lady eyeஎதிரில் வந்தமர்ந்தவள் சொன்னாள்
வெகு நேரமாய் என்னை
உங்கள் கண்களில் வைத்திருக்கிறீர்கள்
தயை செய்து இறக்கி விடுங்கள்
வீட்டிற்குப் போக வேண்டும்
சட்டென்று இறக்கிவிட்டவன்
ஒன்றும் தெரியாதவன் போல
முகத்தை வைத்துக்கொண்டான்
மீண்டும் கேட்டாள்
எங்கே என் உதடுகள்
கண்களிருந்து பிரித்துக்கொடுத்தான்
என் காதிலாடும் ஜிமிக்கி
என் கன்னத்தில் தீண்டும் கூந்தல்
ஒவ்வொன்றாய் திரும்பிக் கொடுத்தான்
என் பார்வைகளைக் கொடுங்கள்
கொடுக்கும் போது
அவனுடைய பார்வையும் சேர்ந்தே வந்தது
சிரித்துக்கொண்டே வாங்கிக் கொண்டவள்
சொன்னாள் இன்னும் ஒன்றை நீங்கள்
திருப்பி தரவில்லையென்றாள்
எல்லாவற்றையும் கொடுத்து விட்டேன்
உங்களிடம் என் மிச்சமிருக்கிறதென்றாள்
மெளனங்களா
தலையாட்டினாள்
உடலசைவுகளா
இல்லையென்றாள்
சொல்லுங்கள்
இருக்கிறதாவென்று பார்க்கின்றேன்
கண்களில் இருப்பது தெரிகிறது
அப்படியெனில் எடுத்துக் கொள்ளுங்களென்றான்
சுற்றி ஒரு முறை பார்த்தவள்
அவன் கண்களில் அவசரமாக இறங்கினாள்
இமைகளை இறுக்கமாக மூடிக்கொண்டான் அவன்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.