நகர்மயமாதல் வேகமாக நடந்து வரும் இந்நிலையில் பல்வேறு இடர்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக நகர் நோக்கி செல்வது தவிர்க்க இயலாதது. ஏனெனில் நகரில் மட்டுமே மக்களுக்கான பணிகள் அதிகமாயுள்ளன. அதே சமயம் கிராமப்புறங்கள் உலகெங்கயும் கைவிடப்பட்டு வருகின்றன. அவை அரசின் திட்டங்கள் ஆகட்டும் அல்லது தனியார் நிறுவனங்களாகட்டும் எவையும் கிராமப்புறங்களை மனதில் கொள்வதில்லை. கிராமப்புறங்கள் அரசின் ஓட்டு வங்கிகளாகவே உள்ளன. அங்கே சாதியம் என்னும் பொய்மை எளிதில் கட்டப்பட்டு மக்கள் மெய்யான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பப் படுகின்றனர்.
நகரப் பெருக்கம் என்பது இன்று அசுர வளர்ச்சி பெறும் நிலையினில் அது ஊரக எளிமை மனிதர்களின் குரல்வளையை நசுக்கியே நிகழ்கிறது. நகரங்கள் மக்களின் நடைபாதையினையும், நிழல் தரும் மரங்களையும் நீக்கி அது செல்வச் செழிப்பானவர்கள் மட்டுமே வாழ்வதற்குரிய இடமாக நிர்ணயம் செய்வதோடு, அங்கு இரவில் உறங்கும் அப்பாவி விளிம்பு நிலை மனிதரின் வாழ்விற்கும் உத்தரவாதமில்லை.
நகரம் என்பது நவீன மனிதனின் இன்றியமையாக் கனவாகவும், அதுவே சிறந்த வாழ்நிலை பேணும் இடமாகவும் நுகர்வு மனோ நிலை உருவாக்கப்படுகிறது. இதனை முதலாளித்துவ ஊடகங்கள் நன்கு முன் மொழிகின்றன.
விளம்பர படமொன்றில் ஒரு குழந்தையுடன் வரும் பாதசாரியினைக் கண்டு ஒரு பைக் ஒட்டி நிறுத்துகிறான். பாதசாரிகள், குழந்தைகள் போக்குவரத்திற்கு எவ்வளவு அபாயகரமானவர்களென்பது அத்திரைப்படம் மூலம் வெளியாகும் செய்தி. நடைபாதையில் நடந்து செல்பவர்களை வாகன ஓட்டிகள் ஏசுவது, பெண் உருப்பைச் சொல்லித் திட்டுவது, வண்டி ஒடித்து மிரட்டுவது, அரசே நடைபாதையை நீக்கி பேருந்து கட்டண உயர்வை ஏற்படுத்துவது என நடப்பவர்கள் இவ்வுலகில் வாழவே கூடாது என்றே அதிகாரமும் நிறுவனங்களும் மிரட்டுகின்றன.
பெரு நகர வளர்ச்சி சார்ந்த பெரிய சாலைகள், மோனோ ரயில்கள், மால்கள், கேசினோக்கள் என தாராளவாதக் கோட்பாட்டினை முன் மொழியும் நகரங்கள் அதீத செலவுகளை மேற்கொள்ளும் பிற்போக்குவாத, சாதீய திருமணங்களையும் நிகழ்த்திடும் இடமாகவும் உள்ளன. ஆனால் நகர்ப் பெருக்கம் சரியான திட்டமிடாத நிலையினில் மக்களை அந்நியப் படுத்துதல் கொடிய நிகழ்வாகவே இருக்கும். ஊரக சாலை மேம்பாட்டுக்கு 100 நாள் வேலைத் திட்டம் மோடி அரசால் கைவிடப் பட்டு அகன்ற நாற்கர சாலை மேபாடுகள் என்ற பெயரில் நடக்கும் பெரு வீதி அந்நியமாதலை என்ன என்று சொல்வது? கிராம மக்களுக்கு சாலைகள் தேவை இல்லாதவையா?
