ஏறத்தாழ 120 பக்கங்களைக் கொண்ட தங்கள் கொள்கை, செயல்திட்டம், விதிமுறைகளை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றை, நாம் தமிழர் கட்சி அண்மையில் வெளியிட்டுள்ளது.

“நாங்கள் அரசியல்வாதிகளல்லர், புரட்சியாளர்கள்” என்ற அட்டைப்பட அறிவிப்பும், “பல அமர்வுகள், ஆன்றோர் அவையினரோடு கலந்தாய்வு செய்ததன் விளைவே இந்த ஆவணம்” என்னும் முன்னுரைக் குறிப்பும், நம்மை ஒருவிதமான அச்சத்தோடுதான் நூலுக்குள் நுழைய வைக்கின்றன; ‘அடேயப்பா, விரைவில் புரட்சி வரப்போகிறது’ என எண்ணத் தூண்டுகின்றன.

jayalalitha_seeman_620

அக்கட்சியின் கொள்கை ஆவணம், என் போன்ற திராவிட இயக்க உணர்வாளர்களுக்கு உடன்பாடற்றதாக உள்ளது என்பதை நான் குறையாகக் கூற முடியாது. எல்லோரும் ஒரே கருத்தில் ஒன்றுபட வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. கருத்து வேறுபடவும், வேறுபடும் இடங்களை ஓங்கி ஒலிக்கவும் எல்லோருக்கும் உரிமை உண்டு.

ஆனால், ஆவணம் என்பது ஒரு பொதுக்கட்டுரை போல் அமைந்துவிடக் கூடாது. கட்டுரையின் தன்மை வேறு, ஆவணத்தின் அமைப்பு வேறு. செய்திப் பிழைகள் இல்லாமலும், சொல்லப்படும் செய்திகளுக்கு உரிய சான்றுகளை அடிக்குறிப்புகளாகக் காட்டியும் ஆவணம் தயாரிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படைத் தேவை. ஆனால் அவ்விரு தேவைகளும் இந்த ஆவணத்தில் அறவே பின்பற்றப்படவில்லை.

இரண்டாவதாக ஆன்றோர் அவையினரோடு பலமுறை அமர்ந்து கலந்தாய்வு செய்து எழுதப்பட்ட ஆவணத்தில் இத்தனை மொழிப் பிழைகள் (ஒற்றுப் பிழை, தொடர்ப் பிழை, ஒருமை பன்மைப் பிழை) இருத்தல் கூடாது. அவற்றைக் கூட அச்சுப் பிழைகள் எனக் கூறி விட்டுவிடலாம். ‘முழுமையான தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க விரும்பும் கட்சி’ என்பதால், மொழிநடை பற்றியும் கூற வேண்டியதாயிற்று.

மூன்றாவதாக, ஆவணத்தின் பல இடங்கள் தன்முரண் (சுயமுரண்) என்னும் நிலையைக் கொண்டுள்ளன.

இவை பற்றிய என் பார்வையை வெளியிடுவதற்கு முன், ஆவணத்தின் உயிர்நாடி எங்குள்ளது என்று பார்த்திட வேண்டும்.

சமூக, அரசியல் தளங்களில் தீர்க்கப்பட வேண்டிய முரண்கள் குறித்து ஆவணம் பேசுகின்றது. முதலில் தீர்க்கப்பட வேண்டிய முரண், இரு பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி, தமிழ்த் தேசிய இனத்திற்கும், இந்திய தேசிய இனத்திற்குமான முரணையும், இரண்டாவது பகுதி தமிழ்த் தேசிய இனத்திற்கும், திராவிட தேசிய இனத்திற்குமான முரணையும் சுட்டி நிற்கின்றன.

இவ்விரு முரண்களே, முதலில் வேரரறுக்கப்பட வேண்டியவை என்று நாம் தமிழர் கட்சி கருதுகின்றது.

ஏழாவது முரண்பாடாக, தீண்டாமை உள்ளிட்ட சாதிய முரண்பாட்டையும், எட்டாவது முரண்பாடாக ஆண் ஆளுமை, பெண்ணடிமை முரண்பாட்டையும் ஆவணம் சுட்டுகிறது. ஆனால், 7, 8 ஆம் முரண்பாடுகளை ஆவணம் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. “7, 8 ஆம் முரண்பாடுகள் மேற்கட்டுமானம் பற்றியதாகக் கருதப்படும் முரண்பாடுகள்” என்று எளிமையாக வரையறுத்து விடுகிறது.

வர்க்க வேறுபாடே அடித்தள முரண்பாடு என்றும், சாதி ஏற்றத்தாழ்வுகள் மேற்கட்டுமானத்தைச் சேர்ந்தவை என்றும் முன்பு உறுதிபடக் கூறிய பொதுவுடைமைக் கட்சிகளே, இன்று தங்கள் கோட்பாட்டினை மறுஆய்வு செய்து வருகின்றன. ஆனால் நாம் தமிழர் கட்சியோ, அதனை மிக எளிதாக மேற்கட்டுமானச் சிக்கல் என்று கூறிவிட்டது.

அதுமட்டுமில்லாமல், தங்கள் உரிமைகளுக்காக ஒடுக்கப்பட்ட சாதியினர் வெகுண்டு எழுந்து போராடி, அதனால் தமிழ்ச் சாதிகள் (அதாவது ஒடுக்கும் சாதியும், ஒடுக்கப்படும் சாதியும்) பிளவுபடும் நிலை ஏற்படுவதையும் நாம் தமிழர் கட்சி விரும்பவில்லையாம். “தமிழினம் பிளவுபடும் எந்தப் போக்கையும் கட்சி ஏற்காது” என்று ஆவணம் திட்டவட்டமாகக் கூறுகின்றது.

ஆக, சாதியின் பெயரால் தமிழனே தமிழனை ஒடுக்கினால், அதைப் பெரிதுபடுத்தாமல், அதற்காகத் தமிழினம் பிளவுபடாமல், ‘நாம் தமிழர்’ என்று ஆண்டான் – அடிமை நிலையிலேயே ஒற்றுமையாக இருந்துவிட வேண்டும் என்பதே ஆவணம் மறைமுகமாக எடுத்துரைக்கும் தத்துவம்.

ஊர், சேரி என வாழ்விடங்கள் இரண்டு இருக்கலாம். இறந்தால் புதைக்கச் சுடுகாடுகள் இரண்டு இருக்கலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கக் குவளைகள் இரண்டு இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும். அவையெல்லாம் மேற்கட்டுமான முரண்பாடுகள்தாம். தமிழரா, திராவிடரா எது சரி என்பதே முதன்மையான அடித்தள முரண்பாடு. அதைத்தான் முதலில் தீர்க்க வேண்டும் என்கிறது, முழுமையான தமிழ்த் தேசியம் பேசும் கட்சி.

இதிலே இன்னொரு வேடிக்கையும் உள்ளது. “திராவிடம் என்பது கலப்புக் கூட்டு இனத்தை அடையாளப்படுத்துமேயன்றி, தனிப்பட்ட ஒரு தேசிய இனத்தைக் குறிக்காது” என்னும் வரி, ஆவணத்தின் 9வது பக்கத்தில் காணப்படுகின்றது.

