முதலாளித்துவம் எப்பொழுதெல்லாம் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை முற்றாக சூறையாடி, அவர்களை வாழ்வா சாவா என்ற நெருக்கடிக்குத் தள்ளுகின்றதோ, அப்பொழுதெல்லாம் முதலாளி வர்க்கம் தன்னை காப்பாற்றிக் கொள்ள தேசிய வெறியையும், இனவெறியையும் கைக்கொள்ளும் என்பதுதான் உலக வரலாறு. எந்த ஒரு பாசிச சித்தாந்தமும் அதற்கான சமூகத் தேவை இல்லை என்றால் அது வெகுமக்களிடம் எடுபடாது என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும், அது துளிர்விட்டு முளைக்கும் போதே அதை சித்தாந்த ரீதியாக எதிர்கொள்ள பாட்டாளி வர்க்கக் கட்சி தயாராக இல்லாமல் பலவீனமாக இருந்தது என்றால், பாசிசம் மெல்ல மெல்ல அதிருப்தியின் மீது படர்வதை நம்மால் தடுக்க முடியாமல் போய்விடும். இன்று அப்படியான ஒரு போக்குதான் தமிழகத்தில் சீமானின் வடிவில் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது.
அண்ணன் சீமானின் கடந்த கால அரசியல் நிலைபாடுகளையும், தற்போதைய அரசியல் நிலைபாடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து விமர்சனம் செய்வது என்பது மலத்தை குச்சிவிட்டுக் கிளறி ஆராய்ச்சி செய்வதைவிட அருவருப்பானது என்பதாலும், ஏற்கெனவே சமூக வலைதளங்களில் அண்ணின் இரட்டை நாக்குப் பேச்சுகள் நிறைய குறைவின்றி கிடைப்பதாலும், அதை நோண்டிப் பார்க்காமல் நேரடியாக நாம் பிரச்சினைக்கு வந்து விடுவோம். சில தினங்களுக்கு முன்னால் சீமான் அவர்களின் பேட்டி ஒன்றை ஆனந்த விகடன் வெளியிட்டு இருந்தது. அதில்,
"கருணாநிதி, ஜெயலலிதா மீது நீங்கள் வெளிப்படையாக விமர்சனம் வைக்கிறீர்கள். அதேபோல், பெரியார் மற்றும் அண்ணா மீதும் விமர்சனம் வைக்கிறீர்களே?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,
''பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான தமிழ் மண்ணை; இது பெரியார் மண், அண்ணாவின் பூமி என்று சொல்லி, ஐம்பது ஆண்டுகளுக்குள் தமிழகத்தைச் சுருக்குவதை எப்படி ஏற்றுக் கொள்வது? இந்த மண்ணில் சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், யோகிகள் இருந்திருக்கிறார்கள், சேர சோழ பாண்டியர்கள் ஆண்டிருக்கிறார்கள். தீரன் சின்னமலை நிலம் இது. மருதுபாண்டியர் வீரம் தெரிந்த மண் இது. இப்படி எத்தனையோ பெருமை இருக்கும்போது பெரியார் மண் என்று அடக்குவது தவறு. பெண் விடுதலைக்குப் பெரியார் மட்டும் தான் போராடினாரா? சாதி ஒழிப்புக்குப் பலரும் போராடி இருக்கும்போது ஒருவரை மட்டும் அடையாளப்படுத்துவதும் தவறு தான்''.(நன்றி விகடன்:14/04/2019) என்று பதிலளித்து இருந்தார்.
சீமானின் இந்த பதிலைப் படிக்கும் யாரும் “அப்படி என்ன சீமான் தப்பாகப் பேசிவிட்டார், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தனக்கென தனித்த வரலாறும், பண்பாடும் கொண்ட ஒரு மண்ணை பெரியாரின் மண் என்று சொல்வது தப்புதானே, அதைத்தானே சீமானும் சொன்னார்” என்று குறுக்கித்தான் பார்ப்பார்கள். ஆனால் சீமானின் இந்த பதிலுக்குள் ஒளிந்திருப்பது அப்பட்டமான இன துவேசம் என்பதைத் தாண்டி, சீமான் கட்சி நடத்துவதே இந்த மண்ணில் வேர்விட்டு விழுதுகளாக இறங்கி இருக்கும் பெரியார் என்ற மாபெரும் சிந்தனையாளரின் கருத்துக்களை ஒழித்து, பார்ப்பனிய சித்தாந்தத்தை தமிழர்கள் மீது திணிப்பதற்கான முயற்சிதான் என்பது புலப்படும்.
