indu muslimகாவி டவுசரைப் போட்டுக் கொண்டு, இந்துக்களின் பிணத்தை அடக்கம் செய்யும், சங்கிகளை இந்த கொரோனா சமயத்தில் எங்கேனும் கண்டதுண்டா?

1. தஞ்சாவூர் மாவட்ட பாஜகவின் மாவட்டத் தலைவரான பண்ணவயல் இளங்கோவின் உறவினர் கருணாநிதி என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துவிட, அதனைக் கேள்விப்பட்ட பாஜக, ஆர் எஸ் எஸ், இந்து முண்ணனி, அனுமன் சேனா, சேவா பாரதி பஜ்ரதங்கள் என அனைத்து சங்கிகளும் ஓடி ஒளிந்து கொண்டனர்.

இந்துக்களைப் பாதுகாப்போம் என்று இந்துக்களை காக்க வந்திருக்கும் இந்த சங்கிகள், எந்த இந்துக்களையும் காக்க வர மாட்டார்கள்.

இஸ்லாமிய தோழர் பாதுஷா (த மு மு க) அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் தனது இஸ்லாமிய நண்பர்களுடன் கருணாநிதியை தஞ்சையில் அடக்கம் செய்தார்.

2. வாரணாசியை சேர்ந்த சோனி என்ற 19 வயது இந்துப் பெண் உயிரிழந்தார்.

வாரணாசியில் உடல் நலக்குறைவால் இறந்த ஏழை இந்துப் பெண்ணை, அவர் வீட்டருகில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் இந்து முறைப்படி அடக்கம் செய்துள்ளனர்.

இந்துக்களின் புனித பூமி என்றழைக்கப்படும் வாரணாசியில் இந்துக்களின் உயிரைப் பாதுகாக்க எவரும் இல்லை.

3. பாஜகவின் மூத்த தலைவரான சோமசேகர கவுடா கொரோனா தொற்றில் இறந்தார்.

அவரது இறுதிச் சடங்கில் கூட பாஜக ஆட்களோ கட்சித் தொண்டர்களோ வரவில்லை, அவரது உடலை எவரும் புதைப்பதற்கு கூட முன்வரவில்லை.

கர்நாடகாவில் இந்துக்களை காக்க வந்த பாஜக கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது.

பின்னர் கோரிக்கை அவர்கள் தீவிரவாதிகளாய் சித்தரிக்கும், இஸ்லாமியர்களிடம் வந்தது. தோழர்கள் ஃபயாஸ் - யாசீன்- அப்துல் ஆலம்- ஷமித் ராசி மற்றும் ஹுசைன் ஆகியோர் அடங்கியக் குழு (SDPI), பாஜகவின் மூத்த தலைவர் சோமசேகர கவுடாவை லிங்காயத் மரபுகளின்படி, இறுதி சடங்குகளைச் செய்தார்கள்.

                                                                 ***

நீங்கள் என்னதான் சங்கிகளாக இருந்தாலும், இந்துத்வாக்களின் மூளைச் சலவையில், கடவுள் - இந்து - இந்து ராஷ்டிரம் என்று உங்களை அவர்கள் முட்டாளாக்கி , உங்களை சூத்திரனாக்கி, வேலை வாங்குவார்களோ தவிர, நிச்சயமாக உங்களுக்குப் பாதுகாப்பு அந்த மூத்திரர்கள் கிடையாது.

இந்துக்களுக்கு அவர்கள் பாதுகாப்பு என்றால், இதோ இந்த நேரத்தில் தனது உயிர்களை பணயம் வைத்து இறந்த இந்து சடலங்களைப் புதைக்க முன் வர வேண்டும் - கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும் .

சங்கிகள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஆனால் உங்களைச் சுற்றியுள்ள இஸ்லாமியர்கள் உங்களுக்குப் பாதுகாப்பாய் வருவார்கள். இப்படித்தான் இந்தியா பயணித்து வந்தது.

இஸ்லாமியர்களைச் சுற்றியுள்ள இந்துக்களும், இந்துக்களைச் சுற்றியுள்ள இஸ்லாமியர்களுமே நம் பாதுகாப்பு.

