குடியுரிமைத் திருத்தச் சட்டம் - குடியுரிமை பதிவேடு - தேசிய மக்கள் தொகைப் பதிவேடு களில் பா.ஜ.க. ஆட்சி அவசரம் காட்டுவது ஏன்? என்பதை விளக்கி ஜனவரி 4, 2020 அன்று, சென்னை தலைமைக் கழகத்தில் நடந்த ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து: (சென்ற இதழ் தொடர்ச்சி)

முதன் முதலாக இந்த குடியுரிமைச் சட்டம் எப்போது உருவானது? அரசியல் சட்டம் வந்த போது இந்த குடியுரிமை சட்டம் உருவாகவில்லை. குடியுரிமை சட்டங்கள் பற்றி விவாதங்கள் நடந்தன. அம்பேத்கர் அப்போது சொன்னார், ' எதிர்காலத்தில் நாடாளுமன்றம் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள இந்த அரசியல் நிர்ணய சபை அதிகாரத்தை வழங்குகிறது. நாடாளுமன்றம் அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். குடிமக்களாக யார் இருக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றம் நிர்ணயித்துக் கொள்ளலாம்' என்று அம்பேத்கர் கூறினார். அதன் பிறகு 1955 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் வருகிறது. பாகிஸ்தான் - இந்தியா பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து வருகிற இஸ்லாமியர்களுக்கும் இந்தியாவில் வாழ்வதற்கான அனுமதியை அந்த குடியுரிமை சட்டம் கொண் டிருந்தது. பல நேரங்களில் அந்த சட்டம் திருத்தப்பட்டுக் கொண்டே இருந்தது. இதுவரை இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை இல்லை என்று ஒரு முறை கூட திருத்தப்படவில்லை. இந்த முறைதான் மதத்தின் அடிப்படையில் மக்களை கூறுபோடுகிற ஒரு வேலையை இந்த சட்டம் செய்திருக்கிறது. இதுவரை நடந்த திருத்தங்களில் மதப் பாகுபாடு இல்லை. ஏற்கெனவே 16 இலட்சம் பேர் அசாமி லிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று நிர்ணயித்த பிறகு இந்தத் திருத்தச் சட்டத்தில் 2014 வரை இந்தியாவில் உள்ளவர்களுக்கு குடியுரிமை கொடுக்கலாம் என்று கூறுவதால் அந்த 16 இலட்சம் பேரில் 9 இலட்சம் இந்துக்களாக இருப்பவர்களுக்கு குடியுரிமை கிடைத்து விடுவதால் அசாமில் போராட்டம் நடக்கிறது.

modi and shah 530 இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு என்ன விளக்கம் சொன்னார்கள், இந்தியாவின் அண்டை நாடுகளான, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் இந்த மூன்று நாடுகளை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். இந்த நாடுகளில் இருந்து வருகிற இந்துக்கள், கிருத்தவர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சி, சீக்கியர்களுக்கு மட்டும் குடியுரிமை என்றார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் என்று அவர்கள் சொல்ல வில்லை, யார் யார் வரலாம் என்று சொல்லி விட்டார்கள். பா.ஜ.க.வினர் இப்போது ஒரு வாதத்தை முன் வைக்கிறார்கள். இந்த சட்டத்தில் முஸ்லிம் என்ற வார்த்தையையே பயன்படுத்த வில்லையே எதற்காக எங்களை முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் என்று கூறுகிறீர்கள்? என்ற கேள்வியை இல. கணேசன் கேட்கிறார். முஸ்லிம்கள் என்ற வார்த்தையை நீங்கள் இந்த திருத்த சட்டத்தில் ஏன் சேர்க்கவில்லை என்பது தான் இதில் உள்ள பிரச்சனையே. முஸ்லிம்களை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்கி விட்டு, முஸ்லிம்களைப் பற்றி திருத்தச் சட்டம் பேசவே இல்லையே ஏன் எதிர்க்கிறீர்கள் என்பது மக்களை மடையர்களாக மாற்ற நினைக்கும் கேள்வி அல்லவா?

