yogiadiya pmகுடியுரிமை திருத்தச் சட்டம் எனப்படும் (சி.ஏ.ஏ), குடிமக்களின் தேசிய பதிவு எனப்படும் (என்.ஆர்.சி) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு எனப்படும் (என்.பி.ஆர்) ஆகிய ஜனநாயக விரோத சட்டத்திற்கெதிராக  இந்தியா முழுவதும் வெடித்த போராட்டங்களுக்கு உத்தரபிரதேசம் விதிவிலக்கல்ல.

மாநில தலைநகர் லக்னோவிலிருந்து கான்பூர் வரையிலும், உலக புகழ்பெற்ற இஸ்லாமிய மதரஸாவான தாருல் உலூமின் தலைமையகமான அலகாபாத் முதல் சம்பல், முசாபர்நகர், ராம்பூர் மற்றும் மொராதாபாத் போன்ற சிறிய நகரங்கள் வரை என CAA-NRC-NPR க்கு எதிரான தொடர்ச்சியான ஜனநாயகரிதியிலான போராட்டங்களை உத்திரபிரதேச அரசு கண்டது.

இத்தகைய போராட்டங்களில் ஆண்களுக்கு நிகராக முஸ்லிம் பெண்கள் முன்னணியில் இருந்தும் போராடினர். பெரும்பாலான இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் “பேட்லா”வை (பழிவாங்கல்) பற்றி பேசினார்.

ஒரு எதிர்ப்பாளராக இருப்பது உத்தரபிரதேசத்தில் ஒரு எதிர்ப்பாளராக இருக்க வேண்டும். ஒரு எதிர்ப்பாளராக இருப்பது ஒரு துரோகி என்பதற்கு ஒத்ததாகும் என்றார்.

மனித உரிமை ஆர்வலர்களை குறிவைக்கும் உபி அரசு!

மனித உரிமைகள் அமைப்பான “ ரிஹாய் மஞ்சின்” தலைவரும் மூத்த மனித உரிமை ஆர்வலருமான முகமது ஷோய்ப் அவர்கள் கடந்த டிசம்பர் 18 அன்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார், பின்னர் மறுநாள் கைது செய்யப்பட்டார். ஏன் அவர் கைதுசெய்யப்பட்டார் என்ற காரணம் அவருக்கும் தெரியாது!

கைது செய்த காவலர்களுக்கும் தெரியாது? வன்முறையாக மாறியதாகக் கூறப்படும் ஒரு போராட்டத்தை அவர் வழிநடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டபோது, ​​அவரது இக்கட்டான நிலை மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் அவலநிலையை சுருக்கமாகக் கூறியது.

மேலும் முகமது ஷோயிப் கூறும்போது நாங்கள் அரசு பயங்கரவாதமாகட்டும், காவல்துறை அடக்குமுறையாகட்டும் , நீதிபரிபாலன முறைமைகளாகட்டும்: முஸ்லிம்களாகிய "நாங்கள் தொடர்ந்து போராட வேண்டியிலேயே இருக்கிறோம்.                     

பெண் சமூக ஆர்வலரான ”சதாஃப் ஜாபர் ” கூறும்போது நாங்கள் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொண்டு திரும்பும் போது கைது செய்யப்பட்டேன். காவலராகிய “அவர்கள் எனக்கு முன்னால் இருந்த ஆண்களைக் கழற்றிவிட்டார்கள், நாங்கள் மிகவும் மனிதாபிமான மற்றவர்களாக இருந்தோம், என்னால் எதிர்வினையாற்ற முடியவில்லை.

நான் ஒரு ஆண் காவலரால் தாக்கப்பட்டேன். என் பெயர் காரணமாக, அவர்கள் என்னை பாகிஸ்தானி என்று அழைத்தார்கள். ” இறுதியாக கடந்த ஜனவரி தொடக்கத்தில் விடுவிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதத்தில் சதாஃப் ஜாபர், முகமது ஷோயிப், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி எஸ்.ஆர். தராபுரி மற்றும் கவிஞர் தீபக் கபீர் ஆகியோர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக வழக்கு பதியப்பட்டு அவர்களிடமிருந்து ரூ .63 லட்சத்தினை ஈட்டுத்தொகையாக அரசு கோரியது.

அவர்களின் மேல்முறையீட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையிலும் மூன்று செயற்பாட்டாளர்களின் அசையும் சொத்தை ஜூலை மாதம் ஏலத்திற்கு வைக்க உபி அரசு முடிவு செய்தது, ஏற்கனவே அவர்களின் அசையா சொத்துக்களை சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீருடையில் அணிந்த கொலையாளிகள் !