உங்களைப் பெரியார் சிலைக்கு சாணி அடிக்கச் சொல்லியும், பாபர் மசூதியை இடிக்கச் சொல்லியும், விநாயகர் ஊர்வலத்தில் 'துலுக்கனை வெட்டு துலுக்கச்சியைக் கட்டு' என்று சப்தமிடச் சொல்லியும், சொந்த வீட்டுக்குள்ளேயே குண்டு வைக்கச் சொல்லியும், ஆதிக்க சாதியினரின் மத வெறுப்புகளை உங்கள் மூலமாக உங்களை கூலியாக வைத்திருப்பார்களே தவிர, இந்துக்களைப் பாதுகாப்போம் என்று அவர்கள் கூறுவது வெற்றுக் கூச்சலே. அவர்கள் இந்துக்களைப் பாதுகாப்போம் என்று கூறுவது ஆதிக்க சாதி இந்துக்களைப் பற்றியே தவிர மற்றவர்களை அல்ல.

சமீபத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்திய கோவை போத்தனூரைச் சேர்ந்த அருண் கிருஷ்ணனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைத்தனர். ஆனால் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய கிஷோர் சாமியை ஒரே இரவில் வெளியே அனுப்பி விட்டனர்.

கிருஷ்ணன் என்கிற இந்துவுக்கும், கிஷோர் என்கிற இந்துவுக்கும் அவர்களிடத்தில் வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாத்தை நீங்கள் புரிந்து கொண்டால் நீயும் என் தோழனே.

நீங்கள் தீவிரவாதிகள் என்று சங்கிகளுடன் சேர்ந்துக் குற்றம் சாட்டுவதால், ஒவ்வொரு முறையும் வெள்ளச் சேதத்தில் உதவியும், கோயிலை சுத்தப்படுத்தியும், இயற்கை பேரிடர் சமயங்களில் முன் வந்து உதவி செய்தும், எல்லாரும் உயிர் பயத்தில் ஒதுங்கியிருக்கும் இந்த கொரோனா சூழ்நிலையிலும் பிணங்களை முன் வந்து அடக்கம் செய்தும் இஸ்லாமியர்கள் நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். 

தாங்கள் இறக்க நேரிடும் வாய்ப்புகள் இருக்கும் எனத் தெரிந்தும், இஸ்லாமியர்கள் ஏன் உங்களுக்கு உதவி செய்ய வருகிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்ததுண்டா?

நபிகள் நாயகம் அவர்கள் கூறுகிறார்கள் 'மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்ட மாட்டான்.'

இஸ்லாமியர்கள் இந்த உலகத்தின் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ அந்தத் தீர்ப்பின் படிதான், இன்னொரு உலகத்தில் சொர்க்கம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். 

 "O Jerusalam" என்கிற நூலில் யூத ஆசிரியர் குறிப்பிட்டிருப்பார், ஐரோப்பாவில் யூதர்கள், அமைதியாகவும் சுபிட்சமாகவும் வாழ்ந்த காலம் ஒன்று உண்டென்றால், அது ஸ்பெயினில் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்த காலம்தான் என்று. மாற்று மதத்தவர்களுக்கு எவ்விதத் தொல்லையும் கொடுக்காமல் நியாயமாய் ஆட்சி புரிந்தக் காலம்தான் ஸ்பெயின் ஆட்சிக் காலம் என்று கூறுகிறார்கள்.

ஆகவே இஸ்லாமியர்கள் எப்போதுமே பாதுகாப்புதான் தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு.

ஒரு வாழ்க்கைதான்.. இந்துவாய் இஸ்லாமியனாய் கிறித்தவனாய், எந்த மத நம்பிக்கையில் வாழ்ந்தாலும் வாழ்ந்து இறக்கத்தான் போகிறோம்.

ஆனால் நீங்கள் சங்கிகளை வளர விட்டுவிட்டால், இப்போது வாழுகின்ற வாழ்க்கையே நரகமாகிவிடும்.

நீங்கள் இந்து - இஸ்லாம் மதத்தை காப்பதைக் காட்டிலும், இந்தியாவைக் காப்பது மிக அவசியம். மதம் மனிதனை மனிதனாக்கவே.

மலத்திலிருந்து கால்களை எடுத்து விடுங்கள். நாம் இணைந்தால் சங்கிகளை அரசியல், சமுக அரங்கிலிருந்து விரட்டலாம்.

- ரசிகவ் ஞானியார்

Pin It