9ஆம் பக்கம் – திராவிடம் தனித் தேசிய இனமே இல்லை என்கிறது. 37வது பக்கமோ, தமிழ்த் தேசிய இனத்திற்கும், திராவிட தேசிய இனத்திற்குமிடையில் முரண்பாடு உள்ளதாகக் கூறுகின்றது. இல்லாத தேசிய இனத்தோடு எப்படி முரண்பாடு கொள்ள முடியும் என்னும் ரகசியத்தை ஆவணம் எங்கும் தேடியும் காண முடியவில்லை.

இன்னொரு முதன்மையான முரண்பாடு, இந்தியத் தேசியத்துடனான முரண்பாடு என்கிறது. தமிழ்த் தேசிய இனத்தை அடிமை இனமாக ஆக்கி இந்திய தேசியம் வைத்துள்ளதாகக் கூறுகிறது. அடிமை விலங்கை அறுக்க, நாம் தமிழர் கட்சி தரும் செயல்திட்டம் 101ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

“இந்திய அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன், சமனியம் (சோசலிசம்), மதச்சார்பின்மை, குடிநாயகம் ஆகியனவற்றில் உண்மையான நம்பிக்கை கொண்டு, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்தி வலிமைப்படுத்தக் கட்சி உறுதி ஏற்கிறது” – இதுதான் அடிமைத்தளை அறுக்கும் திட்டம். முழுமையான தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்பதை, இதைவிடக் ‘கூச்ச நாச்சமில்லாமல், இனி எந்தக் கட்சியாலும் வெளியிட்டுவிட முடியாது.

அடுத்து எந்தச் சான்றும் இல்லாமல், பல செய்திகளை ஆவணம் அள்ளித் தெளிக்கிறது.

“அண்ணல் தங்கோ முயற்சியினால் முகிழ்த்த தமிழர் கழகத்தை முறியடித்துத் திராவிடர் கழகத்தை நிறுவினர்” (ப.13)

“இந்து மதத்திற்கு மாற்றாகத் தமிழியத்தை முன்னிறுத்தாமல், திராவிடம் இந்துமதச் சீர்திருத்தம் பேசும்” (பக்.26)

“முழு இறையாண்மையுள்ள நிகர்மைத் தமிழ்த் தேசக் குடியரசைக் குறிக்கோளாகக் கொண்டு, தமிழரசுக் கழகத்தை (ம.பொ.சி.) நிறுவினார்” (பக்.14)

- இப்படி ஏராளமான உண்மைத் திரிபுகள்.

தமிழ்நாடு கோருவதாகத் தொடங்கி, சமஷ்டி ஆட்சிதான் கேட்கிறோம் என்று மாறி, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்புதான் சமஷ்டி கேட்டோம், இப்போது நிலைமை மாறிவிட்டது, பிரிந்து வாழும் உரிமையை வற்புறுத்தவில்லை என்ற நிலைக்குத் தமிழரசுக் கழகம் வந்து சேர்ந்தது. (சான்று – ‘ம.பொ.சி. – எனது போராட்டம்’ – இரண்டாம் பாகம்- பக்.414)

மேலும், “சுதந்திரத் தமிழ்க் குடியரசு தேவையென்று என் ஆயுளில் எங்குமே நான் பேசியது கிடையாது” என்று ‘இந்து’ ஏட்டிற்கு ம.பொ.சி. அளித்த பேட்டியையும் எஸ்.வி.ஆர். தன் நூலில் (‘சுயமரியாதை சமதர்மம்’ – பக்.727) பதிவு செய்துள்ளார்.

இத்தனை உண்மைகளும் ஆவணத்தில் மறைக்கப்பட்டுள்ளன. ம.பொ.சி. தனித் தமிழ்நாடு கேட்டது போலவும், திராவிட இயக்கம் இரண்டகம் செய்துவிட்டது போலவும் புனைந்து எழுதப்பட்டுள்ளது.

உண்மை அல்லாதனவற்றைப் பேசுவது, நாம் தமிழர் மேடைகளிலும் நடந்துள்ளதை நாடு அறியும்.

25.12.2010 அன்று, சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் (http://www.youtube.com/watch?v=BVot5rzq810&feature=youtu.be&t=5m55s) சீமான் ஒரு நிகழ்ச்சியைக் கூறினார். “எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி விடுகிறார். தந்தை பெரியார் அவர்களுக்குப் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். பெரியாரை சக்கர நாற்காலியில் அழைத்து வருகிறார்களாம். தந்தை பெரியார் மேடையிலேயே இருக்கும்போதே, தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., எனக்குத் தலைவர்கள் இருவர் – ஒருவர் கலைவாணர், இன்னொருவர் அறிஞர் அண்ணா என்று கூறினாராம். பெரியாரைப் பற்றிச் சொல்லவில்லையே என்று கூட்டம் கொந்தளிக்க, அந்த இரு தலைவர்களையும் உருவாக்கிய தலைவரே அய்யா பெரியார்தான்’ என்றாராம். கூட்டம் ஆர்ப்பரித்துக் கைதட்டியதாம்.”

seeman_2011977 ஆம் ஆண்டு முதலமைச்சரான எம்.ஜி.ஆர். 73 ஆம் ஆண்டின் இறுதியிலேயே இறந்துபோய் விட்ட அய்யா பெரியாரை எப்படிச் சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வந்திருக்க முடியும்? எவ்வளவு பெரிய வரலாற்றுப் புரட்டு!

இப்படித்தான் ஆவணமும், வரலாற்றைப் பல இடங்களில் புரட்டுகிறது.

பிறகு, மிகப் புத்திசாலித்தனமாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு, மனுவியம், மனுவாளர்கள் போன்ற சொற்களை எல்லாம் பயன்படுத்தி உள்ளனர். கடைசியில் ‘கலைச்சொல் விளக்கம்’ என்னும் உச்சகட்ட நகைச்சுவையும் இடம்பெற்றுள்ளது.

ஆவணத்தின் 8 ஆம் பக்கத்தில், மனுவாளர்கள் என்னும் சொல்லுக்கு அருகில் அடைப்புக்குறிக்குள் ‘ஆரியப் பார்ப்பனர்’ என எழுதப்பட்டுள்ளது. ஆவணம் முழுவதும், மனுவியம் எதிர்க்கப்பட வேண்டும், மனுவாளர்கள் ஆதிக்கம் கூடாது என்றெல்லாம் குறிப்புகள் உள்ளன.

117 ஆம் பக்கம் தொடங்கும் ‘கலைச்சொல் விளக்க’த்திற்குப் போனால், ஆரியன் என்றால் சீரியன், உயர்ந்தவன் என்றும், பார்ப்பான் என்றால் ஆய்வாளன், இளைஞன் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இங்குதான் நமக்குத் தலை சுற்றுகிறது.

மனுவாளர் என்றால் ஆரியப் பார்ப்பனர். ஆரியப் பார்ப்பனர் என்றால் சீரிய ஆய்வாளர் அல்லது உயர்ந்த இளைஞர். சீரிய ஆய்வாளரையும், உயர்ந்த இளைஞரையும் எதிர்க்க வேண்டும் என்று ஆவணம் சொல்கிறது, ஏன்?

இன்னொரு கலைச்சொல் விளக்கம், பிராமணன் என்றால் பேரமணன் என்கிறது.

‘பல அமர்வுகள், ஆன்றோர் அவையினரோடு கலந்தாய்வு செய்து’ இதனைக் கண்டுபிடித்திருப்பார்கள் போலும்! நாம் அறிந்தவரை, அமணர்கள் என்போர் சமணத்தின் ஒரு பிரிவினரே ஆவர். அவர்கள் பேரமணர்கள் ஆகி, பிராமணர்கள் ஆகி விடுவார்கள் போலிருக்கிறது.