ஆப்கானிஸ்தான் கூட இந்தியாவின் அண்டை நாடு கிடையாது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் தான் அண்டை நாடுகள் அங்கிருந்து வருகிறார்கள். அதில் கூட யீநசளநஉரவநன சநடபைiடிரள அinடிசவைல - அதாவது துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினர் என்று சட்டத்தில் கூறாமல், யீநசளநஉரவநன அinடிசவைல அதாவது மதம் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு துன்புறுத்தப் பட்ட சிறுபான்மையினர் என்றுதான் சட்டம் கூறுகிறது. மற்றொரு கேள்வி, பக்கத்தில் நேபாளம், பூடான், பர்மா ஆகிய மூன்று நாடுகள் உட்பட தமிழ்நாட்டிற்கு அருகில் இலங்கை உள்ளது. இலங்கையில் இருந்து 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்து வந்த தமிழர்கள் மூன்று தலைமுறையாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று ஜெயலலிதாவே பேசியிருக்கிறார். விரும்புகிறவர்கள் குடியுரிமை வாங்கிக் கொள்ளலாம் அல்லது அவர்களது நாட்டிற்கு செல்லலாம். ஆக இந்தச் சட்டத் திருத்தத்தில் ஈழத் தமிழர்களை விட்டு விட்டார்கள். பூடான், நேபாளம், பர்மா , பூடானி லிருந்து பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் வந்தால் அவர்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை. பூடானில் கிருத்தவர்கள் மிகக் கொடுமையாக பாதிக்கப்படு கிறார்கள். அங்கே கிருத்தவர் களுக்கு பொது இடங்களில் தேவாலயங்கள் கட்ட அனுமதியில்லை. பூடானில் உள்ள ஒரு கிருத்துவர் வழிபாடு நடத்த வேண்டுமானால் இந்தியாவின் எல்லைக்குள் வந்து தான் வழிபாடு நடத்த வேண்டும். ஆப்கானிஸ்தான், பங்களாதேஷில் உள்ள கிருத்துவர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி கொடுத்த நீங்கள் பூடானில் உள்ள கிருத்துவர்களுக்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை? என்ற கேள்வி எழுகிறது. காரணம் ஆர்.எஸ்.எஸ். கூறும் அகண்ட இந்து பாரதத்துக்குள் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் வருகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் இப்போது நிறைவேறியிருக்கிறது. தொடர்ந்து குடியுரிமைப் பதிவேடு ஒவ்வொரு மாநிலத்திலும் தயாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து பேசி வந்தார். எதிர்ப்புகள் கடுமையாக வந்தன. பா.ஜ.க. கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்கள்கூட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்ததுபோல் குடியுரிமைப் பதிவேடு தயாரிக்க மாட்டோம் என்று அறிவித்தன. இந்த நிலையில் மத்திய அமைச்சரவை கூடி தந்திரமாக வேறு ஒரு முடிவை எடுத்தது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் தயாரிக்கப் போவதாக அறிவித்து, அதற்கு 4000 கோடி நிதி ஒதுக்கினார்கள். இது வழக்கமாக நடத்தப்படுகிற மக்கள் தொகைக் கணக்கெடுப்பான ‘சென்சஸ்’ அல்ல. மக்கள் நலத் திட்டங்களை அமுல்படுத்த மக்கள் தொகைக் கணக் கெடுப்பு தேவைப்படுகிறது; இப்போது ‘ஆதார்’ அடையாளமே போதும் என்ற நிலை வந்து விட்டது.