கடந்த டிசம்பர் 2019 முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட லக்னோ, மீரட், முசாபர்நகர் வாசிகள் குறிவைக்கப்பட்டனர். CAA அல்லது அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பற்றி எதுவும் தெரியாத முஸ்லீம்களும் கூட காவல்துறையின் அடாவடிக்குள்ளாகினர், இன்னும் சிலர் காவல்துறையினரால் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர் பலரும் காயமுற்றனர்.

இத்தகைய பாதிப்புக்களுக்குள்ளாகிய ”அலீம்” என்ற இளைஞன் குறித்து அவரின் தந்தை பத்திரிக்கையாளரிடம் கூறும்போது, என் மகன் ஒரு தெருவோர உணவகத்தில் ரொட்டி தயாரிக்கும் வேலையினை செய்துவந்தான். அவனது சகோதரனும் எனது இன்னொரு மகனுமானவன் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார், நான் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையில் காலத்தினை கடத்திக் கொண்டிருக்கிறேன்.

கடந்த டிசம்பர் மாதத்தின் அந்த நாள் என்பது எங்களின் வாழ்வின் கோரமான நாளாகும், அன்று வழமை போல் வேலைக்குச் சென்ற என் மகன், காவல்துறையினரின் உத்தரவினால் உணவகத்தைக் மூடிவிட்டு வீட்டிற்கு தேவையான மீன்களை வாங்கிக் கொண்டுவந்தான்.

வரும்வழியில் அவனை அழைத்துச் சென்ற காவல்துறையினர் தலையில் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். இறுதி சடங்குகளுக்காககூட அவரது உடல்கூட எங்களிடம் வழங்கப்படவில்லை!! என்றார். இவர் மட்டுமல்ல உத்திரபிரதேசத்தின் சாலைகளின் வரிசைகளை கடக்கும்போதும் தாங்கள் சந்தித்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு சோகத்தினை தங்களிடத்தில் கொண்டிருக்கின்றனர் என்று பத்திரிக்கையாளர்கள் தங்களின் கட்டுரைகளில் எழுதுகின்றனர்.

சாலையின் ஓரத்தில் உள்ள பட்டறையில் பணி புரிந்துவரும் ஜாகீர் தனது ஐந்து மாத கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு இரண்டு வாரங்களாக தனியே வாழ்ந்ததாகவும், தன் அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் தன்னைபோலவே ஒர் அச்சத்தின் நிழலிலேயே வாழ்ந்ததாகவும், தங்களது வாலிப மற்றும் சிறுவர்களை இரவில் தங்களின் இல்லங்களில் தங்க வைத்திடாமல் அருகே இருக்கும் குடோன்களில் தங்க வைத்திருக்கின்றனர்.

இது குறித்து ஒர் தாய் கூறும்போது : “ஒவ்வொரு மாலையும் உணவுக்குப் பிறகு, என் பிள்ளைகளை இரவு ஒரு பட்டறைக்கு அனுப்புகிறேன். காவல்துறையினர் எப்போது இங்கு குதிக்கக்கூடும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.” உள்ளூர் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவ மனைகள் கூட வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதுபோன்ற நிலையே மீரட் நகரிலும் முசாபர்நகரிலும் திட்டமிட்டே முஸ்லீம் குடும்பங்கள் மீது குறிவைத்து நிகழ்த்தபடுகின்றன.

இத்தகைய தாக்குதலுக்குள்ளான ஒரு குடும்பம் கூறும்போது சீருடையில் இருந்த ஆண் காவலர்களால் தான் தாக்கப்பட்டதாகவும் அவர்கள் தங்களின் அனைத்து ஆவணங்களையும் கிழித்தும், அலமாறியிலிருந்த பணத்தை கொள்ளையடித்தும், குளிர்சாதன பெட்டியையும் டிவியையும் அடித்தும் நொறுக்கினர், மேலும் இரண்டு மாதங்களுக்குள் (எங்கள்) மகளின் திருமணத்திற்கு தயாராக வைத்திருந்த நகைகளை எடுத்துச் சென்றனர் ”. என்று கதறி அழுதவாறு கூறுகின்றார்.

உண்மை கண்டறியும் குழுக்களின் அறிக்கைகள்!

ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிச - லெனினிச) தலைவர் கவிதா கிருஷ்ணன், மனித உரிமை ஆர்வலர் கார்வான் – இ - மொஹாபத்தின் ஹர்ஷ் மந்தர் மற்றும் வெறுப்புக்கு எதிராக கூட்டமைப்பின் நதீம் கான் ஆகியோர் அடங்கிய ஒரு உண்மை கண்டறியும் குழு, ஒரு சுற்றுப் பயணத்திலிருந்து திரும்பி வந்தது.

அதில் "கடந்த ஒரு வாரமாக, உத்தரபிரதேசம் பயங்கரவாத ஆட்சியின் கீழ் உள்ளது" என்றும் தனது அறிக்கையினை டிசம்பர் 2019 இறுதியில் சமர்பித்தது.     யோகேந்திர யாதவ் கூறும்போது "உத்தரப்பிரதேச அரசானது CAA மற்றும் NRC க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் குடிமக்களை துன்புறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் சட்டவிரோத மற்றும் ஆபத்தான தந்திரங்களை பயன்படுத்துகிறது" என்றும், காவல்துறை முஸ்லிம்களை "வெட்கமின்றி குறிவைக்கிறது" என்றும், இலக்கு "அனைத்து எதிர்ப்பையும் அடக்குவது மட்டுமல்ல உத்தரபிரதேசத்தில் CAA அல்லது NRC க்கு எதிராக எந்த எதிர்ப்பிக்குரலும் எழாத வண்ணம் பார்த்துக் கொண்டு வருகின்றது.

கடந்த பிப்ரவரி 2020 இல், தி வயரில் ”நயனிகா” கூறும்போது : “CAA மற்றும் NRC எதிர்ப்பாளர்களை - அதாவது முஸ்லிம்களை எதிர்ப்பதற்கே எண்ணிலடங்கா வன்முறை கலியாட்டங்கள் உத்தரபிரதேசத்தில் 2019 டிசம்பரில் கட்டவிழ்த்து விடப்பட்டது.

ஜனவரி 2020 அமைக்கப்பட்ட பல உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கைகள் மற்றும் மக்கள் தீர்ப்பாயம் கூட சில அடிப்படை உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளன: இதில் குறைந்தது 23 பேர் அரசால் கொலை செய்யப்பட்டுள்ளனர், சிறுபான்மையினர் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு புனையப்பட்ட வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், மற்றும் மாநிலத்தில் அடிப்படை உரிமைகளான பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம், முற்றிலுமாக தடுக்கப்பட்டு வருகின்றது.

தனது புதிய புத்தகமான AZADI : FREEDOM , FASISM , FICTI0Nல் (”ஆசாதி”: சுதந்திரம். பாசிசம். புனைகதை) அருந்ததி ராய் எழுதியுள்ளதாவது : “உத்தரபிரதேசத்தில் வன்முறை என்பது 2002 ல் குஜராத்தில் நடந்தேறிய முஸ்லீம் - விரோத படுகொலைகள மற்றும் வன்முறை போன்றது, அதன் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி அப்பிரச்சனையினை சரியாக அணுகவில்லை.

இதற்கிடையில் யோகி ஆதித்யநாத் தான் ஒரு அடுத்த பிரதமராக வேண்டும் என கனவுகளை கண்டுக்கொண்டிருக்கிறார். உத்தரபிரதேசத்தில் அவரை ஆட்சிக்கு கொண்டு வந்த 2012 தேர்தல் பிரச்சாரம் என்பது kabarstan vs shamshaan (கல்லறைக்கு எதிராக தகனம் மற்றும் மைதானம்) என்று கூறலாம்." என்கிறார்.

ஆகமொத்தத்தில் உத்திரபிரதேச அரசான ”குஜராத்தினை முன் மாதிரியாக” (GUJRAT MODEL) பின்பற்றுகின்ற ஒரு இந்துராஷ்ராவின் செயல் மாதிரிதான், குஜராத்தில் ஆ.எஸ்.எஸ் செயல்வடிவமான இந்துராஷ்ராவை கட்டியெழுப்பிட கலவரங்கள் வாயிலாக முன்னின்று செய்தார். தற்போது தனது ரவுடிகளின் மூலம் உத்திரபிரதேசத்தில் செயல்படுத்திக் கொண்டு வருகிறார். இருவருக்கும் ஒரு பொதுவான கனவு ஒன்று இருந்தது... அதுதாம் ”பிரதமர்” என்னும் கனவு!!

- நவாஸ்

Pin It