துணைக்கண்டத்திலுள்ள இசுலாம் சமயம் தவிர்த்த அனைத்துச் சமயங்களையும் பின்பற்று வோர்கள் எளிதில் இந்திய ஒன்றியக் குடியுரிமை பெறுவர் எனச் சொல்லி இந்திய ஒன்றிய அரசு சட்டத்தைத் திருத்தி விட்டது. அதேநேரத்தில் நாட்டை ஆளும் பா.ச.க., இந்திய ஒன்றியத்தின் அனைத்து 1.3 பில்லியன் (130 கோடி) குடிமக்களையெல்லாம் கொண்ட ஒரு பதிவேடு தயாரிக்க விரும்புகிறது என்று, அதன் வழி சட்டப்படி யின்றி குடியேறியவர்களைக் குறிவைத்து வேட்டையாடத் திட்டமிட்டுள்ளது.

அவை குடியுரிமை பற்றிய வழிமுறை கள்போல் தோன்றுகின்றது. ஆனால் நாட்டில் பெரும் மக்கள் தொகையாகவுள்ள இசுலாமியருள் பெரும்பா லோர் தாங்கள் இந்நாட்டுக் குடிமக்கள் என மெய்ப்பிப் பதற்கான ஆவணங்கள் இல்லாதவர் களாக உள்ள நிலையில், அவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்படும் கொடுமைக்கு ஆளாக்கப்படுவர்.

இந்தப் பா.ச.க.வின் திட்டம் தவறான கணக்கு என நீங்கள் கருதுவீர்கள். இது பரவலான தொடர் எதிர்ப்பு களை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள், சமயச் சார்பற்ற வர்கள், பெரிதும் அடிமை மனப்பான்மை கொண்ட ஊடகங்கள் கூட சகிப்புப் பண்பும், பன்மைச் சமயச் சமூக நிலமாகவும் உள்ள இந்திய ஒன்றியத்தை வெறி கொண்ட குறுகிய-நாட்டுப் பற்றுக்கொண்ட- இந்து நாடாக மாற்றிட முனைப்புடன் செயல்படும் முதன்மை அமைச்சர் நரேந்திர மோடிக்கு எதிராகக் குரல்கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.

உண்மையில் இந்தப் பேராசையுடனான சூழ்ச்சி நடவடிக்கை பல பத்தாண்டுக் காலம் திட்டமிட்ட தூண்டு தலாகத் தோன்றுகின்றது.

அயோத்தியிலிருந்த மசூதியை இடித்துவிட்டு அங்கு இந்துக்கடவுளான இராமன் கோவில் கட்டப் போராட் டங்கள் நடத்தி பா.ச.க. தன்னை முதலில் நாட்டின் முக்கியமான நிலைக்கு உயர்த்திக் கொண்டது. இந்தத் தீவிரவாத வன்முறைக் காலிகும்பல் 1992இல் மசூதியை இடித்து நொறுக்கியதன் தொடர்ச்சியாகக் கொலை பாதகமான பல கலவரங்களை நடத்தித் தன் கட்சியை முன்னுக்குத் தள்ளிக் கொண்டு வந்தது.

அதே போன்று 2002இல் குசராத்தில் மோடி முதலமைச்சராக இருந்த போது, இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்டு அவர் நாடு முழுமைக்குமான இந்துத் தேசியவாதியாக ஆக்கப்பட்டார்.

அந்தோ! பா.ச.கட்சிக்குக் கிடைத்த தேனொத்த தேர்தல் வெற்றி இந்திய ஒன்றியத்திற்கு அரசியல் நஞ்சானது. இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்றான சமயச் சார் பற்ற கோட்பாட்டைக் குலைத்துச் சிதைத்து பல பத்தாண்டுகளுக்குத் தொடரும் வகையில் மிக அண் மையில் திரு. மோடி முன்முயற்சிகள் எடுத்து வருகிறார். அவை நாட்டில் குருதி ஆறு ஓடச் செய்யும்.

