மோடியின் ஆட்சியில்
தடிஎடுத்தவன் எல்லாம்
தண்டல்காரன்
கொலைகாரன் எல்லாம்
குடியாளும் அரசன்
நாட்டுமொழி எல்லாம்
நலிந்து சாகும் வாடி!
இந்திக்கும் வடமொழிக்கும்
இறைப்பதுவோ பலகோடி!
1986-
ஈழமக்களைக் கொன்றுகுவித்த
இராசீவ் காந்தி அந்நாளில்
கல்விநிலையில்
இந்திய இளஞ்சிறார்களைக்
கொன்று குவிக்கக்
கொண்டுவந்த திட்டம்தான்
‘புதிய கல்விக்கொள்கை’
அதன் நச்சு வடிவமே
நவோதயா
மாவட்டத்திற்கு
ஒருபள்ளியாம்
80 பேர்கள்
அதில் இருப்பார்களாம்
சி.பி.எஸ்.இ
நவோதயா
கேந்திரவித்யாலயா
எல்லாமே
மண்ணில் ஒட்டாதா
கிளைகள்
மண்ணை மலடாக்கும்
விதைகள்
ஏகஇந்தியாவுக்கும்
ஒற்றைப்பாடத்திட்டம்
என்பதே
தேசியவாதிகளின் ஓலம்
மாநிலங்கள் என்பவை
மந்தைகள் அல்ல
தனித்தனி தேசிய இனங்கள்!
இதை அங்கீகரிக்க மறுத்து
அன்று காங்கிரசு செய்தது
அடாவடித்தனம்
இன்று காவி செய்வது
அரம்பத்தனம்
அனைவர்க்கும் கல்வி என்பதே
அறிவுடைமை
தேர்ந்தெடுக்கப்பட்ட
சிலருக்கு மட்டுமே என்பது
சீழ்பிடித்த மடமை
அந்தக் கல்வியும்
ஆங்கிலத்தில் தானாம்!
புதுமணப் பெண்ணாய்
எப்போதும் இந்தி!
தட்டுக் கழவ மட்டும்
தாய்மொழி!
தேசிய ஒருமைப்பாடு எனும்பெயரில்
இடையில் ‘தேவபாடை’!
புழுத்த ரேசன் அரிசிக்கே
போராட்டம்!
இங்கே
கொழுத்த கல்வி என்பது
கொஞ்சம் பேருக்கே!
ஆக
நரிகளின் திட்டம்
நவோதயா-தமிழ்
நாட்டில் இத்திட்டம்
செல்லாதய்யா!
அகில இந்தியா
என்பதே திருட்டு!
ஆகாது இந்தப்
புரட்டு!
இதை அடியோடு அடித்து
விரட்டு!