பொதுவாக மருத்துவமனைகள் தொடங்கும் பொழுது மருத்துவ விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் என்ற மனப்பான்மையுடன் தொடங்கப்படுகின்றன. தொடங்கப்பட்ட உடனே, பல வழிகளில் மக்களிடம் நோயைத் தீர்ப்பதாகக் கூறி பல விளம்பரங்கள் செய்து நோயாளியை வரவழைக்கின்றனர். பின்னர் பல மருத்துவச் சோதனைகள் செய்ய உட்படுத்தப்படு கின்றனர்.

உதாரணமாக மகப்பேறு மருத்துவத் துறையில் இயல்பாகப் பிள்ளை பெற வாய்ப்பிருந்தும் பயமுறுத்தி அறுவை சிகிச்சைக்குச் சம்மதிக்க வைக்கின்றனர். பல் வலி என்று சென்றால் சோதனைக்குப் பிறகு பல்லை எடுக்கவும், மற்ற பற்களையும் அடுத்து வந்து எடுக்கவும் தொடர்ந்து மருத்துவம் செய்ய வேண்டும் எனப் பல நோயாளிகளின் வருமானத்தைச் சுரண்டுகின்றனர். மருத்துவமனைகளின் நிர்வாகத்திற்குத் தகுந்தாற் போல் மருத்துவர்களும் வேறு வழியின்றி மருத்துவப் பணி செய்கின்றனர்.

மருத்துவக் காப்பீட்டு வழியாக மருத்துவம் பார்த்தால் காப்பீட்டுக்கு உரிய அதிகபட்ச காப்பீட்டுத் தொகையையும் சோதனை என்ற பெயரில் எடுத்துவிடுகின்றனர். மேலும் பல சோதனைகள் மருத்துவக் காப்பீட்டுக்கு உட்பட வில்லை என்று கூறி, காப்பீடு மூலம் கட்டணம் போக, மேற்கொண்டு கட்டணம் கட்டப்படுகின்றன. தமிழக அரசு வழியாகக் கட்டப்படும் மருத்துவக் காப்பீட்டுத் தொகை, மருத்துவச் சோதனைக்கும் மருத்துவம் பார்ப்பதற்கும் போதுமானதாக இல்லை.

அதனால் நோயாளிகளே கட்டணத்தைக் கட்ட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படுகின்றனர். இதனால் காப்பீட்டு நிறுவனங்களின் காப்பீட்டுத் தொகை பயன்படுத்தப்பட முடியாமல் காப்பீட்டு நிறுவனங்களே எடுத்துக் கொள் கின்றன. மொத்தத்தில் மருத்துவச் சேவை என்பதும், மருத்துவக் காப்பீட்டு கட்டணமும் இன்றைய சூழலில் அதிகம் மக்களையே ஏமாற்றுகின்றன.

Pin It