சீமானின் ஒரே நோக்கம் இந்த மண்ணின் தனித்த பண்பாக அடையாளம் காணப்படும் பார்ப்பன எதிர்ப்பு மரபை எப்படியாவது ஒழித்துக் கட்டிவிட்டு, அந்த இடத்தில் பார்ப்பனியத்தை குடியமர்த்துவதுதான். அதற்காகத்தான் இன்று சீமான் எல்லாமுமாக தன்னை காட்டிக் கொண்டு கபட நாடகமாடிக் கொண்டு இருக்கின்றார். திமுக, அதிமுக போன்ற கார்ப்ரேட் கட்சிகளின் மேல் வெறுப்பாக இருக்கும் இளைஞர்கள் பலர், இன்று மாற்று அரசியல் சிந்தனையைத் தேடி நகர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்களை இடதுசாரி முற்போக்கு அரசியலின் பக்கம் சென்றுவிடாமல் அதற்கு அணைபோட்டு தடுக்கும் தந்திர அரசியலை சீமான் கையில் எடுத்திருக்கின்றார்.
இளைஞர்கள் பார்ப்பனப் பாசிசத்தின் வெறுப்பு அரசியலைப் பார்த்து பெரியாரின் பக்கம் போகின்றார்களா... அப்படி என்றால் பிஜேபிக்கு எதிராகவும், சாதிக்கு எதிராகவும் சில வார்த்தைகளைப் பேசு! அவர்கள் இடதுசாரி மார்க்சிய அரசியலின் பக்கம் போகின்றார்களா...? அப்படி என்றால் கொஞ்சம் ஊறுகாயாக பொதுவுடமையைத் தொட்டுக் கொள், இல்லை வலதுசாரிப் பாசிசத்தால் கவரப்படுகின்றார்களா? அதற்கும் முப்பாட்டன் முருகன், மாயோன் போன்றவற்றைக் கலந்து செய்த பாரம்பரிய தமிழ் லேகியம் இருக்கின்றது. இப்படித்தான் சீமான் தன்னுடைய அரசியலை சமீப ஆண்டுகளாக கட்டமைத்துக் கொண்டிருக்கின்றார். மாற்று சிந்தனை கொண்ட ஒரு புரட்சிக்காரன் போன்று ஹைடெசிபலில் பேசினாலும், தான் கட்சி ஆரம்பித்த பிரதான நோக்கத்தைத் தவற விடாமல், அந்த மையப் புள்ளியை சுற்றியே தனது பார்ப்பன அடிமை அரசியலை கட்டமைத்துக் கொண்டு இருக்கின்றார்.
கட்சி ஆரம்பித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும், பல சமயங்களில் குறிப்பாக எச்.ராஜா போன்றவர்கள் பெரியார் சிலையை இடிக்க வேண்டும் எனப் பேசியபோது, அதற்கு எதிராக எதிர்வினை ஆற்றிய போதும், அவர் மனதில் பெரியாருக்கு எதிராக மண்டிக் கிடக்கும் வெறுப்பு இன்று வளர்ந்து பேரவதாரம் எடுத்து நிற்கின்றது. அதன் வெளிப்பாடுதான் இந்த மண்ணை எப்படி பெரியார் மண் என்று சொல்லலாம், பெரியார் மட்டும்தான் பெண்களுக்கு ஆதரவாகப் பேசினாரா என்பது போன்ற பிதற்றல்கள்.
சீமான் உண்மையில் யோக்கியமான மனிதராக இருந்தால், கடந்த 2000 வருட தமிழக வரலாற்றில் பெண்ணுரிமைக்காகப் பேசிய, அவர்களை போராட்ட களத்திற்குக் கொண்டு வந்த, அவர்களுக்கான உரிமைகளை தன்னுடைய போராட்டத்தின் மூலம் பெற்றுக் கொடுத்த ஒரு நபரையாவது மேற்கோள் காட்டி, 'இவர்கள் எல்லாம் பெண் உரிமைக்காகப் பேசியவர்கள்' என்று நேர்மையாக சொல்லிவிட்டு, அவர்களோடு பெரியாரை ஒப்பிட்டு 'பெரியார் ஒன்றும் பெரியதாகப் பேசவில்லை' என்று சொல்லி இருந்தால் அவரின் நேர்மையை நாம் பாராட்டலாம். ஆனால் போகிற போக்கில் அவதூறு செய்வது என்பது பாசிஸ்ட்கள் கடைபிடிக்கும் வழிமுறையாகும்.
