protest captilismபார்ப்பனப் பனியா மார்வாடிக் கும்பலுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியப் பண முதலைகளுக்கும் படியளப்பதற்காகவே ஆட்சிப் பொறுப் பேற்றுள்ள பாசிச வெறிபிடித்த பாஜக அரசு, கொரானா பெருந்தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி 30-க்கும் மேற்பட்ட வெகுமக்களுக்கு எதிரான சட்ட வரைவுகளை நிறைவேற்றிக்கொண்டது.

அவற்றுள் மிகக் கொடுமையானவை, வேளாண் விளைபொருள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் - 2020, உழவர்களுக்கு விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் (உரிமை மற்றும் பாதுகாப்பு) அவசரச் சட்டம் - 2020, அடிப்படைத் தேவைக்கானப் பொருள்கள் (திருத்தம்) அவசரச் சட்டம் - 2020 மற்றும் மின்சாரச் சட்டத் திருத்த வரைவு 2020 ஆகியவை.

2020 சூன் 5ஆம் நாள் திடுமென அறிவித்து, செப்தம்பர் 14-இல் நாடாளுமன்றத்திலும், செப்தம்பர் 20-இல் மாநிலங்கள் அவையிலும் எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி முறையான விவாதங்களுமின்றி குரல் வாக்கெடுப்பின் வழி நிறைவேற்றப்பட்டுவிட்டன இக் கொடுஞ்சட்டங்கள்.

எதிர்க் கட்சியினரும் உழவர் சங்கத் தலைவர்களும் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து முறையிட்டும் அவற்றைச் செவிமடுக்காமல் செப்தம்பர் 27ஆம் நாள் இசைவளித்துத் தன் ஆர்எஸ்எஸ் பற்றை மேலும் கூர்மை யாக்கிக் கொண்டார் குடியரசுத் தலைவர்.

தமிழ்நாட்டில் இயங்கிவரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் போல நாடுமுழுவதும் உள்ள வேளாண் உற்பத்திப் பொருள்கள் மற்றும் கால்நடைச் சந்தைகளையும் மண்டிகளையும் இழுத்துமூடிடவும், விவசாயப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையையும் கொடுக்காமல் பெருநிறுவனங்கள் கொள்ளையடித்துப் போகவும், எளிய மக்கள் வேளாண்மை செய்யும் உரிமை யையும் அவர்கள் நிலத்தின் உரிமையையும் பறித்துப் பெருங்குழும நிறுவனங்களும் பன்னாட்டு இந்தியப் பண முதலைகளும் தாரை வார்த்திடவும் துணைபோகும் இக் கொடுஞ் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெறக்கோரி நாடுமுழுவதும் சூன் 2020 முதலே பல்வேறு வடிவங்களிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நவம்பர் 25ஆம் நாள் தில்லி நோக்கிச் செல்வோம் என்ற முழக்கத்துடன் இந்திய ஒன்றியத் தலைநகர் தில்லியில் குவியத் தொடங்கினர், உழவர் பெருமக்கள். 30 நாள் களுக்கும் மேலாக நடைபெறும் இப் போராட் டத்தில், கடுங்குளிரினால் பல்வேறு இன்னல்களுக்கு ஆட்பட்டாலும் நாள்தோறும் ஆயிரக்ககணக்கானோர் குழந்தைகள் முதியவர் என அகவை வேறுபாடின்றிக் குடும்பம் குடும்பமாக உழவர்கள் தில்லிநோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட் டமைப்பினர் உழுகுடி மக்களின் வீரஞ்செறிந்த இப் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்துப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருவதோடு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுக்கும் போராட்டங்களிலும் தொடர்ச்சியாகப் பங்கெடுத்து வருகின்றனர்.

உயிரைத் துச்சமென மதித்துப் போராடும் உழவர்களின் கோரிக்கைகளிலுள்ள உண்மைகளை மறைத்து, உணவுப் பொருள்களை உற்பத்திசெய்து எல்லோரும் பசியாரிட தம் குருதி சிந்தும் உழவர்பெருமக்களைக் கொச்சைப்படுத்தி, இப்போராட்டங்களைச் சீர்குலைக்க வழக்கம்போல் மதச் சாயமும், எதிர்க் கட்சிகள் அரசியல், அந்நிய நாடுகளின் தூண்டுதல், மாவோயியர்களின் ஊடுருவல் எனப் பல் வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு வரும் பாசிச வெறி பிடித்த பாஜக இந்திய அரசின் போக்கு கடுமையான கண்டனத்துக்குரியது.