சரி போகட்டும், திராவிடக் கட்சிகளைப் பற்றி இன்னொரு கடுமையான விமர்சனம் ஆவணத்தில் உள்ளது. இலவய அரிசி, மின் விசிறி, மின்கலக்கி, மாவாட்டி எனப் பல இலவயங்களை வழங்கி, தமிழர்களிடம் ஒருவிதமான மனநோயை உண்டாக்கித் தமிழர்களைத் ‘துய்ப்புப் பண்புள்ள வெறும் விலங்குகளாகவே’ திராவிடக் கட்சிகள் வைத்துள்ளனவாம். (பக். 26-27)

இல்லாத ஏழை, எளிய மக்களைத் ‘துய்ப்புப் பண்புள்ள வெறும் விலங்குகள்’ என விமர்சிக்கும் நாம் தமிழர் கட்சி, சென்ற தேர்தலில், அ.தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையில் இத்தனை இலவயங்களையும் தருவதாக அறிவித்த பின்னர்தானே, அக்கட்சிக்கு ஆதரவாக வாக்குக் கேட்டது? என்ன காரணம்? தமிழர்கள் வெறும் விலங்குகளாகவே என்றும் வாழவேண்டும் என்பதற்காகவா?

சரி, தேர்தலில் நிற்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்ன? ஆவணத்தைப் புரட்டுவோம்:

“ஆட்சி இன்பக் காட்சிகளைக் கனவிலும் கருதாது...” (பக்.20)

“கட்சி பதிவு செய்த நாளிலிருந்து, 5 ஆண்டுகளுக்குள் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் கட்சி போட்டியிடும்” (பக்.102)

இவ்வளவு ‘தெளிவான’ குறிக்கோள்களையும், செயல்திட்டங்களையும் கொண்டுள்ள நாம் தமிழர் கட்சியில் இணைவதும் அவ்வளவு எளிதானதாக இல்லை. அதற்குப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

‘ஆண், பெண், திருநங்கையர் ஆகிய முப்பாலினத்தவரை மட்டும்’ சேர்த்துக் கொள்வார்களாம். (நான்காவது பாலினம் வேறு உள்ளதா?)

இன்சொல் பேசவேண்டுமாம். எந்நேரமும் மக்கள் தொண்டில் ஈடுபட வேண்டுமாம். சுவருக்கு வெள்ளையடிக்க வரக் கூடாதாம். வீட்டையே இடித்து மறுபடியும் கட்டத் துணிய வேண்டுமாம்.

எல்லாம் சரி, உறுப்பினர் நடத்தை விதிகளில் நான்காவதாக ஒன்று இடம்பெற்றுள்ளது. அதைப் படித்தபோது உண்மையிலேயே நெஞ்சம் ஆனந்தக் கூத்தாடியது. கட்சி என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று தோன்றியது. இதோ, அந்த நான்காவது விதி,

“(உறுப்பினர்கள் எவரும்) மதுவகைகளையும், வெறியூட்டுப் (போதை) பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது” (பக்.106)

பழைய நட்பு உரிமையில், ‘செந்தமிழன்’ சீமானைப் பார்த்து இப்படிச் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது,

“அடடா, உடம்பு சிலிர்க்குதடா, தம்பி!”

Comments

36 comments

36
கி.பிரபா
அடக்கமும் தன்னடக்கமும் தேவைதான். ஆனால் அதற்காக முதல்வர் முன்னே அனைவரும் அச்சத்துடன் இருப்பது போல் தன்னடக்கத்தைக் காட்டுதல் மிகையாகத் தோன்றுகிறது. உணர்வுகளையும் உண்மைகளையும் புரியாத முதல்வரிடம் ஏன் அச்சப்பட வேண்டும்? முதல்வர் பதவி என்பது மாயையல்லவா? என்னவோ நடக்குது? ஒண்ணுமே புரியல!
arasan
அற்புதமான ஆணித்தரமான சான்றுகளுடன் எழுத்ப்பட்ட கட்டுரை. "பழைய நட்பு " பாசத்தில் சுப.வீ அண்ணன் கொஞ்சம் அடக்கியே வாசித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரே ஒரு வேண்டுகோள், "இடித்துரைப்பார் இல்லா மன்னன்" சீமான் இனியாவது கண் திறப்பாரா?.
Niyaayath Tharaasu
நாம் தமிழர் கட்சியினர் தங்கள் ஆவணத்தை (ஆணவத்தை) மறு ஆய்வு செய்ய வேண்டியதும் திருத்திக் கொள்வதும் முக்கியமே.... அதே போல், திரு. சு.ப.வீரபாண்டியன் நல்ல அறிஞர், ஆவணப் படுத்துவதில் வல்லவர், தமிழ் மொழிப் புலமை உள்ளவர் என்பது அனைவரும் அறிந்ததே அவரின் மோதிரக் கையால் குட்டு வாங்குவதற்கு நாம் தமிழர் கட்சியினர் கொடுத்து வைத்து இருக்கிறார்கள்.

நிற்க, மிக மிக முக்கியமான ஒன்றென்னவென்றால், இவ்வளவு திரமைசாலியான ஐயா சுபவீ தன் திறமையை யாருக்காக பயன்படுத்துகிறார் எப்படிப் பயன்படுத்துகிறார்??? அதை அவரும் மறுஆய்வு செய்து திருத்திக் கொள்ள வேண்டும்..... செய்வாரா?
senthil kumar
சீமான் அண்ணன் தன்னுடைய நண்பர்கள்கிட்ட ஏன் என்கிட்டே கூட சந்திக்கும் பொது சொல்லிருக்காரு,"சுபவீ அண்ணா இப்பெல்லாம் சமூகத்த கருணாநிதி கண்ணாடி வழியாதான் பார்க்குறாரு"

