கைகால் முளைத்த நாட்கள்
வர்ணம் பூசிய சுவரை விடவும்
அழகாக கைவீசி
வருகிறது அனுதினமும்...

எல்லா நாட்களும் காரசாரமாய்
நாட்குறிப்பின் பக்கங்களில்
பூ வரைந்து அழகுபடுத்தும் அளவில்
நகர்வதில்லை...

நிரப்பப்படாமல் வெள்ளையாய்
புரட்டியதும் கறைபடிந்த
தேதியைக் காட்டியவாறு
கிழித்து வீசவும் மனமின்றி
மனதின் ரணங்களாய்
கண்ணீர்த் துளிகளை
காவு வாங்கும் அளவில்
மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்
அந்நாட்கள்
கீறல் விழுந்த நாட்கள் என்று...

- நல முத்துகருப்பசாமி