தொடர்புடைய படைப்புகள்

அண்மைக் காலமாக, கவுன்சிலர் பதவிக்காக புரட்சியாளராக மாறிய நம்ம "நாம் தமிழர் தோழர்கள் ", தேர்தல் நெருங்க நெருங்க, வண்டிச் சக்கரத்தில் மாட்டிக் கொண்ட நாய் போல, "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என இடும் சத்தம் அதிகமாகியுள்ளது.

2009க்குப் பிறகு, ஈழ விடுதலையின் பின்னடைவை சரி செய்ய வந்த சர்வலோக நிவாரணியாக தன்னைக் காட்டிக் கொண்ட திருவாளர் சீமான், "அண்ணே!! உங்க கலருக்கு நீங்க தானே அடுத்த சி.எம்" எனக் கூறிய கோமாளி ரசிகர் கூட்டத்தை நம்பி, அந்த முதலமைச்சர் பதவியை அடைய, தனக்கென ஒரு அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்க, "திராவிட எதிர்ப்பு" என்ற ஒன்றை கையில் எடுத்தார். (ஒரு நாள் திராவிடக் கொள்கை எதிர்ப்பு என்பார்... ஒரு நாள் திராவிடக் கட்சிகளைத்தான் எதிர்க்கிறோம் என்பார்... ஒரு நாள் 'பெரியார் இல்லாவிடில் இந்த சீமானே இல்லை' என்பார். ஒரு நாள் அப்படியே மாற்றி, 'தகப்பன் என்னைப் பெத்தவனா இருக்கணும், தலைவன் என் ரத்தவனா இருக்கணும்' என தான் எழுதி வைத்திருந்த பழைய கதைப் புத்தகத்தில் இருந்து வசனத்தைத் தேடி எடுத்து இரண்டு கரண்டி ஊற்றுவார்..)

ஆக, வரலாறு தெரியாத அப்பாவி மக்களிடம், திராவிடர் என்ற சொல்லை விட தமிழர் என்ற சொல் மக்களிடையே உணர்வுப்பூர்வமாக சென்றடையும் என்ற அடிப்படை உளவியலைக் கையில் எடுத்து, திராவிடர் என்ற சொல்லை ஏதோ ஒவ்வாமை மிக்க சொல்லாக மாற்றி, வயிறு வளர்க்கும் அரசியலில் இறங்கினார்.

திராவிடர் என்பது பார்ப்பனியத்திற்கு எதிராக இந்த மண்ணில் தமிழர் பண்பாட்டை மீட்டெடுக்கும் அரசியல் சொல் என்பதை மறைத்து, நான்காம் தரம் அரசியலை செய்ய முற்பட்டார்.

திமுக, அதிமுக மீது மக்களுக்கு உள்ள எதிர்ப்பைப் பயன்படுத்தி, அவர்களின் இந்த செயல்பாட்டிற்கு அவர்களின் திராவிடக் கொள்கை தான் காரணம் என்று பார்ப்பான் எழுதிக் கொடுத்த பெரியார் மீதான அவதூறுகளை, தன் ரசிகர் கூட்டத்தை வைத்து இணையத்தில் பரப்பினார்.

அதற்குப் பெரிதாக அவர்கள் பயன்படுத்தும் வாதம் "கர்நாடகா, கேரளா, ஆந்திரவில் திராவிடம் என பேசப்படுகிறதா?" என்ற மொக்கை வாதம்.

அதற்கு நம் பதில் " அங்கே எல்லாம் பார்ப்பனிய எதிர்ப்பு உள்ளதா?? அங்கே எல்லாம் இந்திய எதிர்ப்பு உள்ளதா?? அங்கே எல்லாம் பண்பாட்டை மீட்டெடுக்கும் போர் நடக்கிறதா??" இவை அனைத்துக்கும் இல்லை என்பதே பதில்... பிறகு என்ன வெங்காயத்திற்கு அவன் திராவிடம் எனப் பேசப் போகிறான்???

மேற்கூறிய அனைத்து எதிர்ப்பும் நம்மிடத்தே உள்ளது என்பதால் திராவிடம் பேசுகிறோம்... ஒரு வேலை அது தான் பார்ப்பன பங்காளிக்கு உறுத்துகிறதோ?

மேலும் விடுதலைப் புலிகளையும், ஈழத் தமிழர்களையும் குறியீடாகப் பொருத்தி, நாம் எல்லாம் தமிழர்கள் என்று அவர்களையும் இணைத்துக் கொண்டார். ஆக, ஒருவர் விடுதலைப் புலிகளை நேசிப்பவர் என்றால், அவர்களும் இவரைப் போல திராவிடர் என்ற சொல்லை வெறுக்க வைக்கும் மறைமுக உளவு அரசியலை இங்கே செய்து வருகிறார்...

நீங்கள் இங்கே அரசியலில் பொறுக்கித் தின்பதற்கு வரலாற்றைப் புரட்டுவதா?? தங்கள் நலனுக்கு அடுத்த இனத்தின் வரலாற்றைப் புரட்டும் பார்ப்பனர்களை விட... தன் இனத்தின் வரலாற்றையே புரட்டும் இது ஈனத்தனம் அல்லவா???

புலிகளும், ஈழத்தமிழருமே தங்களை திராவிடர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டது உங்களுக்குத் தெரியமா??

ஈழத் தமிழர்களும், விடுதலைப் புலிகளும் தங்களை திராவிடர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டதை மறைக்கும் அரசியல் ஏனோ??

இதோ உங்கள் புரட்டுகளுக்கும், கீழ்த் தர அரசியலுக்கும் எங்கள் புலிகளே ஆதாரப்பூர்வமாக தந்திருக்கும் மறுப்பு...

முதல் ஆதாரம்:

1978 ஆம் ஆண்டு, கியூபாவில் நடந்த புரட்சிகர இயக்கங்கள் நடத்திய கலந்தாய்வுக்கு "விடுதலைப் புலிகளை" அழைத்தனர்...

அதில் கலந்து கொண்ட "விடுதலைப் புலிகள்" தங்களை... "தமிழ் பேசும் திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்" என்று அறிமுகப்படுத்திக் கொண்டதற்க்கான ஆதாரம்...

ltte cuba meet

இரண்டாம் ஆதாரம்:

1940 ஆம் ஆண்டு... பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மனு கொடுக்கையில்... "இந்த சிலோன் மண்ணில், சிங்களர்களும், திராவிடர்களும் இருக்கிறோம்... நாங்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள்... நாங்களும் இந்தியாவில் தென்னகத்தில் வாழும் மக்களும் ஒருவரே"" என அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

eelam tamils document

இந்த மனு கொடுக்கப்பட்டது 1940 ஆம் ஆண்டு... அப்போது திராவிடர் கழகமே உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது... (திராவிடர் கழகம் உருவானது 1944 ஆம் ஆண்டு தான்)

மூன்றாம் ஆதாரம்:

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச அரசியல் தளத்தின் உயிர் நாடியாக இருந்தவர் தேசத்தின் குரல் "ஆண்டன் பாலசிங்கம்" அவர்கள். அவர் ஈழ மண்ணின் வரலாற்றையும், ஈழ விடுதலைப் போரின் வரலாற்றையும் ஒருசேர "போரும் சமாதானமும்" என்ற புத்தகமாக தொகுக்க, அதை விடுதலைப் புலிகள் வெளியிட்டனர். அதில் மிகத் தெள்ளத் தெளிவாக "திராவிடக் குடியிருப்புகள்", "திராவிட ராச்சியங்கள்" என்ற வார்த்தைகள் மூலம் ஈழத் தமிழராகிய தங்களை "திராவிடர்கள்" என அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். (போரும், சமாதானமும் - அன்ரன் பாலசிங்கம் பக்கம் - 15).

anton balasingam 600

எந்த பெரியார் போய் ஈழத்திலே திராவிடர் என்ற சொல்லை புகுத்தினார்? உலக பூகோள அரசியலை விரல் நுனியில் வைத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை விட இந்த சீமான் பெரிய அரசியல் விஞ்ஞானியா??