கடந்த இரண்டாயிரம் ஆண்டு தமிழக வரலாற்றில் பெண்கள் மிக இழிவாக நடத்தப்பட்டார்கள் என்பதும், தமிழ் இலக்கியங்களில் பெண்களின் அடிமைத்தனமே அவர்களின் சிறப்பான குணங்களாகப் புகழப்பட்டன என்பதும், சீமான் சொல்லும் சேர, சோழ, பாண்டியர்கள் அனைவருமே பெண்களை கோயிலில் தேவதாசிகளாக வைத்திருந்தார்கள் என்பதும், இருப்பதிலேயே பெண்களை மிக இழிவாகப் பேசியது சித்தர் பாடல்கள்தான் என்பதும்தான் வரலாறு. உலகம் போற்றும் அற சிந்தனைகளை அளித்த திருவள்ளுவர் கூட “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” என்று சொல்பவராகத்தானே இருந்தார். இதை சீமான் ஏற்றுக் கொள்வாரா? இதை ஏற்றுக் கொண்டு ஓவ்வொரு பெண்ணுக்கும் சோதனை வைத்தால் என்னாவது? கம்பன் என்ன செய்தான் தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தித் தானே பாடல் எழுதினான்.
எவனாது ஒரு தமிழ் மன்னன் சாதிக்கு எதிராகப் போராடினான், பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தான் என்று சொல்ல எதாவது ஒரு ஆதாரம் இருக்கின்றதா? இன்று சீமான் பெருமையாக சொல்லிக் கொள்ளும் மன்னர்கள் உண்மையில் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் தஞ்சைப் பெரிய கோயிலில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் தேவரடியார்களாக பணியமர்த்தப்பட்டனர் என்ற செய்தியை தஞ்சைப் பெரிய கோவில் வட வெளிச்சுற்றுச் சுவரில் உள்ள தளிச்சேரிக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இந்தப் பெண்களுக்கு மணம் புரியும் உரிமை கிடையாது. இந்தப் பெண்கள் அர்ச்சகர்களின் ஆசைக்குட்பட்ட வைப்பாட்டிகளாகவும் விளங்கினர். இப்படி தமிழ் மன்னர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தத் தேவதாசி முறை மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் முன்முயற்சியால் தான் ஒழிக்கப்பட்டது என்பதையும், அதற்குத் தமிழ்த் தேசியவாதிகளின் முன்னோர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர் என்பதும்தான் வரலாறு.
ராஜராஜன் பார்ப்பனியத்தின் ஊதுகுழலாக இருந்தது மட்டும் அல்லாமல், தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் கேவலமாக நடத்தினான். அவனது ஆட்சிக் காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் தனிக் குடியிருப்புகளில் அதாவது ஊருக்கு வெளியே குடிவைக்கப்பட்டனர். பெரிய கோவில் கல்வெட்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்த பகுதிகளைக் குறிக்கும் விதமாக பறச்சேரி, தீண்டாச்சேரி என்கிற பெயர்கள் குறிப்பிடுவதில் இருந்தே இதைத் தெரிந்து கொள்ள முடியும். எந்த ஒரு தமிழ் மன்னனும் சாதியை ஒழிக்கப் போராடவில்லை. சோழர்கள் மற்றும் தமிழகத்தின் குறுநில மன்னர்கள் பார்ப்பனர்களைக் கொண்டு வேத வேள்விகள் செய்தும், இரணிய கர்ப்பதானம், துலாபார தானம் போன்றவைகள் செய்தும், தங்களை சூத்திர அந்தஸ்தில் இருந்து மாற்றிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டாலும், அவர்களால் சத்திரியர்கள் ஆக முடியவில்லை என்பதையும் வரலாற்றுக் குறிப்புகள் காட்டுகின்றன. ஆனால் அவர்கள் தமிழ் மக்கள் சார்ந்த குலத்தவர்கள் என்பதிலிருந்து மாறி, சந்திர குலத்தவர், சூரிய குலத்தவர் என்று பெயர் சூட்டிக் கொள்ளப் பார்ப்பனர்கள் உதவி புரிந்தனர்.
