எடப்பாடி பழனிச்சாமி உலக வங்கியை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து விட்டார் போலிருக்கிறது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களில் சலுகையை அள்ளிவிட்டு இருக்கிறார்.

தமிழ்நாடு முதல்வர் மகளிர் உரிமைத் தொகை தடைபடாமல் கிடைப்பதற்கு ரூ.5000 ரூபாயை வழங்கியதற்கு பிறகு இவர்கள் தூக்கமின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் எதிரொலி தான் இன்றைய அறிவிப்புகள்.

ரூ.10,000 அறிவித்து விட்டால் பிகார் மாடலில் வெற்றி பெறலாம் என்று கற்பனையில் மிதக்கிறார்கள்.கடந்த தேர்தலில் மாதம் பெண்களுக்கு திமுக-வைவிட கூடுதலாக ரூ.500 சேர்த்து 1,500 ரூபாய் வழங்குவதாக இவர் அறிவித்த பிறகும் மக்கள் எடப்பாடியை நம்பத் தயாராக இல்லை. தமிழ்நாடு அரசு கடனில் மூழ்கி கிடக்கிறது என்று நேற்று வரை பேசியவர். ஆட்சிக்கு வந்தவுடன் எப்படி இந்த அறிவிப்புகளை அமல்படுத்தப் போகிறார் என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.

இதுவரை அவர் வெளியிட்ட சுமார் 16 அறிவிப்புகள் அனைத்தும் நிதி சார்ந்தது தான். அக்கட்சியின் தேர்தல் தயாரிப்புக் குழுவும் அவர்தான். இரண்டு நாட்களுக்கு முன் ஒன்றிய நிதி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும்போது தமிழ்நாடு மும்மொழி கல்வித் திட்டத்தை ஏற்காததால். ரூ.5000 கோடி இழந்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

எடப்பாடி அறிவிப்போடு இதையும் இணைத்துப் பார்க்க வேண்டும். இரட்டை எஞ்சின் ஆட்சிக்கு பச்சைக்கொடி காட்டியதால் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. பெண்களை அதிகாரப்படுத்துதல் என்ற தொலைநோக்கு திட்டத்தை திமுக அறிவித்து அதற்கு பத்தாண்டு காலம் இலக்கு நிர்ணயித்து அதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்டது தான் மகளிர் உரிமைத்தொகை.

இதை ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திட்டமாக மலினப்படுத்துகிறார். எடப்பாடியின். வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். "யார் கிட்ட கேக்குற....இந்த அண்ணன் கிட்ட தானடா கேக்குற" என்ற நடிகர் வடிவேலு வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.