அதிகாரம்
பெற்றுவிடத் துடிக்கும்
பிரயத்தனப் பாடுகளில்
கொள்கைகள் பரணேறியது
தேர்தல் கூட்டணியென.
அம்பலமாகாத
அர்த்த இராத்திரி வேலைகளில்
துரோகங்கள் மிகைத்தது
தொண்டர்களை மறந்த
சந்தர்ப்பவாதத்தில்.
களம் காணத்
தயாரானார்கள்
வசவுகளுக்குப் பஞ்சமில்லாமல்
பழைய மொந்தையில் மொட்ட
டிஜிட்டல் பானத்தின்
துணையோடு
அறுவடையை சாதகமாக்க.
யாவற்றுக்குமிடையில்
அரிதாரப் பொய்யர்களில்
கண்ட அக்கரைக் கூத்தாடியின்
துணையோடு
எதிர்கால இறையாண்மை
காக்க
குறைந்த பட்ச
செயல் திட்டமாக
விரலுக்கு
மையிட வரலாம்
இருப்பதான
உறுதிப்பாட்டிற்காகவாவது.

- ரவி அல்லது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.