ஆனால் தேசிய மக்கள் தொகை பதிவேடு, ‘சென்சஸ்’ அல்ல. அடுத்து அவர்கள் எடுக்கவிருக்கும் தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்கான முன்னோடி கணக்கெடுப்பு. தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டைத் தொடர்ந்து தேசிய குடியுரிமைப் பதிவேடு தயாரிக்கப்படும் என்பதற்கான சட்டத் திருத்தம் 2003ஆம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலேயே கொண்டு வரப்பட்டுவிட்டது. தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் இப்போது புதிதாக சில கேள்விகள் இணைக்கப்பட்டுள்ளன. “உங்களது தாய் தந்தை எப்போது எங்கே பிறந்தனர்? அதற்கான ஆதாரங்கள் என்ன?” - இந்தக் கேள்வி களுக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. தங்களின் பிறப்பு சான்றிதழ்களையே நிரூபிக்க முடியாத மக்களைக் கொண்ட நாட்டில் பெற்றோர்களின் இருப்பிடச் சான்றிதழ்களுக்கு பிறப்பு சான்றிதழ்களுக்கு எங்கே போவது? கடும் எதிர்ப்புக்குப் பிறகு இப்போது இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பது கட்டாயம் இல்லை என்கிறது மோடி ஆட்சி. அடுத்து குடியுரிமைப் பதிவேடு தயாரித்தால் நாட்டில் பெரும் குழப்பம்தான் உருவாகும். நான் இந்த நாட்டின் குடிமகன் என்பதை நானே நிரூபித்தாக வேண்டும். அதற்கு ஆவணங்கள் இல்லை என்றால் குடிமக்கள் தகுதி நீக்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்களில் இதற்கான தேவை இருக்கலாம். அவை எல்லையோர மாநிலங்கள். ஆனால், ஏனைய மாநிலங்களில் இதற்கான தேவை அவசியம் என்ன?

அதே போல் பாகிஸ்தானில், அகமதியாக்கள், ஷியாக்கள் என்று முஸ்லிம்களில் வேறு பிரிவுகள் உள்ளன. அகமதியாக்களும், ஷியாக்களும் இஸ்லாமியர்களுக்கு எதிரிகள் என்று பாகிஸ்தான் அரசு கருதுகிறது. அகமதியாக்கள் ‘குர் ஆனை' படிப்பதற்கு பாகிஸ்தான் அரசு தடை போட்டுள்ளது. அதே போல் அகமதியாக்கள் எந்த ஒரு விண்ணப்பத்திலும் தங்களை இஸ்லாமியர்கள் என்று பதிவு செய்து கொள்வதற்கு தடை போட்டுள்ளது பாகிஸ்தான் அரசு. ஆக, இஸ்லாமியர்களிலேயே அகமதியாக்கள், ஷியாக்கள் பிரிவினரை துன்புறுத்துவதாக பாகிஸ்தான் அரசு இருக்கின்ற போதிலும் இஸ்லாமியரை இங்கே அனுமதிக்கக் கூடாது என்று தடை போடுவதில் என்ன நியாயம் இருக்கிறது? அதற்கும் இவர்களிடத் திலிருந்து எந்த பதிலும் கிடையாது. கேட்டால் அது இரண்டு மதத்திற்குள் இருக்கும் பிரச்சினை' என்கிறார்கள். அகமதியாக்களை இஸ்லாமியர்கள் எதிரிகளாகவே கருதுகிறார்கள். அவர்கள் தங்கள் நாட்டில் வாழக்கூடாது என்கிறார்கள். அவர்கள் இஸ்லாமியர்கள் என்று அறிவித்துக் கொள்ளக் கூடாது என்று சொல்கிறார்கள். அந்த அளவிற்கு ஒரு கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறவர்கள். அருகிலேயே பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா என்ற ஓர் இஸ்லாமிய பிரிவு இருக்கிறது. இன்று உலகிலேயே அதிகமான இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுகின்ற பிரிவு என்று அய்க்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. ரோஹிங்கியா முஸ்லிம்களை மிகவும் சித்திரவதை செய்து கொள்கிறார்கள். உலகிலேயே அதிகமாக இனப்படுகொலை செய்யப்படும் ஒரு இனம் என்று அய்க்கிய நாடுகள் சபை அறிவித்த பின்பும் இந்தியாவில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு இடமில்லை என்றால். ஏன் மூன்று நாடுகளை மட்டும் மதத்தின் அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்? பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மூன்றுமே இஸ்லாமிய நாடு. பூடான், மியான்மர் பௌத்தர்கள் வாழும் நாடு. நேபாளம் இந்துக்கள் வாழும் நாடு. ஆக இந்த மூன்று நாடுகளை மட்டும் தேர்வு செய்தது ஒரு அப்பட்டமான மதப் பிளவு ஆகாதா?

