ராமாயணத்தில் தமிழர்களை எல்லாம் குரங்குகளாக சித்தரித்து அசிங்கப்படுத்தினான் வால்மீகி. ஆனால் மானமுள்ள தமிழன் என்ன செய்தான்? அதைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து கம்பரசம், கம்பரசம் என்று சூடு சுரணை ஏதுமற்று படித்து மகிழ்ந்தான். அன்றிலிருந்து இன்றுவரை தமிழன் அப்படித்தான் இருக்கின்றான். தமிழர்களுக்கு எதிராக பார்ப்பனிய சக்திகள் முன் எடுக்கும் அனைத்து துரோகச் செயல்களுக்கும் அவனுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையை தான்மானமற்ற, சுயமரியாதை அற்ற தமிழர்கள் தான் செய்து வருகின்றார்கள். கோடானகோடி தமிழ் மக்களை அவன் தேவடியாப்பயல் (சூத்திரன்) என்கின்றான்; இவன் அந்தப் பட்டத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்டு அவனை ‘ஜீ’ என்கின்றான். தமிழர்களையும், தமிழ்நாட்டையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று ஆதியில் இருந்து இன்றுவரை பார்ப்பன சக்திகள் களத்தில் இறங்கி, வேலை செய்துகொண்டு இருக்கின்றன. அதை எதிர்த்து முறியடிக்க வேண்டிய தமிழனோ அவனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்து கொண்டு இருக்கின்றான்.
சேது சமுத்திரத் திட்டம் பார்ப்பன சக்திகளால் திட்டமிட்டு முடக்கப்பட்டது. இங்கிருந்த பார்ப்பன அடிவருடி தமிழர்கள் (குரங்குகள், தேவடியா பயல்கள்) ஆர்.எஸ்.எஸ் வானரங்களுடன் சேர்ந்து கொண்டு அதை நிறைவேற்ற விடாமல், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை நாசம் செய்தனர். கூடங்குளம் அணுமின் திட்டம், மீத்தேன் வாயு திட்டம், நியூட்ரினோ திட்டம் போன்ற தமிழர்களின் உயிருக்கு உலை வைக்கின்ற திட்டங்களுக்கு ஆதரவாக இங்கிருந்த பார்ப்பன சக்திகளுடன் சேர்ந்துகொண்டு பார்ப்பன சேவை செய்தனர். பி.ஜே.பி, இந்து முன்னணி உட்பட அதன் அத்தனை சங்பரிவார அமைப்புகளைச் சேர்ந்த அனைவரும் தமிழ்நாட்டில் இருந்தாலும், தமிழில் பேசினாலும் இனவாதிகள் சொல்வதுபோல சுத்தமான தமிழனுக்குப் பிறந்து இருந்தாலும் தமிழர்களுக்கு எதிரான சக்திகளாகவே நாம் அடையாளப்படுத்த வேண்டும். இவர்களின் துணையில்லாமல் இந்த பார்ப்பன சக்திகளால் தமிழ்நாட்டில் இயங்கவே முடியாது.
இங்கே தமிழனுக்கு எதிரியாக தமிழனே இருக்கின்றான். இங்கே இருக்கும் பெரும்பாலான தமிழர்களுக்கு பார்ப்பனியத்தால் நயவஞ்சகமாக கொல்லப்பட்ட நந்தனைப் பற்றியோ, வள்ளலாரைப் பற்றியோ, சாம்புகனைப் பற்றியோ எதுவும் தெரியாது. அவர்கள் கட்டைவிரலை இழந்த ஏகலைவனின் கதையையோ, கண்களை இழந்த கண்ணப்பனின் கதையையோ அறியாதவர்களாக இருக்கின்றார்கள். ஒழுக்கம் கெட்ட பார்ப்பன புராணங்களை தெரிந்த அளவிற்கு அவனுக்கு பதினென்கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றி தெரியவில்லை.தெரிந்திருந்தால் இப்படி பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு காவடி தூக்க மாட்டார்கள். கோவையில் இந்து முன்னணி பொறுக்கி சசிகுமார் கொல்லப்பட்ட போது கலவரம் செய்து கைதானவர்கள் அனைவரும், பார்ப்பனியத்திடம் இருந்து தேவடியாப் பயல் (சூத்திரன்) பட்டம் வாங்கியவர்கள் தான். தனக்கு யார் எதிரி? யார் நண்பன்? என்பதைக்கூட பிரித்துப் பார்க்கத் திராணியற்ற முட்டாள்களாய் அவர்களை பார்ப்பனியம் மாற்றி வைத்திருக்கின்றது.