ஆக தமிழீழ விடுதலைப் புலிகளும்... ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களும் தங்களை திராவிடர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டனர்.

வரலாறு இப்படி இருக்க... இங்கே இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு, அரசியலில் பொறுக்கித் திங்க இப்படியா பொய் புளுகுவது???

இங்கே மான, ஈனமுள்ள தமிழர்களும், தங்களை திராவிடர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டனர்.

ஆக "ஈழத்தமிழர் முதல் தமிழகத் தமிழர்கள் வரை திராவிடர்கள்"...

நாங்கள் திராவிடர்கள் இல்லை எனக் கூறி, பாப்பானுக்கு சொம்பு தூக்கும் இந்த ஒட்டுண்ணிகளை எதில் சேர்ப்பது???

- மனோஜ் குமார், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

Comments

32 comments

32
Muthukumar
அந்த வெங்காயமெல்லாம் இருக்கட்டும், முதலில் அதிமுகவும் திமுகவும் திராவிட இயக்கங்கள் பட்டியலில் உள்ளதா இல்லையா ? அதையே உறுதியாக கூற முடியாத அளவுக்கு அரைவேக்காடாக இருக்கும் நீங்கள் அடுத்தவரை குறை சொல்லலாமா.?
manoj
திமுக,அதிமுக திராவிட இயக்கமாக இருந்தால் திராவிடக் கொள்கையை எதிர்ப்போம்,,திராவிட இயக்கமாக இல்லாவிடில்,திராவிடக் கொள்கையை ஆதரிப்போம் என முடிவு செய்வது ஒரு கொள்கையா?? இப்படி ஒரு கோமாளித்தனமான கொள்கையை இப்படி திராவிட எதிர்ப்பு பேசும் உங்களை போன்ற அரைவேக்காட்டு கூட்டத்தால் தான் முடியும்,,,இங்கே உள்ள இடது சாரிகள் சரி இல்லை என்றால் ,கம்யூனிசமே தவறா???
Balasundar
என் கலாச்சாரத்தைப் பண்பாட்டைக் காப்பாற்ற எங்களுக்குத் தெரியும்...

எனக்கேன் செல்லரித்துப் போன இந்தத் திராவிடம்?

பார்ப்பனீயத்தை எங்கே திராவிடம் எதிர்த்தது? பார்ப்பனீயத்திடம் தூக்கிக் காண்பித்ததைத் தவிர எங்கே திராவிடம் தமிழர் நலனைக் காப்பாற்ற நின்றது?

//அங்கே எல்லாம் பார்ப்பனிய எதிர்ப்பு உள்ளதா?? அங்கே எல்லாம் இந்திய எதிர்ப்பு உள்ளதா?? அங்கே எல்லாம் பண்பாட்டை மீட்டெடுக்கும் போர் நடக்கிறதா??" இவை அனைத்துக்கும் இல்லை என்பதே பதில்... பிறகு என்ன வெங்காயத்திற்கு அவன் திராவிடம் எனப் பேசப் போகிறான்???//

அப்போ, எவனும் ஏத்துக்கிட மாட்டான்,. அந்தக் கொள்கையை என்ன மயிருக்கு நாங்க ஏத்துக்கிடணும்? சரி.. இத்தனை வருஷம் தமிழனுக்குத் தன்மானத்தைப் புகட்டிப் புளுகியாச்சு.. ஏன் இதர திராவிடியன் ஃபேமிலிக்கும் போய் நீங்க புகட்டக் கூடாது...

//ஈழத்தமிழர்கள் திராவிடர்கள் என்று அவர்களே ஒத்துக்கொண்டனர்..//

சரி. ஓட்டெடுப்பு வேண்டுமானால் நடத்திக் கொள்வோமா/ உலகெங்கும் வாழும் தமிழர்கள், அவர்களைத் திராவிடர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்களா? இல்லை தமிழர்களாக நிமிர விரும்புகிறார்களா? என...
annamalaiar thiru
சீமான் " பார்பனர்களால் இயக்கப்படும் " ரா -இந்திய உளவுத்துறையின் கைக்கூலி . ஆவர் , அவர் " ஆர் எஸ் எஸ் காரனையும் விட " தமிழர்களக்கு " பெரும் ஆபத்தவானவர் . அவர் தமிழர்களை தமிழ் நாட்டு வளத்தை சுரண்டும் " ( தாது மணல் கொள்ளையன் வைகுண்ட ராஜன், கல்வி கொள்ளையன் பச்ச முத்து ) கொள்ளைகாரர்களை ஆகியோரை "பெரும் தமிழர் என்று கொண்டாடி கொல்லி வைக்க வந்த " வெகுஜன மக்கள் விரோதி .. .. இந்த கட்டுரை சீமானின் , இந்த புரட்டுகளையும் சேர்த்து வெளியிட்டு இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் - எனினும் கட்டுரை அருமை - ஆவணங்கள் - அருமை , வாழ்த்துக்கள் - அதிகம் பகிரப்பட வேண்டிய ஒன்று
Mu Muthukumar
ஆகா மொத்தம் உங்களுக்கு அதிமுகவும்,திமுகவும் திராவிட இயக்கங்களா இல்லையானே சொல்ல முடியாத நீங்கள் இத்தனை ஆண்டுகளாக என்ன பக்குவத்தை அடைந்தீர்கள் ..சரி கேரளா, ஆந்திரா இங்கிருப்பவர் ஆவது திராவிடர்களா இல்லையா ..?
Mu Muthukumar
//நாங்கள் திராவிடர்கள் இல்லை எனக் கூறி, பாப்பானுக்கு சொம்பு தூக்கும் இந்த ஒட்டுண்ணிகளை எதில் சேர்ப்பது???//

அப்படியெனில் பார்ப்பானுக்கு வீர மங்கை பட்டம் கொடுத்த, தமிழனின் இரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணிகளை எந்த வகையறாவில் சேர்ப்பது ..?
manoj
ஏம்ப்பா கொடுத்த ஆதரத்திற்கு திராணி இருந்தால் ஆதப்பூர்வ மறுப்பு சொல்லுங்கள்,,,பாலசிங்கம் அண்ணாவை இன்நேரம் நீங்க வந்தேறி லிஸ்டல சேர்த்திருக்கனுமா இல்லையா?? பதிவை பாத்தவுடனே,, "யூ டியூபில்" போய் சீமானின் கதறல்களை கேட்டுட்டு வந்து,குறிப்பு எடுத்து இங்க கக்க வேண்டியது,,,ஆதரப்பூர்வ மறுப்பு இருக்கா மறுப்பு???மறுபடியும் ஜனகராஜ் மாதிரி "தங்கச்சிய நாய் கடுச்சிருச்சிப்பா" என அதே ஒலறலை பிரயோகிக்காதீங்கப்பா,,
Manikandan
Balasundar: இந்தியனை திராவிடனாக மாற்றி திராவிடனை தமிழனாக மாற்றி அடுத்த பின்னேற்றமாக தமிழனை வன்னியன் செட்டியார் தேவர் என்று மாற்றி அடுத்த பின்னேற்றமாக வன்னியனை பணக்கார வன்னியன் ஏழை வன்னியன் என்று மாற்றி கடைசியில் எல்லோரையும் தனி தனி தீவாக மாற்றி விடுவோம்.

