சிறியதை விழுங்கப்
பெரியது...
அதனை விழுங்க
மற்றொன்று...
இடையில் மிதக்கும்
நதியிலை...

என்றபடி கடக்கும்
காலத்தின் கால்
தடத்தைத்தான்
நீங்கள் வாழ்க்கை
என்று கூறித் திரிகிறீர்கள்.

- இனியவன் காளிதாஸ்