மன்னர்கள்தான் பார்ப்பன அடிமைகளாக, ஆணாதிக்கவாதிகளாக இருந்தார்கள், சரி சீமான் குறிப்பிடும் சித்தர்கள் தான் ஏதாவது பெண் உரிமை சம்மந்தமாக குரல் கொடுத்து இருக்கின்றார்களா எனப் பார்த்தால் அருவருப்பு உணர்வுதான் ஏற்படுகின்றது. பாம்பாட்டிச் சித்தர் சொல்கின்றார்:
செண்டுமுலை வண்டுவிழி கொண்ட தோகையைச்
சித்தப்பால் விழுங்கிய சீயென்று ஒறுத்தோம்:
குண்டுகட்டெ ருமையேறுங் கூற்றுப் பருந்தைக்
கொன்றுதின்று விட்டோம் நாம் என்று ஆடு பாம்பே!(51)
வட்டமுலையென்றுமிக வற்றுந் தோலை
மகமேரு என்று உவமை வைத்துக் கூறுவார்
கெட்ட நாற்ற முள்ளயோனிக் கேணியில் வீழ்ந்தார்
கெடுவர் என் றேநீர் துணிந்து ஆடுபாம்பே!(52)
மலஞ்சொரி கண்ணைவடி வாளுக் கொப்பாக
வருணித்துச் சொல்வார்மதி வன்மை இல்லாதார்:
குருநலம் பேசுகின்ற கூகை மாந்தர்கள்
கும்பிக்கே இரையாவர் என்று ஆடுபாம்பே!(53)
என்று பாடுகின்றார். இன்னும் பல படிகள் மேலே போய் பட்டினத்தார் என்ற சித்தர்,
“சீறும் வினையது பெண்ணுருவாகித் திரண்டுருண்டு
கூறு முலையும் இறைச்சியுமாகிக் கொடுமையினால்
பீறு மலமும் உதிரமுஞ்சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங் கரைகண்டிலேன் இறைவாகச்சி ஏகம்பனே”
“பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசம் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால்மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளியென் போதப் பொருள்பறிக்க
எண்ணா துனைமறந்தேன் இறைவாகச்சி ஏகம்பனே” என்றும் கூறுகிறார்.
இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று சீமானை பெரிய பெண்ணியப் போராளியாக நினைக்கும் பெண் தோழர்கள் சீமானிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இன்னும் சங்க இலக்கியங்கள் தொடங்கி பார்ப்பன பக்தி இலக்கியம் வரை எப்படி சாதியையும், பெண்ணடிமைத்தனத்தையும் இந்த மண்ணில் உரம் போட்டு வளர்த்தன என்று நம்மால் விலாவாரியாக எழுத முடியும். இது எல்லாம் சீமான் அறியாததும் அல்ல.
அவரின் காழ்ப்புணர்வுக்கு முக்கிய காரணம் பார்ப்பனியம் தமிழகத்தில் வேர்கொள்ள முடியாமல், அதை தடுத்துக் கொண்டிருக்கும் பெரியாரிய சிந்தனைகளை எப்படியாவது அடி அறுக்க வேண்டும் என்பதுதான். அதனால்தான் பெரியார் மண் என்ற வார்த்தை அவரை சுட்டுக் கொண்டே இருக்கின்றது. “தமிழகம் பெரியார் மண் அல்ல, பெரியாழ்வார் மண்" என்றும், "அண்ணா வளர்த்த தமிழ் அல்ல, ஆண்டாள் வளர்த்த தமிழ்" எனவும் தமிழிசை சவுந்தரராஜன் சொன்னபோது சீற்றம் அடையாத சீமான், இது பெரியார் மண் என்று சொல்லும்போது மட்டும் ஏன் சீற்றம் அடைகின்றார்? பார்ப்பனியத்தின் நேரடியான கைக்கூலிகளை நம்மால் எளிதில் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திவிட முடியும் ஆனால் இது போன்று பெரியாரிய சிந்தனைகளை ஏற்றுக் கொண்டதுபோல நாடகமாடி அடியறுப்பவர்கள் மிக ஆபத்தானவர்கள்.
சீமானின் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இங்குள்ள இடதுசாரி சிந்தனையாளர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. கடந்த 2000 வருட தமிழக வரலாற்றில் பல பேர் சாதிக்கு எதிராகப் பேசி இருக்கின்றார்கள். ஆனால் அதை அரசியல் களத்திற்குக் கொண்டு வந்து இயக்கமாக மாற்றியவர் பெரியார். வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஓலைச்சுவடியிலும், தாள்களிலும் சாதி ஒழிய வேண்டும் என்று எழுதியவன் எல்லாம் சாதி ஒழிப்புப் போராளி அல்ல. நடைமுறையில் பெரும் மக்கள் திரளின் ஆதரவுடன் போராட்டம் நடத்தி, சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உரிமையை வென்றெடுத்ததில்தான் பெரியாரின் தனித்தன்மை இருக்கின்றது. அவர் களப்போராளி, களங்கமில்லா போராளி.