உழவர் பெருமக்களின், உழவுசார் தொழிலாளர்களின் வாழ்வையே அழிக்கும் இக் கொடுஞ் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரிப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் சார்பில் 09.12.2020 அன்று தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடெங்கும் நடைபெற்றுவரும் பல்வேறு காத்திருப்புப் போராட்டங்களிலும் கூட்டமைப்பினர் திரளாகப் பங்கேற்று வலு சேர்த்து வருகின்றனர்.

நாடு முழுவதும் நடைபெறும் எளிய மக்களின் வாழ்வுரிமைக்கான இப் போராட்டங்கள் பாஜக ஆளுகிற, தமிழ்நாட்டைப்போன்று பாஜக - வை அண்டி ஆட்சி நடத்துகிற மாநிலங்களிலெல்லாம் காவல் துறையின் துணையோடு அரச வன்முறைகளால் நசுக்கப்படுகின்றன.

அண்டை மாநிலமான கேரளாவில் இச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது அம் மாநில அரசு. பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில், அகில இந்தியப் போராட்டக் குழுவின் தமிழ்நாடு பிரிவு, தில்லியைப்போன்று திசம்பர் 29-இல் தமிழ்நாட்டில் தஞ்சையில் கூடுவோம் என்ற முழக்கத் தோடு பேரணி பொதுக்கூட்டம் அறிவித்தது.

உழவன் மகன் என்று சொல்லிக்கொண்டு தில்லிக்குப் பல்லிளிக்கும் தமிழ்நாட்டு அடிமை அரசு உழவர்களும் பொதுமக்களும் தஞ்சைக்கு வருவதைத் தடுத்துநிறுத்திட எல்லா மாவட்டங்களிலும் தடுப்புநடவடிக்கை எனும் பேரில் மனித உரிமை மீறலை அப்பட்டமாகச் செய்தது.

அடக்குமுறைக்கு அஞ்சாத உழவர்கூட்டம், தடை களைத் தகர்த்தெறிந்து பல்லாயிரக் கணக்கில் திரண்டு தஞ்சையில் எழுப்பிய இடிமுழக்கம் தில்லியையே அதிர வைத்திருக்கும். பெ.உ. கூட்டமைப்பினரும் 500-க்கும் மேற்பட்டோர் தஞ்சை, தங்கமுத்து நாட்டார் திருமணக் கூடத்தில் திரண்டு அங்கிருந்து, “மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறு!”, “மின்சாரத் திருத்த வரைவைத் திரும்பப் பெறு!”, “மாநில உரிமைகளைப் பறிக்காதே!” எனும் முழக்கங்களை விண்ணதிர எழுப்பிப் பதாகைகள் ஏந்திப் பேரணியாகச் சென்று திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும் பங்கேற்றனர்.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பொழிலன் உரையாற்றியபோது இந்தியை எதிர்க்கும் தமிழர்களுக்கு உழவர் பெருமக்கள் முழங்கும் ‘டெல்லி சலோ’ எனும் முழக்கம் தேனாய் இனிக்கிறது என்று மொழி இன வேறுபாடு கடந்து உழவர் போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய தேவையை உணர்த்தினார்.

பெ.உ.கூட்டமைப்பு உழவர்கள் மற்றும் எளிய மக்களின் உரிமைகளைக் காக்க எப்போதும் முகங்கொடுக்கும் என்றும் இச் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை உழவர்களோடு தோள்நின்று அரண் சேர்ப்போம் என்றும் உறுதியளித்தார்.

பெ.உ. கூட்டமைப்பு உறுப்பாண்மை இயக்கங்களின் முன்னணித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களின் பொறுப்பாளர்கள் திரளான தோழர்களோடு பங்கேற்றனர். மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார் பிலும் தோழர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

நாற்பது நாள்களுக்கும் மேலாகத் தொடரும் தில்லிப் போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட உழவர் பெருமக்கள் தம் இன்னுயிரை ஈந்த பிறகும் மமதையோடு இருக்கிறது மோடி தலைமையிலான பாஜக அரசு.

எவ்வளவு துயர் வரினும், எத்துனை உயிரைப் பலி கொடுத்தேனும் இக் கொடுஞ் சட்டங்களைத் திரும்பப் பெறாமல் வீடு திரும்புவதில்லை என்ற உறுதியோடு தில்லியில் குவிந்திருக்கின்றனர் வீர மறவர்களான உழவர் பெருமக்கள். அந் நெஞ்சுறுதி மிக்க போராளிகளின் கரங்களைப் பற்றி அரண் சேர்ப்போம்.

மேலும், ஆர்எஸ்எஸ் - பாஜக - இந்துத்துவக் கும்பலை வேரறுக்காமல் இதுபோன்ற போராட்டங்களுக்கு முடி வில்லை என்ற புரிதலோடு போராடுவோம், வெற்றிபெறு வோம்.

- முனைவர் முத்தமிழ்

Pin It