தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் நேரத்தில் “பெரியார் வாழ்க” என்று முழங்கிய போது, அதிர்ந்துபோன பாஜக உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று எதிர்முழக்கம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

வெறும் 37 தமிழக உறுப்பினர்களின் முழக்கங்களுக்கே பதறுகிறது பாஜக என்றால், அந்த முழக்கங்களின் மூலம் தந்தை பெரியார் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துவிட்டார் என்பது உறுதியாகிறது. அதனால்தான் தமிழகத்தின் 37 கண்டு, இந்தியாவின் 303 அதிர்ந்து நிற்கிறது.

தந்தை பெரியாரின் தாடியில் இருக்கும் ஒவ்வொரு முடியும் கூடப் பார்ப்பனியத்தை எதிர்க்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

பெரியார், அவரின் கொள்கைகளை மீறி இந்தத் தமிழக மண்ணில் எந்தத் தாமரையும் மலரமுடியாது என்பதைக் கடந்த தேர்தல் உறுதி செய்து விட்டது.

சமூக நீதிக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ், பாஜக, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு, மக்களுக்கெதிரான பாசிசத்தைக் கட்டவிழ்த்து விடலாம்.

அப்பொழுது... அதற்கெதிரான மிகப்பெரிய தற்காப்பு ஆயுதம் தந்தை பெரியார் தான்.