மேடையில் இலக்கியம் பேசிக்கொண்டிருந்தவர்
தாளில் புள்ளிகள் அழிந்துகொண்டதில்
மெய் எழுத்துக்கள் தனித்துக்கொண்டு
உயிர்ப்பெற்றிருந்ததை
நாவலிமைகொண்டு
வல்லினமாகிய மொழியின்
நன்னடத்தை பேச்சரவம்
சந்தித்த செவியறைகளை
கொள்முதல் செய்துகொண்டதில்
அரங்கம் நிறைந்து
மிடறொளிகொண்டுது
தமிழ்

     ****

மலர்கொண்ட பெண்

உமிழ்ந்து கொண்ட
நிறமதனில் செவ்விதழ்
தாங்கி நின்று தன்னிறமறந்து
சயனம் கொண்டதில்
சூடிக்கொண்ட பெண்ணவள்
கூந்தலாய் வடிந்து
கருமைநிறத்தில் ஓங்கி
மலந்துகொண்டது
ரோஜா

- சன்மது