ஒரு முப்பது நாள் ஒழைச்சு
ஒண்ணாந்தேதி வாங்கின சம்பளம்
ஒரு நாள் நிக்கலே
எங்க உழைப்பிலே
ஏம் மிஞ்சலே...
போன வருஷம்
போட்ட மளிகை
சிட்டையிலே மாற்றாமில்லே
அந்த அளவில்
ஏதும் ஏற்றமில்லை...
இப்போ
போட்ட சிட்டைக்கு
சம்பள பணம் பத்தலே
இதைச் சரிக்கட்ட
முன்னே மீதம் ஏதுமில்லே.
பால் பாக்கியும்
பேப்பர் பாக்கியும்
சம்பளக் கணக்கிலே சிக்கலே
இதனை ஈடுகட்ட
என்ன செய்ய
வழி ஒண்ணும் தோணலே...
மாசம் மாசம்
ஒரு துண்டு பாக்கி
தொடருது வீட்டிலே - இந்தப்
பற்றாக் குறையாலே
திணறல் நிறைய மனசிலே!
கிலோ அரிசி
ஒரு ரூபாயின்னு விக்குது
மத்த பொருள்களோ
மலையேறி நிக்குது
உயரும் விலைக்கு
உலை வைக்க முடியலே
நாட்ட ஆளுறவங்களுக்கு
நாம் போட்ட ஓட்டு பயனில்லே!