உலகிலேயே இப்படி பின்னோக்கி செல்லும் ஒரே இனம் தமிழ் இனமாக மட்டுமே இருக்கும் என்று நினைக்கிறேன்
Mu Muthukumar
இதை சொல்ல சீமான் தேவை இல்லை, சொந்த புத்தி எங்களுக்கு உண்டு, சொந்த புத்தி தேவை இல்லை பெரியார் தந்த புத்தி போதும் என்று வாழ்பவர்கள் நாங்கள் இல்லை..முதலில் இங்கு என்ன ஆதாரம் கொடுக்க பட்டு இருக்கிறது ? அதற்கு ஆதாரம் கொடுக்க., முன்னொரு காலத்தில் திராவிட கூட்டத்தை சேர்ந்தவர்கள் தான் என்பது எங்களுக்கு தெரியாதா ? அப்படி பார்த்தல் அறிவியலார்கள் எல்லாரும் குரங்கில் இருந்து வந்தவர்கள் என்று சொல்வார்கள், இஸ்லாமியர்களும், கிருஸ்தவர்களும் ஆதாம் ஏவாமில் இருந்து வந்தவர்கள் என்று சொல்வார்கள் ? அது பிரச்சினை அல்ல, மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாயிற்று, மலையாளியும், தெலுங்கரும் தனி தனியாக போயாச்சு, நான் தமிழனாகிறேன் ...நீங்கள் வியாபாரம் பண்ண நாங்களா கிடைத்தோம்...
manoj
//முன்னொரு காலத்தில் திராவிடராய் இருந்தது தெரியாதா??// முன்னொரு காலமா??விடுதலைப்
விடுதலைப்
புலிகள் என்ன 6 ஆம் நூற்றாண்டில் ,தங்களை திராவிடர் எனக் கூறிக் கொண்டனரா?? பாலசிங்கம் அண்ணா என்ன போதி தர்மர் காலத்து ஓலைச்சுவடியில் திராவிடர் என எழுதினாரா??
Mu Muthukumar
பின்ன 1990 ஆம் ஆண்டில் திராவிட இனத்தில் சேர்ந்தோம் என்றா எழுதியிருக்கிறார்கள் ..? சிங்கள இனத்தில் இருந்து வேறுபடுத்தி காட்டுவதற்காக திராவிடர்கள் என சொல்லப்பட்ட இனத்தில் இருந்து வந்தவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள் ..?உங்களை போல ஆரியர் அல்லாத மக்கள் திராவிடர்கள் என குறிப்பிட வில்லை ?
manoj
//உங்களை போல ஆரியர் அல்லாத மக்கள் திராவிடர்கள் என குறிப்பிட வில்லை// ஓ அப்படியா... பிறகு புலிகள் கூறியிருக்கும் திராவிடர் என்பதன் விளக்கம் என்னவோ??
வியாசன்
திரு.மனோஜ்குமார்,

உங்களுக்குப் பதிலை நான் எனது வலைப்பதிவில் பதிவு செய்துள்ளேன். பார்க்கவும். நன்றி/
Lala
ஈழத்தமிழர்கள் தம்மை ஒருபோதும் திராவிடர்களாக அழைத்துக்கொள்ளாதபோதும் அ டாவடித்தனமாக அவர்களை திராவிடர்களாக சித்தரிப்பது இருக்கட்டும் , முதலில் உமதுநாட்டுக்குள் இருக்கும் அண்டை மாநிலத்தவர்களான கேரள , கன்னட , ஆந்திர மாநிலத்தவ்ர்கல் தம்மை திராவிடத்தவர்களாக அறிவித்துக்கொண்டிருக்கிறார்களா ? முதலில் அதற்கு பதில் தாரும் .
பின்பு அடுத்த நாட்டில் வாழும் தமிழர்கள் பற்றி அடாவடித்தனமாக பேசலாம் .

சவால் விடுக்கிறேன், அன்று மன்னர் ஆட்சிலிருந்து , பிரித்தானியர் ஆட்சி ஈறாக இன்று சம்பந்தன் , விக்னேஸ்வரன் வரை எந்த ஈழத்தமிழர் தலைவர் , ஈழத்தமிழர்களை திராவிடரகளக கூறிக்கொண்டார்கள் என கூற முடியுமா ? ஆதாரம் தர முடியுமா ?
manoj
//சவால் விடுக்கிறேன்..அன்று மன்னர் ஆட்சியில் இருந்து இன்றுவரை சம்பந்தன்,விக்னேஸ்வரன் வரை எந்த ஈழத்தலைவராவது தங்களை திராவிடர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஆதாரம் உண்டா// இந்த கட்டூரையில் கூறப்பட்டிருக்கும் புலிகளும்,பாலசிங்கம் அண்ணாவும் பிறகு யாரோ??? அங்கே நடந்தது இனப்படுகொலையே அல்ல எனக் கூறும் இனத் துரோகி சம்பந்தனும்,விக்னேஸ்வரனையும் தலைவராக கூறும் போதே தெரிகிறது,நீங்கள் எந்த கூட்டம் என்று,,,
Lala
ஈழத்தமிழர் தலைவர்களாக இருந்த பல தலைவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக குறிப்பிட முடியாததால் இப்போது கடைசியாக இருக்கும் தலைவர்களின் பெயர்களை மாத்திரம் குறிப்பிட்டேன்.
இதில் , சம்பந்தன் நடைபெற்றது இனப்படுகொலை அல்ல என எங்கும் எப்போதும் கூறவில்லை . விக்னேஸ்வரன் நடைபெற்றது இனப்படுகொலைதான் என இலங்கை வட மாகாண சபையிலேயே தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் . இனப்படுகொலைக்கு ஆரிய , இத்தாலிய சோனியாவுக்கு துணைபோன திராவிட தலைவர்களை இன்னமும் துதி பாடிக்கொண்டிருப்பவர்கள் ,இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றி இன்னமும் அது குறித்து ஐநா தூதுவர்களுக்கும் வெளிநாட்டு தூதுவர்களுக்கும் வலியுறுத்தி கூறிவரும் வட மாகாண முதல்வரை துரோகியென விளிப்பதுவே துரோகத்தனமானது.

தலைவர் பிரபா சரி , பாலசிங்கம் சரி தம்மை ஒருபோதும் திராவிடர்கள் என அழைத்ததில்லை என்பதுதான் வரலாறு . இலங்கையில் அவ்வாறு கூறுவதற்கு எந்த அவசியமும் இல்லை .
தாங்கள் .