சசிக்குமார் கொலைக்காக அவ்வளவு பெரிய கலவரம் செய்த இதே அயோக்கியர்கள் தான், காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட மாட்டோம் என சொன்னபோதும், உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்திரவிட்ட பின்பு, முதலில் அமைக்கின்றோம் என சொல்லிவிட்டு, பின்பு உச்ச நீதிமன்றத்தில் அமைக்க முடியாது என பார்ப்பன பயங்கரவாத மோடி அரசு தமிழர்களின் முதுகில் குத்தியபோதும், கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல், தட்டிக் கேட்கத் துணிவற்ற கோழைகளாய் இருப்பவர்கள். தமிழ்நாட்டில் நின்றுகொன்று பார்ப்பன சொறிநாய் எச்.ராஜாவும், சூத்திரச்சி தமிழிசையும் தமிழர்களுக்கு எதிராக, மோடி அரசு செய்த துரோகத்திற்கு ஆதரவாகப் பேசுகின்றார்கள். எங்கிருந்து வந்தது இவர்களுக்கு இந்த தைரியம்? இது எல்லாம் அந்தக் கட்சியிலே இருக்கும் மானங்கெட்ட, தமிழின துரோகிகளாய் மாறிவிட்ட சூத்திரத் தமிழர்கள் கொடுத்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் துரோகம் செய்த பி.ஜே.பியின் கட்சி அலுவலகங்கள் தமிழ்நாட்டில் இருப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கே இழிவாகும். கர்நாடகாவில் தமிழர்களின் வாகனங்களைக் கொளுத்தி, தமிழர்களைத் தாக்கி மிகப்பெரிய இனக்கலவரத்தை நடத்த திட்டமிட்ட காவிபயங்கரவாதிகள் இங்கே சுதந்திரமாக பேசித் திரிகின்றார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ஒரு கோரிக்கை வைக்கக்கூட துப்பில்லாத ஜென்மங்கள், இந்து இயக்கத் தலைவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வதற்காகவே கட்சி நடத்தும் இந்தக் காலிப்பயல்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்புவேண்டுமாம், எவ்வளவு பார்ப்பன கொழுப்பிருந்தால் இப்படி இவர்களால் கேட்க முடியும்?
காவிரி பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் இனவாதமல்ல; பார்ப்பனியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஏற்கெனவே பலமுறை சொன்னதுபோல ஆர்.எஸ்.எஸ் காரன் பிஜேபியில் மட்டும் அல்ல, அவன் காங்கிரசிலும் இருக்கின்றான், ஜனதா தளத்திலும் இருக்கின்றான். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என்பது ஒட்டுமொத்த கார்நாடக மக்களின் விருப்பம் அல்ல. அது அங்கிருக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் காலிகளின் விருப்பம். அதைத்தான் சித்தராமையா என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் செய்துகொண்டு இருக்கின்றார். அவருக்குத் துணையாக அத்தனை ஆர்.எஸ்.எஸ். வானரங்களும் துணை நிற்கின்றார்கள். தமிழ்நாட்டிலோ கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாத அதிமுக கூட்டம், இங்கே பார்ப்பனனை அழைத்துவந்து அப்போலா மருத்துவமனை முன்பு கும்பம் வைத்து, பூசை செய்து கொண்டு இருக்கின்றது. அப்புறம் எங்கிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வரும்? பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்த்து முறியடிக்காமல் இந்தப் பிரச்சினைக்கு எப்பொழுதும் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கப் போவதில்லை.