மற்ற காரணிகளோடு வேலைகள் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் வாக்குறுதி மக்களை நகரங்களுக்கு இழுக்கிறது. உலக மக்கள்தொகையில் அரைவாசி ஏற்கனவே நகரங்களில் வசிக்கின்றனர். 2050 ஆம் ஆண்டில் உலகின் மூன்றில் ஒரு பகுதியினர் நகர்ப்புறங்களில் வாசிக்க நேரும் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உற்பத்தி அதிகரிப்பு நகரங்களில் மக்கள் எண்ணக்கை கூடுவதன் காரணம். முதல் உலக நகரங்கள் என்பவை சிறிய மக்கள் தொகையினை மனதில் கொண்டு உருவாக்கப் பட்டவை. இரண்டாம் உலக நகரங்களின் தன்மை தொழில் நுட்பக் கூட்டின் காரணமாக வேகமாக வளர்ச்சியடைந்த போதிலும் மூன்றாம் உலக நகரங்கள் பெரும்பாலும் முதலாளித்துவ உற்பத்தி கூர்மைப் பட்டதாலும் ,கிராம நகர அந்நியமாதல் அதிகரித்தாலும் விளைந்தன.நகர வாழ்க்கை என்பது ஒரு முழு பெருமை கொண்ட வாழ்வாக மாறிப் போயிற்று. நோம் சொம்ஸ்கி பேரு நகர வளர்ச்சியின் விளைவாக இன்னும் கூர்மையடைந்த நிலையில் ராணுவ வளாகக் கட்டமைப்பு தோன்றும் எனும் சமூகவியள்ளரர் கருத்தினை ஒப்புக்க கொள்வதோடு அவை மக்காள் வெவேறு குழுக்களாக அன்னியப் படுத்தவும் கூடும் என்கிறார்.
நகர்ப்புறமயமாக்கல் விகிதம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதிக்கிறது, இது வறுமையை குறைப்பதற்கான செயலில் முக்கியமாகும். நகர்ப்புறமயமாக்கப்பட்ட ஒரு நாடு என்பது அதிக முதலீடுகள் மற்றும் வியாபாரங்கள் குவியும் இடம் என்று பொருள்படும், இது வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது, மேலும் அந்த கருத்தில் வளர்ச்சிக்கு மிகவும் பயனளிக்கும். ஆனால் அமர்த்தியா சென் இத்துடன் முரண்படுகிறார்.
வறுமைக் குறைப்பு' என்றால் என்ன என்பதுதான் பிரச்சனை. வறுமை வருமான அளவுகளால் மட்டுமே அளவிடப்பட்டால், நகர்ப்புறமயமாக்கல் விகிதங்கள் வருமானத்தில் அதிகரிக்கும், இதனால் வறுமை குறைப்புக்கு மட்டுமே இது உதவுகிறது. இருப்பினும், அமர்த்தியா சென் மற்றும் பிற பொருளாதார வல்லுனர்களின் கருத்துப்படி, வறுமை பல்வகைப் பரிமாணம் கொண்டது வருமான ஏற்றத்தினை மட்டும் கொண்டு இதனை அளவிட முடியாது.இப் பரிமாணமானது குறைந்த வருமான அளவைக் குறிக்கவில்லை, மாறாக வாய்ப்புகளும் உரிமைகளும் இழப்பதையே அவை குறிப்பிடுகின்றன என்பார் அவர்.
உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களில் 2050 க்குள் நகரங்களில் 54 சதவிகிதம் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அறிவு சார் செயல்பாடுகளை அடக்கிய திறமையான நகரங்களின் பல நன்மைகள் நன்கு புரிந்துகொள்ளப்பட்டாலும், இந்த விரைவான, அடிக்கடி திட்டமிடப்படாத நகரமயமாக்கல் ஆழ்ந்த சமூக உறுதியற்ற தன்மை, முக்கிய உள்கட்டமைப்புகள், நீர்நிலை நெருக்கடிகள் மற்றும் நோய் பரவக்கூடிய பரவலுக்கான ஆபத்துகளைத் தருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நகர்ப்புறங்களில் இருந்து இந்த திட்டமிடாத மாற்றம் தொடர்ந்து இந்த அபாயங்களை மேலும் அதிகரிக்கலாம்.
