man 185மௌனம் பூசிக் கொண்ட
அந்தப் பொழுதுகளில்
கேட்டுணர முடிகிறது
நிசப்தத்தில் நீ
கூர் தீட்டிக் கொண்டிருக்கும்
எனக்கான கொலைக் கருவியின்
ஓசையை என்னால் ....

ஒரு பாலைவனம்
கீறி முளைத்த புதுச் செடியென
அச்சம் ஊட்டுகிறது
உன் வெற்றுப் பார்வையின்
விழி உருளும் தருணங்கள் ...

இருண்ட கடும் புழுக்கத்துக்குப்
பின்னான மழை மேகமென
முரண்டிக் கொண்டிருக்கீறது
புறப்பட்டு வெளியேறத்
துடிக்கும் எது ஒன்றோ ....

சட்டென்று ஒரு கரத் தொடுகையில்
சகலமும் வடிந்து காணாமல் போகலாம்
அத்தனையும் கானலாக அல்லது
யாராவது ஒருவராக.....

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.