ஆளும் அதிமுக தமிழ்நாட்டில் பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றது. எதிர்க்கட்சியான திமுக கர்நாடகாவில் தண்ணீர் திறந்துவிடாமல் அடாவடி செய்யும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தமிழர்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றது. சர்வதேசியம் பேசும் ஓட்டுப் பொறுக்கி கம்யூனிஸ்ட் கட்சிகளோ கர்நாடகாவில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடச் சொல்லி ஒரு சிறு போராட்டத்தைக்கூட முன்னெடுக்கத் துப்பில்லாமல் பதுங்கிக் கிடக்கின்றார்கள். திமுக, காங்கிரஸ் என்ற வார்த்தைகளையே பயன்படுத்தாமல் ஒரு புரட்சிகர(?) கம்யூனிஸ்ட் கட்சி சாமார்த்தியமாக ஊடகங்களில் அறிக்கை விடுகின்றது. எல்லா பக்கமும் துரோகங்களால் தமிழர்கள் சூழப்பட்டு இருக்கின்றார்கள். ஒரு பக்கம் பார்ப்பன பயங்கரவாதிகள்; மற்றொரு பக்கம் அவர்களை அண்டிப் பிழைக்கும் பார்ப்பன அடிவருடிகள்.
விவசாயத்திற்கு மட்டும் அல்ல குடிப்பதற்கும், குண்டி கழுவுவதற்குமே தண்ணீர் இல்லாத ஒரு சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்படப் போகின்றது. கர்நாடகாவில் இருக்கும் பார்ப்பன பி.ஜே.பி, காங்கிரஸ் போன்றவை எப்படி தமிழர்களின் மீது வக்கிரமாக நடந்து கொள்கின்றதோ அதற்கு சற்றும் குறைந்ததல்ல திமுக, அதிமுக தமிழர்களின் மீது நிகழ்த்திய வன்முறை. காடுகளை அழித்து, ஆற்றுமணலைக் கொள்ளையடித்து, நீராதாரங்களாக இருந்த ஏரி, குளங்களை ஆக்கிரமிப்பு செய்து இன்று அவர்கள் அனைவரும் பெரும் கோடீஸ்வரர்களாய் மாறிவிட்டார்கள். அப்பாவி தமிழன் ஒரு குடம் தண்ணீருக்காக பிச்சை எடுப்பவனாய் மாற்றப்பட்டுவிட்டான்.
இனி இவர்களை நம்பி எதுவும் ஆகப் போவதில்லை. தமிழ்நாட்டின் பிரச்சினைக்கு எல்லாம் தீர்வு வேண்டும் என்றால் அது தேர்தல் பாதையைப் புறக்கணித்த நேர்மையான பெரியாரிய, மார்க்சிய இயக்கங்களால் தான் முடியும். பார்ப்பன பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு காவடி தூக்கும் பார்ப்பன அடிவருடிகளையும் ஒழித்துக் கட்டும் கருத்தியல் ஆயுதம் அவர்களிடம் தான் இருக்கின்றது. ஏகாதிபத்திய எதிர்ப்பையும், பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பையும் ஒன்று சேர்த்து அவர்கள் முன்னெடுக்கும் போராட்டம்தான் இதற்கெல்லாம் ஒரு விடியலைக் கொண்டுவரமுடியும். தமிழ் மண்ணில் இருந்து பார்ப்பன பயங்கரவாதிகளை ஓட ஓட விரட்டி அடிக்கும் சக்தி அவர்களிடம் மட்டுமே உள்ளது.
- செ.கார்கி