இந்த ஆவணத்த பார்க்கும் போது அண்ணனும் இந்த ஆவணத்த உருவாக்குனவங்களும்! யார் கண்ணாடி வழியா தமிழ் சமூகத்த பார்க்குறாங்கன்னு தெரியல?????
Guest
சீமானோட ஆவணமெல்லாம் இருக்கட்டும்.. ஆகப்பெரிய பெரியாரியவாதியான உங்களுக்கு "திராவிடர்' இயக்கத்துக்கும் "திராவிட" இயக்கத்துக்கும் வித்தியாசம் தெரியுமா? தெரியாதா? பெரியாரின் இடதுசாரி தமிழ்த் தேசியம் நூலில் ஒரே ஒரு இடத்திலாவது 'திராவிடர்' என்ற சொல்லை பயன்படுத்தினீரா? சொல்லுங்கள் மிஸ்டர் "திராவிட" இயக்க தமிழர் பேரவையாரே
seyed muhammed
சுபவீ அவர்களே!நன்றி நன்றி நன்றி!
ஆவணத்தின் உள்ளிருப்பை வெளியே கொண்டு வந்து கொட்டியதற்கு.ஜாதிய திமிரும் பார்ப்பனர்களுக்கு அடிமை ஊழியம் செய்யும் அற்ப்பத்தனமும் சிலை வணக்க மூட நம்பிக்கையும் நிரம்பி தழும்பும் ஒரு சமுகத்தினரால் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் இது போன்ற கிறுக்கல்கள் இல்லை என்றால் தான் ஆச்சரியம்.
செந்தில் மணி போன்ற கைப்பிள்ளை கதாபாத்திரங்கள் தமிழகத்தின் நீண்ட கால சாபம்.பார்ப்பனியத்தை அது பிரசவித்த ஜாதியத்தை தூக்கி கொண்டலையும் முன்னால் இந்நாள் நகைச்சுவை கதாபாத்திரங்கள் மனித சமுகத்தின் அவலம்.குறிப்பாக தமிழ் சமுகத்தின் அவலம்.இவர்களுக்கு சுதந்திரம் அல்ல பிரச்சனை.இவர்களின் எல்லா நோக்கும் காசு காசு காசு.காசுக்கு முன் செல்லாதடி குதம்பா.
Guest
இடைகால கட்டுரையாய ulladhu virivana katturai vendum
[email protected]
சீமான் மட்டும் அல்ல வைகோ நெடுமாறன் போன்ற தலைவர்கள் அனைவருமே ஜாதீய பற்று உள்ளவர்களே தமிழீழ போரின் உச்ச கட்டத்தில் திருமா தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்து நமது ஒற்றுமையை உணர்த்துவோம் என்று கூறிய போது ஒரு தலைவன் கூட இன்றுவரை அதுபற்றி பேசவில்லை காரணம் பறையன் பேசசை நாம் என்ன கேட்பது என்ற் ஜாதீய திமிரே
iraasothy
நியாயத் தரராசு கேட்டது மிகவும் சரி. சுபவீ தன் திறமையை தனியே கீற்றுவில் மட்டுமே பயன்படுத்துவது ஏன்?
Guest
yapadiyavathu Dravidianai kapartri vidungal .tamilan satholiyatum.
THAMIZH MAHAN
'Suba Vee' is in bad boys company.His voice is not his own. It is his [present] corrupted anti Thamizh MASTER's voice. Suba Vee is fully aware that Inthiyam and Diraavidam are tottally against the Peaple of Thamizh Naadu.
ரெ.மகேந்திரன்
நான் சரியாக உங்க அளவுக்கு தமிழ் மற்றும் வரலாற்று உண்மை தெரிந்தவன் அல்ல .அண்ணன் திருமாவளன் ,முத்தமிழ் அறிஞர் கலைஞர் ,அய்யா சுப வீ போன்ற ஆண்ரோர்கள் பேசும் தமிழை கேட்டும் . அதிலிருந்து தமிழின் தன்மைகள் அதன் வரலாறும் உணரபெற்றேன் . இப்படி தமிழறிவை பெற்ற எனக்கே இது ஏற்புடையதாக இல்லையே . வரலாற்றை முழுமையாக படித்துணர்ந்த உங்களுக்கு சொல்லவே தேவையில்லை .நீங்கள் வாழும் காலங்களிலே தமிழ் வரலாறு பாடாய் படுகிறதே .பின் தமிழ்நாட்டின் எதிர்காலம் பெரிய ?தான் .நான் நினைக்கிறேன் ஏதோ ஒரு பின்சக்தி அவரை செயல்படுத்துகிறது .பின்னர் ஏன் இப்படி பிதற்றுகிறார் . ஒரு வேலை அனைய போற விளக்கு இப்படித்தான் சுடர் விட்டு எரியுமோ .காலம் பதில் சொல்லும் காத்திருப்போம் . நன்றி ...
Guest
ஆவணத்தில் தமிழ் எழுத்து பிழை ஒன்றும் தமிழை கொன்று விடாது, திராவிட கட்சிகள் தமிழனை அழித்துகொண்டிருப்பதை விட.தமிழனுக்கு ஏதாவது நல்லது செய்துவிட முடியாதா என்னும் நோக்கமும் ஆர்வமும் இருக்கிறது அவர்களிடம் அது போதும்,நல்லது செய்ய தமிழறிவு தேவை இல்லை.தமிழ் அறிஞர் பெருமக்கள் கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு செய்யும் தொண்டை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.அரசியல் கட்சிகளுடன் சாராமல் ஒரு அமைப்பு தமிழனுக்காக உருவாவதைக்கூட விரும்பாத அளவிற்கு அரசியல் இந்த மனிதர்களை எப்படி மாற்றி வைத்திருக்கிறது பாருங்கள்,சுப வீர பாண்டியன் அய்யா அவர்கள் எவ்வளவோ தெளிவான சிந்தனைகளை வெளியிட்ட காலங்கள் போய் ஏன் இப்படி ஒரு கட்டுரை என்றே புரியவில்லை.யாரையும் நம்ப கூடாது போல.எல்லாம் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் என்பதை நிரூபித்து விடுகிறார்கள்.