1. அஹிம்சை தேசம் நடத்திய துரோக நாடகம் 

வாடிய பயிரைக் கண்ட போதும் வாடிய புலவனின் வழிவந்த படைப் பாளர்கள் நாம். மனிதகுலம் இதுவரை காணாத மாபெரும் மனிதப்பேரழிவை கண்முன்னே கண்டும், கேட்டும், ஏதும் செய்ய வழியற்றவர்களாக, கதியற்ற வர்களாக இருக்கும் இயலாமை இதயத்தை சுக்கு நூறாக்கி விடுகிறது. 

உறங்கியும், உறங்காமலும் இருக் கிற பின்னிரவு நேரங்களில் அந்தக் காட்சிகளே கனவுகளாக வந்து துன் புறுத்துகின்றன. குவியல் குவியலாக வும், இங்கொன்றும், அங்கொன்று மாகவும், நிலமெங்கும் சிதறிக் கிடக்கும் உடல்கள், ஆகாயம் மறைக் கும் குண்டு புகை, பச்சிளம் குழந் தைக்குப் பால் இல்லாமல் அழுது அழுது துவண்டு நிற்கும் தாய்மார்கள், கண்களில் ஆயிரம் கேள்விகளைத் தேக்கி, அநாதரவாய் நிற்கும் சிறுவர் கள், கைகள் கட்டப்பட்டு, கதறக் கதறச் சுட்டு கொல்லப்படும் இளைஞர்கள் அப்பப்பா... இன்னும் இன்னும்...  

ஆயிரக்கணக்கில் இப்படிப்பட்ட காட்சிகளை இணைய தளங்களின் You tube தளங்களில் பார்க்கிற போது... இருபத்தோராவது நூற்றாண்டில் வாழ்கிற உலகமா இது...? என உள்ளம் உடைந்து போகிறது. வெள்ளமாய் திரளும் உணர் வலைகளால் நிலை குலைந்து போகி றோம். எழுத முடியவில்லை.. படிக்க முடிய வில்லை... எதுவும் செய்யத் தோன்றவில்லை...

உலகமே பார்த்துக் கொண் டிருக்க, எப்படி இன்னும் இந்த இனப் படுகொலை இரக்கமின்றி நடத்தப்பட்டு வருகிறது? 

எல்லா பாதிப்புகளையும் மீறி, ஒரு படைப்பாளனுக்கு உள்ள சமூகக் கடப்பாடுகள் புரிகின்றன. எனது எழுது கோலிருந்து வழிவது மைத்துளிகளல்ல. என்னைப் போல், நடப்பது கண்டு உள்ளம் வெடித்துத் துன்புறும் கோடிக் கணக்கான இளைஞர்களின் இதயத்து இரத்தத்துளிகள். 

“உலகம் எச்சரிக்கிறது. கண்டு கொள்ள வில்லை இலங்கை” -திபெத்தின் ஆன்மீகத் தலைவர் என்று போற்றப் படும் தலாய்லாமா ஜனவரி 20, 2009இல் சென்னை வரும்போது இப்படிச் சொன்னார்.  

“இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக நடை பெறும் இராணுவத் தாக்குதல் வேதனை யளிக்கிறது. இது அரசியல் கலந்த பிரச் சினையாக உள்ளது. சிலர் இதை மதம் சார்ந்த பிரச்சினை என்றும் பேசுகின்றனர். இலங்கைப் பிரச்சினையில் அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரார்த்திக் கிறேன்.” 

இரத்தத்தால் புத்தருக்கு அபி ஷேகம் நடத்தும் நாட்டுக்கு தலாய் லாமா விடுத்த வேண்டுகோள் இது. பிப்ரவரி 2009இல் நூற்றுக்கணக்கில் சாகும் அப்பாவித் தமிழர்களின் இழப்பைத் தடுத்து நிறுத்த போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசுக்கு ஜப்பான் மற்றும் நார்வே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்திருந்தன. 

இதற்கு இலங்கை இராணுவத் துறை செயலாளரும் அதிபர் இராஜபட்சேவின் தம்பியுமான கோத்தபய இராஜபட்சே இப்படி பதிலளித்தார். 

“போரை நிறுத்தினால் வடபகுதி யிலிருந்து பயங்கரவாதத்தை முழுமை யாக அகற்ற இலங்கை அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஊறு விளை விப்பதாக அமைந்து விடும். போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முல்லைத் தீவில், சிக்கி உள்ள விடுதலைப் புலிகளை காப் பாற்றும் முயற்சியே தவிர வேறொன்று மில்லை.” 

அப்பாவி மக்கள் மீதான தாக்கு தலை பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் என்றே நியாயப்படுத்தி போரை இன் னும் தீவிரப்படுத்தினார் கோத்தபய. 