1978 ஆம் ஆண்டு கியூபாவில் இலங்கை தமிழர்கள் திராவிடத்தை சேர்ந்த இனக்குழுமம் என தெரிவித்ததை பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள் . வெளிநாட்டவர்க்கு இலகுவாக புரிய வேண்டுமென்பதற்காக , எவ்வாறு ஐரோப்பிய , அமெரிக்கர்களை கோகேசியன் எனவும் ஆபிரிக்கர்களை நீக்ரொயிட் எனவும் , சப்பை முகத்தோற்றம் கொண்டவர்களை எவ்வாறு மங்கலொயிட் என அழைப்பார்களோ அந்த வகையில் இலங்கை தமிழர்கள் திராவிட இனக்குழுமத்தை சேர்ந்தவர்கள் எனக்குறிப்பிட்டுள்ளர்கள் .கோகேசியன் இனக்குழுமத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரு நாடாகவோ ஒரு மொழி பேசுபவர்களாகவோ , ஒரே காலசாரம் கொண்டவர்களாகவோ இருக்கவில்லை. வெவ்வேறு நாட்டவர்களகவும் , வெவ்வேறு மொழி பேசுபவர்களாகவும் , கலாசாரம் . வரலாறு கொண்டவர்களாகவுமே வாழ்கிறார்கள் . ஒரே இனக்குழுமத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஆங்கிலேயர்களும் , பிரெஞசுக்காரர்களும் , ஜேர்மனியர்களும் வெவ்வேறு இனத்தவர்களே . அதுபோல்தான் மங்கோல்யர்களும் ,நீக்ரோயிட்டுகளும்.நைஜீரியன் வேறு இனத்தவனாகவும் , கானாக்காரர்கள் வேறு இனத்தவ்ர்களுமாகவே இருக்கிறார்கள் . உலகமும் அவர்களை அவ்வாறுதான் பார்க்கிறது . ஆங்கிலேயர்கள் ஐரிஷ்காரர்களை சுரண்டுவதற்கும் அவர்கள் நிலங்களை அபகரிப்பதற்கும் அவர்களின் தனித்த அடையாளங்களை அழிப்பதற்கும் கோகேசியன் இனக்குழும அடையாளத்தை போர்த்திக்கொண்டு போவார்களாக இருந்தால் அதனை ஐரிஷ்கார்கள் அனுமதிக்கப்பபோவதில்லை. இது ஒரு உதாரணந்தான் . இந்த உலகம் முழுவதுமே தனித்த இன மொழி அடையாளங்களுடனேயே இயங்குகிறது.

இலங்கையில் சிங்கள பேரினவாதத்துக்கெதிராக போராடிய தமிழ் மக்கள் தம்மை எப்போதும் திராவிடர்களாக விளித்துக்கொண்டதில்லை . கட்சிகள் , அமைப்புகள் , இயக்கங்கள் யாவும் தமிழ் பெயர் கொண்டே அழைக்கப்பட்டன . திராவிட பெயர்களை தாங்கியிருக்கவில்லை. தனியீழத்தமிழரசு அமைக்கவே போராடினார்கள் . திராவிட அரசமைக்க போராடவில்லை . உயிர்நீத்த ஐம்பதினாரம் மாவீரகளூள் தமிழர்களுடன் கூட சில பார்ப்பனர்களும் இருந்தார்கள் . ஒரு திராவிடனும் அந்த மாவீரகளுக்குள் உள்ளடஙகவில்லை.தலைவர் பிராபகரன் , மதியுரைஞர் பாலசிங்கம் உள்பட பல தலைவர்கள் போராளிகள் இற்றை வரை ஆயிரக்கணக்கில் பேட்டிகள் , செய்திகள் அளித்துள்ளார்கள் .
எங்கும் தம்மை தமிழர்களகவே அடையாளப்படுத்தியிருக்கிறார்கள் . எந்த இடத்திலும் திராவிடம் எனும் பதத்தை அவர்கள் பாவித்ததில்லை.

திராவிட இனக்குழுமம் என்று பார்த்தால் சிங்களவர்கள் கூட திராவிட இனக்குழுமம்தான் . இலங்கையில் தமிழர்களையும் , சிங்கள்வர்களையும் பிரித்தாள்வதற்காக ஐரோப்பியர்கள் சிங்களத்தை ஆரிய இனத்தில் சேர்த்திருந்தார்கள் . ஆனால் உண்மை அவ்வாறனதல்ல . இன்று வடுகர்களை விட சிங்களவர்கள் கறுத்த உடலையுடைவர்களாக இருப்பதை காணலாம்.

மேலும் தமிழ்நாட்டில் வாழும் மலையாள , ஆந்திர , கன்னடர்கள் மட்டும்தான் திராவிடர்களா ?
அப்படியானல் கர்னாடக , அந்திர , கேரள மானிலங்களில் வாழும் மலையாள , கன்னட , தெலுங்கர்கள் திராவிடர்கள் இல்லையா ? அப்படி அவர்கள் திராவிடர்கள் ஆயின் . ஈழத்திராவிடர்களை ( ? ) முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்த ராஜபக்ச எவ்வாறு பல தடவைகள் திருப்பதிக்கு வருகை தந்து தொழ முடிந்தது ? ராஜ பக்சவின் அமைச்சர் பரிவாரங்கள் கடந்த காலங்களில் எவ்வாறு மலையாள கரையோரம் ஒதுங்கி அங்குள்ள ஆட்சியாளர்களோடு உறவாட முடிந்தது ? பெங்களுரில் சிங்கள ராணுவத்துக்கு இந்திய ராணுவத்தால் எவ்வாறு பயிற்சியளிக்க முடிந்தது ?