அகமதியாக்களும் இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் தான் என்று பேசும் பாரதிய ஜனதா கட்சிகாரர்களைக் கேட்கிறோம், அய்க்கிய நாடுகள் சபையில், இந்தியாவின் பிரதிநிதி என்ன பேசினார்? பாகிஸ்தானில் அகமதியாக்கள் துன்புறுத்தப்படு கிறார்கள், ஒதுக்கப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு விவாதத்துக்கு வந்தபோது இந்தியாவின் சார்பாக பேசிய பிரதிநிதி, ‘பாகிஸ்தானில் அகமதியாக்களுக்கே மிகப் பெரிய கொடுமை நடக்கிறது, அந்த அளவிற்கு பாகிஸ்தானில் இஸ்லாமிய மதவெறி தலைவிரித்தாடுகிறது’ என்று பேசினார் இந்திய பிரதிநிதி. ஆனால், அந்த வரலாற்று உண்மை களெல்லாம் மறந்துவிட்டு இன்றைக்கு இப்படி ஒரு கருத்தை மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பல கட்சிகள் ஆளும் கட்சியை ஆதரிக்கிறவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்திருக்கிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், மாநிலங்களவையில் அதிமுகவின் உறுப்பினர்கள் 11 பேர் இதை ஆதரிக்கவில்லையென்றால் இந்தச் சட்டம் நிறைவேறியிருக்காது. ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாத ஒரு சட்டத்தை எதிர்க்கக் கூட அவர்கள் தயாராக இல்லை. இந்த சட்டத்தைக் கொண்டு வருகிறபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் திமுகவும் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள். அந்தத் திருத்தம், இந்தத் திருத்தத்தை மதத்தின் அடிப்படையில் தீர்மானிக்காதீர்கள் என்பது ஒன்று; ஈழத்தில் இருந்து வருகிறவர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற திருத்தம் மற்றொன்று. குறைந்தபட்சம் இந்த திருத்தத்திற் காவது அகில இந்திய அண்ணா தி.மு.க.காரர்கள் ஆதரித்திருக்கலாம். ஆனால் அதை செய்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. வாக்களித்து விட்டார்கள். அடுத்த நாளே அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டம் நிறைவேறி விட்டது.

குறிப்பாக உத்திரப்பிரதேசம், ஜமாலியா பல்கலைக்கழகம், அலிகார் பல்கலைக் கழகம் போன்றவைகள் மட்டுமல்லாமல் வீடு வீடாக சென்று கொடூரமாக போராட்டக்காரர்களை தாக்கினார்கள் உத்திரப்பிரதேசத்தில் 19 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 19 பேரும் இஸ்லாமியர்கள். மோடி என்ன கூறினார் - போராட்டம் நடத்துகிறவர்கள் யார் என்று அவர்கள் அணிந்திருக்கிற ஆடையை வைத்தே புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் இஸ்லாமிய உடையணிந்து, குல்லா போட்டுவந்தால் போராட்டம் நடத்துகிறவர்கள் இஸ்லாமியர்கள் தான் என்று மறைமுகமாக கூறுகிறார். உத்திரப்பிரதேசத்தில் மாவட்ட காவல்துறை அதிகாரியாக இருக்கிற ஒருவர் போராட்டம் நடத்துகிற மாணவர்களை பாகிஸ்தானிற்கு ஓடி விடுங்கள் என்று கூறியது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு பரவியது. இவ்வாறு பரவிய பின் அவர் சொல்கிறார், கூட்டத்தில் இருந்து பாகிஸ்தான் வாழ்க என்று ஒருவர் முழக்க மிட்டார். அதனால் அப்படி கூறினேன்’ என்று ஒரு அய்.பி.எஸ் அதிகாரி விளக்கமளிக்கிறார். ஒருவேளை அப்படி ஒரு முழக்கம் ஒருவரால் எழுப்பப்பட்டால் அவரைக் கண்டறிந்து என்ன வழக்கு போட முடியுமோ அதைப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, பாகிஸ்தானிற்கு ஓடுங்கள் என்று மொத்த மாணவர்களையும் பார்த்து ஆர்.எஸ்.எஸ் குரலில் பேசுவது ஒரு அதிகாரியின் வேலை தானா?

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்

Pin It