நாட்டில் சமயம், தேசிய அடையாளம் என்ற பெயரில் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி, மோடியும் பா.ச.க.வும் அரசியல் பயனடையலாம் என்பது துன்ப மான வருத்தத்திற்குரிய உண்மை. இதுபோன்றவை ஒன்றியத்தில் தொடர்ந்து இடையறாது நடைபெறும் மாநில, தேசியத் தேர்தல்களின் பின்னணியில் இந்து தேசியக் கூட்டத்திலுள்ள கட்சியின் தீவிரச் செயல்பாட்டாளர்கள், அவர்களின் கூட்டாளிகளை உரம்பெறச் செய்வதற்கு அத்தேர்தல்கள் அவர்களுக்கு எப்போதும் அரும் வாய்ப்பாக இருக்கலாம்.

சென்ற ஆண்டுத் தேர்தலில் பெரிய வெற்றி பெற்றதிலிருந்தே பா.ச.க. தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருந்த, சீர்கேடான நிலையிலிருந்த பொருளாதாரம் போன்ற அருவருப்புத் தருகிற இவர்களின் நடவடிக்கைகள் மீதான மக்கள் கவனத்தை இவர்கள் திசைதிருப்பவும் செய்தார்கள்.

மிக முக்கியமாக இந்துக்களை ஒழிக்கவும், பாக்கிசுத் தானுக்கு நாட்டைக் காட்டிக்கொடுத்து விற்றிடவும் அய்ந்தாம்படைப் பயங்கரவாதிகளாக இசுலாமியர் எப்போதும் திட்டமிடுவர் என மோடி மறைமுகமாகச் சுட்டிக்கூறி, அதைக் கரிசனத்துடன் ஒரு கணிசமான குறைந்த அளவு இந்திய ஒன்றிய வாக்காளர்களை நம்ப வைக்க முற்படுகிறார். இதுவே அவர் தன் பதவி யில் தொடர்ந்து இருந்து கொள்வதற்குப் போதுமானது.

தேர்தலில் ஒரு தொகுதிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுள் வாக்குப் பெறுவதில் முதலிடத்தில் வருபவர் வெற்றி பெற்றவர் என்ற தேர்தல் முறை இருந்து வருவ தாலும், சிதறுண்ட எதிர்க் கட்சிகளாக இருப்பதாலும் பா.ச.க. 37 விழுக்காடு வாக்குகள் மட்டும் பெற்று நாடாளுமன்றத்தில் தன்னளவிலேயே தனி அறுதிப் பெரும்பான்மை பெற்று வென்றுவிட்டது.

இப்போதுதான் பா.ச.க. புதிய சிக்கல்களைத் தேடிப் பிடிக்க முற்படலாம். அயோத்தியில் மசூதியை இடித்து, நொறுக்கப்பட்ட இடத்தில் இந்துக் கோயில் கட்டிக் கொள்ள லாம் என உச்ச வழக்கு மன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்து, பா.ச.க.வின் விருப்பமான குறிக்கோளை நிறைவேற்றியுள்ளது. சிக்கல்கள் உருவாக்குவதற்காக வெறுக்கத்தக்க குடியுரிமைச் சட்டத்தைப் பா.ச.க. கையில் எடுத்துக்கொண்டு பெருமளவில் கலவரங்களைத் தூண்டி விடுகின்றது.

நாட்டுக்குள் ஊடுருவியவர்கள் என்ற பெயரில் அவர்களை வேட்டையாடிக் களையும் நோக்கத்தில், உண்மையான இந்தியர்களுக்காக ஒரு பட்டியல் ஆவணம் உருவாக்கப்பட வேண்டுமென்ற திட்டம் நாட்டின் 1.3 மில்லியன் (130 கோடி) மக்களையும் பாதிக்கும். இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுவது, அது எதிர்க்கப்படுவது, அதன்பின் மாற்றப்படுவது என்ற நிலை பல்லாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு, இப்பொழுது தான் இந்த ஆவணம் தயாரிக்கப்படவிருக்கிறது.