உங்களைப்போன்றே தலைவர் பிரபாவை . பாலசிங்கத்தை மாத்திரமல்ல ஈழத்தமிழர்கள் அனைவரையுமே வந்தேறிகள் என முத்திரை குத்த வேண்டுமெனும் உங்களது அவா நீங்கள் அளித்துள்ள பதில்களில் தெரிகிறது . இந்த வகையில் பார்த்தால் சிங்களமும் போலித்திராவிடமும் ஒரு நேர்கோட்டிலேயே பயணிக்கிறது..
manoj
என்னங்க ஈழத்தமிரா இருந்துட்டு,,எங்க ஊரு போலித் தமிழ்தேசியவாதிகளிடம் பயிற்சி எடுத்த மாதிரி பேசறீங்களே,,,திராவிடர் என்பது தமிழர் என்ற சொல்லுக்கு எதிரான சொல் என்றும்,,தமிழர் என்று குறிப்பதை தடுக்கும் சொல் என்றும் புரிந்து கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்,,,,திராவிடர் என்பது தமிழரின் மரபு இனத்தின் பெயர்(Ethinical race),,,தமிழர் என்பது தேசிய இனத்தின் பெயர்(National race),,இரண்டும் எதிர் எதிர் சொல் கிடையாது தோழரே,,,
வியாசன்
வளமாக மாட்டிக் கொண்டார் அண்ணன் மனோஜ்குமார். இருந்தாலும் அவரது திராவிட சகபாடிகளைப் போலவே வார்த்தை ஜாலாம் காட்டுவதை மட்டும் அவர் நிறுத்தவில்லை. திராவிடர் என்பது தமிழர்களின் மரபை மட்டும் குறிப்பிடும் சொல் அல்ல. அது தமிழர் உட்பட கன்னடர், வடுகர், மலையாளி, துளுவர், படகர், கொடவர், குறும்பர், கொறகர், இருளர், தோடர், துருவர், பிராஹுய் (Brahui) எனப் பலவேறு மொழி பேசும் இனக்குழுக்களைக் குறிக்கும் சொல். தமிழர்களை மட்டும் குறிப்பிட, தமிழினத்தின் தனித்துவத்தை எடுத்துக் காட்டும், வரலாறு பூர்வமான தமிழ்த் தேசிய இனத்தை மட்டும் குறிக்கும் தமிழர் என்ற சொல்லை விடுத்து, எதற்காக திராவிடர் என்ற சொல்லால் எம்மை நாம் அடையாளப்படுத்த வேண்டும்? ‘தான் போக வழி தெரியாத மூஞ்சூறு விளக்குமாத்தையும் இழுத்துக் கொண்டு கிழம்பியது, போல்’, மற்றவர்களையும் கட்டியழ வேண்டும், குறிப்பாக தமிழர்களை வெறுக்கும், எதிர்க்கும், வடுக, மலையாள, கன்னடர்களைக் கட்டியழ வேண்டுமென்பதை மட்டும் பெரியாரிஸ்டுகளும், திரவிடியனிஸ்ராக்களும் ஒரு போதும் விளக்குவதேயில்லை. கன்னடராகிய பெரியார் தமிழர் கழகம் என்று பெயரிட்டால், தமிழரல்லாத அவரது தலைமையையே யாரவது கேள்வி கேட்டுவிட்டு விடுவார்கள் என்ற பயத்தினால், அக்காலத்தில் திராவிடர் கழகம் என்று பெயரிட்டார். ஆனால் இன்றைக்கு தமிழர்களாகிய மனோஜ்குமார் போன்ற தலைவர்கள் இருக்கும் போதும் எதற்காக திராவிடர் கழகம் என்று அழைக்க வேண்டும். பேசாமல் தமிழர் கழகம் அல்லது தமிழர் முன்னேற்றக் கழகம் என்று மாற்ற வேண்டியது தானே. ஆனால் இன்றும், 21வது நூற்றாண்டிலும் தமிழ்நாட்டில் தமிழர்களை ஆளுவதற்கு தமிழர்களை விட தமிழரல்லாத திராவிடர்கள் தான் வரிசையில் நிற்பதால் தான், தமிழர் என எதற்கும் பெயர் மாற்றம் செய்யத் தயங்குகிறார்கள். அப்படியான திராவிடர்களுக்கு வக்காலத்து வாங்குவது தான் அண்ணன் மனோஜ்குமாருடைய வேலை. :-)
Manikandan
எனக்கு ஒரு கேள்வி அது ஏன் தமிழன் என்றால் சீமான் மட்டும் தான் இருக்கிறாரா ஏன் தமிழிசை வாசன் போன்ற தலைவர்கள் இல்லையா காரணம் தமிழிசை போன்றவர்கள் பிரிவினை பேசுவது இல்லை விடுதலை புலிகளை ஆதரிப்பது இல்லை, சீமான் வெளிப்படையாக பிரிவினை பேசுகிறார்கள் விடுதலை புலிகளை அதனால் சீமான் தமிழ் இனத்தை சேர்ந்தவர் தமிழிசை வாசன் அயல்கிரகத்தை சேர்ந்தவர். மக்களை இனம் மொழி என்று பிரிவினையை தூண்டி விட்டு விடுதலை புலிகளை ஆதரித்தால் அவன் தமிழன் இல்லை என்றால் அவன் தமிழன் இல்லை.
manoj
வியாசன்@ நான் கூறியது மரபு இனம்,,,ஆய்ரோப்பியர்கள்,கருப்பர்கள்,மங்கோலியர்கள்,,,இவை எல்லாம் மரபு இனம்,அது ஒருவர் வாழும் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப மாறுபடும் தோற்றம்,,நீங்கள் பதிலாக கூறியுள்ளது,,,தமிழர் மரபு,,அதாவது பலம் பெருமைகள்,வரலாறுகள் எனபதை மரபு என்கிறீர்கள்,,,சம்மந்தம் இல்லாத விளக்கம்,,,
வியாசன்
திரு.மணிகண்டன்,

தமிழ்நாட்டுப் பிரிவினையில் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் கூட பெரிய அக்கறை கிடையாது. தமிழுரிமை,தமிழ் மொழி, தமிழ்நாட்டில் தமிழர் நலன் பற்றிப் பேசுகிறவர்கள் எல்லாம் எஞ்சியிருக்கிற தமிழ்நாட்டிலாவது தமிழ் மொழி, தமிழர் நலன், கலை கலாச்சாரம் என்பவற்றை அழிந்து போகாமல் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான். தமிழ்நாட்தைத் தமிழன் ஆளாமல் யார் ஆளுவது?

தமிழிசை அவர்கள் இந்துத்துவாவுக்குக் குடை பிடிக்கிறார்கள். இந்துத்துவாவின் நோக்கம் எல்லாம் தமிழர்களை இந்து என்ற மகாசமுத்திரத்தில் ஏனைய இந்திய இந்துத்துவாக்களுடன் கலக்கச் செய்து காணமால் போகச் செய்வது தான். அதை எந்த மானமுள்ள தமிழனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். வாசன் அவர்களும் தமிழ் மொழி, தமிழர் நலன், தமிழ் நாட்டை தமிழர் ஆள வேண்டிய உரிமை, தேவை அத்துடன் உலகத்தமிழர்களின் பாதுகாப்பு என்பன பற்றியும் குரலெழுப்பினால் உலகத் தமிழர்கள் கூட வாசனுக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பவர். ஆனால் அவருக்கு அத்தகைய தமிழுணர்விருப்பதாக இதுவரை தெரியவில்லை.
Lala
மணிகண்டன் அவர்களே ,

ஒரு தமிழனுக்கும் , தமிழச்சிக்கும் பிறந்து விட்டால் அவனது தமிழ் உணர்வும் , பற்றும் , அதன் பழமை , கலாச்சாரம் , வரலாற்றை பேணும் அக்க்ரை குறித்து எந்த கேள்வியும் எழுப்பபடக்கூடாதென் கிறீர்களா ?

யூதாஸும் இயேசுவின் சீடன் தான் , காக்கை வன்னியன் , கருணா போன்றோரும் தமிழர்கள்தான் .

சீமானை வசை பாடுமளவிற்கு இந்துத்வா தமிழிசையையோ , சோனியாவின் மாஜி சீடர் வாசனையோ திராவிட பெரியாரிஸ்டுகள் விமர்சிப்பதில்லையே ஏன் ?
இதிலிருந்தே இந்த பெரியாரிஸ்டுகளின் உண்மையான விரோதிகள் இந்துத்வவாதிகளா ? இந்திய தேசிய வாதிகளா ? தமிழ் தேசிய வாதிகளா ? என்பதை புரிந்து கொள்ளலாம்.
வியாசன்
திருவாளர் மனோஜ்குமார் அவர்களுக்கு மரபினங்களைப் பற்றியோ அல்லது மனிதர்கள் எத்தனை முக்கிய இனக்குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள், அல்லது திராவிடர் என்பது எதன் கீழ் வருகிறது, என்பது பற்றியோ அறிவு கொஞ்சம் கம்மி போல் தெரிகிறது. வேண்டுமானால் சொல்லுங்கள், உங்களுக்காக என்னுடைய வலைப்பதிவில் விளக்கமாக ஒரு பதிவையிடுகிறேன். உதாரணமாக, திராவிட இனக்குழு நீக்ரோயிட் என்ற ஆபிரிக்கர்களை முக்கியமாகக் கொண்ட பிரிவுக்குள் வருகிறது. ஆகவே உங்களின் கருத்துப்படி திராவிடர் என்று எங்களை அழைத்துக் கொள்வதற்குப் பதிலாக, ஒருபடி மேலே போய். நீக்ரோய்ட்டுகள் என்றே அழைத்துக் கொள்ளலாமே. இப்பொழுது தமிழர்கள் எல்லாம் திராவிடர்கள் என்ற பெயரில் வடுகர், கன்னடர், மலையாளிகளுடன் சேர்ந்து கும்பலில் கோவிந்தா போடுவதற்குப் பதிலாக, ஆபிரிக்க நீக்ரோக்களையும் எங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். நீங்கள் கூட பெரியார் நீக்ரோயிட் கழகம் என்று பெயர் மாற்றிக் கொள்ளலாம்.
manoj
என்னது திராவிட இனத்தின் பூர்வர்கள் நீக்ரோக்களா?? உங்கள் அறிவு புல்லறிக்க வைக்கிறது,,மேலும் உங்களை ஈழத்தமிழர் என்று அடையளப்படுத்திக் கொண்டு,நீங்கள் வந்தேறி அரசியல் பேசலாமா??தமிழர்கள் இந்த மண்ணுக்கு வந்தேறிகள்,,கள்ளத் தோனிகள் என்ற வஞ்சக நஞ்சை சிங்கள மக்களிடயே விதைத்தது தான் இவ்வளவு பெரிய ஆன அழிப்புக்கு துவக்க புள்ளி என்பதை உணர்ந்திருந்தால் இப்படி பேச இயலுமா?? சிங்கள மக்களும் எங்கள் ஈழ நாட்டின் அங்கத்தினர் தான் என்று கூறிய பரபாகரனை அறிவீரா?? நீங்கள் கூறியிருக்கும் வடுகரும்,கன்னடரும் எத்தனை பேர் ஈழ விடுதலைக்காக உயிரை தியாகம் செய்துள்ளனர் எனத் தெரியுமா??ஒரு வெங்காயமும் தெரியாமல்,திரவிட எதிர்ப்பை பரப்பும் கேமாளிகளின் பொய் வரலாற்று அறிவை இணையதளத்தில் பெற்று களத்திற்கு வந்தவர் நீர் என்பது தெளிவாக தெரிகிறது,,,இங்கே வந்த தலைவர் பிரபாகரனுக்கு தெரியும் யார் பெரியார் என்று,,திராவிடர் இயக்கத்தை சேர்ந்த அண்ணன் ராமகிருஷ்ணன் யார்,கொளத்தூர் மணி யார் என்று,,,
Lala
## சிங்கள மக்களும் எங்கள் ஈழ நாட்டின் அங்கத்தினர் தான் என்று கூறிய பிரபாகரனை அறிவீரா? ##

