lady 393

எது பற்றியும்
பேசவேண்டாம் நீ
எதற்கானவள் நான் என்று
எனக்குத் தெரிந்தால் போதும் ....

புல்லெனப் பூத்துச் சிரிப்பவளோ
கள்ளியில் இருந்து வடியும் பால் போன்றவளோ
அறிவு ஜீவியோ அரைப் பைத்தியக்காரியோ...

கடந்து போகும் நீ
கற்பித்துச் செல்லவேண்டாம்
நான் யாரென எனக்கு ....

தீயென எரியவும்
திசைகள் அற்றுப் பரவவும்
பறவைக்கு இறகெனவோ
பறைக்கு இசைஎனவோ
இருந்து விட்டுப் போகிறேன் ...

செம்புக்குள் அடைத்து வைத்துப்
பாதுகாத்தேன் நான் என
நீ பதக்கம் தேடி அலையாதிரு....

- சாயா சுந்தரம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.