அதனால் மக்களின் உணர்வுகள் மறுபடியும் மறுபடியும் கொழுந்து விட்டு எரியும். இதன்படி மக்கள் பட்டியலில் சேர்க்கப் படாததின் விளைவுகள் என்னவாகப் பின்னிக் கொண்டி ருக்கப் போகிறதோ? உண்மையில் இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது எனத் திரு. மோடி வாதிடுகிறார். இதற்கிடையில் பா.ச.க.வின் தேர்தலுக்கு விலைமதிப்புள்ளதான இந்துக்கள், மக்கள் தொகையில் 80 விழுக்காடு அளவுக்கு இருப்பினும்-நிழற்சக்திகளால் அச்சுறுத்தப்பட்ட போதிலும், அதுதான் மோதுவ தற்குத் திறன் கொண்டதாக உள்ளது என்ற குழப்பங்கள், இக்கருத்தை வலுப்படுத்த உதவுகின்றன.

இது, உலகிலுள்ள மிகப்பெரும் சனநாயகம், இந்திய ஒன்றியம் எனும் மகிழ்வூட்டும் எண்ணத்தைக் குலைத்து அழிப்பதாக இருக்கிறது. மோடியின் கொள்கைகள் உடன் வாழும் நம் நாட்டவரான இசுலாமிய மக்களுக்கு எதிராக வேறுபடுத்துகிறது. ஆப்கானிசுத்தான், வங்க தேசம், பாகிசுத்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளான இந்துக்களை மட்டும் காப்பாற்றிக் கொண்டு அதேபோல் துன்புற்ற ஒரு இசுலாமியரைக்கூடச் சமய சார்பற்ற ஒன்றிய அரசு வேண்டுமென்றே வெளிப் படையாகத் தனிமைப்படுத்த உறுதி கொள்வது ஏன்? அமைதி காப்புக்குழுக் கூட்டத்தினர்களால் இசுலாமியர் கொல்லப்படும் மனப்போக்கை பா.ச.க.வினரின் அருஞ் செயல்களாகக் காட்டப்படுவது முதல் வரன்முறையில்லாது கைது செய்யப்படல், ஓசையில்லா ஊரடங்குகள், ஐந்து திங்களாக இணையத் தொடர்புகளை முடக்குதல் என, காசுமீர் பள்ளத்தாக்கு வாழ் ஒட்டுமொத்த மக்க ளைத் திரண்ட தண்டனைக்கு உள்ளாக்குதல் வரை மரியாதைக் குறைவாக நடத்தும் நிகழ்வுகளின் தொடரில் ஒன்றுதான் குடியுரிமைச் சட்டக் குளறுபடி.

பல மொழி, இனம், சாதி, சமயங்களைக் கொண்ட பல ஒன்றிய மாநில தேசங்களை உள்ளடக்கிய நாடாக இருப்பதால் நாடு விடுதலை அடைந்ததிலிருந்து அதன் சனநாயகம் நொறுங்கிவிடும் என இந்திய ஒன்றியம் குழப்பமுடனான எதிர்பார்ப்புடன் இருந்துவருகிறது. சமயச் சார்பற்ற, ஒருநிலை சார்பற்ற அரசு பிற பல வகைகளில் குறைபாடுடையதாக இருப்பினும் எல்லாக் குழு மக்களையும் காப்பாற்றும்.

இவர்களுள் ஒரு பிரிவினரை வேண்டுமென்றே திட்டமிட்டுத் தொடர்ந்து துன்புறுத்தி வருவது எல்லோ ருக்கும் எதிரான உள்ளார்ந்த அச்சுறுத்தலாகிவிடும் என்பதுடன், அது அரசியல் அமைப்பை மீளா இடருக் குள் தள்ளிவிடுவதாக அமைந்துவிடும். இந்தி அல்லாத பிற மொழிகள் பேசுவோர், தம் மதம் பற்றிப் பா.ச.க. கொண்டுள்ள கருத்துக்களை எதிர்ப்போர்களாக உள்ள கீழ்ச்சாதி இந்துக்கள், பிற சிறுபான்மையர் என அவர் களுக்கு நன்மை பயக்காத திட்டங்களைப் பா.ச.க. செயல் படுத்தி வருவதை வாக்காளப் பெருமக்கள் நினைவுகூர்வர்.

