“ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற முழக்கத்துடன் திருச்சி சிறுகனூரில் கூடிய தி.மு.கழகத்தின் 12ஆவது மாநில மாநாடு, கழகத்தின் வெற்றியை உறுதிசெய்து விட்டது.

தவழ்ந்து வந்து புறக்கடை வழியாக முதல்வர் பதவியை இரந்து வாங்கியவர் அல்ல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் காட்டிய வழியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையான மக்கள் பிரதிநிதி, முதலமைச்சர் அவர்.mk stalin 706நாடாளுமன்ற உறுப்பினரும், கழகத் துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி அவர்கள் தலைமையிலான 2026 திமுக தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் முதல்வர். இதனை வழக்கம்போல காப்பி பேஸ்ட் செய்யக் காத்திருக்கிறார்கள் நம் எதிரணியினர்.

2026 தேர்தலில் தமிழ்நாடு அணிக்கும், டில்லி அணிக்கும்தான் போட்டி என்ற நிலையில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பாஜக ஒன்றியஅரசு கூட, தமிழ்நாடு முதன்மை மாநிலம் என்று சான்று தருகிறது டில்லில் வைத்து. தமிழ்நாடு வந்தால் மட்டும் கதறுகிறார்கள்.

 மாநாட்டில் பேசிய முதல்வர் அவர்கள்

 மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம்,

புதுமைப் பெண்,

நான் முதல்வன்,

தமிழ் புதல்வன்,

காலை உணவுத் திட்டம்,

தாயுமானவன் திட்டம்,

சமூகநீதி, கல்வி வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள், தொழில் துறை வளர்ச்சிகள், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அரசு மேற்கொண்ட பல்வேறு நலத் திட்டங்கள் என்று பட்டியலிட்ட சாதனைகளால் ஒவ்வொரு குடும்பத்தினரும் பயன்பெற்றுள்ளனர். எனவே தமிழ்நாட்டை ஸ்டாலின்தான் ஆள்வார், திராவிட மாடல்தான் ஆட்சி அமைக்கும் என்பதை மீண்டும் அவர் உறுதிசெய்து இருக்கிறார்.

தமிழ்நாட்டின் நலனுக்காக ஒன்றிய அரசிடம் நாம் கேட்பது கல்விக்கான நிதி, நீர்வளத்துறை (ஜல் ஜீவன்) திட்ட நிதி, 100 நாள் வேலைத்திட்ட நிதி, பேரிடர்கால நிவாரண நிதி. ஆனால் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் கேட்டதைத் தரவில்லை. மாறாக நாம்கேட்காததைத் தந்துள்ளனர். அதாவது தமிழக ஆளுநர் மூலம் குடைச்சல், நீட் தேர்வு, நுழைவுத் தேர்வுகள், இந்தி மொழித் திணிப்பு என்று பட்டியல் நீள்கிறது என்பதை மாநாடு அம்பலப்படுத்தி இருக்கிறது.

அரசியலில் என்டிஏ கூட்டணியைக் கதிகலக்கி இருக்கிறது திருச்சி மாநாடு என்று தான் சொல்ல வேண்டும். அதனால்தான் மாநாட்டுக்கு முதல்நாள்வரை பேசாமல் இருந்த பாஜக, விஜயை தங்கள் என்டிஏ கூட்டணிக்கு வரச்சொல்லி ரகசியமாகப் பேசிக்கொண்டிருக்கிறது என்ற செய்து கசிந்து வந்துவிட்டது சமூக ஊடகங்களில்.

அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்து விட்டார் எடப்பாடியார். பாஜகவைத் தமிழ்மண் ஏற்றுக் கொள்ளாது.

கிரிக்கெட்டில் மெதுமெதுவாக விக்கட் எடுத்தாலும், எப்படி கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெறுகிறார்களோ அதுபோல, 200 தொகுதிகளுக்கு மேல் இமாலய வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கைத் தந்திருக்கிறது, திருச்சி திமுகவின் 12ஆவது மாநாடு!

- செ.ராஜா, பெஸ்ட் கூட்டமைப்பு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.