இந்த அபாயங்களை எவ்வாறு திறம்பட நிர்வகிக்கச் செய்ய முடியும் என்பதெல்லாம், நகரங்கள் எவ்வாறு ஆளப்படுகின்றன என்பதன் மூலம் தீர்மானிக்கப்படும். மக்கள் தொகை, சொத்துகள், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றின் அதிகரித்த செறிவு என்பது, நகர அளவில் உள்ள அபாயங்கள், சமுதாயத்தை முன்னெப்போதையும் விட அதிகமாக பாதிக்கும்.
நகரமயமாக்கல் காரணமாக பணிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. வணிகங்கள் மற்றும் அரசாங்கங்கள் ஒரு வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை தேவையை பூர்த்தி செய்ய போதுமான பணி உருவாக்க முடியாது. வேலையின்மை காரணமாக உடல் பாதுகாப்பு குறைந்து. வறுமை பரவுகிறது மற்றும் அனைத்திலும் முறையான திட்டம் இல்லையென்றால் ஆற்றல் சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, பொது போக்குவரத்து, கழிவு மேலாண்மை அனைத்தும் சிக்கலுக்குள்ளாகும்.
கடும் நுண்துகளிகள் மோட்டார் வாகன எரிபொருள் எரிப்பில் இருந்து வருகின்றன. புகைக்கரி, தூசி, முன்னணி மற்றும் புகை துகள்கள் சுகாதார அச்சுறுத்தல் ஏற்படுத்தும் . இதனால் மூளை பாதிப்பு, கற்றல் குறைபாடுகள் மற்றும் குழந்தைகள் அகால மரணம் ஏற்படும். உலக சுகாதார அமைப்பின் படி துகள் செறிவு கன மீட்டருக்கு 90 மைக்ரோகிராம் வரைகுறைவாக இருக்க வேண்டும். துகள் செறிவு 8 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் அளவில் மிகுந்து வருகிறது.
நகர வளர்ச்சிபாய்வதால் விலங்கு மற்றும் தாவர வாழ்க்கைக்கு இடர் ஏற்படும். பாயும் இயற்கை பல்வேறு நிலையில் பதிப்பு அடையும் . சிறிய உயிரினம் , ஒவ்வொரும் பூமியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்க்கையில் இந்த மாறுபாடு இல்லாமல், மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். உயிர் பல்வகைமை, கலப்படததில் இருந்து நீர் மற்றும் மண் ஆகியவற்றை பாதுகாக்கிறது, கடைகள் மற்றும் நகர் நிறுவனங்கள் ஊட்டச்சத்து மறுசுழற்சியை உடைக்கிறது மற்றும் மாசுகள் காற்றில் கலந்து உறிஞ்சி பேரழிவு உருவாகும்.
நகரமயமாக்கல் குறைந்த உடல் உழைப்பு மற்றும் ஆரோக்கியமற்ற ஊட்டச்சத்துக்கு வழிவகுக்கும் 2020 ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு இதய நோய், விகிதம் அதிகரித்துள்ளதையும் வளரும் நாடுகளில் உள்ள அனைத்து இறப்பு 69 சதவீதமாக உள்ளதையும் கணக்கிட்டிருககிறது தொற்று அல்லாத நோய்கள் பரவுவதையும் அது கணித்துள்ளது. மற்றொரு நகரமயமாக்கல் தொடர்பான அச்சுறுத்தல் தொற்று நோய்கள். விமான பயண மூலம் ஒரு நாட்டில் இருந்து அடுத்த நாட்டிற்கு பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பரவுவதை உறுதி செய்துள்ளது . கூடுதலாக, கிராமப்புற பகுதிகளில் இருந்து இடமாற்றம் மக்கள் புதிய நோய் தொற்ற காரணம் ஆகும். நோய் எதிர்ப்பும் இதனால் குறையும்
குற்றம் விரைவான நகரமயமாதல் குற்ற அதிகரிப்பை நிகழ்த்தும் .வன்முறைகளை அரசு குறைக்க இயலாத நிலை ஏற்படும் .அரசு எந்திரம் சரியான நிர்வாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் இது அதிகரிக்க வாய்ப்புண்டு; அதே நேரம் குற்றத்தடுப்பு ஊழியர் பற்றாக்குறை குற்றங்களை கட்டுப்படுத்துவதில் குறைபாடுகளை ஏற்படுத்தும்.
