நானொரு போர்க் குற்றவாளியை சந்திக்கப் போகிறேன்.
அப்படியெனில் மெட்டல் டிடெக்டர்களை ஏமாற்றும் ஒரு வெடிகுண்டையும்
குண்டுகள் ஏற்றப்பட்ட துப்பாக்கியையும் எடுத்துக் கொள்.
நானொரு மனித மிருகத்தை சந்திக்கப்போகிறேன்.
அப்படியெனில் மயக்கம் தரும் ஊசியையும்,
அவன் ஆதரவாளர்கள் கடித்துக் குதறிய பெண்கள்,
குழந்தைகளின் புகைப்படங்களை எடுத்துக் கொள்.
அவனை சங்கிலியால் பிணைத்து மனித தெருக்களில் இழுத்துவா.
நான் தெற்காசிய நாட்டின் ஹிட்லரை சந்திக்கப் போகிறேன்.
அப்படியெனில் அவனை தூக்கிலிட அறுந்து விடாத கயிறும்
கயிறு கழுத்தை இறுக்கும் முன்பு கொடுக்க பாம்பின் விஷத்தையும் எடுத்துக் கொள்.
நான் சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்த
ஒரு கயவனை சந்திக்கப் போகிறேன்.
அப்படியெனில் ஒரு மின்சார நாற்காலி ஏற்பாடு செய்து கொள்.
அவன் விரல்களில் துளையிட்டு மின் கம்பிகளை இணை
வெள்ளைவேனில் அவனை அழைத்துக் கொண்டுபோ.
சடலத்தை யாருக்கும் தெரியாமல் வீசியெறி.
நான் அண்டை நாட்டு ஜனாதிபதியை சந்திக்கப்போகிறேன்.
அப்படியெனில் ஒரு பூங்கொத்தை கொண்டு போ சம்பிரதாயமாக கைகுலுக்கு.
அண்டைநாட்டோடு சுமூக உறவு வேண்டும் நமக்கு.

- கோசின்ரா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.