தமிழனின் வீரம்,நேர்மை,போராடும் குணம் ,இன்னும் பிற நற்பண்புகள் எல்லாம் மறைந்து,ஒவ்வொரு தனி மனிதனும் தமிழ் நாட்டில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியிலோ அல்லது ஜாதி கட்சியிலோ சார்ந்து தனது சொந்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்ளும் மனப்பான்மை,தங்கள் வாழ்வை நிலைநாட்டிக்கொள்ள பொய்,ஊழல் ஏமாற்றுவேலைகள் செய்துகொண்டு சக மனிதனை அழித்து தான் வாழும் சுயநலவாதிகளாக தமிழனை முழுமையாக மாற்றியதன் முழு பெருமையும், கடந்த 25 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆண்டுவரும் இரு திராவிட கட்சிகளை மட்டுமே சேரும்.என்ன தமிழன் வாழ்ந்திருக்கிறான் இந்த திராவிட கட்சிகளால்.இவர்கள் பேசுகிறார்கள் உண்மையிலேயே தைரியமாக போராட துணிந்திருக்கும் ஒரு அமைப்பைப்பற்றி.இந்த இரு திராவிட கட்சிகளை ஒழித்தாலே உண்மையான திராவிடனை மீட்டு விடலாம்.இந்த இரு திராவிட கட்சிகளை ஒழித்தாலே தமிழ்நாடு செழிப்படைந்து விடும்.பின்னர் நாம் போராடலாம் சிங்களவனை எதிர்த்து.இனியும் உண்மை பேச தயங்கும் இந்த அரசியல் கட்சி சாரும் மனிதர்களின் தவறான போதனைகளை கேட்காமல் நேர்மையான சிந்தனையோடு செயல்படுவோம்.ஒன்றே சொல் நன்றே சொல் , நெஞ்சுக்கு நீதி எல்லாம் ஊருக்குதான் உபதேசம் போல.இந்த அளவிற்கு எரிச்சலடைவதால் நான் ஏதோ நாம் தமிழர் அமைப்பை சார்ந்தவன் என்று நினைக்க வேண்டாம்.நான் எந்த அமைப்பையோ கட்சியையோ சாராத புலம்பும் ஒரு சராசரி தமிழன்.தமிழ் வரலாறோ திராவிட வரலாறோ இவர்கள் அளவிற்கு தெரியாதவன் தான்.அது சரி இவ்வளவு அறிவு பெற்றும் நேர்மை,நடுநிலை,சுயமரியாதை இலையே இவர்களிடம்.அய்யா அவர்களுக்கு எனது ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென்றால் இந்த கேவலாமான அரசியல் கட்சிகளை விட்டுவிட்டு தனி மனிதனாக நேர்மையாக தங்களால் ஆனதை இந்த தமிழுக்கு செய்யுங்கள்.இந்த தமிழர்கள் உங்களுக்கு என்றும் நன்றியோடு இருப்பார்கள்.
chandran
ஈழத்தில் பல லட்ச்சம் மக்கள் படுகொலை செய்ய பட்ட போது கருனாநிதியின் நிழலில் கை கட்டி வேடிக்கை பார்த்தவர் தானே இந்த சு.ப.வீ...
தமிழ்த்தம்பி
சுப.வீ கைக்கட்டி வேடிக்கை பார்த்தது இருக்கட்டும் சந்திரன். நீங்க , சாமான்( ஸ்ரிமான்) எல்லாம் என்ன செய்துட்டு இருந்தீஙக...? எத்தனை காங்கிரஸ் காரனை வீழ்த்தினீங்க.. கிளம்பி வாங்க... திருப்பூரில் மட்டும் 500 சிங்களவன் வேலை பார்க்கிறான்.. .. ஆவணம் ஏன் இப்படிக் கேவலமாக இருக்குது என்றால், லூசுப்பசங்க மாதிரி ஒருத்தர், எல்லாம் அமெரிக்கா சதி, நெடுமாறன் சாதி வெறியர், அது இது என்று உளறார்.. என்னமோ திருமா அண்ணன் சாதி ஒழிப்பு இயக்கம் நடத்திட்டு இருக்கிறது போல.. இங்கு செய்தி, "நாம் தமிழர் கட்சி ஆவணம் – ஒரு பார்வை ". தெளிவான சுப,வீயின் கட்டுரைக்கு தெளிவாக மறுப்பு கொடுங்கள்..
சம்பூகன்
மிகச்சரியான பதிலடியை அய்யா சுப.வீ தந்திருக்கிறார்.நாம் தமிழர்களுக்கு ஆதரவாக எழுதுபவர்கள் யாராக இருந்தாலும் நேர்மையாக இதற்கு பதில் சொல்லுங்கள்.அதை விட்டுவிட்டு ’சோ’பார்ப்பானைப்போல பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்லவேண்டாம். ம.பொ.சி.யின் மறுபதிப்பாக சீமான் உருவாகியிருக்கிறார். சினிமா தொழில் முடிந்துவிட்டது. இப்போது அரசியல் தொழிலுக்கு வந்துள்ளார். எப்போதும் எதார்த்தம் அறியாத உணர்ச்சிமயமான ஒரு இளைஞர் கூட்டம் தமிழகத்தில் உண்டு. அக்கூட்டத்தில் வெகு சிலர் சீமான் பின்னால் உள்ளனர். கூட்டம் கேட்டு கை தட்டும் இவர்களால் தமிழர்களுக்கு துளி அளவும் நன்மை விளையப்போவது இல்லை.கொஞ்ச நஞ்ச பேர்களுக்கும் தமிழகத்தைப் பற்றிய உண்மை வரலாறைச் சொல்லவேண்டாமா?இப்படியா அப்பட்டமாக புளுகுவது.கொடுமையடா..கொடுமை..நாம் தமிழர்களின் நிலைமை இப்படியா ஆகவேண்டும்? என்னமோ ஏதோன்னு ரொம்பப் பேர் பெருசால்ல நெனச்சாங்க!இது என்னடான்னா...காலிப் பெருங்காய டப்பாவால்ல இருக்கு.அப்பு...உலகமே உங்க வீட்டுக்குள்ள வந்துக்கிட்டு இருக்கு.நீங்க என்னடான்னா...நாம் தமிழர்குறீங்க...அப்புறம் நாம் இந்த ஜாதிங்குறீங்க...முதல்ல ஜாதிய விட்டுட்டு வாங்க.அப்புறமா நாம் தமிழர்கள்னு பேசலாம்.என்ன...நான் சொல்றது புரியுதா?
m.viswanathan,mumbai
I endorse views expressed by mr.ramachandran and sambugan
Vaira Muthu
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் திராவிடத்தை வீழ்த்த ஆரியம் வெவ்வேறு ஆயுதங்களை கையில் எடுத்து தோற்று இருக்கிறது. அதன் தொடர்ச்சி தான் இந்த ஆவணம். திராவிடம் இதையும் எதிர்கொள்ளும். வெல்லும்...
mrugadhan
“ஆட்சி இன்பக் காட்சிகளைக் கனவிலும் கருதாது...” (பக்.20)