சீமானைப் போல வாயில் மட்டுமே வடை சுடும் வேலையைப் பார்த்தவரல்ல பெரியார். 2000 வருடங்களாக தமிழன் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தமிழ் மக்களை மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் இழிவுபடுத்திக் கொண்டிருந்த அயோக்கியர்களை அம்மணமாக்கி ஓட ஓட விரட்டி அடித்த ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. சீமான் குறிப்பிடும் யாருமே அதைச் செய்யவில்லை என்பதுடன் அந்த இழிவுகளுக்குத் துணையாக இருந்தார்கள் என்பதுதான் வரலாறு.
சீமான் சொல்லுவதை எல்லாம் எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தி பார்க்கத் தெரியாத ஒரு மூளை மழுங்கிக் கூட்டம் அவர் பின்னால் இருக்கின்றது. யோனிப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொண்டவர்களும், ஜாதகம் பார்த்து குழந்தைகளுக்குப் பெயர் வைத்தவர்களும், எந்தவித மக்கள் போராட்டத்திலும் கலந்து கொள்ள விரும்பாமல், வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் மட்டுமே தங்களது அரசியல் அரிப்புகளை தீர்த்துக் கொள்ள நினைப்பவர்களும், சுயசாதி சாதி சங்கங்களில் இருந்து கொண்டு அப்பட்டமாக சாதிவெறியை கக்கிக் கொண்டு தமிழ்த் தேசியம் பேசுபவர்களும் தான் இன்று சீமான் கட்சியில் கணிசமாக இருக்கின்றார்கள். அது போன்ற கும்பல்களுக்கு நாம் தமிழர் கட்சி பாதுகாப்பான இடமாக இருக்கின்றது. தமிழ் மக்களை இழிவு செய்யும் சாதியையோ, மதத்தையோ, கடவுளையோ எதையுமே விட்டுவிடாமல் புரட்சிக்காரன் வேடம் போட்டு புளுகித் திரிய வேண்டும் என்றால், அது போன்ற புல்லுருவிகளுக்கு ஏற்ற இடம் நாம் தமிழர் கட்சிதான்.
சீமான் அவர் கட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு இடம் கொடுத்தாலும், ஏன் 100 சதவீதமே இடம் கொடுத்தாலும் அதனால் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை. பிற்போக்குத்தனத்தையும், பார்ப்பன அடிமைத்தனத்தையும், சாதி வெறியையும், இனவெறியையும் ஏற்றுக் கொண்ட பெண்களை வைத்துக் கொண்டு எந்த ஒரு சமூக மாற்றமும் சாத்தியமில்லை. ஆர்.எஸ்.எஸ் பிஜேபி சித்தாந்தத்தை தமிழகத்தில் இருந்து கருவறுப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் இந்த மண்ணில் பார்ப்பனியத்தை வேர்கொள்ளச் செய்ய உள்ளடி வேலை பார்க்கும் சீமானின் இனவாத அரசியலை வேரறுப்பதும். மார்க்சிய பெரியாரிய இயக்கங்கள் இந்தப் பிரச்சினையை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டு களப்பணி ஆற்றவில்லை என்றால் நாம் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.
- செ.கார்கி
மாற்றுக் கருத்துக்களை சீர்தூக்கி பார்க்க விட மாட்டார்கள். ஏனென்றால் ராமசாமியை வைத்து செய்யும் வியாபாரம் படுத்துவிடுமே.
திராவிடிய வயிறெரிவது தெரிகிறது.
வள்ளுவரையே வச பாடுறீங்களேடா என்ன துணிச்சல்?
ஆதாரமில்லாமல் சண்டையில் புறணி பேசும் பெண்களை போல புலம்பாதீர்கள்.
துணிவிருந்தால் எதிர்த்து நில்லுங்கள்
இக்கட்டுரைக்கு வழக்கு போடுறோம் எதிர்கொள்ள தயாரா இருங்கள் .
துணிவிருந்தால் விலாசம் அலைபேசி எண் அனுப்பவும்.
அவ்லவ் தைரியமான ஆளா இருந்தா... ஒரு மேட பொட்டு சொல்லு....
