ஏற்றி ஆகிவிட்டது எழுபத்தோ ராண்டின்

ஏகாதி பத்திய எடுபிடி ஆட்சியில்

போலி விடுதலைநாள் கொடி யேற்றம்

மக்களின் வாழ்வோ கழு வேற்றம்

 

படி நிலையில் சாதியை வைத்து

படைத்தான் இறைவன் கதைபல இட்டு

மானுட சமநிலை மறுக்கும் நாட்டில்

விடுதலை? திருநாள் இந்தி யாவில்

 

காதலர்களின் ஆடை களைந்தது வன்கொடுமையே

ஆக்சிசன்மறுத்து மடிந்தமழலை அரசின் கொலையே

மக்களின் நலனைக் காக்கத் தவறுது

வந்தேமாதரம்! இந்தியத்தேசியம் எங்கே வாழுது

 

மனுவின் பேதம் மீண்டும் வருது

சூத்திர ருக்குக் கல்வி மறுக்குது

மத்தியமாநில அரசுகள் நீட்டி(ய)ன கயிறில்

மாட்டிக் கொண்டாள் அனிதா உயிரை

 

சமூகநீதி சமவுரிமைக்குப் பெருங் கேடிது

உழைக்கும் மக்களின் வாழ்வைப் பறிக்குது

பெரியாரையும் அம்பேத்கரையும் ஏந்து வோம்

விகிதாச்சாரப் பங்கீட்டை வென் றெடுப்போம்

 

அணுவுலை நியூட்ரினோ மணல் கொள்ளை

உரிமைப் பறிப்பை எதிர்த்தால் கடுஞ்சிறை

உழவன் வாழ்வில் அன்றாடம் தற்கொலை

இந்திய நாட்டில் யாருக்கு விடுதலை?

 

யாருக்கு இங்கே விடுதலையின் குடிஅரசு

மோ(ச)டிச் சட்டத்தின் சனநாயக(?) அரசு

இந்திய - (இந்து)த் தேசியத்தைமறுப்போம்

தேசியஇன உரிமைகளை வென்றெடுப்போம்!

Pin It