இது அச்சமூட்டச் சொல்வதல்ல வளர்ச்சி என்பது சம அளவில் இருக்க வேண்டும் என்பதர்க்க்காகச் சொல்வது. கிராமங்கள் மற்றும் நகரங்கள் இடையில் மனிதர் நாம் வேறுபாடு கொள்ள வேண்டியதில்லை அவை இரண்டும் மனிதர் மற்றும் விலங்கு போன்ற பல்லுயிர் நன்கு வாழ இயற்கை உருவாக்கிய வெவேறு நிலங்களாகும்.
கல்வி மற்றும் திறன் போதித்தலில் நகரமயமாதலால் அநேகம் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சரியாக திட்டமிடாத கல்வி, நகர் மயமாதல் இடர் களைய வலுவற்றதாகிறது. உதாரணமாக நகர் பெருக்கம் ஒன்றை மட்டும் மனதில் கொண்டு கட்டிடப் பொறியியல். கட்டிட கலை ஆகியன போதிக்கப் படுகின்றன .ஆனால் நகரக் கழிவு மேலாண்மை இத்துடன் செயலாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. நகர்ப் பெருக்கத்திற்கான கட்டிடவியல் கற்பதுடன் நகரின் திட்டவியலையும் பொறியாளர்கள் கணக்கில்கில் கொள்ள வேண்டும்.ஒரு நகரில் பெருங்கட்டிடங்கள் அவசியமா எவ்வளவு இடத்தினை மனிதர், விலங்கு மற்றும் தாவரங்களுக்கு என ஒதுக்க வேண்டும் என்ற திட்டத்தினை நகர வளர்ச்சிக் குழுமம் தொலை நோக்கோடு காண வேண்டும். எனவே நகரியம் என்னும் ஆய்வு பல்கலைக் கழகங்களில் நிகழ்த்தப் பெற்று அதன் மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே இத்தகு செயல் வடிவாக்கம் உருவாக வேண்டும்.
ஐ.நா. நகர்மயம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை என்ன?
நகர்ப்புற வளர்ச்சி நன்மைகளை உறுதிப்படுத்த அரசாங்கங்கள் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மக்கள்தொகை பரவலான விநியோகத்தை திட்டமிட்டு நிர்வகிக்க பல்வேறுபட்ட கொள்கைகள் மற்றும் உள்நாட்டு இடம்பெயர்வு தேவை.
நகர்ப்புற வளர்ச்சியை இன்னும் சீரான முறையில் விநியோகம் செய்வதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகள், அதிகப்படியான செலவினத்தைத் தவிர்க்கின்றன.
ஒரு நாட்டிற்குள்ளேயே ஒன்று அல்லது இரண்டு மிகப்பெரிய நகர்ப்புற பெருமளவில் கூட்டம் கூடுகிறது அதனை சீரமைக்க வேணடும்.
2000 ஆம் ஆண்டு முதல் சில நகரங்கள் மக்கள்தொகை சரிவை சந்தித்திருக்கின்றன, அவற்றில் பெரும்பாலானவை.
ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் குறைவான இனப்பெருக்க நாடுகளில் குடியேறிய அல்லது குறைந்து வரும் மக்களால் அமைந்துள்ளது.
உலகம் முழுவதும் ஐந்து நகர்ப்புறவாசிகளில் ஒருவர் ஒரு நடுத்தரமான ஐந்தாயிரம் மாத வருமானத்தில் வாழ்கிறார். அரசுகளின் மெய்யான சமூக ஆர்வம் மற்றும் மக்களின் சமநிலையாக்கமே இதற்கு சரியான தீர்வு.