“கட்சி பதிவு செய்த நாளிலிருந்து, 5 ஆண்டுகளுக்குள் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் கட்சி போட்டியிடும்” (பக்.102)

இதில் என்ன அய்யா முரண் கண்டீர்? ஆட்சி என்ற ஒன்றை மட்டும் கருத்தில் கொள்ளாது தேர்தலில் பங்கெடுப்போம் என்றே என்னால் புரிந்து கொள்ளப்பட்டது..!! அவர்கள் ஒன்றும் தேர்தல் அரசியலில் ஈடுபடமாட்டோம் என்று சொல்லவில்லையே?
raja
once i said to Mr.Mani (Kolathur) this seeman try to oppose Periarism by naming his party as NAAM TAMILAR and by speeking about Ma.Po.Si who apposed Periyar and Dravidaism.

It is not a new or unexpected because Seeman never ever with a historical knowledge...... even when he speak in Periyar Dravidar Kalaga Stage also
.Now this bunch of thoughts is revealed by Nedumaran(Always support India,Indain Government he appose only Kerali in Foreign Ministry...See Dhinamani Essay),Maniarasu ( once said Ramar is tamil god) and oter ppeoples.
தமிழ் மணி
கீற்றுவில் நச்சு கக்கிய சு.ப.வீக்கு
'நாம் தமிழர்' என்று எம்மினத்தை ஒன்றிணைக்கும் அவலம்! நீ யாரென கேட்டால் இந்தியன் என்றும், திராவிடன் என்றும் தன்னை கூறிக்கொள்ளும் இந்த இழிநிலை உம்மைப்போன்ற கேடுகெட்ட மதியாளர்களால் தான் என்பதை மறுக்கமுடியுமா? எம் தாய்நாட்டில் அரசியல் துறையிலும் அதிகார மையத்திலும் என் இனம் இரண்டாம் தர குடிமக்களாக மாறி நிற்கும் அசிங்கம் உம் போன்ற திராவிடம் வளர்த்த தலைவர்களால் வந்த கேடுதான் என்பதையும் மறுக்கமுடியுமா? *** ****** **** *** சாதிய வேறுபாடு பற்றிப்பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது. ஊருக்குவெளியே குடியிருப்புகளைக்கட்டி இன்னும் சில தலைமுறைக்கு இங்கு வாழ்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று திட்டமிட்டு அடையாளப்படுத்துவோரை பட்டிமன்றம் நடத்தி பாராட்டிப்பேசும் உங்கள் வேலை உளரங்கத்தில் தொடரட்டும்...சொல்குற்றம், பொருள்குற்றம்,இலக்கணகுற்றம் இன்னும் பல குற்றங்கள் வரத்தான் செய்யும் எம்மிடம். என்னசெய்ய உம்போன்ற தமிழை விற்றுப்பிழைப்போரிடம் அல்லவா எம் தமிழ் அடைபட்டு கிடக்கிறது!. மீட்டெடுப்போம் எம் மொழியை!, எம் இனத்தை!,எம் நாட்டை!.{அது வரைச் சாவாதிருங்கள்} தமிழன், தமிழினம் என்றால் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ஏன்? வீட்டில் தமிழைப் பேசாதீர்கள்!, வீதியில் தமிழைப் பேசாதீர்கள்!; தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி. தமிழுக்கும், அறிவியலுக்கும் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் எனவே ஆங்கிலத்தைப் படி படி என்றும், உன் தாய்மொழி தமிழை மடி மடிஎன்றும் உமக்கு உபதேசம் செய்தோரை உங்கள் பகுத்தறிவு என்றாவது பரிசோதித்தது உண்டா? இன்றும் உம் போன்றோர் பிழைப்பு நடத்தும் அடிப்படை கட்டுமானத்தின் அடிச்செங்கலை உருவியவர்களை அடையாளம் காண மறுக்கும் மர்மம் என்ன? தற்போது சுகமாய் வாழ்கிறோம் ஏன் சுண்டுவிரலை அசைத்து சுகவீனப்படவேண்டும். இப்படியே இனத்தைக் காட்டிக்கொடுத்து இருக்கும் வரை இனிய தமிழ் பேசி இன அழிப்பு செய்தோரை தாங்கிப்பிடிக்கும் வேலையோடு இனி ஒருவன் என் இனம் தமிழினம் என்றால் முதல் ஆளாய் நின்று மூக்குடைப்பேன் என்கின்ற உம் போன்றோரை எப்படி சேர்ப்பது? இது போன்று கூச்ச நாச்சமில்லாமல் எப்படி உங்களால் எழுதமுடிகிறது? ஒரு மனிதனின் மாற்றம் கீழ் நோக்கியதா? மேல்நோக்கியதா? அது மற்றொரு மனிதனுக்கு நன்மை பயக்குமா?அல்லது தீங்கிழைக்குமா? என்ற சராசரி ஆய்வு செய்யக்கூட உங்களுக்கு மனம் வரவில்லை!. ஒரு தமிழன் தன்னைத் தமிழன் என்றும் என் இனம் தமிழினம் என்று கூறிக்கொள்வது உங்களுக்கு இவ்வளவு நமச்சலை ஏற்படுத்துவது ஏன்? மீண்டும் எழுதுவேன்.....
[email protected]
மிகச்சரியான பதிலடியை அய்யா சுப.வீ தந்திருக்கிறார்.நாம் தமிழர்களுக்கு ஆதரவாக எழுதுபவர்கள் யாராக இருந்தாலும் நேர்மையாக இதற்கு பதில் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு ’சோ’பார்ப்பானைப்போல பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கு விலை சொல்லவேண்டாம். ம.பொ.சி.யின் மறுபதிப்பாக சீமான் உருவாகியிருக்கிறார். சினிமா தொழில் முடிந்துவிட்டது. இப்போது அரசியல் தொழிலுக்கு வந்துள்ளார். எப்போதும் எதார்த்தம் அறியாத உணர்ச்சிமயமான ஒரு இளைஞர் கூட்டம் தமிழகத்தில் உண்டு. அக்கூட்டத்தில் வெகு சிலர் சீமான் பின்னால் உள்ளனர். கூட்டம் கேட்டு கை தட்டும் இவர்களால் தமிழர்களுக்கு துளி அளவும் நன்மை விளையப்போவது இல்லை.கொஞ்ச நஞ்ச பேர்களுக்கும் தமிழகத்தைப் பற்றிய உண்மை வரலாறைச் சொல்லவேண்டாமா?இப்படியா அப்பட்டமாக புளுகுவது.கொடுமையடா..கொடுமை..நாம் தமிழர்களின் நிலைமை இப்படியா ஆகவேண்டும்? என்னமோ ஏதோன்னு ரொம்பப் பேர் பெருசால்ல நெனச்சாங்க!இது என்னடான்னா...காலிப் பெருங்காய டப்பாவால்ல இருக்கு.அப்பு...உலகமே உங்க வீட்டுக்குள்ள வந்துக்கிட்டு இருக்கு.நீங்க என்னடான்னா...நாம் தமிழர்குறீங்க...அப்புறம் நாம் இந்த ஜாதிங்குறீங்க...முதல்ல ஜாதிய விட்டுட்டு வாங்க.அப்புறமா நாம் தமிழர்கள்னு பேசலாம்.என்ன...நான் சொல்றது புரியுதா? மேலும் சீமான் மட்டும் அல்ல வைகோ நெடுமாறன் போன்ற தலைவர்கள் அனைவருமே ஜாதீய பற்று உள்ளவர்களே தமிழீழ போரின் உச்ச கட்டத்தில் திருமா தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்து நமது ஒற்றுமையை உணர்த்துவோம் என்று கூறிய போது ஒரு தலைவன் கூட இன்றுவரை அதுபற்றி பேசவில்லை காரணம் பறையன் பேசசை நாம் என்ன கேட்பது என்ற் ஜாதீய திமிரே
சனியன்
சீமான் = அம்மா பிள்ளை,
சுபவீ = அய்யா பிள்ளை
வழிப்போக்கன்
மனிதன் சந்தர்பமும் சூழ்நிலைகளையும் எதிர்நோக்கும் பொழுது ,,,அவன் சந்தற்பவாதிய அல்லது சுயநல வாதியா என்பது தெளிவாக வெளிப்பட்டு விடுகிறது. போலி பொது நலவாதிகளின் தாக்கத்தை தோலுரித்து காட்டும் அருமையான ஆக்கம்.
arakkonathan
ஒரு தமிழன் தன்னைத் தமிழன் என்றும் என் இனம் தமிழினம் என்று கூறிக்கொள்வது உங்களுக்கு இவ்வளவு நமச்சலை ஏற்படுத்துவது ஏன்?
elilan
நாம் தமிழர் ஆவணத்தில் கருத்துப்பிழை கண்டுபிடிக்கமுடியாத சு.ப.வீரபாண்டியன் அவர்கள் ஒற்றுப்பிழை,ஒருமை பன்மைப் பிழை கண்டுபிடிக்க முனைந்திருப்பது ஆவணம் மிகவும் கருத்து செழுமையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதையே காட்டுகிறது.
ஆறுமுகம்
என்ன சொல்ல வருகிறார்? ”தமிழினம் பிளவுபடும் எந்தப் போக்கையும் கட்சி ஏற்காது” என்பது எந்த வகையில் தவறு? சாதிய அடிப்படையில் சண்டையிட்டு பிளவுபட்டு ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்து செத்து மடிய வேண்டும் என்கிறாரா? ஏன் குதர்க்கமான விளக்கம்? தமிழன் தலையில் இதுவரை மிளகாய் அரைத்தது போதாதா? இனப்படுகொலை நடக்கும் போது கூட்டணியல் தொடர்ந்தீர்களே! அந்த அரசுக்கு ஆதரவு தந்தீர்களே பணத்தையும் பதவியையும் பெற்றுக் கொண்டு அதற்க்கு நன்றிகடனா? ”இந்திய அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பது” அரசியல் கட்சிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விதிதானே அது. தாங்கள் ஆதரிக்கும் திமுக தனிநாடு சுயாட்சியை வலியுறுத்தியதா? வலியுறுத்துகிறதா? இந்து மத எதிர்ப்பு என்ற வெறியை ஊட்டி தமிழர்களின் சொத்துகளை பார்பனர்களிடம் செல்ல வழிவகைதான் செய்தனர். கம்யூனிச ரஷ்யாவிலேயே கிருஸ்தவம் தான் கோலோச்சி கொண்டிருக்கிறது. மதத்தை தவிர்த்து மக்களை விலக்கி வைக்க முடியாது. ஒரு சொல்லுக்கு பல பொருள் இருக்கும் அவை அத்தனையையும் சொல்வதானால் அகராதியா அது மாறிவிடும். பின்னர் அது ஆவணம் அல்ல அகராதி என்று குற்றம் சாட்டபடும். தேவயைான பொருள் மட்டுமே தருவது மரபும் கூட. ”நாம் தமிழர்” என்பதை வெருப்பவர்கள் தாங்கள் இதுவரை செய்து வந்து திராவிட வியாபாரம் படுத்து விடுமோ என்ற கவலையில் கூறுவதாக உள்ளது. ”துய்ப்புப் பண்புள்ள வெறும் விலங்குகளாகவே” அதை காட்டித்தானே திமுக ஆட்சியை பிடித்தது அதை காட்டிதானே அடுத்த தேர்தலிலும் அறிக்கை வந்தது ”துய்ப்புப் பண்பு” இல்லை யென்றால் அதை திக ஏன் எதிர்க்க வில்லை. மாறாக திமுக வோடு கூட்டுதானே வைத்தது. ”பழைய நட்பு உரிமையில், ... போல் இருக்கிறது,” - அப்படியானால் கட்டுரையாளர் சீமானுடன் சேர்ந்து போதை பயன்படுத்தியுள்ளாரா என்ற வினா எழுகிறதே ...
வண்டாரியான்
சு.ப.வீ குறிப்பிட்ட 7 ,8 ஆம் முரண்பாடுகள் உங்கள் பார்வைக்கு 7 ,8 ஆம் மேற்கட்டுமானம் பற்றியதாகக் கருதப்படும் முரண்பாடுகள்: இவை தமிழ்நாட்டுச்சூழலில் பேரளவில் தமிழ்த் தேசியக்கட்டுமானத்தையும், பொருள் கட்டமைப்பையும் பாதித்து வருகிறது என்பதைக் கட்சி உணர்கிறது. சாதியத் தீண்டாமை முரண்பாடுகளைத் தீர்க்கும் பரப்புரைகளும், ஒடுக்கும் ஆற்றல்களுக்கு எதிராக உரிய போராட்டங்களும் மேற்கொள்ளப்படும். தமிழினம் பிளவுபடும் எந்தப்போக்கையும் கட்சி ஏற்காது.