கும்பல் உணர்வைத் தூண்டிவிட்டு, மனித உயிர் களைப் பலிவாங்கும் அவருடைய போக்கால், திரு. மோடி, வன்முறை மறுப்புக் கொள்கை பரப்புவரான மகாத்மா காந்தியின் நினைவுகளையும் சிதைத்து வருகிறார். தற்போது, இசுலாமியர் இந்துப் பெண்ணை விரும்புகிறார்கள்; அல்லது மாட்டுக்கறி உண்ணப் பசுவைக் கொல்வது போன்றவை இந்து சமயத்தைச் சிறுமைப்படுத்துவதாகும் எனச் சொல்லி, பல இசுலாமியர்கள் சட்டத்திற்குப் புறம்பாகத் துன்புறுத்தப்பட்டு அல்லது அடித்துக் கொல்லப்படுகிறார்கள்.

அடுத்தடுத்து இசுலாமியர்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி விட்டு, ஆயிரத்திற்கும் அதிகமானவர்களைக் குசராத்தில் கொன்று குவித்தது போன்று, பல கொள்கைகளுக்கு இட்டுச்செல்ல எப்போதும் இந்துக்களை உசுப்பிவிட்டு, இசுலாமியர்களுக்குக் கோபமூட்டி பா.ச.க. நாடெங்கும் மேலும் குருதி சிந்தச் செய்துவிடும்.

தன் அரசியல் பலனுக்காக வகுப்பு உணர்வுகளை இடையறாது தூண்டிவிட்டு, அதை அதிகப்படுத்தியோ, மட்டுப்படுத்தியோ தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள திரு.மோடி கற்பனை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் சமயஞ்சார் சமய வெறி உணர்வை இவர் வெறுப்புடன் தூண்டுபவராக இருப்பினும், அனைத்துப் பதவி நிலையிலுள்ள இந்துத் தேசியவாதிகள் உண்மையான மத நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர்.

அவர்களை அவர்களின் நன் நம்பிக்கையிலிருந்து எளிதில் விலக்கி விட முடியவில்லை என்பதை குசராத் படுகொலை வெளிப்படுத்துகிறது. பாக்கிசுத்தான் பற்றிப் போர்க்கால நிலையை ஒத்த வெறியூட்டும் வெற்றுப் பேச்சுடன் காசுமீர் குறித்துத் தலையை உடைத்துக் கொண்டு குடியுரிமை குறித்து, படுமோசமான ஒருபக்கச் சாய்வான அணுகுமுறையுடன் முதன்மை அமைச்சர் உணர்ச்சி வெறியாளரின் எதிர்பார்ப்புகளை எடுத்துரைத்தார். இதுபோன்றவற்றை நெடிதும் கடைபிடிக்க விரும்ப மாட்டார் - அவர் ஆட்சி நடத்த ஒரு நாடு உள்ளது - ஆனால் அவர்கள் இதுபோன்ற மனச்சான்று உறுத்தல் இல்லாதவர்களாக இருப்பர்.

தகைமைக்குரிய சிலவற்றைக் காப்பாற்றுதல்:

ஏற்கெனவே திரளான இந்தியர்கள் மகிழ்ச்சியுடன் போதுமானவற்றைப் பெற்றுள்ளனர் என்பதை அண் மையில் அவர்களின் எதிர்ப்புகள் காட்டுகின்றன. இந்தக் கிழமை குடியுரிமைச் சட்டத்தை நிறுத்தி வைக்க மறுத்துவிட்ட உச்ச வழக்கு மன்றம், இதைக் கவனத் திற்கொண்டு ஒரு சிறிதேனும் எதிர்பார்க்காத நேர் நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து இச்சட்டத்தை அரச மைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். மேலும் உலகின் இருபெரும் சமயங்களிடையே வெறுப்பு ணர்வைத் தூண்டிவிடாமல், வாக்காளர் பெருமக்களின் மனங்களில் அவர் இடம்பெற மாற்று வழிகளைக் காண திரு. மோடி முன்வர வேண்டும்.

(தலையங்கம் : தி எக்கனாமிசிட் (The Economist Weekly, 2019) 
இலண்டனிலிருந்து வெளிவரும் உலகளாவிய திங்கள் இதழ்)

 - மொழியாக்கம் இரா. பச்சமலை

Pin It