பிரபாகரன், சிங்களவர்களும் ஈழநாட்டின் அங்கத்தினர்தான் என சொல்லவில்லை . இலங்கையின் அல்லது சிறிலங்காவின் குடிகள் என்றுதான் சொல்லியிருந்தார். தலைவர் அவர்கள் ஒரு தடவை சிறீலங்காவின் தலைவர்க்கு எழுதிய கடிதத்தில் " சிறிலங்காவின் ஜனாதிபதி " என விளித்திருந்தார் , உடனே உங்களைப்போன்ற அவசரக்குடுக்கை சிங்களவர்களும் , ஊடகவியலாளர்களும் புலிகளின் தலைவர் சிறிலங்காவையும் , அதன் ஜனாதிபதியையும் ஏற்றுக்கொண்டு விட்டார் என புளங்காகிதம் அடைந்தார்கள் . பின்னர் புலிகளால் அவர்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது . அதாவது இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியான ஈழம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் சிறிலங்கா என்றும் அதன் தலைவரை ஜனாதிபதி என விளித்ததாகவும் விளக்கப்பட்டது . அதன் பின்னர் வாயை பொத்திக்கொண்டார்கள்.ஒரு வேளை, சிறிலங்கா அரசால் திட்ட மிட்டு குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் வெளியேற தேவையில்லை அவர்கள் ஈழ தேசத்தின் அங்கத்தினர் என கூறியிருந்தாலும் . ஆளும் உரிமை தமிழர்க்கே என்பதுதான் அதன் சாராம்சம் . அதற்குத்தானே இத்தனை உயிர்களை கொடுத்து பொராட்டம் நடத்தப்பட்டது.

இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள்தான் என ஏற்கனவே வரலாற்றாய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொய்யாக புனையப்பட்ட மாகாவம்சத்தை வைத்து சிங்கள ஆட்சியாளர்களால் சிங்கள மக்கள் மூளை சலவை செய்யப்படுவதும் , தமிழ்நாட்டின் நிலைமையும் ஒன்றல்ல .
தமிழ்நாட்டில் தமிழர்களை ஏனைய இனத்தவர்கள் ஆண்டாண்டு காலமாக ஆண்டு வருகிறார்கள்.
இலங்கையில் சிங்களவ்ர்களது நிலைமை அபப்டியா இருக்கிறது ?
எனவே சிங்களத்தையும் , தமிழ்நாட்டையும் ஒரு தராசில் வைத்து எடை போடுவதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது ?

தனியே ராமகிருஷ்னனும் , கொளத்தூர் மணியும் திராவிடர்கள் அல்ல . உலக வல்லாதிக்க நாடுகளொடு, இந்திய வல்லாதிக்கத்தோடு சேர்ந்து தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று நந்தி கடலில் மிதக்க விட்டதில் திராவிடத்துக்கு பங்கில்லை என் கிறீர்களா ? சும்மாவல்ல திராவிடம் தமிழர்க்கெதிராக செய்த மிகப்பெரிய சூழ்ச்சி இது .நந்திக்கடல் இனப்படுகொலை நடைபெற்றபோது ஆட்சிலிருந்த திராவிட ஆட்சியாளர்கள் , இந்திய புலனாய்வு துறை அதிகாரி நாராயணன் , சதீஷ் நம்பியார் , விஜய்நம்பியார் , ஆன்டனி , இவர்களெல்லாம் திராவிடர்கள் அல்லாமல் சீனர்களா ?
இனப்படுகொலையாளி மகிந்தா இனப்படுகொலைக்கு பின்பு எத்தனை முறை திருப்பதிக்கு வந்து சென்றுள்ளான் ? அந்த மாநிலம் என்ன ரஷ்யாவிலா இருக்கிறது ?

தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டுமென குரல் எழும்போதெல்லாம் அவர்களை பாஸிச வாதிகள் ஏனைய இனத்தவர்களை ஆளக்கூடாது வந்தேறி என கூறுகிறான் என வசை பாடுகிறீர்களே ?
அப்படியானால் 50 ஆண்டு காலமாக நீங்கள் என்ன விதமான அரசியல் செய்து வருகிறீர்கள் ?
திராவிட ஆரிய , பார்ப்பன எதிர்ப்பு அரசியல்தானே செய்து வருகிறீர்கள் ? பார்ப்பனர்கள் ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் , வந்தேறிகள் இப்போது இந்தியவையே ஆள்கிறரர்கள் , இந்தியாவின் வளங்களை அனுபவிக்கிறர்கள் .நாம் திராவிடர்கள் அடிமைப்ப்ட்டு கிடக்கிறோம் என பார்ப்பன எதிர்ப்பு நஞ்ஞுட்டி பாஸிச அரசியல் செய்யவில்லையா?இப்போது அதயே உங்களுக்கு சொல்லும்போது வலிக்கிறதா ?நீங்கள் 50 ஆண்டு காலமாக செய்தது பாஸிச அரசியல் இல்லை . தமிழர்கள் தமது தாமே ஆள வேண்டுமென குரல் கொடுத்தால் அது பாஸிச அரசியல் ,
என்ன நியாயம் இது ?
வியாசன்
தலைவர் *மனோஜ்குமார் அவர்களே!

