நியாபகம்
வரும் போதெல்லாம்
அந்த எறும்பு
இரை தேட செல்லும்.
தன் பசியை பொறுத்து
வேட்கையோடு
கடந்த காலத்திலிருந்து
எதிர் காலம் என
எல்லா பக்கமும்
தன் நிகழ் காலத்தின்
வயிற்றுப்பாட்டிற்கு
அலையும்.
என் பசியை பொறுத்து
என் வாஞ்சை மிக்க
கைகளின் தொலைவில்
அது இருந்தால்
அதன் தலையை
ஆதுரமாய்
தடவுவேன்.
அது ஒரு பூனை குட்டியைப் போல
கண்களை சொருகும்
பசியை கொஞ்சமாய் மறந்து.
நியாபகம்
வரும்
போதெல்லாம்
கத்தி கூப்பாடு போடாத
எறும்புகள்
கொண்டவர்கள்
பாக்கியவான்கள்.
சிலவேளை
பசி கூடி
எறும்பு
எறும்புகளாகி
என்னை கடித்து குதறும் போது கூட
எவ்வளவு முயன்றும்
எந்த ஒரு எறும்பையும்
கொல்ல முடிந்ததே இல்லை.
நியாபத்தில் எல்லோருக்கும்
எறும்புகள் தீர்வதே இல்லை.
- முருகன்.சுந்தரபாண்டியன்