(2) தமிழ்நாட்டில் தெலுங்கர்களின் ஆதிக்கம் பலப்படுத்தப்பட் டபோது ஜாதிப் பெயர்களை மறைத்துவிடும் வகைக்காக ஜாதிஒழிப்பு என்றபெயரால் தம்மை தமிழராக காட்டிக்கொள்வதற ்காகவே நாயக்கர்,நாயுடு ,ரெட்டி என இதுபோன்ற ஜாதி பெயர்களை மறைப்பது என முடிவெடுத்து அதை வெற்றிகரமாக இன்றளவும் செயல்படுத்தி வருகிறார்கள்
(3) இவர்கள் செல்லுமிடமெல்லா ம் தங்களை அந்தந்த மண்ணின் மைந்தர்களா கவும் அங்கே வாழும் தமிழர்களை எதிரிகளாகவும் சித்தரித்து ஆட்சியை கைப்பற்றி அதிகாரம்செலுத்த ியே வருகிறார்கள். பண்டாரநாயக்காமு தல் இன்றைய சிரிசேனாவரை இலங்கையில் சிங்களவரை ஏமாற்றி தமிழர்களை எதிரியாக்கி அழித்து ஒழித்துவிட்டார் கள். வடநாட்டில் இவர்கள் நாயக் (பிஜூ பட்நாயக்) கேரளாவில் நாயர்கள் கர்நாடகத்தில் வாட்டாள் நாகராஜ். எங்கும் தமிழர்களை எதிரிகள். என ஆக்கி ஏமாற்றிவிட்டார்கள்.
(4) எம்மண்ணில் இருந்துகொண்டு எம்மையே எதிரிகளாக்கி ஆரிய திராவிட சூழ்ச்சியால் எமைஅழிக்கும் ஒருகும்பல் இத்தனைகாலமும் மிக சாதுர்யமாக செயல்பட்டு வெற்றிகண்டுவிட் டது. ஆரியமும் திராவிடமும் ஒன்றுசேர்ந்து ஈழத்தமிழர்களை ஒழித்துக்கட்டிய ாயிற்று. பின் தமிழகத்தில் தமிழன் வந்தேறிஎன திராவிடமும் தமிழர்என்று ஒருமொழிஉண்டு ஆனால் தமிழ்நாடு என்று ஒன்று இல்லை என ஆரியமும் முனைந்து செயல்பட்டு தமிழனை தமிழ் மண்ணிலே்யே அழித்துவிட உலகில் எங்கும் இல்லாதவாறு 8 அணு உலை, தமிழகத்தின் நீர்ஆதாரமான மேற்குத்தொடர் மலையை அழிக்க நியுட்ரினோ, தமிழக விவசாயநிலங்களை அழிக்க அய்டிரோகார்பன், தமிழக தொழில்களை அழிக்க இந்துஸ்தான் போட்டோ பிலிம் ஐசிஎப. தாது மணல் தொழில் பட்டாசு தொழில் இன்னும் அநேக தொழில்களை அழித்தாகிவிட்டத ு.
(5) ஆறுகளில் தண்ணிவிட கடந்த திராவிடகட்சிகளி ன் ஆட்சியில் எந்த நடவடிக்கையும் இல்லாதது. தமிழக கனிமவளங்களை ஆற்றுமணல்களை மேற்குத்தொடர்ச் சி மலையில் விலை ஊயர்ந்த தேக்கு ஈட்டி மரங்களை கொள்ளையடித்தது கருங்கல் வெள்ளைக்கல்கொள் ளையடித்தது ஆரிய திராவிடமே, தமிழக மக்களின் வரியில்கட்டப்பட ்ட மருத்துவ இஞ்சினியர் கல்லூரிகளை அனைத்து மாநிலங்களுக்கும ் தந்து தமிழ் பிளைகளை விரட்டியது என அனைத்து துன்பதுயரங்களைய ும் தந்தது ஆரியமும் திராவிடமும்தான் .
இதை வெளிக்கொண்டுவந் து தமிழ்மக்களை விழிப்புறச்செய் தது சீமான். தமிழர்களைப்பொறு த்தமட்டில் ஆரியமும் திராவிடமும் தமிழழைன அழிக்க வந்த எதிரிகளே. ஆமுரியமும் திராவிடமும் ஒண்ணு இதை அறியாதவன் வாயில் மண்ணு. திராவிடத்தால் வீழ்ந்தோம். விழ விழ மீண்டும் எழுவோம்
இங்கே இந்திய உருவாக்கத்திற்க ு பிறகு தமிழ்நாடு மட்டும் பார்ப்பணிய பாசிசத்திலிருந் து பாதுகாக்கப் பட்டிருந்ததா, இந்தியா மொத்தமும் பார்ப்பனிய பாசிசத்தை எந்த சக்தி மட்டுப்படுத்திய ிருந்தது, இடது சாரி அரசியல் எழுச்சி எந்த அளவில் வளர்ந்தது, பெரியாரின் சித்தாந்தம் முதலாளிய சித்தாந்தத்திற் கு எதிரானதா இல்லையா, என்று என்னற்ற கேள்விகள் கேட்டால் பதில் வாங்குவதற்கு இந்த அறிவுஜீவிகளை அரங்குகளில் தான் தேடவேண்டும்.