இதில் சாதியின் பெயரால் தமிழனைத் தமிழன் அடக்கி ஒடுக்கலாம் என்று மறஞ்சிக்கிட்டு, ஒளிஞ்சிக்கிட்டு எங்கே சொல்லியிருக்கு? விமரிசனத்தை படித்துவிட்டு கருத்துப்பரிமாருவோர் முடிந்தால் கொஞ்சம் எட்டியும் பாருங்கள், ஏதாவது தெரிகிறதா? சு.ப.வீ யின் கந்தலாய் கிழிந்து தொங்கும் திராவிட முகத்தைத் தவிர! நம்மில் பெரும்பாலனவர்கள் ஆவணத்தைப் படிக்கமாட்டோம் என்ற நம்பிக்கை மதிப்புக்குரியவருக்கு!(பொய்யாக்குவோம்). பிறர் பேச்சை கேட்கவேண்டாம் அவசியம் படியுங்கள் ஆவணத்தை, பின்பு பேசுவோம். (தமிழ்த்தம்பி போன்ற அசிங்கங்கள் {சிங்கங்கள்}உன் இனம் என்னவென்பதை உறுதிப்படுத்து)! மீண்டும் எழுதுவேன்....
எட்வின் ப்ரபாகரன்
////அதுமட்டுமில்லாமல், தங்கள் உரிமைகளுக்காக ஒடுக்கப்பட்ட சாதியினர் வெகுண்டு எழுந்து போராடி, அதனால் தமிழ்ச் சாதிகள் (அதாவது ஒடுக்கும் சாதியும், ஒடுக்கப்படும் சாதியும்) பிளவுபடும் நிலை ஏற்படுவதையும் நாம் தமிழர் கட்சி விரும்பவில்லையாம். “தமிழினம் பிளவுபடும் எந்தப் போக்கையும் கட்சி ஏற்காது” என்று ஆவணம் திட்டவட்டமாகக் கூறுகின்றது./// ஜாதி பிளவுகளை எதிர்த்து போராடுவோம் என்று தான் நாம் தமிழர் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. உண்மையை சு.ப.வீ. திரிக்கிறார்.
//ஊர், சேரி என வாழ்விடங்கள் இரண்டு இருக்கலாம். இறந்தால் புதைக்கச் சுடுகாடுகள் இரண்டு இருக்கலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கக் குவளைகள் இரண்டு இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும்./// "தமிழர் சுடுகாடு" என்று உருவாக்குவதாக தான் ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. மீண்டும் சு.ப.வீ உண்மையை திரிக்கிறார்.
//“இந்திய அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன், சமனியம் (சோசலிசம்), மதச்சார்பின்மை, குடிநாயகம் ஆகியனவற்றில் உண்மையான நம்பிக்கை கொண்டு, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்தி வலிமைப்படுத்தக் கட்சி உறுதி ஏற்கிறது” – இதுதான் அடிமைத்தளை அறுக்கும் திட்டம். முழுமையான தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்பதை, இதைவிடக் ‘கூச்ச நாச்சமில்லாமல், இனி எந்தக் கட்சியாலும் வெளியிட்டுவிட முடியாது.//// இது எல்லா அரசியல் ஆட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் உறுதிமொழி. தி.மு.கவும் இதனை ஏற்றுக்கொள்வதாக தான் கூறுகிறது. இதற்காக தி.மு.கவை சு.ப.வீ , விமர்சிக்க தயாரா?? சீமான் மீது மட்டும் ஏன் இந்த கோபம்??
/// நாம் தமிழர் கட்சி, சென்ற தேர்தலில், அ.தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையில் இத்தனை இலவயங்களையும் தருவதாக அறிவித்த பின்னர்தானே, அக்கட்சிக்கு ஆதரவாக வாக்குக் கேட்டது? என்ன காரணம்?/// தி.மு.க தேர்தல் அறிக்கையிலும் இந்த வாக்குறுதிகள் இருப்பது, சுப.வியின் கண்ணுக்கு தெரியவில்லையா???சுப.வீ ஏன் தி.மீ.கவை எதிர்க்கவில்லை?? திராவிடம் தெலுங்கர்களையும், மலையாளிகளையும், கன்னடர்களையும் தான் வாழ வைக்கும். தமிழர்களுக்கு "தமிழியம்" தான் தேவை.
பாண்டித்துரை
நாம் தமிழர் கட்சியின் ஆவணம் குறித்து சுப.வீரபாண்டியனின் விமர்சனம் சரியானதே. அவர் கருணாநிதியோடு இருக்கிறாரா என்றால் சீமான் ஜெயலலிதாவோடு இருக்கிறாரா என்ற கேள்வி தான் எழுப்ப வேண்டும்.
ஆரியத்தோல் போர்த்திய பசுவேடம் போட்டுள்ள சீமானின் வெற்றுக்கோசத்திற்கு இன்னும் எத்தனை தமிழ் இளைஞர்கள் பழியாகப்போகிறார்களோ தெரியவில்லை.
தமிழ், தமிழ் தேசியம், ஈழம் எனச்சொல்லியே இன்னும் சீமானைப்போல எத்தனை பேர் கிளம்பியுள்ளனரோ ?
raja
தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி. தமிழுக்கும், அறிவியலுக்கும் ஆயிரம் கிலோமீட்டர் தூரம்;

In tamil there is some ideology which is useful to whole mankind.It teach the Life (wisdom&Knowledge) and not science (ideas).But these are by Thiruvalluvar,Auviyar thats all.But those who fight for Tamil with Dravida party need them to accept THIRUVASAGAM, Tirumurai ,Kambaramayanam and oter nonsenses.

