கை கழுவுங்கள்
என்று சொன்ன அரசாங்கம்
மக்களை
கை கழுவி விட்டது.

மருத்துவ உலகம்
போராடிக் கொண்டே
மக்களை கைவிட்டு விட்டது.

எதிர்பாராமல் இறந்துவிட்ட இளம்மருத்துவரை
மயானமும் கைவிட்டு விட்டது.

கொஞ்சம் கொஞ்சமாய்
பூமி நழுவிக் கொண்டிருக்கிறது

உதவும் கைகள் ஒன்றும் இல்லாமல் போனதால்
பூமி தலைசுற்றி வீழ்கிறது.

புள்ளி விவரங்களை அள்ளித் தரும்
அரசு எந்திரத்தில்
அன்றாடம்
அடிபட்டு சாகிறார்கள் அடித்தட்டு மக்கள்

மந்திரங்கள்
ஜெபிப்பவர்களிடம் கூட
மரண பயமே மண்டிக் கிடக்கிறது

அறிவியலும் ஆண்டவனும்
ஒருசேர கைவிட்டதால்
ஆலய மணிகள்
தூக்கிட்டுக் கொண்டவன்
நாவைப்போல தொங்குகின்றன

கால நதி
உறைந்து விட்டது
படகுகள் எல்லாம்
பாடைகளாகி விட்டன

எல்லா திசைகளும்
மீட்பரின் வருகைக்காக காத்திருக்கின்றன

காலமே
எங்களைக் கைவிட்டு விடாதே
என்கிற அபயக்குரல்
எங்கும் கேட்கிறது.

ஓர் நுண்ணுயிரின்
அரூப வாசலில்
உயிர்ப்பிச்சை கேட்கின்றன
ஆயுதங்களைக் குவித்து வைத்திருக்கும் வல்லரசுகள்.

- அமீர் அப்பாஸ்

Comments

1 comment

1
குமரன்
ஆயுதங்களை குவித்து நாங்கள்தான் வல்லரசுகள் என்ற ஆணவத்தில் தர்மத்தை அழித்து அதர்மத்தை நிலைநாட்ட துடிக்கின்றன இந்த வல்லரசுகள்

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஈற்றில் தர்மமே வெல்லும்

எங்கெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் ஓங்குகிறது அப்பொழுது அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட யுகங்கள் தோறும் நான் பிறப்பேன் என்கிறார் தமிழர்களின் காத்தல் கடவுளான கண்ண பரமாத்மா

மூத்த குடிகளான தமிழர்களிடமிருந்து 1400 வருடங்களுக்கு முன்பு முகமது நபி கடன் வாங்கி குர்ஆனில் ஜிகாத் என்று இதைத்தான் குறிப்பிடுகிறார்
பின்னர் 150 வருடங்களுக்கு முன்னர் கால்மாக்ஸ் களவாடி பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்கிறார்
தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை தெரிந்தே உலகத்துக்கு நாகரீகத்தை கற்பித்தவர்கள்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.