கடும் பனிக் காலத்தில் ஏழையென
இலை இழந்து நிற்கும் வேம்பு
எங்கோ மறைந்து நின்று குரல்
எழுப்பும் குயிலின் இருத்தல்
அடி வாங்கினாலும் விரும்பியதைப்
பெற்றுக் கொள்ளும் குழந்தையின் மனம்
அடித்தப்பிறகு விரும்பியதை வாங்கித்
தரும் பெற்றோரின் மனம்
மரணத் தருவாயில் வந்து போகும்
வாழ்க்கைக் கணக்குகள்
சரியென்றாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கும்
தானும் மறுத்ததற்கு வருந்தும் தானும்
உணவில்லாத போது பசியின் ஓலமும்
பசியின்மையால் உணவின் தவிப்பும்
இப்படியே ஓடிக் கொண்டிருக்கிறது யுகம்
எனது புள்ளியைத் தேடி அலைந்து
காற்றாகி மரமாகி சிரித்துக் கொண்டு
நிற்கையில் பசி நிரம்பியக் கண்களோடு
நாயொன்று எனது காலடியில்.

- முனைவர் ம இராமச்சந்திரன்

 

Pin It