சீமான் ஒன்னும் பாட்டாளிவர்க்கத ்தின் ஒரே பிரதிநிதி என்று கூற வில்லையே. அந்தந்த தேசிய இன சிறு முதலாளியின் வளர்ச்சியைத்தான ் தூக்கிப் பிடிக்கிறார். கொடூர ஏகாதிபத்திய தரகு ஆட்சிக்கெதிரான எழுச்சியை இந்த தருணத்தில் ஆதரிக்காத எந்த சித்தாந்தமும் மக்கள் விரோத சித்தாந்தமே.
பின்பு தமிழ் பாரம்பரிய இலக்கியங்களை பார்ப்பனிய பாசிச கோனிப்பையில் மொத்தமாக போட்டு கட்டி பெரியார் தலையில் வைத்து வரிந்து கட்டிக் கொண்டு வருவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். தமிழர் பண்பாடும் வரலாறும் பாசிச பார்ப்பனிய வரலாறு என்று திரிபு செய்கிற வாதமாகும். உலகின் எந்த ஒரு பண்பாடும் கலை இலக்கியமும் நிலவுடமை சமூகத்தை பிரதிபலிக்காமல் இருந்ததில்லை. என்னமோ தமிழ் மொழியில் மட்டுமே பெண்ணாதிக்கம் இருந்தது போலவும் அதுதான் தற்போதைய பார்ப்பனீய சமூகத்தை கட்டமைத்தது போலவும் செய்கிற வாதம் கொஞ்சம் கூட அறிவியல் நோக்கிலான வாதமில்லை. ஒரு தேசிய இனம் தங்கள் வேர்களில் உள்ள நல்லவற்றை வளர்தெடுத்தும் தீயவற்றை விமர்சனம் செய்தும் ஒரு தூய ஜனநாயக முதலாளித்துவமாக வோ , பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகவோ எழுந்து வரும் கம்யூனிஸ்டுகளோ, அறிவுஜீவிகளோ, பரட்சியாளர்களோ, ஜனநாயக வாதிகளோ இந்த அணியில் தான் நிற்க வேண்டுமே ஒழிய, இதற்கு எதிரான அனிதிரள் கூட்டம் வரலாற்று ஓட்டத்தில் காணாமல் போவார்கள். நாங்கள் தமிழர்கள்.
முட்டாள்த்தனமான கருத்துக்களைச் சொல்வதும்... ஒன்றைச் சொல்லிவிட்டு இல்லையென்று மறுப்பதும்... எந்த அடிக்கட்டுமானமு ம் இல்லாமல் வாயிலேயே வடைசுடும் தன்மையும் அவரைப் பார்த்தாலே கோமாளி போன்று காட்சியளிக்கிறது...
10 வருடங்களாகியும் இன்னும் பக்குவம் வராத மூளைக்கு பெயர் மூளை அல்ல அங்கிருப்பது அழுகிப்போன கொழுப்பு...