இவ்வளவு வெளிப்படையாகக் கூறுவதற்கு மன்னிக்கவும் நான் தமிழில் எழுதியதையே உங்களால் படித்துப் புரிந்து கொள்ள முடியாமல் என்னவோ எல்லாம் பேசுகிறீர்கள். அதற்கிடையில் எதற்காக இந்த விடயத்தைப் பற்றிக் கட்டுரை எழுத ஆசைப்பட்டீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

மானிடவியல் (Anthropology) எனபது மிகவும் ஆழமான, இன்னும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெறும், பல்வேறு முரணான கருத்துக்களைக் கொண்ட விடயம். சில ஆராய்ச்சியாளர்கள் திராவிடர்களை, அதாவது தமிழர், கன்னடர், வடுகர், மலையாளிகளை மட்டுமல்ல சிங்களவர்களையும் திராவிடர்களாக்கி நீக்ரோயிட் என்ற முக்கியமான மூன்று மனித இனப் பிரிவுகளில் ஒன்றுக்குள் தான் அடக்குகின்றனர். திராவிட மக்களின் பூர்வீகம் நீக்ரோக்கள் என்பதல்ல, எனது வாதம், இருந்தாலும் அதுவும் விவாதத்துக்குரியதே. உண்மையில் திராவிடர்கள் மட்டுமன்றி முழு மனிதகுலத்தின் பூர்வீகமே ஆபிரிக்கா தான், ஆகவே நீக்ரோக்களும் திராவிடர்களுக்கு மட்டுமன்றி, ஏனைய இனக்குழுக்களுக்கும் கூட தொடர்பிருக்கலாம். ஆகவே தான் விவாதத்துக்குரிய, பல முரண்பாடான கருத்துகளைக் கொண்ட மானிடவியலின் அடிப்படையில் அறிவியல் காரணங்களுக்காக (Academic reasons) பிரிக்கப்பட்ட இனக்குழுக்களின் அடிப்படையில், யாரோ சொன்னார்கள் என்பதற்காக தமிழர்களை வெறுக்கிற, தமிழர்களுக்கும் தமக்கும் உள்ள தொடர்பையே மறுக்கிற ஏனைய “திராவிடர்களை” யும் எங்களுடன் சேர்ந்த்துக் கொண்டு, இழுபறி படுவதை விட, வரலாற்றுக் காலம் தொட்டு, கல்வெட்டு முதல் கொண்டு, ஆதாரங்கள் நிறைந்த தமிழர் என்ற அடையாளம் ஒன்றே தமிழர்களுக்குப் போதுமானது என்பது தான் ஈழத்தமிழர்களின் கருத்தாகும். அதனால் தான் நாங்கள் எங்களைத் தமிழர்கள் என்று மட்டும் அடையாளப் படுத்துகிறோம். பெரியார் சொன்னார் என்பதற்காக தவறு என்று தெரிந்த பின்பும் தொடர வேண்டிய தேவையில்லை. அதைப் பெரியாரும் விரும்ப மாட்டார். பெரியார் இன்றிருந்தால் அவரே இந்த திராவிடர் என்ற அடையாளத்தை தலையைச் சுற்றிக் கடாசியிருப்பார். ஏனென்றால் அவர் மாற்றங்களை கண்டு பயப்பட்டதாகத் தெரியவில்லை.

கன்னடர், வடுகர், மலையாளிகள் எல்லாம் திராவிடர்கள் அதனால் அவர்கள் எங்களின் சகோதரர்கள் என்றால் சிங்களவர் கூடத் திராவிடர்கள். அவர்களுடன் எதற்காக பிரபாகரன் சண்டை பிடித்தார். "தாயும் பிள்ளையானாலும் வாயும் வயிறு வேறு" அதனால் தான். நீங்கள் பிரபாகரனைப் பற்றி, ஈழத்தமிழர்களுக்கே கதை அளப்பதைப் பார்க்க சிரிப்புத் தான் வருகிறது. தமிழீழத்தில் வாழும் சிங்களவர்களது உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்பது தான் பிரபாகரன் கூறியதன் கருத்தாகும். வடுகரும், கன்னடரும் மட்டுமன்றி சிங்களவர்களும் கூடத் தான் ஈழவிடுதலைக்காக உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அதற்காக சிங்களவர்களுடன் போராடுவதையோ அல்லது உரிமைகளையோ விட்டுக் கொடுத்தாரா பிரபாகரன்?

திரு. Lala அவர்களும் ஈழத்தையும் ஈழத்தமிழர்களையும் பற்றி உங்களுக்கு விரிவாக விளக்கமளிக்கிறார்கள். தெரியாததை அடம்பிடிக்காமல் மற்றவர்களிடம் கேட்டறிந்து கொள்ளும் மனப்பக்குவம் ‘எழுத்தாளனாக’ வர ஆசைப்படும் உங்களைப் போன்றவர்களுக்கு இருப்பது மிகவும் முக்கியம் அல்லது கதை கந்தல் தான். :-)

(*(என்ன பெயரிது தமிழுமில்லை, தெலுங்குமில்லை, வேறு என்னவோ மொழி),

THE MAJOR DIVISIONS OF THE HUMAN RACE:

Most anthropologists recognize 3 or 4 basic races of man in existence today.These races can be further subdivided into as many as 30 subgroups.

• Caucasian races (Aryans, Hamites, Semites)
• Mongolian races (northern Mongolian, Chinese and Indo-Chinese, Japanese and Korean, Tibetan, Malayan, Polynesian, Maori, Micronesian, Eskimo, American Indian),
• Negroid races (African, Hottentots, Melanesians/Papua, “Negrito”, Australian Aborigine, Dravidians, Sinhalese)
Manikandan
திரு. வியாசன் அவர்களே தமிழனுக்கும் ஹிந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாதா ? அது எப்படி என்று உங்களால் விளக்கி சொல்ல முடியும்மா ? இந்த தமிழ் உணர்வாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் நாங்கள் பிரிவினையை தூண்டுவில்லை தமிழ் கலாச்சாரம் காக்க தான் முயற்சி செய்கிறோம் என்று சொல்கிறார்கள் ஆனால் தமிழ் கலாச்சாரம் பண்பாடு என்பது என்ன ? அது எப்படி இந்திய கலாச்சாரத்தில் இருந்து வேறுபடுகிறது ? தமிழ் கலாச்சாரம் பண்பாடு காக்க போராடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் எந்த ஒரு அமைப்பாவது(நாம் தமிழர் கட்சி உட்பட) அதை கடைப்பிடித்து இருக்கிறதா ? தமிழகத்தில் தற்போது நடக்கும் தமிழர் நலன் அமைப்புகள் என்று சொல்லும் அத்தனை அமைப்புகளும் செய்வது பிரிவினை விடுதலை புலி ஆதரவு அரசியல் தான்.

நம்மால் வெளிநாட்டு மதமான கிறிஸ்துவ இஸ்லாமிய மதத்தை ஏற்க முடியும் ஆனால் நம்மோடு ஆயிரகணக்கான வருடங்களாக உள்ள சிவன் மகாவிஷ்ணுவை ஏற்க முடியாது. நம்மால் ஆங்கில மொழியை ஏற்க முடியும் ஆனால் நம்மோடு ஆயிரகணக்கான வருடங்களாக உள்ள சமஸ்கிரதத்தை ஏற்க முடியாது... கேட்டால் ஆரியம் பிராமணம் என்று ஆங்கிலேயர்கள் சொன்ன முட்டாள்தனமான கருத்துகளை பிடித்துக்கொண்டு தொங்குவோம்.

தமிழகத்தில் தற்போது மாற்று அரசியலுக்கான தேவை மிக வலுவாக உள்ளது ஆனால் அதற்கான மாற்று இனவெறி பிரிவினை வன்முறை விடுதலை புலி ஆதரவு அரசியல் அல்ல.
Lala
## நம்மால் வெளிநாட்டு மதமான கிறிஸ்துவ இஸ்லாமிய மதத்தை ஏற்க முடியும் ஆனால் நம்மோடு ஆயிரகணக்கான வருடங்களாக உள்ள சிவன் மகாவிஷ்ணுவை ஏற்க முடியாது. ##

திராவிடவாதிகள் அதாவது மனோஜ் போன்றவர்களிடம் கேட் க வேண்டிய கேள்விகளை தமிழ் தேசியவாதிகள் எனக்கருதப்படுபவர்களிடம் அட்ரஸ் மாறி வந்து மூச்சு முட்ட கேட்டிருக்கிறீர்கள் .

