 இடைத்தேர்தலில் இமானுவேல் ஆதரவு கொடுத்தும்,ஆட்சியாளர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்தும் பார்வர்டு பிளாக் வெற்றி பெற்றது எப்படி? நீதி மன்றத்தில் குற்றமற்றவர் என்று விடுதலை செய்த பின்பும் அவதூறு செய்வதன் நோக்கம் என்ன? இடதுசாரிகளோடு இணைந்து பணியாற்றிய தேவரின் வர்க்க தன்மையையும்,தமிழ் மொழிக்கு எதிராகவும் பெருமுதலாளின் நலன்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட காங்கிரஸ்காரர்களின் யோக்கியதையும் கட்டுரையாளருக்கு தெரியாமல் போனதா? இப்படிப்பட்ட கட்சியின் பிரதிநிதிதானே இம்மானுவேல். தஞ்சை மாவட்டத்தில் காங்கிரஸ் பள்ளர்களை ஒடுக்கி சவுக்கடி சானிப்பால் கொடுத்த போது இமானுவேல். காங்கிரஸ் கட்சியில் இருந்து என்ன செய்தார்? ஆனால் நிலவுடைமையாளராக இருந்தும் ஜமீந்தார் ஒழிப்பு மாநாடு நடத்திய தேவரின் வர்க்க தன்மையை கட்டுரையாளர் வசதியாக மறைத்து விடுவதன் நோக்கம் என்ன? விடுதலையாரே உண்மையான வரலாற்றை திரிக்காதீர்கள்.
எல்லாளன்
விடுதலை, உங்கள் **** கருத்துகளை மாற்றிக் கொள்ளுங்கள். மணற்கேணி இதழில் கிருஸ்ணம்மாள் ஜெகநாதன் பேட்டீயைப் படியுங்கள். அவர் முதல் தலித் பெண் போராளி. முதுகுளத்தூர் கலவரத்தை நேரில் சென்று கள ஆய்வு செய்தவர். முதுகுளத்தூர் கலவரத்தில் பள்ளர்களுக்கு நாடார் வியாபாரிகள் பணம், ஆயுத உதவி செய்ததை உறுதி செய்கிறார். 'மறவர்களுக்கும் பள்ளர்க்ளுக்கும் அப்பா மகன் உறவு இருந்தது. ஆதியில் 'மறவர்களுக்கும் நாடார்களுக்கும்தான் சண்டை'என்று கூறுகிறார். பள்ளர்களை தூண்டி விட்டதில் நாடார்களுக்கும் காமராஜ் காங்க்ரசுக்கும் பங்கு உண்டு என்பதையும் வலியுறுத்துகிறார். இங்கு பள்ளர்களுக்கு உறவாக இருநத காங்க்ரசு தஞ்சை மாவட்டத்தில் பள்ளர்களை ஒடுக்கி சவுக்கடி சானிப்பால் கொடுமைகள் கொடுத்ததே?
விடுதலை!! கெடுதலை செய்யாதிகள்.
சொ. பிரபாகரன்
இமானுவல் சாதி ஒழிப்பு லட்சியத்திற்காக மரணத்தைத் தழுவினார் என்று விடுதலை இராஜேந்திரன் முத்தாய்ப்பாகக் கூறி கட்டுரையை முடிக்கிறார். சாதிய மேலாண்மை மறுப்பு போராட்டத்தின் போது, சாதியம் வலுப்படுமே ஒழிய, சாதியம் ஒழியாது. சாதி ஒழிப்பு லட்சியத்துக்குப் பாடுபட, மாற்று சிந்தனை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆர்.தியாகு
1952 - இரண்டிலேயே "அரிசன முன்னேற்றம்" என்பதை பற்றி தேவர் அவர்கள் ஆற்றிய உஅரை வரலாற்று சிறப்பு பெற்றது.

இமானுவல் காங்கிரஸ் பிரதிநிதியான ஆர்.எஸ்.ஸ்றுமுகத்திடம் என்னவாய் வேலை செய்தார் என்று உங்கள் நுன்னறிவு எழுதினால் நன்று

வக்கீல் சீனிவாசயய்யர்(கமல்ஹாசம் தந்தை) அவர்களிடம் இமானுவல் இவ்வாறான தொடர்பு வைத்திருந்தார் என்பதையும் விளக்கினால் நன்று.