‘பாதுகாப்பு வளையம்’ என்று அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகள் மீதே குண்டுமழை பொழிந்து அதை மரணப் பகுதிகளாக்கின.  

அதே நாள் (பிப்ரவரி 4) புதுக் குடியிருப்பு பகுதியில் உள்ள மருத்துவமனை மீதே கொத்து குண்டுகளை வீசி நோயாளிகளையும், முதியோர்களை யும் கொன்று குவித்தது சிங்கள இராணுவம். 

பிப்ரவரி 6இல் நாகபுரியில் நடந்த பா.ஜ.க. தேசிய கவுன்சில் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் ராஜ்நாத்சிங் இலங்கையில் ராணுவத்திற்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் சிக்கியுள்ள தமிழர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும். ராணுவத்தின் மூலம் இப்பிரச்சினைக் குத் தீர்வு காண முடியாது. புதியதொரு தீர்வைக் காண இலங்கை அரசு முன்வர வேண்டும்..” என்றார். 

இப்போதும் ஆயிரக் கணக்கில் செத்துவிழும், தமிழர்கள் குறித்து இந்தியா கவலை தெரிவித்ததே ஒழிய கண்டிக்க முன் வரவில்லை.  

உலகெங்கும் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் ஒன்றுகூடி, போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று வெடித்து கிளம்பிய நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செய லாளர் டி. ராஜா இந்திய அரசிற்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். 

“தமிழர்களைப் பூண்டோடு அழிக்கும் இனப்படுகொலைக்கு ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட உதவிகளும் இந்திய மண்ணிலிருந்தே தரப்படு வதாக கூறப்படும் புகார்களுக்கு பதில் இல்லை. இந்திய அரசு இதை வெளிப் படையாக ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லை மறுக்க வேண்டும். 

இனப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தான் தீர்வு சாத்தியம். போரை நிறுத்துங்கள் என்று பிற நாடு களைப் போல, இந்தியாவும் இலங் கையை வற்புறுத்த வேண்டும்.” 

இந்தியாவில் உள்ள எட்டுகோடித் தமிழர்களின் தொப்புள்கொடி உறவான இலங்கைத் தமிழர்கள் படுகொலை குறித்து உலகமே கண்டனக் குரல் எழுப் பியபோது, இந்தியா கண்மூடி இருந்தது ஏன்? தீவிரவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்று கூறி இலங்கை அரசு நடத்திவரும் போரில் அப்பாவி மக்கள் அதிகம் உயிரிழப்பது குறித்து ஜ.நா. கவலை தெரிவித்தது. பிப்ரவரி முதல் வாரத்திலேயே புது தில்லிக்கு வந்திருந்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான்.கி. மூனுடன் தொலை பேசியில் பேசினார் இராஜபட்சே. 

“இலங்கை இராணுவம் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தாது என்றும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேறு வதற்கு இலங்கை அரசு நட வடிக்கை எடுத்து வருவதாகவும்” அவரிடம் உறுதி அளித்தார். 

மார்ச் மூன்றாவது வாரத்தில், நியூயார்க்கில் உள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஆசியப் பிரிவு பொறுப்பாளர் பிராட் ஆடம்ஸ் குறிப்பிட்டார். 

“முல்லைத்தீவின் புதுமாத்தளன் பகுதி அரசால் பாதுகாப்பு பகுதி என்று அறிவிக்கப்பட்டது. ஆயினும் அங்கு பொதுமக்கள் இருப்பிடங்களின் மீது ராணுவம் குண்டுகள் வீசியதையும், அப்பாவி மக்கள் பலர் அதில் கொல்லப் பட்டது குறித்தும் எங்களுக்கு நம்பக மான தகவல்கள் கிடைத்துள்ளன. அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மருத்துமனை டாக்டர் என்னிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக் கும்போதே (மார்ச் 23) அவரருகே பீரங்கி குண்டுகள் வெடிக்கும் ஓசையை நான் கேட்டேன். சிலர் சடலமாகவும், இன்னும் பலர் குண்டு காயத்துடன் ஓடி வருவதாகவும் அதே டாக்டர் பட படப்புடன் குறிப்பிட்டார்” என்றும் செய்தியாளர்களிடம் கூறினார். ஐ.நா. விற்கு கொடுத்த உறுதி மொழியைச் சிங்கள அரசு அப்பட்டமாக மீறி வருவதை உலகம் உணர்ந்தது.  

இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், உலகின் சிறந்த மனித உரிமை ஆர்வலருமான நீதிபதி கிருஷ் ணய்யர், ஏப்ரல் 11 2009 அன்று உலக சமுதாயத்திற்கு ஒரு கோரிக்கை விடுத்தார். 