இதுதான் இட்டுக்கட்டி பேசுவது என்பது. அடிப்படையில் சீமான் ஒரு குழப்பவாதி. அதிக படிப்பறிவு இல்லாதவர். ஆனால் அவர் பேசக்கூடிய சில உண்மைகள் ஜீரணிப்பதற்கு கடினமானவை. அதை மறைப்பதற்காகத்த ான் கட்டுரையாசிரியர ் இப்படியெல்லாம் மேலே தூற்றிருக்கிறார ். தமிழகத்தின் தனித்தன்மை, வாழ்வு, வளம் ஆகியவற்றை உலகத்துக்காக காவு கொடுப்பது இடதுசாரி அரசியல். இந்தியாவுக்காக காவு கொடுப்பது இந்துத்துவ அரசியல். மற்ற தென்னிந்திய மாநிலங்களுக்காக காவு கொடுப்பது திராவிட அரசியல். தமிழகமும் புதுவையும் விலைமகளின் பிறப்புறுப்பு மாதிரி ஆகிவிட்டன. பக்கத்து மாநிலங்களில் இருந்தும் வட இந்தியாவில் இருந்தும் வருபவர்கள் இங்கு இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் உட்கார்ந்து கொண்டும் திராவிட அரசியலை பயன்படுத்திக் கொண்டும் ஏறி எம்புகிறார்கள். திராவிட இயக்கம் பின்பற்றும் பார்ப்பன எதிர்ப்பு அரசியலுக்காக பலியாவது தமிழர்கள். ஆனால் பலனடைவது மற்றவர்கள்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
2 கார்க்கி
என்று மடியும் இந்த அடிமையின் மோகம்
3 எப்பொழுதெல்லாம் தமிழர்கள் எழுச்சிப் எழுதுவார்களோ அப்பொழுது அவர்களது வாழ்வாதாரத்தை முற்றாக சூறையாடி அவர்களை நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு கார்க்கி போன்று கைக்கூலிகளை அன்னியர்கள் மிகவும் தந்திரமாக பயன்படுத்துவார் கள் உதாரணமாக இராவணன் என்ற பெருவீரனை விழுத்த ராமன் என்ற கைக்கூலி வந்தேறிகளால் பயன்படுத்தப்பட் டான் மீண்டும் பிற்காலச் சோழர் காலத்தில் எழுச்சி பெற்ற உலகத்தின் ஒப்புமை அற்ற தமிழர்களின் நாகரீகத்தை விழுத்த ஐரோப்பியர்கள் கார்க்கி போன்றோரை பயன்படுத்தினர் பின்னர் தமிழ் ஈழ தேசத்தில் எழுச்சி பெற்ற தமிழ் அரசை விழுத்த பெரியாரை பின்பற்றிய கருணாநிதியை ஐரோப்பிய வந்தேறியான சோனியா பயன்படுத்தினார் இப்பொழுது மீண்டும் தமிழர்கள் எழுச்சி பெறுவதை விரும்பாதவர்கள் கார்த்தி போன்ற கைக்கூலிகளை பயன்படுத்த முனைகிறார்கள்
4 தெய்வம் தொழாள் (கடவுள் மறுப்பு )கொழுநன் தொழுது அவள் எழுவாள்( பெண்ணாதிக்கம் ) இதில் வரும் ஆணின் அடிமை நிலை பெய்யெனப் பெய்யும் மழை போன்றது அதாவது கட்டளைக்கு கீழ்ப்படியும் தன்மை
5 தான் வாழாவிட்டாலும் தமிழ் வாழ ஔவைக்கு உதவிய அதியமான்
6 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்ற தமிழ் மறையின் இலக்கணத்துக்கு ஏற்ப சாதிக்கு ஒரு நாயனாரை வழங்கி அதற்கு இலக்கியம் படைக்க முதலமைச்சர் சேக்கிழாரை அவரது சாதி சமத்துவ சிந்தனையை போற்ற பொன்வேய்ந்த சோழன் குலோத்துங்க மாமன்னன் தனது முதலமைச்சருக்கு சாமரம் வீசி பணிபுரிந்து தனது சாதி சமத்துவ நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினார்
7 சித்தர்கள் என்போர் இவ்வுலக இன்பத்தில் இருந்து விடுபட்ட சீவன் முத்தர்கள் அவர்கள் போதிப்பது இவ்வுலக இன்பத்தில் கட்டுண்ட சாமானிய மனிதர்களுக்கு ஆகவே ஆண்பால் சித்தர்கள் அவர்களின் இயல்புக்கேற்ப காமத்தில் வெறும் இன்பம் பெண்ணில் இருந்து வருவது பெண்பால் துறவியர்கள் பாடலில் ஆண் இன்பத்தை போற்றி இருப்பார்கள் இல்லறத்தை கடந்து துறவறத்திற்கு சென்ற ஔவையார் நாகரீகமாக ஆண் இன்பத்தை இல்லறமல்லது நல்லறம் அன்று என்கிறார் அதேபோல் காரைக்கால் அம்மையார் சிற்றின்ப வாழ்க்கை தொடர்ந்து பேரின்ப வாழ்க்கைக்கு செல்கிறார் அங்கே அவர் புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவா திருக்க வரம் தர வேண்டும் என்கிறார் பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க வேண்டும் என்றார் எனவே காரைக்கால் அம்மையாரின் பேரின்பப் பெருவாழ்வு என்பது மாமணி ஆடும்போது அதன் அடியில் இருப்பது தான் இவ்வாறு ஆண்டாளின் பாசுரங்களிலும் காமத்து சுவையை உண்டு மகிழலாம்
RSS feed for comments to this post