சும்மா திரிந்தவரை தியாகியாக்கி ஒரு சமூகத்தின் தலைவனாக்கியது யார் என்பதையும் விளக்கினால் நன்று.

இமானுவல் எந்த ஆண்டுக்குப்பின் தாழ்த்தப்பட்டமக்களின் தலைவர் ஆக்கினார்கள் என்பதை சொன்னால் நன்று.

1945 - ல் வெள்ளையன் இராணுவத்தில் சேர்ந்து பணிப்புரிந்ததாய் சொல்பவர் எப்படி இந்திய சுதந்தரத்துக்காக பாடுபடமுடியும்.

இமானுவல் உடன் பிறந்த சகோதரரும் பெண்கொடுத்த மச்சினனும் "தேவர் மீது அபாண்டபழி" என துண்டு நோட்டிஸ் அடித்து ஊர் ஊராக கொடுத்ததையும்..சாகும் வரை அவர்கள் பார்வட் பிளாக்காரர்களாக இருந்தது பற்றியும் விவரமாக எழுதினால் நன்று.

ஒரு பொய்யை மேலும் மெருகுற்றி சொன்னால் உண்மையாகுமா..?
தேவர் மலர்
தேவர் தான் அந்த நபரின் சாவுக்கு காரணமாக இருந்தார் என்றா ஏன் தேவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்டதும் அரசு ஏன் மேல் முறையீடு செய்யவில்லை. மேல் முறையீடு செய்யும் அளவிற்கு அந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என்பது காங்கிரசுக்கு தெரியாமலா போயிருக்கும். இமானுவேல் மீது பரமக்குடி காவல் நிலையத்தில் அவருடைய மனைவி கொடுத்த புகாரின் தன்மையையும் வெளியிடுங்கள். அப்போது தான் அந்த தியாகியின் ஓழுக்கம் இந்த உலகிற்கு தெரியவரும்.
kumaran
விடுதலை ராசேந்திரன் அவர்களே உங்கள் பொய்க்கு அளவே இல்லையா
1957 என்பது இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற ஆண்டு.
அப்போது அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியே கிடையாது.
இந்த கட்டுரையை நீக்குவது தான் உங்களுக்கு அழகு.
நியாயமாரே லிங்க் இருக்கு பாத்துட்டு சொல்லுங்க
ஹ்ட்ட்ப்://எசி.னிச்.இன்/எசி_மைன்/ச்டடிச்டிசல்ரெபொர்ட்ச்/ள்ஸ்_1957/வொல்_ஈ_57_ள்ஸ்.ப்ட்ஃப்
jaihindshiva
இராசேந்திரன் அவர்களே இதற்கெல்லாம் ஆதாரம் வெளியிடுங்களேன் பார்ப்போம்
ARUMUGAM
ராஜெந்த்ரன் உஙகலின் கருத்து பொய் தேவர் அய்யா அவர்கல் நேதாஜி அவர்கலொடு இன்டிஅன் நெசனல் அர்மி மக்கலை திரட்டி நம் நாலட்டுக்கக்கா போரடியவர் தலித் மக்கல் மினாட்ஷி அம்மன் கொவிலுக்கு செல்ல உருதுனையாக இருந்தவர் தேவர் அவர்கள் தலித் மக்கலுக்ககா போராடிய தேவர் இமனு வேலுவை கொல்ல இமனு வேல் ஒன்ரும் பெரிய பொராலி அல்ல தேவர் நினைதால் காங்கிரசு இனனந்து பிரதமர் அயிருக்கலாம் ஆனால் அவர் விரும்ப வில்லை ஏன் என்ரால் அவர் விடுதலை பெருதென நினைத்து போராடிரயவர் எனவெ வரலாரு படிங்க தேசிய தலைவர் தெவரை தவருதலக எலுதிய யராக இருந்தாலும் அவன்க வம்சம் விலங்கது இது சத்தியம்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.