“அறிவார்ந்த முறையில் செயல் படுவதாக இருந்தால், இப்போது கூட, இலங்கை அரசு முன்வந்து ஒரு கூட் டாட்சி அரசு அமைப்பை அறிவிக்க முடியும். வெற்றிப் பெற்று வருவதாக கூறிக் கொண்டு, இலங்கை அரசு நாள் தோறும் மக்களைக் கொன்று குவித்து சொல்ல முடியாத துன்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இறையாண்மை என்பது உள்நாட்டில் அடக்கு முறையில் ஈடுபடுவதற்கும், கணக்கிட முடியாத பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் அங்கீகாரம் அளிக்கவில்லை.  

எனவே, சிறுபான்மைத் தமிழ் மக்களை போர்ப் படை மூலம், சித்ர வதை செய்வது நீடிக்காது என்பதை கொழும்பில் அதிகாரத்தில் இருக்கும் புத்தமதச் சார்பு அரசுக்கு நான் தெரி வித்துக் கொள்கிறேன். ரோமாபுரியும், கிரேக்கமும், இலண்டனும் வீழ்ந்து விட்ட நிலையில் அரக்கத் தனமான வன்முறை மூலம் கொழும்பு பிழைத் திருக்க முடியாது. 

எனவே, பன்னாட்டு கண்காணிப் பின் கீழ், உடனடியாக, போர் நட வடிக் கைகளை நிறுத்துவதாக இலங்கை அறிவிக்க வேண்டும். 

ஐ.நா. அவை, சர்வதேச நாடுகள், மனித உரிமை அமைப்புகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள என பலரும் இலங்கை அரசை எச்சரித்துக் கண்டனம் தெரிவித்த போதும் இந்தியா மௌனம் காத்தது. 

இதுபற்றி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள், இலங்கை இனப்பிரச்சினையில் இந் தியா தலையிட்டு இணக்கம் செய்ய முடியாதா? என்று கேட்டனர். 

“இலங்கை இனச்சிக்கலில் இந்தியா தலையிட்டு இணக்கம் செய் வதற்கான வாய்ப்பே இல்லை. இலங்கை சிக்கலில் இணக்கத் தூதராக செயல்படுகிறோம் என நாங்கள் ஒரு போதும் கூறவில்லை. இனச்சிக்கல் தொடர்பான இந்தியாவின் கொள்கை தெளிவாக உள்ளது” என பதில் அளித்தார் பிரணாப் முகர்ஜி. அப்படி யானால், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்தது என இலங்கை அமைச் சரவையின் அனைத்து அமைச்சர்களும் கூறியது எப்படி? இந்தியா யாருக்கு நண்பன்..? 

இனப்படுகொலை செய்யும் சிங்களப் பேரினவாதத்திற்கு துணை நின்று தமிழர்களுக்கு துரோகம் செய் வது யார்? என்று உலகத் தமிழர்கள் அறியத் தொடங்கிய நிலையில், அமெரிக்கா இதில் தலையிட்டது. 

அதன் அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையிலிருந்து ஏப்ரல் 26, 2009 அன்று வெளியிட்ட அறிக்கை. 

“இலங்கை இனச் சிக்கலுக்குப் போர் மூலம்தான் தீர்வு என்ற எண் ணத்துடன் இலங்கை அரசு தாக்கு தலைத் தொடர்ந்தால் அது இரு தரப் பிற்கும் இடையே பகைமையை மேலும் வளர்க்கும். எதிர்காலத்தில் இலங்கை ஒரே நாடாக இருக்கும் என்ற நம்பிக்கையையும், இனச் சிக்கலுக்கு இணக்கத் தீர்வு காணலாம் என்ற நம்பிக்கையையும் இது தகர்த்துவிடும்” என்று இலங்கை அரசிற்கு எச்சரிக்கை விடுத்தார். 

இதற்கிடையே, போர் நடந்த பகுதிகளைச் சுற்றிப்பார்த்து பாதுகாப்பு வளையப் பகுதிகளில் தஞ்சம் புகுந்த தமிழர்களையும் சந்தித்து திரும்பிய வாழும் கலை இயக்கத்தின் ஆன்மீகத் தலைவர் வெளியிட்ட அறிக்கை இந்திய அரசியல் கட்சித் தலைவர்களைத் திடுக்கிடச் செய்தது. “அப்பாவி தமிழ் மக்கள் படும் சொல்லொண்ணாத் துன்பம் எந்த இதயத்திலும் குருதியை வரவழைத்துவிடும். பிச்சைக்காரர் களையே பார்த்திராத ஒரு இடத்தில், இன்று மக்கள் தண்ணீர் - உணவு - துணிகள் மற்றும் வாழ்க்கைக்காக பிச்சை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இனப்படுகொலையைத் தடுக்கத் தவறியதன் மூலம் இந்தியா மாபெரும் தவறிழைத்து வருகிறது”. 

-     (அடுத்த இதழில்.....) 

Pin It