##நம்மால் ஆங்கில மொழியை ஏற்க முடியும் ஆனால் நம்மோடு ஆயிரகணக்கான வருடங்களாக உள்ள சமஸ்கிரதத்தை ஏற்க முடியாது...##

ஆங்கிலம் வெறுமனே காலனியாதிக்க மொழி மட்டுமல்ல , இன்றளவும் பயன்பாட்டிலிருந்து இந்தியாவிலுள்ள அனைத்து இன மொழி மக்களையும் இணைக்கும் இணைப்பு மொழியாகவுள்ளது மட்டுமல்ல இன்றைய உலகமயமாதல் பொருளாதாரத்தில் இந்திய மக்களின் , பொருளாதாரத்தின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாகவுள்ளதாக இந்தியர்களால் ஏற்றுகொள்ளப்பட்டிருக்கிறது .

ஆனால் சமஸ்கிருதம் ? இறந்துபோன மொழி . இறந்து போனவைகளை கட்டிக்கொண்டழ தமிழர்கள் மட்டுமல்ல ஏனைய இனத்தவர்கள் கூட தயாரில்லை . இந்த விடயத்தில் சமஸ்கிருதத்தையும் ஆங்கிலத்தையும் ஒப்பிடுவதே மடத்தனமானது.
## தமிழ் கலாச்சாரம் பண்பாடு என்பது என்ன ? ##

முதலில், இந்து கலாசாரம் என்றால் என்ன ? இந்து மதம் என்ற பெயரை யார் வைத்தார்கள் ? இந்து மதம் தோன்றியது எங்கு ? இந்து மதமும் ஆரியர்களும் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்ததென வரலாற்றசிரியர்கள் சொல்வது தவறா ? அப்படியானால் ஆதாரங்களை முன் வையுங்கள் ?

##தமிழகத்தில் தற்போது மாற்று அரசியலுக்கான தேவை மிக வலுவாக உள்ளது ஆனால் அதற்கான மாற்று இனவெறி பிரிவினை வன்முறை விடுதலை புலி ஆதரவு அரசியல் அல்ல.##

சரி மாற்று அரசியலுக்கான தேவை இருக்கிறது.
ஆனால் அது தேவையில்லை , இது தேவையில்லை என்று சொல்கிறீர்களே தவிர எதுதான் தேவை என்பதை வெளிப்படையாக சொல்ல மறுத்து ஒளிந்து கொள்வதேனோ ?
இப்படி ஒடி ஒளிபவர்களை விட மாற்று அரசியலுக்கான சக்தி நான் தானென துணிந்து சொல்பவனை ஏற்கலாம்.

திராவிட தமிழ் தேசிய வாதிகளிடையே கருத்தியல் முரண்பாடு தோன்றியவுடனேயே அதற்கிடையால் குறுக்குசால் ஒட நினைக்கும் உங்களது வழக்கமான ஆரிய குள்ளநரித்தனம் வெளிப்பட்டு நிற்கிறது .
Manikandan
ஆங்கிலத்தை இவ்வுளவு தூக்கி பிடிக்கும் நீங்கள் சம்கிரதம் இறந்த மொழி என்று மிக சுலபமாக சொல்கிறிர்கள், நம் முன்னோர்கள் தவம் இருந்து வருங்கால சந்ததியினருக்கு பயன்பட பல போகிஷங்களை கொடுத்துவிட்டு சென்று இருக்கிறார்கள். நம் முன்னோர்களை எட்டி உதைத்து விட்டு இன்று வந்த ஆங்கில மொழிக்கு வரவேற்ப்பு கொடுக்கிறோம். நாம் தமிழை கூட ஒழுங்காக பாதுகாக்காத நாமா நம் சகோதர மொழியான சமஸ்கிரதத்தை பற்றியா கவலைப்பட போகிறோம்.

இந்த முட்டாள் தனத்தால் ஏற்ப்படும் இழப்பு நமக்கும் நம் வருங்கால சந்ததியினருக்கும் தான்.
Manikandan
இனம் மொழி ஜாதி என்று பார்க்காமல் அனைவரையும் சகோதரர்களாக ஒன்றிணைக்கும் முன்னேற்ற அரசியல் தான் இன்றைய தேவை... நிச்சயம் பிரிவினை வன்முறை தீவிரவாத அரசியல் தேவையில்லை
Lala
ஆங்கிலத்தை தூக்கி பிடிக்கவில்லை . யதார்த்தத்தைதான் சொன்னேன் . இன்னும் சொல்லப்போனால் காலனியாதிக்க காலத்தில் ஆங்கிலைத்தை தூக்கி பிடித்து வெள்ளையனுக்கு கால் கழுவி விட்டு தமது வயிற்றை கழுவியவர்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இன்று உலகமயமாக்கலின் பின்னர் இந்தியா அடைந்து வரும் துரித வளர்ச்சியிலும் இங்குள்ள் உயர் சாதியினர் , உயர் குழாமினர் மட்டும் முன்னேறவில்லை , பிற்படுத்தபட்ட , தாழ்க்த்தப்பட்ட மக்களும் பெருமளவில் முன்னேறி வருகிறார்கள் . ஆங்கிலம் என்பது ஒரு குறிப்பட்ட உயர் குழாமினர்தான் கற்கலாம் என்றிருந்தநிலை மாறி ஏனிய மக்களும் அந்த மொழியை கற்கும் நிலை தோன்றி அந்த மக்களும் முன்னேறி வருவது பொறுக்க முடியாமல்தான் ஆங்கிலம் எல்லாம் ஒரு மொழியா ? சமஸ்கிருதம் போல வருமா? என மாய் மாலம் கொட்ட ஆரம்பித்திருக்கிறீர்கள் .ஆனால் உங்கள் காலவதியாகிப்போன கனவு இனிமேலும் பலிக்கப்போவதில்லை.

இறந்து போன மொழிக்கு ஈமச்சடங்கு செய்யாது , அதனை கட்டி பிடித்துக்கொண்டு ஒப்பாரி செய்வற்கு ஒப்பானது உங்கள் கூற்று .
தமிழ்நாட்டில் எந்த கட்சியும் பிரிவினைவாதத்தை தமது கொள்கையாக கோஷமாக வைத்திருப்பதாக தெரியவில்லை. அப்படி வைத்திருந்தால் இந்திய அரசியல் மைப்பு சட்டத்தின் கீழ் அந்த கட்சி உடனடியாக தடை செய்யப்படுமளவிற்குத்தான் இந்தியாவின் ஜனநாயகம் இருக்கிறதென்பது கூடவா தெரியாதிருக்கிறீர்கள் ?

சரி அந்த சாதி மதம் , பிரிவினை பார்க்காத முன்னேற்ற அரசியல்தான் என்ன ? அதனை யார்தான் முன்னெடுக்க இருக்கிறார்கள் என்றுதான் சொல்லுங்களேன் கேட்போம் ?
வெறும் இருட்டுக்குள் நின்று துழாவிக்கொண்டிருக்கிறீர்கள் .
சங்கரமூா்த்தி
திராவிடம் ஒவ்வாமை தமிழா்களை தொற்றிக்கொண்டிருக்கும் ஒரு தொற்று நோய்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.