It was happened to ANNA & kALINGAR they accept above said noncenses along tiruvalluvar.
raja
நீ யாரென கேட்டால் இந்தியன் என்றும், திராவிடன் என்றும் தன்னை கூறிக்கொள்ளும் இந்த இழிநிலை உம்மைப்போன்ற கேடுகெட்ட மதியாளர்களால் தான் என்பதை மறுக்கமுடியுமா?

Here this is the problem.Not understanding or not try to understand.

Nationality;-)ravidan
Caste:Tamil thats all.no more questions of india.Hindu,Hindi.Please read KUDIARASU- understand Dravidaism... and also read Bagavath Geetha,Varunasrama Dharma and realise need of Draviada Movement.

Still we cant attain any positive declaration from UCHIKUDUMI MANDRAM (supreme Court)
இறைகற்பனைஇலான்
நண்பர்களே, சற்று அச்சமாக உள்ளது. பார்ப்பனரும் தமிழரே என்று வரவேண்டும் என்பது இந்திய தேசியவாதிகளி ,பார்ப்பனக் கம்யூக்களின் ஆசை.அதனை ஈழத்தில் நிறுவினார்கள்.ஜெயவர்த்தனே 60க்கும் மேற்ப்பட்ட பார்ப்பன புரோகிதர்களை இலங்கையில் இறக்குமதி செய்தார்.அவர்களில் சிலர் மாவீரர்கள் ஆனார்கள். சிலர் உயிருடன் இருந்து பிரபாகரன் கொடுமைக்காரன் என்று எழுதுகிறார்கள். இதே ந்லை தமிழகத்தில் நடந்தால் இங்கும் ஒரு முல்லிவாய்க்கால் அவலம் நடக்க வாய்ப்பு உள்ளது.தெரிந்தோ தெரியாமலோ சீமான், நெடுமாறன்,மணியரசன் ,இராமதாசு போன்றவர்கள் துணை போகின்றனர். சீமான் சற்று மேலே போய் ஆர்.எஸ்.எஸ் நாடார்,ம்ற்றும் மேல்சாதி பார்ப்பனர்க்கும் பிள்ளைகளுக்கும் துணை போகிறார். பாவம் அறியாப்பிள்ளை என்று கருத வேண்டாம். தெளிவற்றவர் சற்று மத்திய அரசின் உளவுத்துறையின் பிடியில் மாட்டி இருக்களாம்.
thamizh
பெயரில் கட்டபொம்மனாகவும் செயலில் எட்டப்பனாகவும் இருப்பவர்கலுக்கு சீமானை பற்றி விமர்சனம் செய்ய எந்த அருகதயும் இல்லை , திரவிடம் என்ற் பேசுபவர்கல் முதலில் கேரளாவில் உள்ள ஒரு மளயாளி , ஆந்த்ரிராவில் உள்ள தெலுங்கர் ,கர்னாடகாவில் உள்ள கன்னடரில் ஒருவரையாவது தான் த்ராவிடன் என்ரு ஏட்ட்ருக்கொல்ல சொல்லுங்கல் அவன் மட்டும் மளயாளி ,தெலுங்கன் ,கன்னடன் என்ட்ரு இருக்கும் போது நான் மட்டும் திராவிடனாக இருக்க வேன்டுமா ??? பச்சை தமிழனுக்கும் , சுத்தமான தமிழச்சிகும் பிறந்த நான் த்ராவிடன் என்று சொல்வதும் என் தாயை தவறானவல் என்று சொல்வதும் ஒன்றாகாதா???????????????????.........
இரா.புவனேந்திரன்
திராவிடம் பேசும் பிழைப்பு வாதிகளே உங்கள் திராவிடம் தமிழனுக்கு செய்த உருப்படியான ஐந்தை சொல்லுங்கள் பார்ப்போம்
ஆறுமுகம்
இந்த கட்டுரையில் உள்ள போட்டாவில் அம்மாவும் கைகளை கட்டிக்கொண்டுதான் அமர்ந்துள்ளார் என்று தெரிகிறது. அவர் கைகளை அடிமையாக கட்டிக்கொண்டிருக்க வில்லை. அதிக குளிர் காரணமாக பொதுவாகவே ஒருவர் ஏசிஅறையில் அமர்பவர்கள் மாறிவிடுவர். காரணம் அவர்கள் அங்கு அலுவல் செய்ய எந்த கோப்பு கணினியும் இருக்காது வெறும் கையோடு உள்ளவர்கள் சிறிது ‌நேரத்தில் இந்த நிலைக்கு தள்ளப்படுவார். ஆனால் உள்ளேயே உள்ளவர்கள அலுவல் காரணமாக உள்ளதால் இது போன்ற நிலை எப்போதும் இருப்பதில்லை. அந்த புகைப்படம் சீமானை அடிமயாக கையை க்கட்டிக்க கொண்டு உள்ளதாக சித்தரிக்‌கவே உள்ளது தெளிவு எப்பாடுபட்டாவது அவருக்கு உள்ள பிம்பத்தை உடைக்க துடிப்பதில் இருந்து சீமான் ஒரு மாபெறும் சக்தியாக மாறுவதை அறிந்து அழிக்க துடிப்பது அவர்கள் உண்மையான எதிரிகளை விட்டுவிட்டு ஆதிக்கம் செலுத்த இப்போது அதை மாற்ற முயற்சிப்பவரை கண்டு மிரள்கிறது ஒரு பெரும் பொய்க்கூட்டம். எத்‌தனை காலம் தான் தமிழிடம் திராவிட வியாபாரம் செல்லுபடியாகும். திராவித்தை வைத்து தமிழர்களை காக்க முடிந்ததா? ஒரு திராவிடம் பயங்கரவாதிகாளாக்கியது மற்றொரு திராவிடம் படுகொலைகளுக்கு பதவிக்காக துணை போனது. திராவிடததை தாங்கி நின்றவர்கள் தமிழின் படுகொலைக்கு காரணமாக இருந்தவர்களை பதவில் விட்டுவைத்ததேன்? இப்போது கூட அதற்கு காரணமாக கூறப்படும் வங்காளியை அந்த மாநில மம்தாவே ஆதரிக்க மறுக்கையில் திராவிடம் ஆதரிப்பதேன்? அதை தி.க. தடுக்கவில்லையே ஏன்? இதே திராவிடம் நான் சிறுபான்மை சமுதாயத்தின் காவலன மார்த்தட்டிக் கொள்ளுமே இம்போது இஸ்லாமிய கலமை ஆதரிக் மறுத்ததேன். அவரை கலககாரார் என்று சித்தரித்தனே. ஏன் இப்போதும் ஒரு கிருஸ்தவ மத்தை சார்ந்த தலித் ஒருவர் தானே நிறக்கிறார் அ‌வரை திராவிடம மட்டுமல்லாது தலித்துகளின் தலைவர்களும் மயாவதி உட்பட ஆதரிக்க தயங்குவதேன். எதிரிகளை களத்தில் சந்திக்கலம் ஆனால் துரோகிகளை அடையாளம் காணவேண்டியது அவசியம் அவ்ன கூடவே இருக்கிறான். கைகூலியாகவும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.